Just In
- 3 hrs ago
பிப்ரவரி மாதம் இந்த 4 ராசிக்காரர்கள துரதிர்ஷ்டம் துரத்தி துரத்தி அடிக்கப்போகுதாம்... ஜாக்கிரதையா இருங்க...!
- 6 hrs ago
Today Rasi Palan 01 February 2023: இன்று இந்த ராசிக்காரர்களின் முக்கிய வேலை பாதியில் தடைபடலாம்...
- 14 hrs ago
கருட புராணத்தின் படி இந்த 5 விஷயங்களை செஞ்சா, மரணத்திற்கு பின் நரகம் செல்வதை தவிர்க்கலாம்..!
- 14 hrs ago
பாதாம் எண்ணெயை உங்க தலை முடியில இப்படி யூஸ் பண்ணா... கிடுகிடுன்னு முடி வளர்ந்து பளபளன்னு மின்னுமாம்!
Don't Miss
- Finance
மத்திய பட்ஜெட் 2023: நிறையத் தண்ணீர் குடிங்க.. பட்ஜெட் போர் அடிக்கலாம்..!
- News
இந்தியாவின் 'கனவு பட்ஜெட்' என அழைக்கப்பட்ட 1997-ம் ஆண்டு தாக்கல் செய்த பட்ஜெட்..ஏன் தெரியுமா?
- Technology
BSNL சூப்பர் ரீசார்ஜ்: மாதம் ரூ.184 தான் செலவு 395 நாளுக்கு வேலிடிட்டி.! மாஸ் ஆன பிளான் இதான்.!
- Automobiles
ஃப்ரீனாலும் இந்த 5 ரயில்கள்ல மட்டும் போயிடாதீங்க... போனவங்க எல்லாம் கழுவி கழுவி ஊத்துறாங்க!
- Movies
மகேஷ்வரி அப்படி சொல்லுவாங்கனு நினைக்கல.. மனதிற்குள் ஜாலியா இருந்தது.. விஜே கதிரவன் பேட்டி!
- Sports
2 தீராத குழப்பங்கள்.. நியூசி, உடனான 3வது டி20 போட்டி.. முடிவெடுக்க தடுமாறும் ஹர்திக் பாண்ட்யா!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
தனுசு செல்லும் புதனால் டிசம்பர் 3 முதல் இந்த 5 ராசிக்கு நல்ல காலம் ஆரம்பிக்குது.. உங்க ராசி இதுல இருக்கா?
ஜோதிட சாஸ்திரத்தின் படி, புதன் சுப கிரகமாகும். இந்த புதன் நல்ல கல்வியையும், கூர்மையான புத்தியையும், கவர்ச்சியான தோற்றத்தையும் தருபவர். இவர் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாவார். புதன் ஒருவரது ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால், அந்நபர் எதையும் எளிதில் கற்கும் திறன் கொண்டிப்பதோடு, நல்ல தகவல் தொடர்பு திறனையும் கொண்டிருப்பார். இத்தகைய புதன் தற்போது விருச்சிக ராசியில் பயணித்து வருகிறார்.
இந்நிலையில் 2022 டிசம்பர் 03 ஆம் தேதி புதன் தனுசு ராசிக்கு செல்லவுள்ளார். இந்த டிசம்பர் மாதத்தில் புதன் இரண்டு முறை ராசியை மாற்றப் போகிறார். புதனின் இந்த ராசி மாற்றம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். இருப்பினும் சில ராசிக்காரர்களுக்கு இந்த புதன் பெயர்ச்சி சிறப்பான பலன்களைத் தரும். இப்போது புதன் தனுசு ராசிக்கு செல்வதால் எந்த ராசிக்காரர்கள் நற்பலனைப் பெறப் போகிறார்கள் என்பதைக் காண்போம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு புதன் பெயர்ச்சியால் விரைவான நிதி ஆதாயம் கிடைக்கும். ஆசிரியர்கள், ஆலோசகர்கள் அல்லது மார்கெட்டி துறையில் இருப்பவர்களுக்கு, இந்த பெயர்ச்சிக்கு பின் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். உயர்கல்விக்கு முயற்சிக்கும் மாணவர்களுக்கு வெற்றி கிடைக்கு. ஆன்மீக நடவடிக்கைகளில் நாட்டம் அதிகரிக்கும். இளைய சகோதரர்களுடனான உறவு மேம்படும்.

ரிஷபம்
ரிஷப ராசியின் 8 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் ரிஷப ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களைப் பெற வாய்ப்புள்ளது. குறிப்பாக ஆராய்ச்சி மற்றும் அறிவியல் துறையில் இருப்பவர்கள் தங்களின் நிலுவையில் உள்ள பணிகளை வெற்றிகரமாக முடிப்பார்கள். கடின உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும். ஆனால் ஆரோக்கியத்தில் மட்டும் சற்று கவனமாக இருக்க வேண்டும்.

சிம்மம்
சிம்ம ராசியின் 5 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் சிம்ம ராசிக்காரர்களுக்கு புதன் நற்பலன்களை வாரி வழங்கவுள்ளார். நிலுவையில் உள்ள பணிகள் வெற்றிகரமாக முடிக்கப்படும். திருமணமாகாதவர்களுக்கு இந்த காலத்தில் நல்ல வரன் கிடைக்கும். பரம்பரை சொத்துக்களால் சிறப்பான பலன்களைப் பெற வாய்ப்புள்ளது. மாணவர்களுக்கு இக்காலம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சில மாணவர்களுக்கு இக்காலத்தில் உதவித்தொகை பெற வாய்ப்புள்ளது.

கன்னி
கன்னி ராசியின் அதிபதியான புதன், இந்த பெயர்ச்சியின் போது 4 ஆவது வீட்டிற்கு செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் நல்ல பலனைப் பெறுவார்கள். குடும்ப உறவுகள் வலுவாக இருக்கும். குடும்பத்தினருடன் சுற்றுலா செல்லும் வாய்ப்புள்ளது. சொத்து, வாகனம் வாங்கும் விஷயங்களில் வெற்றி கிடைக்கும். சொத்துக்களில் முதலீடு செய்ய நினைப்போருக்கு, இக்காலம் சிறந்த காலமாகும். இந்த காலகட்டத்தில் செய்யப்படும் முதலீடுகள் எதிர்காலத்தில் நல்ல லாபத்தைத் தருவதாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)