For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பம்பா நதி... அழுதா நதி - புண்ணிய நதிகளின் புராண கதைகள்!

சபரிமலை யாத்திரை செல்லும் பக்தர்கள் இரண்டு நதிகளில் புனித நீராடுவார்கள் ஒன்று பம்பாநதி மற்றொன்று அழுதாநதி. இந்த இரண்டு நதிகளும் உருவானதற்கு புராண கதைகள் உள்ளன.

|

சபரிமலை யாத்திரை செல்லும் பக்தர்கள் இரண்டு நதிகளில் புனித நீராடுவார்கள் ஒன்று பம்பாநதி மற்றொன்று அழுதாநதி. இந்த இரண்டு நதிகளும் உருவானதற்கு புராண கதைகள் உள்ளன. ஒரு ராமபிரான் கொடுத்த வரத்தினால் உருவானது மற்றொன்று மகிஷியின் கண்ணீரால் உருவானது. இந்த இரண்டு நதிகளுமே புண்ணிய நதிகளாக சபரிமலை செல்லும் பக்தர்களால் போற்றப்படுகிறது.

Sabarimala yathra:History of Pamba and Azhutha River

பகவான் ஸ்ரீராமரிடம் வரம் கேட்ட நீலி, எனக்கு மோட்சம் அளித்து, இனிமேல் பிறப்பெடுக்காத நிலை வேண்டும் என்று கண்ணீர் மல்க கேட்டாள். அவளுடைய விருப்பத்தை நிறைவேற்ற எண்ணிய ஸ்ரீராமர், அன்பால் உயர்ந்த உன்னை, இந்த உலகமே போற்றி வணங்கும் நிலை உணக்கு வரும். இந்தப் பகுதிக்கு வரும் அனைவருமே, உன்னை போற்றி வணங்கி புகழும் நிலையை உனக்கு அளிக்கிறேன், என்று சொல்லி, அவளுடைய பூரண விருப்பத்துடன், அவளை கங்கையைப் போல பொங்கிப் பெருகும் அழகான ஜீவ நதியாக மாற்றினார். அந்த நதிதான் பம்பா நதியாகும்.

கங்கையைப் போல் புண்ணிய நதியான பம்பா நதியிலேயே ஸ்ரீராமரும் லட்சுமணனும் மனம் குளிர நீராடிவிட்டு, தன்னுடைய தந்தை தசரதனுக்கும் பிதுர் தர்ப்பணம் செய்தனர். ராமர் போற்றி கொண்டாடிய காரணத்தினாலேயே, பின்னர் பல முனிவர்களும், தற்போது ஐயப்ப பக்தர்களும் பம்பா நதியை போற்றி வணங்கி வருகின்றனர். ஒரு சிலர் பம்பா நதிக் கரைக்கு வந்து தர்ப்பணம் செய்து வருகின்றனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
புனித பம்பா நதி

புனித பம்பா நதி

சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்யப்போகும் அனைத்து ஐயப்ப பக்தர்களும் போகும் வழியில் அலுப்பு தட்டாமல் இருக்க காடு மலை கடந்து வந்தோம் ஐயப்பா, உனை காண வேண்டி நோன்பிருந்தோம் ஐயப்பா என்று பாட்டு பாடி சரண கோஷம் எழுப்பிக் கொண்டே செல்வதுண்டு.போகும் வழியில், ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு செல்லும் வழியில் தவறாமல் புனித நீராடிவிட்டு செல்லும் இடம் பம்பா நதி. எருமேலி வழியாக பெரும் பாதை எனப்படும் பெரு வழிப்பாதை வழியாக நடந்து வரும் ஐயப்ப பக்தர்களும், கோட்டயம், செங்கனூர், எர்ணாகுளம், ஆலப்புழா, சாலக்காயம், புனலூர் வழியாக வரும் ஐயப்ப பக்தர்களும் தங்கி இளைப்பாறி உடல் வலி தீர நீராடிவிட்டு பயணத்தை தொடங்கும் இடம் பம்பா நதி. இந்த பம்பா நதிக்கு இத்தனை புனிதம் எப்படி வந்தது என்பது பற்றி ஒரு புராண கதையே உள்ளது.

சபரிமலையின் பெருமை

சபரிமலையின் பெருமை

ஐயப்ப பக்தர்கள் சபரிமலை ஐயப்பனுக்கு எந்த அளவு முக்கியத்துவம் அளிக்கிறார்களோ, அதே அளவு முக்கியத்துவத்தை பம்பா நதிக்கும் அளித்து வருகின்றனர். இன்னும் சொல்லப்போனால், சபரிமலைக்கு கூடுதல் பெருமை சேர்ப்பதும் இந்த பம்பா நதி தான். இமயத்தில் தோன்றி காசி நகரத்தின் வழியாக பாயும் கங்கை நதிக்கு ஒப்பாக, பக்தர்களின் பாவங்களை போக்கும் புண்ணிய நதியாக இந்த பம்பா நதி உள்ளது. தென் கங்கை (தட்ஷிண கங்கை) என்றழைக்கப்படும் பம்பா நதியின் கரையோரத்தில் தான் சாஸ்தாவான ஐயப்ப சுவாமி குழந்தை வடிவில் அவதரித்தார் என்று ஐயப்பனின் வரலாறு சொல்கிறது.

சீதையை தேடியலைந்த ஸ்ரீராமர்

சீதையை தேடியலைந்த ஸ்ரீராமர்

சீதா தேவியை ராவணன் கடத்திக்கொண்டு போன பிறகு, ஸ்ரீராமனும், லட்சுமணனும் சீதா தேவியை தேடி தென்னகம் முழுவதும் காடு மலை என சுற்றி அலைந்தனர். அப்போது மேற்கு தொடர்ச்சி மலையில், மதங்க முனிவரின் குடில் கண்ணில் தென்பட, அங்கு சென்றனர். அந்த நேரத்தில் முனிவர் இல்லை, சிவாலயங்களை தரிசிப்பதற்காக தீர்த்த யாத்திரை சென்றிருந்தார். அவருடைய பணிப்பெண்ணான நீலி என்ற மலைவாழ் பெண் தான் வரவேற்றாள்.

முனிவருக்கு பணிவிடை செய்து வரும் அவள், தான் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவள் என்ற காரணத்தால், ஸ்ரீராமருக்கும் லட்சமணருக்கும் உணவளிக்க தயங்கினாள்.

ஸ்ரீராமரின் விருப்பம்

ஸ்ரீராமரின் விருப்பம்

நீலியின் தயக்கத்தை போக்க விரும்பிய ஸ்ரீராமர், இவ்வுழகில் கடவுளால் படைக்கப்பட்ட அனைவருமே சமாமானவர்கள் தான். அன்புள்ளம் கொண்டவர்கள் தான் இவ்வுலகில் உயர்ந்தவர்கள் என்று சொல்லி, நீலியின் தயக்கத்தை போக்கினார். ஸ்ரீராமரின் அருளுரையை கேட்டு மகிழ்ச்சியுற்ற நீலி, பணிவன்புடன் அவர்கள் இருவருக்கும் உணவளித்து உபசரித்தார். அதனை அன்புடன் ஏற்றுக்கொண்ட ஸ்ரீராமர், அவளை புனிதப்படுத்த விரும்பினார். அவளிடம், உன்னை தாழ்ந்த குலத்தவள் என்று உதாசீனப்படுத்திய மக்கள் என்றென்றும் உன்னை போற்றி வணங்கும் அழியாப் புகழை உனக்கு அளிக்க விரும்புகிறேன். உனக்கு என்ன வேண்டும் கேள் என்று அன்புடன் கேட்டார் ஸ்ரீராமர்.

பம்பா நதியான நீலி

பம்பா நதியான நீலி

அதற்கு நீலி, எனக்கு மோட்சம் அளித்து, இனிமேல் பிறப்பெடுக்காத நிலை வேண்டும் என்று கண்ணீர் மல்க கேட்டாள். அவளுடைய விருப்பத்தை நிறைவேற்ற எண்ணிய ஸ்ரீராமர், அன்பால் உயர்ந்த உன்னை, இந்த உலகமே போற்றி வணங்கும் நிலை உணக்கு வரும். இந்தப் பகுதிக்கு வரும் அனைவருமே, உன்னை போற்றி வணங்கி புகழும் நிலையை உனக்கு அளிக்கிறேன், என்று சொல்லி, அவளுடைய பூரண விருப்பத்துடன், அவளை கங்கையைப் போல பொங்கிப் பெருகும் அழகான ஜீவ நதியாக மாற்றினார். அந்த நதிதான் பம்பா நதியாகும்.

தர்ப்பணம் செய்த ஸ்ரீராமர்

தர்ப்பணம் செய்த ஸ்ரீராமர்

அதோடு, கங்கையைப் போல் புண்ணிய நதியான பம்பா நதியிலேயே ஸ்ரீராமரும் லட்சுமணனும் மனம் குளிர நீராடிவிட்டு, தன்னுடைய தந்தை தசரதனுக்கும் "பிதுர் தர்ப்பணம் செய்தனர். ராமர் போற்றி கொண்டாடிய காரணத்தினாலேயே, பின்னர் பல முனிவர்களும், தற்போது ஐயப்ப பக்தர்களும் பம்பா நதியை போற்றி வணங்கி வருகின்றனர். ஒரு சிலர் பம்பா நதிக் கரைக்கு வந்து தர்ப்பணம் செய்து வருகின்றனர்.

பெருவழிப்பாதை

பெருவழிப்பாதை

சபரிமலை வரும் ஐயப்ப பக்தர்கள் பயபக்தியோடு உச்சரிக்கும் மற்றொரு பெயர் அழுதா நதி. எரிமேலியில் பேட்டை துள்ளி ஆடிவிட்டு பயணத்தை தொடரும் ஐயப்ப பக்தர்கள் அனைவரும் பேரூர் தோடு, கோட்டப்படி, காளைகட்டி, அழுதாமலை ஆகியவற்றை கடந்ததும் வருவது தான் அழுதா நதி ஆகும்.

மனம் மாறிய மகிஷி

மனம் மாறிய மகிஷி

பெருவழிப்பாதையில் வழியாக சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்கள் அனைவரும் தவறாமல் நீராடும் இடம் தான் அழுதா நதி. ஐயப்பன் அரக்கியான மகிஷியுடன் போரிட்டபோது, இறுதிக்கட்டத்தில் ஒரு மலை ஏறி நின்றாள். அப்போது ஐயப்பன் எய்த அம்பு தன் மீது பட்டதும் தான் தன்னுடைய தவறை உணர்ந்தாள் மகிஷி. உடனடியாக தன்னுடைய தவறை மன்னிக்கும்படி வேண்டி மனம் விட்டு அழுதாள்.

அழுதா நதியான மகிஷியின் கண்ணீர்

அழுதா நதியான மகிஷியின் கண்ணீர்

அவ்வாறு மகிஷி அழுத கண்ணீர் வழிந்தோடி அழுதா நதியாக பெருகி ஒடுகிறது. அந்த அழுதா நதியில் மூழ்கி நீராடும் கன்னி சாமிகள் அனைவரும் ஒரு கல்லை எடுத்து வரவேண்டும். அந்த கல்லை எடுத்துக்கொண்டு வரும் ஐயப்ப பக்தர்கள், அங்கிருந்து சுமார் 2 கி.மீ தூரத்தில் கல் இடும் குன்று என்று ஒரு இடம் வரும். அங்கு ஐயப்ப பக்தர்கள் கொண்டு வந்த கல்லை, அந்த குன்றின் மீது எறிந்து விட்டு செல்வதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள்.

கல் இடும் குன்று

கல் இடும் குன்று

இந்த கல் இடும் குன்றில் தான் ஐயப்பன் மகிஷியின் உடலை போட்டு கற்களால் மூடினார். அதற்கு பிறகு மற்ற தேவர்கள், முனிவர்கள், பூதகணங்கள் என அனைவரும் ஆளாளுக்கு ஒரு கல்லை அரக்கியின் உடல் மீது போட்டு முழுவதுமாக மூடினார்கள். இதன் காரணமாகவே இந்த இடத்தை கல் இடும் குன்று என்று அழைக்கின்றனர். ஐயப்ப பக்தர்கள் அழுதா நதியில் மூழ்கி எடுத்த கல்லை இந்த குன்றின் மீது எறிந்து விட்டு தங்கள் பயணத்தை தொடர்கின்றனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Sabarimala yathra:History of Pamba and Azhutha River

Neeli asked Sri Rama to give me Moksha and tears that she should not be born anymore. Sri Rama, who wanted to fulfill her wishes, love you high, this world will worship and worship. All those who come to this area, adore you and give you the status of admiration, and, with her full will, turned her into a beautiful river of life, like the Ganges. That river is the Pamba River.
Story first published: Monday, November 25, 2019, 12:59 [IST]
Desktop Bottom Promotion