For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒருவரது ஜாதகத்தில் கிரகங்கள் பலவீனமாக இருந்தால் எந்த மாதிரியான நோய்கள் வரும் தெரியுமா?

ஜோதிட சாஸ்திரத்தின் படி, கிரகங்கள் நோய்களுடன் தொடர்புடையவை. ஒவ்வொரு கிரகமும் ஒருசில நோய்களுக்கு காரணியாக கருதப்படுகின்றன. இப்போது 9 கிரகங்களும் வலுவிழந்து இருந்தால் எந்த மாதிரியான நோய்கள் வரும் என்பதைக் காண்போம்.

|

வேத ஜோதிடத்தின் படி, ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் ராசியை மாற்றிக் கொண்டே இருக்கும். ஒருவரது ஜாதகத்தில் கிரகங்கள் இருக்கும் நிலையைப் பொறுத்து நற்பலன்கள் அல்லது மோசமான பலன்கள் கிடைக்கும். ஜோதிட சாஸ்திரத்தின் படி, கிரகங்கள் நோய்களுடன் தொடர்புடையவை. ஒவ்வொரு கிரகமும் ஒருசில நோய்களுக்கு காரணியாக கருதப்படுகின்றன.

Health Astrology: How All Nine Planets Effects On Our Health

ஒருவரது ஜாதகத்தில் கிரகங்கள் சுப நிலையில் இருந்தால், அவர் பொருளாதார ரீதியாக சிறப்பாக இருப்பதோடு, நல்ல ஆரோக்கியத்துடனும் இருப்பார். அதுவே கிரகங்கள் சுப நிலையில் இல்லாவிட்டால், பல்வேறு வகையான பிரச்சனைகளுடன், ஆரோக்கிய பிரச்சனைகளையும் சந்திப்பார். இப்போது 9 கிரகங்களும் வலுவிழந்து இருந்தால் எந்த மாதிரியான நோய்கள் வரும் என்பதைக் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பலவீனமான சூரியனால் வரும் நோய்கள்

பலவீனமான சூரியனால் வரும் நோய்கள்

ஜோதிடத்தில் அனைத்து கிரகங்களின் தலைவனாக கருதப்படுபவர் சூரியன். ஒருவரது ஜாதகத்தில் சூரியன் வலுவிழந்தால், அந்நபர் பித்தம், வயிறு தொடர்பான நோய்கள், கண் நோய்கள், இதய நோய்கள், இரத்தம் தொடர்பான நோய்கள் வர வாய்ப்புள்ளது.

பலவீனமான சந்திரனால் வரும் நோய்கள்

பலவீனமான சந்திரனால் வரும் நோய்கள்

ஜோதிடத்தில் சந்திரன் வலுவிழந்த நிலையில் இருந்தால், மன உளைச்சல், சிறுநீரகம், சர்க்கரை நோய், சளி, சிறுநீரக கோளாறு, வாய், பற்கள், மஞ்சள் காமாலை, மனச்சோர்வு, இதயம் சம்பந்தமான பிரச்சனைகளும் ஏற்பட வாய்ப்புள்ளது.

பலவீனமான செவ்வாயால் வரும் நோய்கள்

பலவீனமான செவ்வாயால் வரும் நோய்கள்

வேத ஜோதிடத்தில் செவ்வாய் இரத்தத்துடன் தொடர்புடையது. இந்நிலையில் செவ்வாய் பலவீனமான நிலையில் இருந்தால், இரத்தம் தொடர்பான நோய்கள் அதிகமாக வர ஆரம்பிக்கும். இது தவிர ஃபுட் பாய்சன், இரத்த அழுத்தம் தொடர்பான நோய்கள், சளி, சிறுநீரக நோய்கள், கட்டிகள், புற்றுநோய், மூல நோய் மற்றும் அல்சர் போன்றவை வர வாய்ப்புள்ளது.

பலவீனமான புதனால் வரும் நோய்கள்

பலவீனமான புதனால் வரும் நோய்கள்

ஜோதிடத்தில் புதன் காரக கிரகமாக கருதப்படுகிறது. புதன் வலுவிழந்தால் டைபாய்டு, நிமோனியா, அலர்ஜி, மஞ்சள் காமாலை, தோல் நோய்கள் போன்றவை வருவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.

பலவீனமான குருவால் வரும் நோய்கள்

பலவீனமான குருவால் வரும் நோய்கள்

ஒருவரது ஜாதகத்தில் குரு வலுவிழந்த நிலையில் இருந்தால், உடல் பருமன், வயிறு தொடர்பான நோய்கள் வர ஆரம்பிக்கும். மேலும் கல்லீரல், சிறுநீரகம் தொடர்பான நோய்களும், சர்க்கரை நோய், மஞ்சள் காமாலை மற்றும் நினைவாற்றல் இழப்பு போன்ற நோய்கள் ஏற்பட தொடங்கும்.

பலவீனமான சுக்கிரனால் வரும் நோய்கள்

பலவீனமான சுக்கிரனால் வரும் நோய்கள்

ஜோதிடத்தில் செழிப்பு மற்றும் செல்வத்தின் கிரகம் சுக்கிரன். இந்த சுக்கிரன் பலவீனமான நிலையில் இருந்தால், அவர் பாலியல் நோய்களை சந்திக் நேரிடும். இது தவிர மஞ்சள் காமாலை மற்றும் சருமம் தொடர்பான நோய்கள் வரக்கூடும்.

பலவீனமான சனியால் வரும் நோய்கள்

பலவீனமான சனியால் வரும் நோய்கள்

ஜாதகத்தில் சனி பலவீனமாக இருந்தால், உடல் சோர்வு, காயம் போன்றவை ஏற்படும். தலைமுடி தொடர்பான நோய்கள், உடல் வலி, வயிற்று வலி, முழங்கால் அல்லது பாதங்களில் வலி, பற்கள் அல்லது தோல் தொடர்பான நோய்கள் போன்றவை வர வாய்ப்புள்ளது.

பலவீனமான ராகுவால் வரும் நோய்கள்

பலவீனமான ராகுவால் வரும் நோய்கள்

ஒருவரது ஜாதகத்தில் ராகு பலவீனமான நிலையில் இருந்தால், அந்நபர் மூளை வலி, பைல்ஸ், பைத்தியம் போன்றவற்றால் பாதிக்கப்படுவார்.

பலவீனமான கேதுவால் வரும் நோய்கள்

பலவீனமான கேதுவால் வரும் நோய்கள்

கிரகங்களில் ராகு மற்றும் கேது ஆகிய இரண்டுமே நிழல் கிரகங்கள். கேது வலுவிழப்பதால் எலும்பு தொடர்பான நோய்கள், கால் வலி, நரம்பு தளர்ச்சி, சிறுநீரகம் தொடர்பான நோய்கள், நாய்க்கடி, முதுகுத்தண்டு தொடர்பான பிரச்சனை, மூட்டு வலி, சர்க்கரை நோய், காது பிரச்சனை, தூக்க கோளாறுகள், குடலிறக்கம் மற்றும் பிறப்புறுப்பு நோய்கள் போன்றவை வர வாய்ப்புள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Health Astrology: How All Nine Planets Effects On Our Health

In this article, we shared what kind of diseases arise when all the 9 planets are weak. Read on to know more...
Desktop Bottom Promotion