For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பிரிட்டிஷ் அரசாங்கத்தையே திக்கு முக்காட வைத்த இவரைப் பற்றித் தெரியுமா?

|

நம் நாடு சுதந்திரம் அடைந்து கிட்டத்தட்ட 73 வருடங்கள் ஆகிறது. இந்த சுதந்திரத்திற்காக எண்ணற்ற தலைவர்கள் போராடி தங்கள் உயிர் நீத்துள்ளனர். காந்தி, நேதாஜி, நேரு என்று நமக்கு தெரிந்த தலைவர்கள் ஒரு சிலரே.

Unknown Facts About Ashfaqulla Khan

ஆனால் இந்த சுதந்திர போராட்டத்திற்காக முதல் அடிக்கல்லை எடுத்து வைத்த நபர் யார் என்று உங்களுக்கு தெரியுமா? அவர் தான் அஷ்பாகுல்லா கான் என்ற இளைஞன். இந்த இளைஞர் அப்படி என்ன தான் செய்தார், பிரிட்டிஷ் அரசாங்கத்தையே திக்கு முக்காட வைத்து விட்டார். அவரை பற்றிய சில சுவாரஸ்யமான விஷயங்களைத் தான் இங்கே பேசப் போகிறோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வீரம் விவேகம் நிறைந்த புரட்சியாளர்

வீரம் விவேகம் நிறைந்த புரட்சியாளர்

1922 ஆம் ஆண்டு சவுரி சரயுரா சம்பவத்தின் போது 22 போலீஸார் உயிருடன் எரிக்கப்பட்டதில் வருத்தமடைந்த காந்திஜி அவர்கள் ஒத்துழையாமை இயக்கத்தை வாபஸ் பெற்றார். மகாத்மாவின் இந்த நடவடிக்கையால் மனம் உடைந்த ஒரு இளைஞர் தான் இந்த அஷ்பாகுல்லா கான். பிறகு இந்த இளைஞர் ராம்பிரசாத் பிஸ்மில் என்பவரால் ஈர்க்கப்பட்டு இந்துஸ்தான் குடியரசுக் கழகத்தை நிறுவ அவருடன் சேர்ந்து கொண்டு பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு எதிராக போராட துவங்கினார்.

ககோரி ரயில் கொள்ளை

ககோரி ரயில் கொள்ளை

எழுச்சி மிக்க அஷ்பாகுல்லாகான் பிரிட்டிஷ் அரசாங்கத்திடமிருந்து இந்தியாவிற்கான சுதந்திரத்தை அமைதியாக வாங்க முடியாது என்று நினைத்தார். இதனால் அவர்கள் 1925 ஆகஸ்ட் 9 ஆம் தேதி சஹரன்பூரிலிருந்து லக்னோவிற்கு புறப்பட்ட ரயிலில் கொண்டு செல்லப்பட்ட அரசாங்க கருவூலத்தை கொள்ளையடிக்க அவர்கள் முடிவு செய்தனர். இது பிரிட்டிஷ் அரசாங்கத்தை திகைக்க வைத்தது. இறுதியில் அவரது நண்பர்களும் அவரும் ஒன்றன் பின் ஒன்றாக பிரிட்டிஷ் படையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள்.

இரும்பு மனிதர்

இரும்பு மனிதர்

ககோரி ரயிலில் கருவூல பெட்டியை புரட்சியாளர்கள் பிடித்தவுடன், அதை திறக்க அவர்கள் அதை பலமாக அடித்தார்கள். ஆனால் யாராலும் அதை திறக்க முடியவில்லை. அப்பொழுது அஷ்பாகுல்லா கான் ஒரு இரும்பு மனிதர் போல் செயல்பட்டார். அவர் வேகமாக பெட்டியை நோக்கி ஓடினார். பிரிட்டிஷ் ஆட்சியை இந்தியாவில் இருந்து ஓட விட வேண்டும் என்ற தேசப்பற்று அவரை வலுவாக மாற்றி இருந்தது. அவரின் கோபம், பலம் எல்லாம் சேர்ந்து கருவூல பெட்டியை ஒரே அடியால் திறந்து விட்டார். ரயில் முழுவதும் இடிக்கும் உலோக சத்தம் எங்கும் கேட்டது.

இந்து-முஸ்லீம் ஒற்றுமையின் சாம்பியன்

இந்து-முஸ்லீம் ஒற்றுமையின் சாம்பியன்

அஷ்பாகுல்லா கான் ஒரு முஸ்லீம் மதத்தை சார்ந்தவர். இவரது நண்பர் ராம் பிரசாத்தும் இவரும் பிஸ்மில் ஆர்யா சமாஜைச் சேர்ந்தவர் என்றாலும் இருவரும் இந்தியாவின் மீது அன்பும் நாட்டுப்பற்றும் மிக்கவர்களாக திகழ்ந்தனர். தாய்நாட்டை மீட்க வேண்டும் என்ற விவேகம் கொண்ட நண்பர்கள். ஒரு போலீஸ் சூப்பிரண்டான தசாத்ருக் கான் சாதி அரசியல் மூலம் அவரை மாசுபடுத்த முயன்றபோது கூட "உங்கள் நாட்டில் உள்ள மக்களின் ஒற்றுமையை விட எங்க நாட்டில் இந்து - முஸ்லிம் ஒற்றுமை சிறப்பாக இருக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்" என்று கூறினார்

மீண்டும் இணைதல்

மீண்டும் இணைதல்

வெவ்வேறு நீதிமன்றங்களில் தனித்தனியாக பல சோதனைகளைத் தொடர்ந்து, அஷ்பாகுல்லா கான் மற்றும் அவருடன் இணைந்து போராடுபவரான சச்சிந்திர பக்ஷி ஆகியோர் ஒரு முறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்றத்தில் சந்தித்தனர். இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பதால் ஒருவருக்கொருவர் ஆர தழுவி உணர்ச்சிகளை வெளிப்படுத்திக் கொண்டனர். இதைப் பார்த்த சிறை அதிகாரிகள் கூட, "நாங்களும் ராமர் மற்றும் பரதர் மீண்டும் இணைவதற்கு காத்திருந்தோம்" என்று குறிப்பிட்டார்கள். அந்தளவுக்கு அஷ்பாகுல்லா கான் எல்லாரிடமும் அன்பாக நடக்கக் கூடியவராக இருந்தார்.

சிறை வாழ்க்கை

சிறை வாழ்க்கை

சிறைக்குள் ஒருமுறை, அஷ்பாகுல்லா கான் ஒரு புனிதமான வாழ்க்கையை நடத்தினார். அவர் ஒரு தாடியை வளர்த்து, தனது பிரார்த்தனையை ஒரு நாளைக்கு ஐந்து முறை செய்வாராம். ரம்ஜான் நோன்பை மிகவும் கண்டிப்பாக பின்பற்றினார். தனது நண்பர் சச்சீந்திர பக்ஷியுடன் சில சமயங்களில் மதத்தைப் பற்றி விவாதித்தார். சச்சீந்திர பக்ஷி மதத்தின் மீது நம்பிக்கையற்றவராக இருந்தார். ஆனால் அஷ்பக் கடவுள் குறித்து கூறுகையில் "கண்ணுக்குத் தெரியாத சக்தியை நான் மிக உயர்ந்ததாக கருதுகிறேன். அது நமக்கு மேலானது, உலகத்தை விட பெரியது. அதுவே எனது நம்பிக்கை. ஆனால் நீங்கள் ஒப்புக்கொள்ளவில்லை. நம்பிக்கை என்பது முற்றிலும் தனிப்பட்ட விஷயம். " என்று கூறி நண்பரை வற்புறுத்தாமல் தன் வாதத்தை முடிப்பாராம். இப்படி யார் மனசும் கோணாமல் நடந்து கொள்பவர் அவர்.

மரண தண்டனை

மரண தண்டனை

ககோரி ரயில் சிதைவுக்கான விசாரணையின் போது, ​​அஷ்பாகுல்லா கான் மற்றும் ராம் பிரசாத் பிஸ்மில், ராஜேந்திர லஹிரி மற்றும் ரோஷன் ஆகியோருக்கு பிரிட்டிஷ் அரசாங்கத்தால் மரண தண்டனை வழங்கப்பட்டது.

ஆறு அடி உயரமான இளைஞர். சிறுதும் பயப்படவில்லை. கண்கள் மூடவில்லை அழவில்லை, கண்ணில் தேசப்பற்று மட்டுமே தீயாய் எரிந்தது. அஷ்பாகுல்லா கான் ஒரு சிங்கத்தைப் போல தைரியமாக கம்பத்திற்குச் சென்று கயிற்றை முத்தமிட்டு, "மனிதனின் கொலையால் என் கைகள் மண்ணாகவில்லை. என்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு பொய்யானது, கடவுள் எனக்கு நீதி தருவார்" என்று கூறி கயிற்றை முத்தமிட்டு ஏற்றுக் கொண்டார். பின்னர் அவர் "லா இலாஹி இல் அல்லாஹ், முகமது உர் ரசூல் அல்லாஹ்" என்று கடவுளை நோக்கி பிரார்த்தனை செய்து தனக்கு கொடுத்த மரண தண்டனையை நாட்டுக்காக ஏற்றுக் கொண்டார்.

சதி வழக்கில் தூக்கிலிடப்பட்ட முதல் முஸ்லீம்

சதி வழக்கில் தூக்கிலிடப்பட்ட முதல் முஸ்லீம்

1927 டிசம்பர் 19 ஆம் தேதி அஷ்பாகுல்லா கொல்லப்பட்ட போது, ​​சதி திட்டத்தால் தூக்கிலிடப்பட்ட முதல் முஸ்லீம் இவர் தான். சூழ்ச்சியால் நம் தாய்நாடு ஒரு துடிப்புமிக்க இளைஞனை இழந்தது. அவர் கடைசியாக இந்த நாட்டுக்கு சொன்ன செய்தி இது தான் "எனது நாட்டின் சுதந்திரத்திற்காக தூக்கு மேடைக்கு மரணத்தைத் தழுவிய முதல் மற்றும் முன்னணி முஸ்லிமாக நான் இருப்பேன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன். என் நாட்டில் மக்கள் இந்து முஸ்லிம் பேதம் இல்லாமல் போராட வேண்டும், ஒற்றுமையே நம் பலம் "என்று கூறி மரணித்தார்.

இப்படி அஷ்பாகுல்லாகான் போல் பெயர் கூடத் தெரியாத ஏராளமான இளைஞர்களின் வீரத்தால் வந்தது தான் நம் சுதந்திரம். அவர்களை இப்போது நினைவுக் கூர்ந்து பார்ப்பது மட்டும் நம் கடமை கிடையாது. ஒற்றுமையுடன் இருந்து நம் தாய்நாட்டை காப்பதே சிறந்தது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Unknown Facts About Ashfaqulla Khan

Here are some unknown facts about ashfaqulla khan. Read on...
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more