Just In
- 19 hrs ago
வார ராசிபலன் (03.06.2022-09.07.2022) - இந்த வாரம் திருமண வாழ்வில் பிரச்சனைகள் அதிகரிக்கக்கூடும்.....
- 20 hrs ago
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு சில முக்கியமான நிதி முடிவுகளை எடுக்க நேரிடலாம்...
- 1 day ago
இந்த வயசுக்கு மேல ஆண்களுக்கு இதய நோய் மற்றும் புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு ரொம்ப அதிகமாம்.. ஜாக்கிரதை!
- 1 day ago
தினமும் இந்த ஒரு பொருளை உணவில் சேர்த்துக் கொள்வது உங்களுக்கு புற்றுநோய் வராமல் தடுக்குமாம் தெரியுமா?
Don't Miss
- News
LGBT கொடியுடன் சிகரெட் புகைக்கும் "காளி" - லீனா மணிமேகலையின் ஆவண படத்தால் பாஜகவினர் கொதிப்பு
- Sports
இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட்.. புஜாராவின் தரமான இன்னிங்ஸ்.. வலுவான நிலையில் இந்தியா
- Movies
லத்தி படப்பிடிப்பில் விபத்துக்குள்ளான விஷால்.. ஷூட்டிங் பாதியில் நிறுத்தம் !
- Finance
இட்லி விற்றவர் இன்று லட்சங்களில் வருமானம்.. சாதனை படைத்த தேன்மொழி..!
- Technology
முதல் மேட்-இன்-இந்தியா ஆட்டோனோமாஸ் விமானத்தை உருவாக்கி சோதனை! அதிகரிக்கும் தாக்குதல் சக்தி
- Automobiles
ஹிமாலயன் பைக்கை வாங்கும் ப்ளான் வெச்சிருக்கீங்களா? புதியதாக வந்துள்ள இந்த 2 நிறத்தேர்வுகளையும் பாருங்க!!
- Travel
அழகும் சாகசமும் நிறைந்த சுதாகட் கோட்டையில் ட்ரெக்கிங் செய்யலாம் வாருங்கள்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
சனி பகவானின் அருளை எளிதில் பெற வேண்டுமா? அப்ப சனி ஜெயந்தி அன்று உங்க ராசிப்படி இத செய்யுங்க...
சனி ஜெயந்தி என்பது சனி பகவான் பிறந்த நாளாகும். இந்து நாட்காட்டியின் படி, சனி ஜெயந்தி ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதத்தின் அமாவாசை நாளில் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு சனி ஜெயந்தி நாளானது மே 30 ஆம் தேதி வருகிறது. இந்த ஆண்டு சனி ஜெயந்தி நாளில் தான் வட சாவித்திரி விரதமும் வருகிறது. இதனால் இந்த ஆண்டில் வரும் சனி ஜெயந்தி இன்னும் சிறப்பு வாய்ந்ததாக கூறப்படுகிறது.
நீதிமான் சனி பகவான் ஒருவரின் கர்ம வினைகளுக்கு ஏற்ப பலன்களை அளிக்கக்கூடியவர். இவரது பெயரைக் கூறினாலே பலரும் அஞ்சுவதுண்டு. அந்த அளவில் பாரபட்சம் பாராமல் அனைவருக்கும் நல்ல மற்றும் கெடு பலன்களை அளிக்கக்கூடியவர். இவரது அருள் கிடைத்தால் வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும். சனி பகவானின் அருளைப் பெற வேண்டும் என்பதற்காகவே பலரும் சனிக்கிழமைகளில் அவரைத் தவறாமல் வழிபடுவார்கள்.
உங்களுக்கு சனி பகவானின் அருளைப் பெற வேண்டும் மற்றும் வாழ்வில் உள்ள சிக்கல்களில் இருந்து விடுபட வேண்டும் என்று விரும்பினால், சனி ஜெயந்தி அன்று ராசிக்கேற்ப தானங்களை செய்யுங்கள். இப்போது சனி ஜெயந்தி அன்று ஒவ்வொரு ராசிக்காரரும் எந்த பொருட்களை தானம் வழங்க வேண்டும் என்பதைக் காண்போம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் சனி ஜெயந்தி நாளன்று கடுகு எண்ணெய் மற்றும் கருப்பு எள்ளை தானம் செய்வது மங்களகரமானதாக கருதப்படுகிறது.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களின் சனி பகவானின் அருளைப் பெற சனி ஜெயந்தி நாளில் சனி சாலிசாவை பாராயணம் செய்வதோடு, போர்வைகளையும் தானம் செய்வது நல்லது.

மிதுனம்
ஜோதிடத்தின் படி, மிதுன ராசிக்காரர்கள் சனி ஜெயந்தி நாளில் ஏழைகளுக்கு கருப்பு நிற ஆடைகளை தானம் வழங்க வேண்டும்.

கடகம்
கடக ராசிக்காரர்கள் கருப்பு உளுத்தம் பருப்பு, எண்ணெய் மற்றும் எள்ளு விதைகள் ஆகியவற்றை சனி ஜெயந்தி நாளன்று தானம் செய்வதன் மூலம் நற்பலன்களைப் பெறலாம்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் சனி ஜெயந்தி நாளன்று ஓம் வரேண்யாய நமஹ என்ற மந்திரத்தை சொல்வதோடு, நீலக்கல்லை தானம் செய்வது மங்களகரமானதாக கருதப்படுகிறது.

கன்னி
கன்னி ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகள் நீங்கி, மகிழ்ச்சி மற்றும் செழிப்பு பெருக சனி ஜெயந்தி நாளன்று ஏழைகளுக்கு காலணிகளை தானமாக வழங்குவது நல்லது.

துலாம்
துலாம் ராசிக்காரர்கள் சனி பகவானின் அருளைப் பெற சனி ஜெயந்தி நாளன்று கருப்பு நிற ஆடைகள் மற்றும் எண்ணெயை தானம் செய்ய வேண்டும்.

விருச்சிகம்
விருச்சிக ராசியைச் சேர்ந்தவர்கள் சனி பகவானின் அருள் பெற இரும்பு பொருட்களை சனி ஜெயந்தி நாளில் தானமாக வழங்க வேண்டும்.

தனுசு
சனி ஜெயந்தி நாளில் தனசு ராசிக்காரர்கள் சனிபகவானுக்கு அபிஷேகம் செய்து மஞ்சள் நிற ஆடைகள் அல்லது மஞ்சளை தானம் செய்யலாம்.

மகரம்
ஜோதிட சாஸ்திரத்தின் படி மகர ராசிக்காரர்கள் சனி ஜெயந்தி நாளில் பசுவை தானம் செய்வது நற்பலனைத் தருவதாக கருதப்படுகிறது. ஆனால் பசுவை தானம் வழங்க முடியாவிட்டால், வெள்ளி பசுவை தானமாக வழங்கலாம்.

கும்பம்
கும்ப ராசியைச் சேர்ந்த மக்கள் சனி பகவான் பிறந்த நாளான சனி ஜெயந்தி நாளன்று தங்கத்தை ஏழை மக்களுக்கு தானம் செய்வது மிகவும் நல்லது.

மீனம்
மீன ராசிக்காரர்கள் சனி பகவான் பிறந்த நாளன்று நெய், மஞ்சள் நிற ஆடைகள் அல்லது மஞ்சளை தானம் செய்தால் சனி பகவானின் அருளால் நற்பலன்களைப் பெறலாம்.