Latest Updates
-
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க
கருட புராணத்தின் படி, மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு தினமும் இந்த விஷயங்களைச் செய்யணுமாம்...
ஒருவர் நல்ல மகிழ்ச்சிகரமான மற்றும் வெற்றிகரமான வாழ்க்கையை வாழ வேண்டுமானால் அன்றாட வாழ்வில் தவறாமல் செய்ய வேண்டிய சில விஷயங்களைப் பற்றி கருட புராணம் விவரிக்கிறது.
கருட புராணமானது ஒருவர் தனது கர்மாவின் படி எந்த மாதிரியான முடிவுகளை பெறுவார் என்பதை கூறுகிறது. அந்த வகையில் ஒருவர் தன் வாழ்வில் நல்ல செயல்களை செய்தால், அவரது வாழ்க்கை சந்தோஷமும் வளமும் பெற்றிருப்பார். அதுவே கெட்ட செயல்களை செய்தால், பலவிதமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

ஒருவர் நல்ல மகிழ்ச்சிகரமான மற்றும் வெற்றிகரமான வாழ்க்கையை வாழ வேண்டுமானால் அன்றாட வாழ்வில் தவறாமல் செய்ய வேண்டிய சில விஷயங்களைப் பற்றி கருட புராணம் விவரிக்கிறது. அந்த விஷயங்களை செய்வதனால் வாழ்வில் சந்திக்கும் பல துன்பங்களில் இருந்து விடுபடலாம். இப்போது மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு தினமும் என்னென்ன விஷயங்களை செய்ய வேண்டும் என்பதைக் காண்போம்.
குல தெய்வ வழிபாடு
ஒவ்வொருவருக்கும் குலதெய்வம் இருக்கும். இந்த குலதெய்வத்தை ஒருவர் தினமும் மறக்காமல் வணங்க வேண்டும். கருட புராணத்தின் படி, குலதெய்வத்தை வழிபடுவது வாழ்வில் சந்திக்கும் அனைத்து வகையான துன்பங்களில் இருந்து விடுவிப்பதோடு, பிரச்சனைகளைப் போக்குகிறது. குலதெய்வம் தான் எந்த ஒரு சூழலிலும் தனது பக்தர்களை கைவிடாது காக்கும்.
பிரசாதம் செய்து படையுங்கள்
தினமும் வீட்டில் சமைத்த உணவுகளை உண்பதற்கு முன், அதை சிறிது எடுத்து தெய்வங்களுக்கு பிரசாதமாக வழங்க வேண்டும் என்று கருட புராணம் கூறுகிறது. ஏனெனில் இவ்வாறு செய்வதன் மூலம், அன்னப்பூரணி தேவியின் அருள் எப்போதும் கிடைப்பதோடு, வாழ்நாள் முழுவதும் உணவுப் பற்றாக்குறை இருக்காது மற்றும் வாழ்வில் உள்ள பணப் பிரச்சனைகளும் நீங்கும்.
அன்னதானம்
தானத்திலேயே சிறந்த தானம் அன்னதானம். இந்த அன்னதானத்தை ஒருவர் எப்போதும் செய்ய வேண்டும் என்று கருடபுராணம் கூறுகிறது. தினமும் அன்னதானம் செய்ய முடியாவிட்டாலும், தங்களால் முடிந்த நேரங்களில் தவறாமல் அன்னதானம் செய்ய வேண்டும். அதோடு வருமானத்தில் ஒரு சிறிய பகுதியை தர்மமாக வழங்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம், புண்ணியம் சேர்வதோடு, குடும்பத்தின் பொருளாதாரமும் வலுவடையும்.
வேதங்களைப் படிக்கவும்
ஒருவர் தினமும் வேதங்களையும் புராணங்களையும் படித்து, அதில் மறைந்திருக்கும் அறிவைப் பெற வேண்டும் என்று கருடபுராணம் கூறுகிறது. இப்படி செய்வதனால் ஒருவருக்கு வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளை எதிர்த்துப் போராடும் திறன் கிடைப்பதோடு, வெற்றிக்கான புதிய வழிகளும் கிடைக்கும்.
துளசி வழிபாடு
கருட புராணத்தில் துளசி மற்றும் அதன் மருத்துவ குணங்கள் குறித்து கூறப்பட்டுள்ளது. அதன்படி, துளசி இலையைக் கொண்டு விஷ்ணு பகவானுக்கு அர்ச்சனை செய்து, அந்த துளசி இலைகளை தினமும் சாப்பிட்டு வந்தால், உடல் மற்றும் மன நோய்கள் நீங்கும்.



Click it and Unblock the Notifications