For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தன்வந்திரி பகவான் முதல் வைத்தியநாத சுவாமி வரை நோயில் இருந்து மக்களை காக்கும் கடவுள்கள்!

தீராத நோய்கள் வந்து விட்டால் மக்கள் அடித்து பிடித்து ஓடுவது டாக்டர்களிடம்தான். நோய்கள் தீர இறை நம்பிக்கையுடன் பிரார்த்தனை செய்வதும் அவசியம். வைத்தியநாத சாமி, தன்வந்திரி பகவான் என பல தெய்வங்கள் மக்களின

|

கொரோனா வைரஸ் அச்சம் மக்களை ஆட்டிப்படைக்கிறது. இறைவனை சரணடையலாம் என்றால் இப்போதைக்கு கோவிலுக்கும் போகமுடியவில்லை. மருத்துவர்கள்தான் இப்போதைக்கு கடவுள்கள். தீராத நோய் தீர்க்கும் தலங்களாக வைத்தீஸ்வரன் கோவில் வைத்தியநாத சாமியும், தன்வந்திரி பகவானும் திகழ்கின்றனர். நேரடியாகத்தான் கோவிலுக்கு போக வேண்டும் என்று இல்லை வீட்டின் பூஜை அறையில் விளக்கேற்றி இறைவனை வணங்கினாலே போதும் தீராத நோய்கள் தீரும்.

கொரோனாவில் இருந்து உயிரை காக்க மருத்துவர்களை கடவுளாக நம்பினாலும் கடவுளே கதி என்று சரணடைந்து விட்டனர். மருந்தில்லா நோய்க்கு அந்த தெய்வம்தான் துணை என்றாகி விட்டது. ஆலயங்கள் பூட்டப்பட்டுள்ளதால் கடவுளின் அருள் மக்களுக்கு கிடைக்காது என்றில்லை அனைத்து கடவுள்களும் இப்போது வைத்தியம் பார்க்க பூலோகம் வந்திருக்கின்றனர்.

நோயின்றி வாழ வேண்டும் என்பதே பலரது விருப்பம். பணம், சொத்து இருந்தாலும் அதை அனுபவிக்க ஆரோக்கியமான உடல் வேண்டும். நிம்மதியான மனம் வேண்டும். தன்வந்திரி பகவான், சுக்கிரேஸ்வரர், வீர ராகவ பெருமாள், மருந்தீஸ்வரர், வைத்தியநாத சுவாமி என பல கடவுள்கள் நோய்களை தீர்த்து மக்களின் வலிகளை போக்குகின்றனர். இந்த தெய்வங்களை வழிபடுவதன் மூலம் தீராத நோய்களும் தீரும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தன்வந்திரி பகவான்

தன்வந்திரி பகவான்

தன்வந்திரி பகவான் மருத்துவ கடவுள். இவரை வணங்கினால் தீராத நோய்களும் தீரும். திருப்பாற்கடலில் தேவர்களும், அசுரர்களும் அமுதம் கடைந்தபோது கடலில் இருந்து பல்வேறு பொருட்களும், பல தெய்வங்களும் வெளிவந்தன அப்போது சங்கு,சக்கரம், அட்டைப்பூச்சி, அமிர்தகலசம் ஆகியவற்றை ஏந்தி வந்தவர் தன்வந்திரி என்ற தெய்வீக மருத்துவர். ஸ்ரீரங்கம் நம்பெருமாள் ஆலயத்தில் உள்ள தாயார் சன்னிதிக்கு செல்லும் வழியில் தன்வந்திரி பகவான் சன்னிதி உள்ளது. இத்தலத்தில் அருள்பாலிக்கும் அரங்கனுக்கே வைத்தியம் செய்யும் விதமாக, ஸ்ரீமன் நாராயணனே இங்கு தன்வந்திரியாக திகழ்வதாக கூறப்படுகிறது. வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை அடுத்துள்ள அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டையில்ஸ்ரீ தன்வந்திரி பகவானுக்கு தனிக்கோயில் உள்ளது. இத்தல இறைவனை வழிபட தீராத நோய்களும் தீரும்.

வைத்தியநாத ஸ்வாமி

வைத்தியநாத ஸ்வாமி

கும்பகோணம் அருகில் உள்ள மிக பிரசித்தி பெற்ற ஸ்தலம் இங்குள்ள இறைவன் வைத்தியநாதனாக அருள்புரிகிறார். அம்பாள் பெயர் தையல் நாயகி. ரத்த சம்பந்தமான குறைபாடுகள், விபத்தினால் ஏற்பட்ட காயங்கள், முறிந்த எலும்பு நல்லபடி மீண்டும் கூட அறுவை சிகிச்சை சீராக அமைய இங்கு வந்து வழிபடலாம். செவ்வாய் தோஷ பரிகார தலமாகவும் வைத்தீஸ்வரன் கோவில் திகழ்கிறது. ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மடவார்வளாகத்தில் இறைவன் வைத்தியநாதசாமி தீராத நோய் தீர்க்கும் கடவுளாக திகழ்கிறார்.

சர்வரோக நிவாரண தலம்

சர்வரோக நிவாரண தலம்

சென்னை திருவான்மியூரில் உள்ள மருந்தீஸ்வரர் கோவில் சர்வ ரோக நிவாரண ஸ்தலமாகும். மயிலாப்பூர் வெள்ளீச்சரம் என்ற சிவஸ்தலம். இது சுக்கிர பரிகார ஸ்தலமாகும். கண் நோய் நீக்கி அருளும் ஸ்தலம். கண் அறுவை சிகிச்சை செய்தவர்கள் இங்கு வழிபட கண் பார்வை சீராகும். மேலும் சுக்கிர தோஷம் போக்கி திருமண வரம் அருளும் ஸ்தலமாகும். கோயமுத்தூரில் அருள்புரியும் கோனியம்மன் தீராத நோய்களை தீர்த்தருள்பவள் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

சகல வியாதிகள் தீரும்

சகல வியாதிகள் தீரும்

திருவள்ளூர் வைத்திய வீரராகவ பெருமாள் சகல வியாதிகளுக்கும் பரிகார ஸ்தலம். அமாவாசையில் தரிசனம் செய்து பிரார்த்தனை செய்யலாம். இங்குள்ள குளத்தில் வெல்லம் கரைக்க வேண்டும். இதன் முலம் வியாதிகள் கரைந்து போகும். இதே போல சங்கரன்கோவில் சங்கரநாராயணர் ஆலயம் நோய் நீக்கும் பரிகார தலமாக உள்ளது. உப்பு வாங்கி குளத்தில் கரைத்தால் நோய்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.

தோல்நோய் தீர்க்கும் தலம்

தோல்நோய் தீர்க்கும் தலம்

கும்பகோணம் அருகில் உள்ள திருக்கருகாவூர் ஆலயம் ரோக நிவாரண ஸ்தலம். குழந்தை பாக்கியம் தரும் ஸ்தலம். இத்தலத்து லிங்கத்தில் புனுகு பூசி வழிபடுவார்கள். இதற்கு புனுகு சட்டம் என்று பெயர். இந்த வழிபாடு அனைத்து தோல் நோய்களும் நீங்கும். நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள சுந்தரேஸ்வரர் ஆலயம். இந்தக் கோவில் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. இங்குள்ள இறைவனையும் இறைவியையும் வழிபடுவதால், வாதம் சம்பந்தப்பட்ட நோய்கள் உடனடியாக குணமாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. சளி தொந்தரவு, நுரையீரல் பிரச்சினை உள்ளவர்கள் பெருமாளை வணங்கி துளசி தீர்த்தம் குடித்து வரலாம். இன்றைய சூழ்நிலையில் பஸ் ஏறி எந்த கோவிலுக்கும் போக முடியாது என்பதால் அவரவர் வீடுகளிலேயே இறைவனை நினைத்து விளக்கேற்றி வைத்து வழிபடலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Prayer And Pooja - These Temples For Relief From Health Related Problems

Here we listed some temples for relief from health related problems. Read on...
Story first published: Monday, March 23, 2020, 15:52 [IST]
Desktop Bottom Promotion