For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்றைய ராசிப்பலன் (11.01.2021): இன்று இந்த ராசிக்காரர்கள் கோபத்தை குறைத்து கொண்டால் நல்லதாம்…

|

இன்றைய தினம் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். இன்று ரிஷப ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். ஜனவரி 11 ஆம் தேதி திங்கட்கிழமையான இன்று, உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

இன்று மன அமைதி குலையக்கூடும். திடீரென பெரிய செலவுகள் வரக்கூடும். குடும்பத்தில் சாதகமான சூழல் இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் மறக்க முடியாத நாளாக இருக்கும். உத்தியோகஸ்தர்கள், அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாகக்கூடும். வேலையில் அலட்சியம் காட்டாமல் இருப்பது நல்லது. வணிகர்கள் கடும் போராட்டத்திற்கு பிறகு நிதி சலுகையைப் பெறுவார்கள். உடல்நலம் பற்றி பேசினால், தலைவலி பிரச்சனை இருக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம்: அடர் சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 17

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12 மணி முதல் மதியம் 2:30 மணி வரை

ரிஷபம்

ரிஷபம்

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் என்பதால் கவனமாகவும், நிதானமாகவும் செயல்பட வேண்டும். இன்று உங்களுக்கு வழக்கத்தை விட சிறந்த நாளாக இருக்கும். நீண்டகால முயற்சிகளில் வெற்றி பெற முடியும். மனம் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். உத்தியோகஸ்தர்கள், எந்தவித இடையூறும் இல்லாமல் வேலைகளை முடிக்க முடியும். வர்த்தகர்கள் பெரிய லாபங்களுக்காக தங்கள் வணிகத் திட்டங்களில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டும். வீட்டில் அமைதியான சூழல் நிலவும். நீண்ட காலம் சொத்துப் பிரச்சனையை தீர்க்க வலுவான வாய்ப்புள்ளது. இன்று நீங்கள் மிகவும் ஆற்றல் மிக்கவராக இருப்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 29

அதிர்ஷ்ட நேரம்: காலை 10 மணி முதல் மதியம் 1:20 மணி வரை

மிதுனம்

மிதுனம்

இன்று நாளின் தொடக்கம் அவ்வளவு நன்றாக இருக்காது. ஏதேனும் ஒரு விஷயத்தில் வாழ்க்கைத் துணையுடன் பெரிய சண்டை போடலாம். இதுபோன்ற விஷயங்களைத் தவிர்க்க முயற்சி செய்ய தவறினால், முக்கிய பணிகளில் கவனம் செலுத்த முடியாது. அலுவலகத்தில் நிலுவையில் உள்ள பணிகளை முடிக்க முடிந்தவரை முயற்சிக்கவும். அரசு பணியில் உள்ளவர்கள் சில நல்ல செய்திகளைப் பெறலாம். வணிகர்களுக்கு பெரிய நிவாரணம் கிடைக்க வலுவான வாய்ப்புள்ளது. சில பிரச்சனைகளால் பாதியில் நின்ற சில முக்கிய பணிகளை தீர்க்க முடியும். உடல்நிலை பற்றி பேசினால், சரியான நேரத்தில் உணவு உண்ணவும். பசியுடன் நீண்ட நேரம் இருக்க வேண்டாம்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 40

அதிர்ஷ்ட நேரம்: காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை

கடகம்

கடகம்

இன்று வேலை முன்னணியில் ஏற்ற தாழ்வுகள் நிறைந்திருக்கும். அலுவலகத்தில் சக ஊழியர்களுடனான மோதல் போக்கை தவிர்க்கவும். உங்கள் வேலையில் பிறரை தலையிட அனுமதிக்காதீர். கோபத்தை தவிர்த்து புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டும். வணிகர்கள் நிதி தடைகளை சந்திக்க நேரிடலாம். வணிகர்கள் தங்களது முடிவுகளை கவனமாக எடுக்க வேண்டும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். இன்று குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக நேரம் செலவிடுவீர்கள். எதிர்காலம் குறித்து வாழ்க்கைத் துணையுடன் விவாதிக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம்: வானம்

அதிர்ஷ்ட எண்: 10

அதிர்ஷ்ட நேரம்: காலை 9 மணி முதல் இரவு 10 மணி வரை

சிம்மம்

சிம்மம்

நீதிமன்ற வழக்குகளில் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். வியாபாரிகள், இன்று ஒரு பெரிய ஒப்பந்தத்தைப் பெறலாம். கடினமாக உழைத்தால், விரைவில் சில பெரிய வெற்றிகளைப் பெறலாம். உத்தியோகஸ்தர்கள் தங்களை பணிகளை சிறப்பாக செய்து முடிக்க முடியும். பணத்தைப் பற்றி பேசுகையில், தேவையற்ற செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டும். செலவுகளை கணக்கில்லாமல் தொடர்ந்து செய்து வந்தால், வரும் நாட்களில் பெரும் நிதி நெருக்கடியை சந்திக்க நேரிடும். வாழ்க்கைத் துணையுடனான உறவு வலுப்பெறும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 10

அதிர்ஷ்ட நேரம்: பிற்பகல் 1:55 மணி முதல் மாலை 6:50 மணி வரை

கன்னி

கன்னி

வியாபாரிகள் இன்றைய தினம் கடன் வழங்குவதைத் தவிர்க்க வேண்டும். இல்லையெனில், அது உங்களுக்கு பெரிய சிக்கலை ஏற்படுத்தக்கூடும். புதிய பங்குகள் வாங்கும் திட்டமிருந்தால், இன்று அதற்கு சாதகமான நாள். உத்தியோஸ்தர்களுக்கு இன்று சாதாரண நாளாக இருக்கும். உங்களை வேலைகளை விடாமுயற்சியுடன் செய்து முடிப்பீர்கள். பண நிலைமை நன்றாக இருக்கும். குடும்பத்தாருடன் நேரத்தை சிறப்பாக செலவிட முடியும். பெற்றோரின் ஆதரவு கிடைக்கப்பெறுவீர்கள். வாழ்க்கைத் துணையுடனான உறவில் இனிமை அதிகரிக்கும். உடல்நலம் நன்றாக இருக்கும். இன்று மிகவும் ஆற்றல் மிக்கவராக இருப்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 34

அதிர்ஷ்ட நேரம்: அதிகாலை 5:25 மணி முதல் பிற்பகல் 2:15 மணி வரை

துலாம்

துலாம்

இன்று நீங்கள் இறைவன் வழிபாட்டுடன் உங்கள் நாளைத் தொடங்கினால், பணிகள் அனைத்தும் எந்தவித இடையூறும் இல்லாமல் முடிக்கப்படும். இன்று மன அமைதியை உணர்வீர்கள். இன்று அலுவலகத்தில் நடைபெறும் முக்கிய கூட்டத்திற்கு நீங்கள் தலைமை தாங்க வேண்டியிருக்கும். இதற்கு முன்கூட்டியே நீங்கள் சிறப்பாக தயாராகவும். வணிகர்கள் இன்று நல்ல நிதி நன்மைகளைப் பெறலாம். தனிப்பட்ட வாழ்க்கையில், வாழ்க்கைத் துணையின் நடத்தையில் சில மாற்றங்கள் இருக்கும். பணத்தின் அடிப்படையில் நாள் சிறப்பாக இருக்காது. ஆரோக்கியத்தின் அடிப்படையில் இன்று சாதாரணமாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

அதிர்ஷ்ட எண்: 37

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1:25 மணி முதல் மாலை 5 மணி வரை

விருச்சிகம்

விருச்சிகம்

இன்று மாணவர்களுக்கு மிகவும் சிறப்பான நாளாக இருக்கப்போகிறது. நீங்கள் சமீபத்தில் ஏதேனும் பரீட்சை எடுத்திருந்தால், உங்கள் கடின உழைப்பின் நல்ல பலனைப் பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்கள் திடீரென பயணம் செய்ய வேண்டியிருக்கும். உங்கள் பயணம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வங்கித் தொடர்புடைய வேலை செய்வோர் பெரும் வெற்றியைப் பெறுவார்கள். ரியல் எஸ்டேட் தொடர்பான வேலை செய்வோர், எதிர்பார்த்த முடிவுகளைப் பெறலாம். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். உடல்நலம் நன்றாக இருக்கும். இன்று நீங்கள் மிகவும் புத்துணர்ச்சி அடைவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 12

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12 மணி முதல் மாலை 4:25 மணி வரை

தனுசு

தனுசு

உங்கள் மன அமைதியைப் பேணுவதற்காக அதிக கோபத்தைத் தவிர்க்கவும். அன்புக்குரியவர்களுடனான உறவில் கசப்பு ஏற்படலாம். நிதி நிலைமை நன்றாக இருக்கும். இன்று நீங்கள் நண்பர் ஒருவருக்கு நிதி ரீதியாக உதவலாம். வேலையைப் பற்றி பேசும்போது, மின்னணு ஊடகங்களுடன் தொடர்புடையவர்கள் நல்ல வெற்றியைப் பெற வாய்ப்புள்ளது. மறுபுறம், வர்த்தகர்கள் எந்தவொரு புதிய மற்றும் முக்கியமான வேலைக்கும் வங்கியில் கடன் வாங்க நினைத்தால், இன்று உங்கள் திட்டம் முன்னேறலாம். உடல்நலம் பற்றி பேசினால், நீங்கள் சோர்வாகவும் பலவீனமாகவும் உணருவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

அதிர்ஷ்ட எண்: 7

அதிர்ஷ்ட நேரம்: இரவு 7 மணி முதல் 9:25 மணி வரை

மகரம்

மகரம்

வியாபாரிகள் தங்களது வணிகம் தொடர்பான குழப்பத்திலிருந்து நீங்க, அனுபவசாலிகளை அணுக வேண்டும். மன அழுத்தத்தில் இருக்கும் போது, எந்த தீர்வும் அடைய முடியாது. எனவே, இதுபோன்ற சூழ்நிலைகளில் மனதை அமைதியாக வைத்திருப்பது நல்லது. பணத்தின் அடிப்படையில், இன்று கலவையான முடிவுகளைத் தரும். பண நிலைமை நன்றாக இருக்கும். திடீர் செலவுகள் வரக்கூடும். எதிர்பார்த்த நிதி லாபம் கிடைக்காமல் ஏமாற்றமடையலாம். வாழ்க்கைத் துணையுடன் தேவையற்ற விவாதத்தைத் தவிர்ப்பது நல்லது. ஆரோக்கியம் பற்றி பேசினால், நீரிழிவு நோயாளிகள் இன்று அலட்சியமாக இருக்கக்கூடாது.

அதிர்ஷ்ட நிறம்: வானம்

அதிர்ஷ்ட எண்: 17

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12:20 மணி முதல் 9:05 மணி வரை

கும்பம்

கும்பம்

இன்று அலுவலக சூழல் மிகவும் நன்றாக இருக்கும். இதனால் மிகுந்த மகிழ்ச்சி அடைவீர்கள். ஒரு முக்கியமான விஷயம் குறித்து உயர் அதிகாரிகளுடன் விவாதிக்கப்படலாம். உங்கள் எண்ணங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பப்படும். இன்று, வணிகர்கள் நிதி ரீதியாக பயனடையக்கூடும். தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பேசுகையில், குடும்ப உறுப்பினர்களுடன் பயணம் செல்ல வாய்ப்பு கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவில் அன்பு அதிகரிக்கும். பாதகமான சூழ்நிலைகளில் அன்புக்குரியவரின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். இன்று நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பீர்கள். மிகவும் ஆற்றல் மிக்கவராகவும் இருப்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

அதிர்ஷ்ட எண்: 7

அதிர்ஷ்ட நேரம்: இரவு 7 மணி முதல் 9:25 மணி வரை

மீனம்

மீனம்

உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளிலிருந்து விடுபடுவதன் மூலம் நீங்கள் மன அமைதியை பெறுவீர்கள். இன்று வேலை முன்னணியில் முன்னேற்றத்திற்கான நல்ல அறிகுறிகள் தென்படும். அதற்காக கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். இது உங்கள் மகிழ்ச்சியை மட்டுமல்ல, உங்கள் நம்பிக்கையும் அதிகரிக்கும். பண விவகாரங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வருமானம் அதிகரிக்க வலுவான வாய்ப்புள்ளது. இன்று நீங்கள் பண பரிவர்த்தனைகளை தவிர்க்க வேண்டும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவில் நல்லிணக்கம் இருக்கும். மாலையில் நண்பர்களுடன் சிறப்பாக நேரத்தை செலவிடுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு

அதிர்ஷ்ட எண்: 12

அதிர்ஷ்ட நேரம்: மாலை 6:20 மணி முதல் இரவு 8:20 மணி வரை

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Daily Horoscope For 11th January 2021 Monday In Tamil

Check out the daily horoscope for 11th January 2021 monday in Tamil. Read on.
Story first published: Monday, January 11, 2021, 5:00 [IST]
Desktop Bottom Promotion