For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முதல் சந்திப்பிலேயே உங்க காதலிக்கு உங்கள பிடிக்கணுமா? அப்ப இத பண்ணுங்க போதும்...!

முதல் சந்திப்பிலேயே உங்கள் மீது நல்ல அபிப்பிராயத்தை ஏற்படுத்திவிட்டால் உங்களின் காதல் வெற்றியடைய பிரகாசமான வாய்ப்புள்ளது.

|

சரியான காதல் ஒருவரின் வாழ்க்கையில் பல அற்புதங்களை நிகழ்த்தக்கூடும். சரியான காதலன்/காதலியை தேர்ந்தேடுப்பது எவ்வளவு முக்கியமோ அவர்களை உங்களை விரும்ப வைக்க வேண்டியதும் மிகவும் முக்கியமானதாகும். அனைத்து காதலுக்கும் அவர்களின் முதல் சந்திப்பு என்பது மிகவும் முக்கியாயமானதாகும்.

tips to impress your girlfriend on your first meeting

முதல் சந்திப்பிலேயே உங்கள் மீது நல்ல அபிப்பிராயத்தை ஏற்படுத்திவிட்டால் உங்களின் காதல் வெற்றியடைய பிரகாசமான வாய்ப்புள்ளது. முதல் சந்திப்பு சரியாக அமையாததாலேயே பல காதல்கள் தோல்வியில் முடிகிறது. எனவே உங்களின் முதல் சந்திப்பை அழகானதாகவும், வெற்றிகரமானதாகவும் மாற்ற சரியான திட்டமிடல் வேண்டும். இந்த பதிவில் முதல் சந்திப்பிலேயே உங்கள் காதலியை ஈர்ப்பது எப்படி என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அழகான உடை

அழகான உடை

நீங்கள் உங்கள் காதலியுடன் முதல் முறை வெளியில் செல்கிறீர்கள் என்றால் எளிமையாக இருப்பதே புத்திசாலித்தனம் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் சருமத்திற்கு ஏற்ற உடையை நம்பிக்கையுடன் அணியுங்கள். ஆனால் இதைவிட முக்கியமானது உங்கள் பற்களை நன்றாக துலக்கி, சுத்தமாக குளிப்பதாகும். மேலும், விரும்பத்தகாத உடல் வாசனையிலிருந்து விடுபடுவது நல்லது. மிதமான , எரிச்சலை ஏற்படுத்தாத பர்பியூம் உபயோகிப்பது நல்லது.

சரியான நேரத்திற்கு செல்லுதல்

சரியான நேரத்திற்கு செல்லுதல்

முதல் சந்திப்பில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்த விரும்பினால் சரியான நேரத்திற்கு செல்ல வேண்டியது அவசியமாகும். முதல் சந்திப்பிலேயே காத்திருப்பதை யாரும் விரும்பமாட்டார்கள், நேரம் தவறாமை எப்பொழுதும் நல்ல எண்ணத்தை உருவாக்கும்.அழகான ஆடையணிந்து, திறமையான பேச்சாற்றல் இருந்தாலும் தாமதமாக செல்வது அனைத்தையும் சிதைத்துவிடும்.

தெளிவு

தெளிவு

ஒரு நபருடன் நீங்கள் இருக்கும் சூழ்நிலையைப் பற்றி யோசித்துப் பாருங்கள், அவர்களுக்கு அழுவதற்கு தோள்பட்டை தேவையா அல்லது அவர்கள் எடுக்கும் முடிவிற்கு ஆதரவு தேவையா என்பதை சிந்தியுங்கள். ஒரே நேரத்தில் மோசமானதாகவும் வெறுப்பாகவும் இருக்காது? நீங்கள் அதை விரும்ப மாட்டீர்கள் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். எனவே, நீங்கள் ஏன் ஒரு உறவில் இணைய விரும்புகிறீர்கள் என்பதில் உங்களுக்கு தெளிவு இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். உங்களின் தெளிவே உங்கள் மீது நல்ல எண்ணத்தை உண்டாக்கும். இதனால் நீங்கள் பொறுமையாகவும் அமைதியாகவும் இருப்பீர்கள்.

MOST READ: தமிழ்நாடு அரசுப்பள்ளி மாணவி NASA செல்லும் வாய்ப்பைப் பெற்றுள்ளார்... இதோ அவரின் வெற்றிக்கதை!

நல்ல கண் தொடர்பை பராமரிக்கவும்

நல்ல கண் தொடர்பை பராமரிக்கவும்

உங்களின் முதல் சந்திப்பில் உங்கள் காதலியுடன் கண் தொடர்பை வளர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். உங்களின் செய்கைகள் உங்களின் ஆளுமையைப் பற்றி நிறையக் கூறும், உங்களின் முதல் சந்திப்பில் பதட்டமில்லாமல் நம்பிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியமாகும். அவர்களுடன் இருப்பது உங்களுக்கு எவ்வளவு மகிழ்ச்சியை அளிக்கிறது என்பதை உங்களின் கண்களே கூறிவிடும்.

பாராட்ட மறக்க வேண்டாம்

பாராட்ட மறக்க வேண்டாம்

பாராட்டு யாருக்குத்தான் பிடிக்காது? காதல் வல்லுனர்கள் கூறுகையில், முதல் சந்திப்பில் உங்களின் காதலியை கண்டிப்பாக பாராட்ட வேண்டும், இது நீங்கள் அவர்களைப் பற்றி சில விஷயங்களை கவனித்து இருக்கிறீர்கள் என்பதை அவர்களுக்கு உணர்த்தும். உங்கள் காதலியின் அழகைக் கண்டு மயங்கிவிடாமல் அவர்களை எப்படி ரசிக்கிறீர்கள் என்பதை அவர்களிடம் வெளிப்படுத்துங்கள். உங்களின் பாராட்டு அவர்களின் உடை, காலணி, அலங்காரம், நகை என எதைப்பற்றி வேண்டுமென்றாலும் இருக்கலாம்.

போனை ஓரமாக வையுங்கள்

போனை ஓரமாக வையுங்கள்

உங்கள் காதலியை கண்டுபிடிக்க உங்கள் போன் உங்களுக்கு உதவியாக இருந்திருக்கலாம், ஆனால் உங்கள் காதலி அருகில் இருக்கும்போது உங்கள் போனை உபயோகிப்பது தவறான செயலாகும், இது உங்களின் உரையாடலை சிதைக்கக்கூடும். நீங்கள் அவர்களை புறக்கணிப்பதாக அவர்கள் நினைப்பார்கள். எனவே போனை ஓரமாக வைத்துவிட்டு அந்த அழகிய தருணத்தை அனுபவியுங்கள்.ஆனால் உங்களுக்கு தவிர்க்க முடியாத அவசரம் எதுவும் இருந்தால் உங்கள் காதலியிடம் அனுமதி கேட்ட பிறகு அதனை தொடருங்கள்.

சுவாரஸ்ய உரையாடல்

சுவாரஸ்ய உரையாடல்

நீங்கள் உங்கள் காதலியுடன் பேச வந்திருக்கிறர்கள், நேர்காணலுக்கு அல்ல. எனவே, கேள்விகளைக் கேட்பது உரையாடலை சலிப்படையச் செய்யலாம். மேலும், அமைதியாக இருப்பது அல்லது கேள்விக்கு ஒரு வார்த்தை அல்லது இரண்டு வார்த்தைகளில் பதிலளிப்பது அந்த தருணத்தைக் கெடுத்துவிடும். முதல் சந்திப்பில் அவர்களின் முகத்தையே பார்த்துக் கொண்டிருப்பது அவர்களுக்கு சலிப்பை ஏற்படுத்தும். எனவே உரையாடலை சுவாரஸ்யமானதாக வைத்துக்கொள்ள முன்கூட்டியே தயாராக செல்லுங்கள்.

MOST READ: இந்திய வரலாற்றில் இவருக்கு இணையான வீரம் கொண்ட மன்னர் யாருமே இல்லையாம்... அவர் யார் தெரியுமா?

நகைச்சுவையாக பேசுங்கள்

நகைச்சுவையாக பேசுங்கள்

நகைச்சுவை என்பது உரையாடலில் எல்லோரும் விரும்பும் ஒன்று என்று சொல்வது சரிதான். இது ஒரு நகைச்சுவை, கிண்டல் அல்லது பஞ்ச் டயலாக் என எதுவாக இருந்தாலும், உங்கள் காதலியை உண்மையாக உங்களால் சிரிக்க வைக்க முடிந்தால், உங்கள் காதலி நிச்சயமாக உங்களால் ஈர்க்கப்படுவார்கள். ஆனால் பரிதாபகரமான மற்றும் சலிப்பான நகைச்சுவைகளைத் தவிர்ப்பது தவிர்க்கவும். இல்லையெனில் அது உங்கள் மீது வெறுப்பை ஏற்படுத்தும். அவர்களுக்கு என்ன பிடிக்கும், எந்த வகையான உரையாடல்களை அவர்கள் விரும்புவார்கள் முன்கூட்டியே தெரிந்து கொண்டு அதற்கேற்றாற் போல திட்டமிட்டுக் கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Tips To Impress Your Girlfriend On Your First Meeting

Here are some useful tips to impress your girlfriend on your first meeting.
Story first published: Wednesday, December 18, 2019, 11:10 [IST]
Desktop Bottom Promotion