Latest Updates
-
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
நவம்பர் 13-ல் பெயர்ச்சியாகும் புதன் மற்றும் செவ்வாய்: இந்த 4 ராசிக்காரர்களைத் தேடி பணம் வரப் போகுது...
செவ்வாய் மற்றும் புதன் பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்கள் அதிக நற்பலனைப் பெறப் போகிறார்கள் என்பதைக் காண்போம்.
நவம்பர் மாதத்தில் அடுத்தடுத்து கிரகங்கள் ராசியை மாற்றுகின்றன. அதுவும் நவம்பர் 11 ஆம் தேதி சுக்கிரன் விருச்சிக ராசிக்கு சென்றதை அடுத்து, நவம்பர் 13 ஆம் தேதி செவ்வாய் மற்றும் புதன் ஒரே நாளில் ராசியை மாற்றுகின்றன. அதுவும் செவ்வாய் ஏற்கனவே மிதுன ராசியில் வக்ர நிலையில் இருந்தார். இந்த வக்ர நிலையிலேயே நவம்பர் 13 ஆம் தேதி ரிஷப ராசியை அடைகிறார். அதேப் போல் புத்திகாரகனான புதன் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு நவம்பர் 13 ஆம் தேதி செல்கிறார்.

இந்த இரண்டு கிரகங்களும் ஒரே நாளில் ராசியை மாற்றுவதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். குறிப்பாக சில ராசிக்காரர்களுக்கு இவ்விரு கிரகங்களின் பெயர்ச்சியால் கையில் பணம் அதிகம் புரளப் போகிறது. இப்போது செவ்வாய் மற்றும் புதன் பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்கள் அதிக நற்பலனைப் பெறப் போகிறார்கள் என்பதைக் காண்போம்.

கடகம்
கடக ராசிக்காரர்களின் ஆசை இக்காலத்தில் நிறைவேறும். வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெற முடியும். மாணவர்களுக்கு இக்காலம் சாதகமாக இருக்கும். பணியிடத்தில் கடின உழைப்பிற்கான பலன் கிடைக்கும். காதலிப்பவர்களுக்கு இக்காலம் சாதகமாக இருக்கும். திருமணமானவர்களின் உறவுகள வலுபெறும்.

சிம்மம்
சிம்ம ராசியின் 10 ஆவது வீட்டிற்கு செவ்வாயும், புதன் 4 ஆவது வீட்டிற்கும் செல்கின்றனர். இதனால் இவ்விரு பெயர்ச்சிகளால் சிம்ம ராசிக்காரர்கள் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புக்களைப் பெறுவார்கள். வியாபாரம் செய்பவர்கள் ரியல் எஸ்டேட் மூலம் நல்ல ஆதாயத்தைப் பெறுவார்கள். மொத்தத்தில் இந்த பெயர்ச்சிகளானது சிம்ம ராசிக்காரர்களுக்கு வாழ்வில் சாதகமான மாற்றத்தை ஏற்படுத்தும்.

துலாம்
துலாம் ராசியின் 2 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார் மற்றும் 8 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் வெளிநாட்டிற்கு செல்லும் வாய்ப்புக்கள் கிடைக்கும். தொழிலில் நல்ல லாபம் மற்றும் முன்னேற்றம் ஏற்படும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும்.

மகரம்
மகர ராசியின் 5 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார் மற்றும் 11 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். எனவே இந்த கிரகங்களின் பெயர்ச்சியால் மகர ராசிக்காரர்களுக்கு பல விஷயங்களில் சாதகமான பலன்கள் கிடைக்கும். ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நல்ல காலமாக இருக்கும். புதனின் மாற்றத்தால் மாணவர்களுக்கு நன்றாக இருக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபகரமான காலமாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications