Just In
- 2 hrs ago
சாணக்கிய நீதியின் படி இந்த 6 வகை பெண்களை திருமணம் செய்து கொள்வது மரணத்தை விட கொடியதாம்...!
- 5 hrs ago
Today Rasi Palan 25 January 2023: இன்று இந்த ராசிக்காரர்கள் எந்தவொரு முதலீடும் செய்வதைத் தவிர்க்கவும்...
- 13 hrs ago
உங்க சருமம் பளபளன்னு ஜொலிக்கவும் முடி நீளமா வளரவும் பப்பாளியை எப்படி யூஸ் பண்ணனும் தெரியுமா?
- 13 hrs ago
நீங்க இந்த உயரத்துல இருந்தா? உங்களுக்கு புற்றுநோய் ஏற்படும் ஆபத்து அதிகமாம்..ஆய்வு கூறும் அதிர்ச்சி முடிவுகள்!
Don't Miss
- News
இவ்வளவு பேரா? அமெரிக்காவில் அலறும் இந்தியர்கள்.. பறிபோகும் வேலைகள்.. ஐடி ஊழியர்கள் ஷாக்!
- Movies
ப்பா.. பார்க்கவே கலக்கலா இருக்கே.. மேள தாளத்துடன் காரில் ஊர்வலம் வரும் பிக் பாஸ் ஷிவின்!
- Automobiles
சட்டபடி இது தப்புங்க! ஆட்டோ எக்ஸ்போவில் தில்லாக காட்சியளித்த மாடிஃபைடு கார்கள்... எல்லாமே செம்ம அழகா இருக்கு!
- Finance
Budget 2023: பட்ஜெட்டில் இப்படி ஒரு சர்பிரைஸ் கிடைக்குமா.. தங்கம் இறக்குமதியாளர்களுக்கு வாய்ப்பு?
- Sports
பந்துவீச்சில் மாற்றம் செய்தேன்.. இரட்டிப்பாக உழைப்பதில் மகிழ்ச்சி.. டி20 தொடருக்கு ரெடி - ஹர்திக்
- Technology
Android போன்களுக்கு புது சோதனை.! 'இதை' செஞ்சுடாதீங்க.! மானம், பணம் எல்லாமே போய்விடும்.! எச்சரிக்கை.!
- Travel
கன்பார்ம் செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டின் பயண தேதியை மாற்ற வேண்டுமா – இப்படி செய்யுங்கள்!
- Education
CRPF Head constable Recruitment 2023:பிளஸ் டூ பாஸ்? 1,458 பணிக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி வாய்ப்பு...!
Shani Margi 2022: சனி வக்ர நிவர்த்தியடைவதால் ஜனவரி வரை இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் சாதகமா இருக்கும்..
நவகிரகங்களில் சனி பகவான் மகரம் மற்றும் கும்ப ராசிகளின் அதிபதியாவார். கிரகங்களில் சனி பகவான் மெதுவாக நகரக்கூடியவர். இவர் ஒரு ராசியில் இரண்டரை ஆண்டு காலம் இருப்பார். இந்த சனி பகவான் தற்போது மகர ராசியில் வக்ர நிலையில் பயணித்து வருகிறார். இந்நிலையில் சனி பகவான் 2022 அக்டோபர் 23 ஆம் தேதி அதிகாலை 04.19 மணிக்கு வக்ர நிவர்த்தி அடைகிறார். ராசிகளில் மகரம் என்பது லட்சியம், நற்பெயர், இமேஜ் மற்றும் அதிகாரத்தின் அடையாளமாகும்.
பொதுவாக ஒருவரது வாழ்வில் சனியின் தாக்கம் வலுவாக இருக்கும். அதிலும் கிரகங்கள் வக்ர நிலையில் இருக்கும் போது நற்பலன்கள் தாமதமாகவும், கெடுபலன்கள் அதிகமாகவும் கிடைக்கும். இந்நிலையில் சனி வக்ரமாக இருக்கும் போது இதுவரை பிரச்சனைகளை சந்தித்து வந்த ராசிக்காரர்கள், சனி வக்ர நிவர்த்தி அடைந்த பின் நற்பலன்களைப் பெறவுள்ளார்கள். இப்போது 2022 அக்டோபர் 23 ஆம் தேதி மகர ராசியில் சனி வக்ர நிவர்த்தி அடைவதால் 12 ராசிக்காரர்களும் எந்த மாதிரியான பலன்களைப் பெறப் போகிறார்கள் என்பதைக் காண்போம்.

மேஷம்
மேஷ ராசியின் 10 ஆவது வீட்டில் சனி வக்ர நிவர்த்தி அடைகிறார். இது தொழில் வீடு. எனவே தொழிலில் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும். சமூகத்தில் நற்பெயர் அதிகரிக்கும். வெளிநாட்டில் இருந்து நல்ல ஆதாயம் கிடைக்கும். கூட்டு வணிகம் செய்ய திட்டமிட்டிருந்தால், அதற்கு இது உகந்த காலம். ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். திருமண வாழ்வில் சற்று விழிப்போடு இருக்க வேண்டும். அதிக செலவுகளை எதிர்கொள்ள நேரிடும். தொழில் வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையை சமநிலையில் பராமரிக்க அறிவுறுத்தப்படுகிறது.

ரிஷபம்
ரிஷப ராசியின் 9 ஆவது வீட்டில் சனி வக்ர நிவர்த்தி அடைகிறார். இது தந்தை, தர்மம், பயணம், அதிர்ஷ்டம் ஆகியவற்றின் வீடாகும். எனவே இக்காலத்தில் உங்களின் இலக்குகளை அடைய அதிர்ஷ்டம் ஆதரவாக இருக்கும். இருப்பினும் சற்று கடினமாக உழைக்க வேண்டும். தந்தையுடனான பிரச்சனை முடிவுக்கு வரும். வேலையை மாற்ற முயற்சித்தால், அதற்கு இது சாதகமான காலம். முதலீடு செய்வதாக இருந்தால், நன்கு யோசித்து செய்ய அறிவுறுத்தப்படுகிறது. இல்லாவிட்டால் நஷ்டத்தை சந்திக்க நேரிடும்.

மிதுனம்
மிதுன ராசியின் 8 ஆவது வீட்டில் சனி வக்ர நிவர்த்தி அடைகிறார். இது நீண்ட ஆயுள், ரகசியம், திடீர் நிகழ்வுகள் ஆகியவற்றின் வீடாகும். இதனால் திடீரென்று ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்கக்கூடும் என்பதால் உங்கள் ஆரோக்கியம் மற்றும் உங்கள் தந்தையின் ஆரோக்கியத்தில் சற்று அதிக அக்கறை காட்டுங்கள். சோம்பபேறித்தனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, உடல் மற்றும் மனதை ரிலாக்ஸாக வைத்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள். நிதியைப் பொறுத்தவரை, நல்ல நிதி ஆதாயங்களைப் பெறலாம் அல்லது கடந்த கால முதலீடுகளில் இருந்து பண வரவைப் பெறலாம். இக்காலத்தில் உங்கள் மாமனார்-மாமியாருடனான உறவு பாதிக்கப்படலாம். மகர ராசியில் சனி இருப்பதால், எந்தவொரு வாக்குவாதத்தையும் தவிர்த்திடுங்கள்.

கடகம்
கடக ராசியின் 7 ஆவது வீட்டில் சனி வக்ர நிவர்த்தி அடைகிறார். இது வாழ்க்கைத் துணை மற்றும் வணிக கூட்டாண்மைக்கான வீடு. எனவே இக்காலத்தில் உறவில் ஏற்றத்தாழ்வுகளை காணக்கூடும். எதுவாயினும் நீங்கள் உங்கள் வாழ்க்கைத் துணையின் பக்கம் தான் நிற்க வேண்டும். உங்கள் துணையுடனான கூட்டு சொத்துக்கள் அல்லது நிதிகளில் சில இழப்புக்களை காணலாம். ஆனால் அது உங்கள் உறவை பாதித்துவிடக்கூடாது. சனி உங்கள் லக்னத்தை பார்க்கிறார். எனவே உடல் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ள வேண்டும். சோம்பேறித்தனத்தைக் கைவிட்டு, ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்ற அறிவுறுத்தப்படுகிறது.

சிம்மம்
சிம்ம ராசியின் 6 ஆவது வீட்டில் சனி வக்ர நிவர்த்தி அடைகிறார். இது எதிரிகள், ஆரோக்கியம், போட்டி மற்றும் தாய் மாமன் ஆகியவற்றின் வீடாகும். ஆறாம் வீட்டில் சனி சத்ரு ஹம்ச யோகத்தை உருவாக்குவது நல்லதாக கருதப்படுகிறது. நீங்கள் ஏதேனும் நீதிமன்ற வழக்குகளில் எதிர்த்து போராடி வந்தால், இக்காலத்தில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். இக்கால கட்டத்தில் சுறுசுறுப்பாக இருப்பீர்கள் மற்றும் எதிரிகளை எதிர்த்து திறம்பட போராடுவீர்கள். மாணவர்கள் சாதகமான பலன்களைப் பெறுவார்கள். அனைத்து சவால்களையும் முறியடிப்பீர்கள். ஆனால் திருமணமானவர்களுக்கு இது நல்ல காலம் அல்ல. உங்கள் வாழ்க்கைத் துணையுடன் மோதல்கள் ஏற்படலாம். உங்கள் வாழ்க்கைத் துணையை புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள் மற்றும் ஆதிக்கம் செலுத்துவதைக் குறைக்க அறிவுறுத்தப்படுகிறது.

கன்னி
கன்னி ராசியின் 5 ஆவது வீட்டில் சனி வக்ர நிவர்த்தி அடைகிறார். இது கல்வி, காதல் உறவு, குழந்தைகள் மற்றும் பூர்வ புண்ணிய வீடு. எனவே மாணவர்கள் இக்காலத்தை தங்கள் படிப்பின் மேம்பாட்டிற்கு பயன்படுத்திக் கொள்வது நல்லது. திருமணமாகி நீண்ட நாட்களாக குழந்தை இல்லாதவர்கள், இக்காலத்தில் நற்செய்தியைப் பெறலாம். காதல் வாழ்க்கையைப் பொறுத்தவரை, இக்காலம் சிறப்பாக இருக்கும். தொழில் ரீதியாக, நீங்கள் வேலையை மாற்ற திட்டமிருந்தால், அந்த எண்ணத்தை சற்று தள்ளிப் போட அறிவுறுத்தப்படுகிறது.

துலாம்
துலாம் ராசியின் 4 ஆவது வீட்டில் சனி வக்ர நிவர்த்தி அடைகிறார். இது தாய், இல்லற வாழ்க்கை, வீடு, வாகனம் மற்றும் சொத்து ஆகியவற்றின் வீடாகும். சனியின் இந்த மாற்றத்தால் இந்த ராசிக்காரர்கள் பொருள் லாபத்தைப் பெறுவார்கள். பரம்பரை சொத்துக்களில் இதுவரை பிரச்சனையை சந்தித்தால், இக்காலத்தில் அது தீர்க்கப்படும். வணிக நோக்கங்களுக்காக நிலம் அல்லது வாகனம் வாங்க வாய்ப்புள்ளது. தாயுடன் சில பிரச்சனைகளை கொண்டிருந்தால், அது இக்காலத்தில் சரியாகும். திருமண வாழ்க்கைப் பொறுத்தவரை, மகிழ்ச்சி சற்று குறைவாகவே இருக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்க, உடற்பயிற்சிகளில் ஈடுபடுங்கள்.

விருச்சிகம்
விருச்சிக ராசியின் 3 ஆவது வீட்டில் சனி வக்ர நிவர்த்தி அடைகிறார். இந்த வீடு உடன்பிறப்புகள், பொழுதுபோக்குகுள், குறுகிய பயணம் மற்றும் தகவல் தொடர்பு திறன் ஆகியவற்றின் வீடாகும். மகரத்தில் சனி வக்ர நிவர்த்தி அடைவதால், விருச்சிக ராசிக்காரர்கள் தங்கள் உடன்பிறந்தவர்களுடனான உறவை சமநிலைப்படுத்த முயற்சிக்க வேண்டும் மற்றும் அவர்களுடன் சண்டை வர வாய்ப்புள்ளதால் வாக்குவாதங்களை முடிந்த வரை தவிர்த்திடுங்கள். வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தில் முன்னேற்றத்தைக் காண கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். வணிக விரிவாக்கத்திற்காக குறுகிய பயணத்தை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.

தனுசு
தனுசு ராசியின் 2 ஆவது வீட்டில் சனி வக்ர நிவர்த்தி அடைகிறார். இந்த வீடு குடும்பம், சேமிப்பு, பேச்சு ஆகியவற்றின் வீடாகும். எனவே இந்த சனியின் மாற்றத்தால் தனுசு ராசிக்காரர்கள் பணப் பிரச்சனையில் இருந்து நிவாரணம் பெறுவார்கள். பணத்தை நன்கு சம்பாதித்து சேமிக்க முடியும். குடும்ப வாழ்க்கையில் உங்களின் பேச்சு மற்றும் போக்கினால் சில ஏற்றத்தாழ்வுகளை காணலாம். உங்கள் தாயின் ஆரோக்கியத்தைப் பற்றிய கவலை அதிகரிக்கும்.

மகரம்
மகர ராசியின் முதல் வீட்டில் சனி வக்ர நிவர்த்தி அடைகிறார். இதனால் இக்காலத்தில் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். சோம்பேறித்தனத்தை ஒதுக்கி வைத்து, சுறுசுறுப்பாக இருக்க முயற்சிக்க வேண்டும். முடிந்தவரை ஒழுக்கமாக இருக்க முயற்சி செய்தால், நேர்மறை முடிவுகளைப் பெறலாம். உங்களின் இளைய உடன்பிறப்புகள் சில ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

கும்பம்
கும்ப ராசியின் 12 ஆவது வீட்டில் சனி வக் நிவர்த்தி அடைகிறார். இதனால் நீண்ட நாட்களாக வெளிநாடு செல்ல திட்டமிட்டிருந்தால், அதற்கு இது சாதகமான காலமாக இருக்கும். மகர ராசியில் சனி வக்ர நிவர்த்தி அடைந்திருப்பதால், இந்த ராசிக்காரர்கள் அதிக செலவுகளை சந்திக்க நேடும். குறிப்பாக மருத்துவ செலவுகள் அதிகரிக்கும். எனவே ஆரோக்கியத்தில் சற்று எச்சரிக்கையாக இருங்கள். தொழில் ரீதியான சவால்கள் மற்றும் தடைகள் நீங்கி, வேலை சுமூகமாக நடக்கும்.

மீனம்
மீன ராசியின் 11 ஆவது வீட்டில் சனி வக்ர நிவர்த்தி அடைகிறார். இந்த வீடு வருமானம் மற்றும் ஆதாயங்களின் வீடாகும். எனவே இந்த சனியின் மாற்றத்தால் மீன ராசிக்காரக்ள் கடின உழைப்பிற்கான பலனைப் பெறுவார்கள். உங்களின் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். திருமணமாகி குழந்தை பெற நினைத்துக் கொண்டிருந்தவர்கள், இதுவரை தடையை எதிர்கொண்டிருந்தால், அந்த தடை இக்காலத்தில் நீங்கி ஒருவித நம்பிக்கை கிடைக்கும். மாணவர்கள், குறிப்பாக சட்டப் படிப்பில் ஈடுபடுபவர்கள் நல்ல பலன்களைப் பெறுவார்கள். மொத்தத்தில், இக்காலத்தல் கடின உழைப்பிற்கான நல்ல பலன் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)