Just In
- 36 min ago
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு பணப்பற்றாக்குறையால் சில சிக்கல்கள் உண்டாகலாம்...
- 16 hrs ago
இந்த 5 ராசிக்காரர்கள் மிகவும் பிடிவாத குணம் கொண்டவர்களாம்...இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருக்கணுமாம்!
- 18 hrs ago
ஈரோடு சிக்கன் சிந்தாமணி
- 23 hrs ago
வார ராசிபலன் (26.06.2022-02.07.2022) - இந்த வாரம் நீண்ட பயணங்களைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது....
Don't Miss
- News
தகுதிநீக்க நோட்டீஸால் பதறிய சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்கள்! உச்சநீதிமன்றத்தில் மனு! இன்று விசாரணை!
- Movies
பிசினஸ் வுமனாக மாறிய ராஷ்மிகா.. திடீரென முதலீடு செய்ய என்ன காரணம்?
- Automobiles
புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ-என் கார் நாளை விற்பனைக்கு அறிமுகம்... நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்!
- Sports
ஆரம்பமே இப்படியா??.. கடுப்பான மைதான ஊழியர்கள்.. இந்தியா - அயர்லாந்து முதல் டி20 போட்டியில் சோதனை!
- Finance
ரஷ்யாவின் தங்கத்தை இறக்குமதி செய்வதை நிறுத்தும் ஜி7 நாடுகள்.. என்ன ஆகும்?
- Technology
WhatsApp-இல் தலைகீழாக டைப் செய்வது எப்படி? அட இது தெரியாம போச்சே!
- Travel
இந்தியாவின் கடைசி கிராமமாம் இது - எவ்வளவு அழகாக இருக்கிறது என்று பாருங்கள்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
இந்த ராசிக்காரங்களுக்கு உறவுகளை விட பணம் தான் ரொம்ப முக்கியமாம்... இவங்க கிட்ட உஷாரா பழகுங்க...
நாம் அல்லும் பகளும் அயராது உழைப்பதே பணத்திற்காக தான். நாம் உலகில் வாழ்வதற்கு பணம் அவசியம் தான். ஆனால் அந்த பணம் மட்டுமே முக்கியம் என்று சிலர் உள்ளனர். அதற்காக இவர்களுக்கு உணர்ச்சிகள் இல்லை, இவர்கள் யாரையும் நேரிப்பதில்லை என்பதோ இல்லை. ஆனால் ஒரு பிரச்சனை இவர்கள் பணத்தை விட மற்றவர்களை நம்பாதது தான். பணத்திற்காக ஒரு உறவை விட்டு விலக நேரிட்டாலும், சூழ்நிலைக்கு சமரசம் செய்து கொள்ள தயாராக இருப்பார்கள்.
ஜோதிடத்தின் படி, சில நேரங்களில் இம்மாதிரியான பழக்கமானது சுற்றுச்சூழல் மற்றும் பழகும் நபர்களால் ஒருவரது மனதினுள் செல்கிறது. ஆனால் பல நேரங்களில் ஒருவர் பிறக்கும் போதே சில நல்ல குணங்களையும், குறைபாடுகளையும் பெறுகிறார். இத்தகைய சூழ்நிலையில், பணத்தைக் கடவுளாக கருதும் பழக்கம் ஒருவருக்கு பிறவியில் இருந்தே இருக்கலாம். இம்மாதிரியான சுயநலமான குணம் நான்கு ராசிக்காரர்களிடம் காணப்படுகிறது. அந்த ராசிக்காரர்கள் யார்யர் என்பதை இப்போது காண்போம்.

ரிஷபம்
ரிஷப ராசியின் அதிபதி சுக்கிரன். இந்த சுக்கிரன் ஆடம்பர வாழ்க்கையை அளிப்பதாக கருதப்படுகிறார். அதனால் தான் ரிஷப ராசிக்காரர்கள் சிறு வயதில் இருந்தே பணம் மற்றும் செல்வத்தின் மீது நாட்டம் கொண்டுள்ளனர். இந்த ராசிக்காரர்கள் பெரும்பாலும் மிகவும் விலையுயர்ந்த பொருட்களைப் பெற விரும்புகிறார்கள். சாதாரண வாழ்க்கை மற்றும் போராட்ட வாழ்க்கையை இவர்கள் வெறுக்கிறார்கள். இந்த ராசிக்காரர்கள் தான் விரும்புபவரை மிகவும் நேசிப்பார்கள். ஆனால் பணமா, அன்புக்குரியவரா என்று கேட்டால், இவர்கள் பணத்தையே தேர்ந்தெடுப்பார்கள். ஏனெனில் இவர்கள் பணத்தால் எதையும் வாங்க முடியும் என்று நம்புகிறார்கள்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் அதிகம் போராடுவார்கள். ஆனால் எல்லா சூழ்நிலைகளிலும் வெற்றி பெறுவார்கள். அதனாலேயே அவர்களிடம் வெற்றி பெறும் குணம் இருக்கிறது. இவர்கள் வாழ்க்கையில் நிறைய பணம் சம்பாதிக்க விரும்புகிறார்கள் மற்றும் பணத்துடன் தங்கள் உறவை இணைப்பதில் சிறந்தவர்களாக இருக்கிறார்கள். பணத்திற்காக யாரையாவது விட்டு செல்ல வேண்டும் என்றால், அதற்காக அவர்கள் தயக்கம் கொள்ளவும் மாட்டார்கள்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களும் பணத்திற்காக எதையும் செய்ய தயாராக இருப்பார்கள். இவர்கள் பெரும்பாலும் பணக்காரர்கள் மற்றும் செல்வாக்கு மிக்கவர்களுடன் நட்பை வைத்திருப்பார்கள். இருப்பதை விட சிறந்தது கிடைத்தால், மாற்றுவதற்கு சற்றும் யோசிக்கமாட்டார்கள். இவர்கள் இயற்கையாகவே இவர்கள் அதிகம் உணர்ச்சிவசப்படக்கூடியவர்கள். ஆனால் பண விஷயத்தில் நடைமுறைக்கு ஏற்றவாறு முடிவை எடுப்பார்கள். இந்த ராசிக்காரர்கள் தங்களின் வாழ்க்கை எப்போதும் போராடுவதை விரும்புவதில்லை. இதனாலேயே பணத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.

மகரம்
மகர ராசிக்காரர்கள் புத்திசாலிகள் மற்றும் மிகவும் நடைமுறைக்குரியவர்கள். இவர்கள் தங்களின் கனவுகளை நனவாக்க எதையும் செய்ய தயாராக உள்ளனர். அத்தகைய சூழ்நிலையில் அவர்கள் யாதையும் சாதகமாக்க தயங்க மாட்டார்கள். இந்த ராசிக்காரர்கள் பணக்காரர்களுடன் உறவுகளை உருவாக்க விரும்புகிறார்கள். ஏனெனில் அவர்கள் முலம் பல விஷயங்களை செய்யலாம் என்பதால் தான்.