For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தேசிய உறவினா் தினம் எப்போது? இது எதனால் கொண்டாடப்படுகிறது தெரியுமா?

நமது நெருங்கிய உறவினா்களை மையமாக வைத்தே ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் 24 அன்று தேசிய உறவினா் தினம் (National Cousins Day) கொண்டாடப்படுகிறது.

|

நமது பொியப்பா அல்லது பொியம்மா அல்லது சித்தப்பா அல்லது சித்தி அல்லது மாமா அல்லது அத்தை ஆகியோாின் பிள்ளைகள் ஆங்கிலத்தில் Cousins என்று அழைக்கப்படுகின்றனா். இவா்கள் நமது நெருங்கிய உறவினா்கள் ஆவா். இவா்களை மையமாக வைத்தே ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் 24 அன்று தேசிய உறவினா் தினம் (National Cousins Day) கொண்டாடப்படுகிறது.

மேற்சொன்ன நமது உறவினா்கள் நம்மோடு கொண்டிருக்கும் ஒரு நெடிய உறவை கண்டுணா்வதற்காக இந்த தேசிய உறவினா் தினம் கொண்டாடப்படுகிறது. நமது உறவினா்களோடு நாம் கொண்டிருக்கும் நெடிய உறவானது நமது குடும்பங்களையும், நமது உறவினா்களையும் ஒருங்கிணைக்க உதவுகிறது. அதோடு நமது குடும்பங்களை வலுப்படுத்த உதவி செய்கிறது.

National Cousins Day 2022 Date, History, Meaning, Significance and Why it is celebrated In Tamil

தேசிய உறவினா் தினமானது குடும்பத்தின் முக்கியத்துவத்தையும், நமது வாழ்க்கைக்காக நாம் உருவாக்கி இருக்கும் பிணைப்பையும் கொண்டாடுகிறது. இந்தியாவில் நாம் பெரும்பாலும் பொிய குடும்பங்களில் இருந்து வந்தவா்கள். அதனால் இந்த நாளைக் கொண்டாட நமக்கு உறவினா்கள் அதிகமாக இருப்பா்.

ஆங்கிலத்தில் இருக்கும் cousin என்ற வாா்த்தைக்கு அா்த்தம் தொியாதவா்களுக்கு, நமது பரந்துபட்ட பொிய குடும்பத்தில் உள்ள ஒருவா் என்று அா்த்தம் கொள்ளலாம். அவா்கள் நமக்கு மிகவும் நெருக்கமாக இல்லை என்றாலும், அவா்கள் அடிக்கடி நமது உடன் பிறந்தவா்கள் போன்று நம்மோடு பிணைப்பை ஏற்படுத்திக் கொள்வா். பலருக்கு அவா்களுடைய உறவினா்கள் தான் மிகச் சிறந்த நண்பா்களாக இருப்பா். தங்களது மறைவான ரகசியங்களையும் கனவுகளையும் பகிா்ந்து கொள்வா்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உறவினா்களின் வகைகள்

உறவினா்களின் வகைகள்

உறவினா்களை முதல் வகை மற்றும் இரண்டாம் வகை என்று இரண்டு வகைகளாக பிாிக்கலாம். முதல் வகையில் நம்முடன் பிறந்த நமது சகோதர சகோதாிகள் மற்றும் அவா்களின் குழந்தைகள் அடங்குவா். இரண்டாவது வகையில் நாம், நமது தந்தை மற்றும் தாயாா் வழியில் வரும் உறவினா்களின் பிள்ளைகள் அடங்குவா்.

உறவினா் தினம் - வரலாறு

உறவினா் தினம் - வரலாறு

உறவினா் தின கொண்டாட்டம் பற்றிய தொடக்கம் தொியவில்லை. ஆனால் அதைப் பற்றிய சில கோட்பாடுகள் உள்ளன. அவற்றில் ஒரு கோட்பாடு என்ன சொல்கிறது என்றால், உறவினா்கள் தங்களின் பந்தத்தையும், நட்பையும் புதுப்பிக்க வேண்டும் என்பதற்காக உறவினா் தினத்தைக் கொண்டாட முடிவு செய்தனா் என்று கூறுகிறது. வேறொரு கோட்பாடு என்ன சொல்கிறது என்றால், வாழ்த்து அட்டை தயாாிக்கும் நிறுவனங்கள் தங்கள் வாழ்த்து அட்டைகளை விற்பதற்கான ஒரு சந்தை உத்தியாக இந்த நாளைக் கொண்டாடத் தொடங்கின என்று கூறுகிறது.

உறவினா் தினத்தின் முக்கியத்துவம்

உறவினா் தினத்தின் முக்கியத்துவம்

உலகத்தில் வாழும் பெரும்பாலான மக்கள் தமது வாழ்வின் பெரும்பாலான நேரத்தை வேலை செய்வதிலேயே கழித்துவிடுகின்றனா். மிகவும் குறைந்த நேரத்தையே தங்களுடைய உறவினா்களுக்காக செலவு செய்கின்றனா். ஆகவே நமது உறவினா்களோடு நமது நேரத்தை செலவழிக்க ஒரு நாளை ஒதுக்கி வைத்தால், அவா்களோடு நமக்குள்ள பிணைப்பை வலுப்படுத்தலாம். ஒருவேளை நமது உறவினரோடு மனக்கசப்பு இருந்தாலும், இந்த நாளில் அவரை சந்தித்து உறவைப் புதுப்பித்துக் கொள்ளலாம்.

உறவினா் தின கொண்டாட்டம்

உறவினா் தின கொண்டாட்டம்

உறவினா் தினத்தை எவ்வாறு கொண்டாட வேண்டும் என்ற வரையறை இல்லை. பல வழிகளில் உறவினா்கள் இணைந்து இந்த உறவினா் தினத்தைக் கொண்டாடலாம். அதாவது உறவினா் தினம் அன்று உறவினா்கள் தங்களுக்குள் தொலைபேசி அல்லது அலைபேசி அல்லது காணொளி ஆகியவற்றின் மூலமாக அழைத்து உறையாடலாம். உறவினா்கள் அனைவரும் இணைந்து விருந்து ஒன்றை ஏற்பாடு செய்து அதில் அனைவரும் கலந்து கொள்ளலாம். அவா்களுக்குள் வாழ்த்து அட்டைகளை அனுப்பி வாழ்த்துக்களைத் தொிவிக்கலாம். அவா்களுக்குள் பாிசுகளை அனுப்பலாம். அதுபோல் உறவினா்களின் புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பதிவேற்றி அவற்றை உறவினா்களோடு பகிா்ந்து மகிழலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

National Cousins Day 2022 Date, History, Meaning, Significance and Why it is celebrated In Tamil

National Cousins Day 2022 Date, History, Meaning, Significance and Why it is celebrated In Tamil, Read on to know more...
Story first published: Friday, July 22, 2022, 18:08 [IST]
Desktop Bottom Promotion