For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்றைய ராசிப்பலன் (05.01.2021): இன்று இந்த ராசிக்காரர்கள் மத்தவங்க பேச்சை கேட்டு எம்முடிவையும் எடுக்காதீங்க...

|

இன்றைய தினம் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். இன்று கும்ப ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். ஜனவரி 05 ஆம் தேதி செவ்வாய்கிழமையான இன்று, உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

இன்றைய தினம் ஆரோக்கியத்தினம் கவனம் செலுத்த வேண்டும். சோர்வு மற்றும் பலவீனத்தால் நீங்கள் நன்றாக உணர மாட்டீர்கள். அத்தகைய சூழ்நிலையில், மருத்துவரை அணுகுவது நல்லது. இன்று நீங்கள் எந்த முக்கியமான முடிவுகளையும் எடுக்காமல் இருக்கவும். உணர்ச்சிவசப்பட்டு தவறான முடிவுகளை எடுக்க வாய்ப்புள்ளது. தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பேசினால், பெற்றோரின் எண்ணங்களுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். அவர்கள் உங்களுக்கு ஏதாவது ஆலோசனை வழங்கினால், அதனை புறக்கணிக்காதீர்கள். இன்று வாழ்க்கைத் துணையுடன் போதுமான நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும். இன்று வேலை தொடர்பாக திடீர் பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ

அதிர்ஷ்ட எண்: 38

அதிர்ஷ்ட நேரம்: காலை 7:55 மணி முதல் மதியம் 1:30 மணி வரை

ரிஷபம்

ரிஷபம்

தனிப்பட்ட வாழ்க்கையில் எதிர்பார்த்த நிம்மதியும் மகிழ்ச்சியும் இருக்காது. குடும்ப பொறுப்புகளின் சுமையானது அதிகரிக்கக்கூடும். தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கை அனைத்திலுமே, நிறைய சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். குழந்தைகள் தொடர்பான நற்செய்தி கிடைக்கப்பெற்று, நிம்மதியாக உணருவீர்கள். நிதி நிலைமை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும். யோசித்து செலவுகளை செய்வது நல்லது. வணிகர்கள் நிதி ரீதியாக பயனடையலாம். மேலும், வணிகர்கள் இன்றைய தினம் பெரிய முதலீடுகளை தவிர்க்க வேண்டும். முக்கியமான முடிவுகளை புத்திசாலித்தனமாக எடுக்கவும். உடல்நிலையில் எந்த பெரிய பிரச்சனையும் இருக்காது.

அதிர்ஷ்ட நிறம்: அடர் இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 4

அதிர்ஷ்ட நேரம்: காலை 8:00 மணி முதல் பிற்பகல் 2:30 மணி வரை

மிதுனம்

மிதுனம்

இன்று உங்களுக்கு கலவையான தினமாகவே இருக்கும். அலுவலகத்தில் உள்ள நிலுவை பணிகளை முடிக்க அதிக கவனம் செலுத்த வேண்டும். உயர் அதிகாரிகள் உங்கள் மீது கடுமையான அணுகுமுறையை செலுத்தக்கூடும். வணிகர்கள், தொழிலை மேம்படுத்த நினைத்தால், அது தொடர்பான முடிவுகளை உறுதியாகவும், யோசித்தும் எடுக்க வேண்டும். புது தொழில் தொடங்குவதற்கு முன்பு, அதை பற்றி ஆராய்ந்து செயல்படுவது நல்லது. குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும், அமைதியும் அதிகரிக்கும். குடும்பத்தினருடனான உறவு வலுப்பெறும். ஆரோக்கியம் பற்றி பேசினால், இன்று மந்தமாக உணருவீர்கள். புத்துணர்ச்சியுடன் இருக்க வேண்டுமெனில், யோகா அல்லது உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: கிரீம்

அதிர்ஷ்ட எண்: 15

அதிர்ஷ்ட நேரம்: காலை 6:45 மணி முதல் பிற்பகல் 2:25 மணி வரை

கடகம்

கடகம்

உங்களது பொருளாதார நிலைமை மேம்படும். மேலும், இன்று உங்களுக்கு ஆறுதலளிக்கக்கூடிய விஷயங்களுக்கு நிறைய பணம் செலவிட முடியும். உத்தியோகஸ்தர்கள், தங்கள் வேலையை முழு உற்சாகத்துடனும் நம்பிக்கையுடனும் செய்வீர்கள். உயர் அதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள். கூட்டு வியாபாரம் செய்வோர், நிதி ரீதியாக பயனடையலாம். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் காதல் அதிகரிக்கும். பெற்றோரிடமிருந்தும் உணர்ச்சிபூர்வமான ஆதரவு கிடைக்கும். மாலையில் வழிபாட்டு தளங்களுக்கு செல்ல வாய்ப்பு கிடைக்கும். ஆரோக்கிய விஷயங்கள் இன்று நன்றாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு

அதிர்ஷ்ட எண்: 20

அதிர்ஷ்ட நேரம்: காலை 8:40 மணி முதல் மதியம் 12:30 மணி வரை

சிம்மம்

சிம்மம்

இந்த நாளில் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். மற்றவர்களின் பேச்சை கேட்டு எந்த ஒரு முடிவையும் எடுக்க வேண்டாம். இல்லையென்றால், பின்னர் வருத்தப்பட வேண்டியிருக்கும். உங்கள் இலக்கிலிருந்து திசைதிருப்ப சிலர் முயற்சி செய்யலாம். எனவே, எப்போதும் கவனமாக இருப்பது நல்லது. இன்று வணிகர்களுக்கு மன அழுத்தம் நிறைந்த நாளாக இருக்கும். உங்கள் பணி திடீரென மோசமடைந்து, பெரும் இழப்பை சந்திக்க நேரிடும். உத்தியோகஸ்தர்களுக்கு, பணிச்சுமை அதிகரிக்கலாம். அதிகப்படியான வேலை மற்றும் அழுத்தம் காரணமாக ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். வேலை மற்றும் ஆரோக்கியம் இரண்டிலும் சமஅளவு கவனம் செலுத்துவது நல்லது. வெளி பிரச்சனைகளை வீட்டிற்கு கொண்டு வராமல் இருப்பது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 5

அதிர்ஷ்ட நேரம்: காலை 7:55 மணி முதல் மதியம் 1:30 மணி வரை

கன்னி

கன்னி

இன்று நீங்கள் சில நற்செய்திகளைப் பெறலாம். இது உங்கள் மகிழ்ச்சியை அதிகரிக்கச் செய்யும். வீட்டின் சூழ்நிலை மிகவும் நன்றாக இருக்கும். மேலும் உங்கள் மகிழ்ச்சியை உங்கள் குடும்பத்துடன் பகிர்ந்து கொள்வீர்கள். அலுவலகத்தில் உங்கள் செயல்திறன் மிகவும் நன்றாக இருக்கும். உயர் அதிகாரிகளின் ஆலோசனையைப் பின்பற்றினால், வரும் நாட்களில் நல்லதே நடக்கும். இன்று வியாபாரிகள் பெரிய பொருளாதார பரிவர்த்தனைகளை செய்ய வேண்டாம். மேலும், எந்தவொரு சட்ட பிரச்சனைகளிலும் புத்திசாலித்தனமாக முடிவுகளை எடுத்தால் நல்லது. செலவுகள் குறைந்து, பொருளாதாரம் சமநிலையில் இருக்கும். உடல்நலம் பற்றி பேசினால், இன்று நன்றாக இருக்கும், உங்களுக்கு பிடித்த உணவுகளை ருசித்து உண்டு அனுபவிப்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்: 30

அதிர்ஷ்ட நேரம்: காலை 10:00 முதல் மதியம் 2:00 மணி வரை

துலாம்

துலாம்

இன்று நீங்கள் சோர்வாக உணர்ந்தால், ஆரோக்கியம் கவனம் செலுத்தி ஓய்வெடுப்பது நல்லது. நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுங்கள். இது உங்கள் மன அழுத்தத்தைக் குறைத்து நன்றாக உணர வைக்கும். வணிகர்களின் சந்தித்துவந்த தடைகளை இன்று சமாளிக்க முடியும். தனிப்பட்ட வாழ்க்கையில் அமைதியைக் காக்க வேண்டுமெனில், அற்ப விஷயங்களுக்காக உணர்ச்சிவசப்படுவதைத் தவிர்க்கவும். குடும்ப உறுப்பினர்களுடன் கண்டிப்பாக நடந்துகொள்வதைத் தவிர்க்கவும். இன்று பொருளாதார முன்னணியில் கலவையான முடிவுகள் இருக்கும். மேலும், செலவுகள் அதிகரிக்கக்கூடும்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

அதிர்ஷ்ட எண்: 28

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1:55 முதல் மாலை 6:00 மணி வரை

விருச்சிகம்

விருச்சிகம்

உத்தியோகஸ்தர்கள், இன்று மிகப் பெரிய வெற்றியை பெற வலுவான வாய்ப்புள்ளது. அது பதவி உயர்வாக கூட இருக்கலாம். நீங்கள் வேலை தேடுபவராக இருந்தால், இன்று நிச்சயம் வெற்றி பெறலாம். வணிகர்களுக்கு இன்று மிகவும் முக்கியமான நாளாக இருக்கும். சிறு வணிகர்கள் இன்று நல்ல பயன் பெறலாம். நிதி பற்றி பேசும்போது, வருமானத்தை அதிகரிப்பதற்கான திடீர் வாய்ப்பு தேடி வரலாம். வீட்டுச் சூழல் சாதகமாக இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையுடனான உறவு நன்றாக இருக்கும். உடல்நிலை பற்றி பேசுகையில், சாப்பிடும் உணவு மற்றும் பானங்களில் அலட்சியமாக இருக்காதீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 6

அதிர்ஷ்ட நேரம்: காலை 7:55 மணி முதல் மதியம் 1:30 மணி வரை

தனுசு

தனுசு

உங்கள் வாழ்க்கை துணையுடன் இருந்தவந்த சிக்கல், இன்று தீரும். உங்களிடையே இருந்த அதிருப்தியை மறந்து அன்பை பரிமாறிக் கொள்ளவும். குழந்தைகளால் மகிழ்ச்சி அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு இன்று சாதாரண நாளாக இருக்கும். கடின உழைப்பினால், உங்கள் வேலைகளை சரியான நேரத்தில் செய்து முடிப்பீர். இன்று வணிகர்களுக்கு சாதகமான நாள். இருப்பினும், நேரத்தை கருத்தில் கொண்டு செயல்படுவது நல்லது. நிதி நிலைமை நன்றாக இருக்கும். சிக்கித் தவித்த பொருளாதார பரிவர்த்தனைகளை இன்று முடிக்க முடியும். ஆரோக்கியம் சாதகமாக இருக்கும். இன்றைய தினம் புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: கிரீம்

அதிர்ஷ்ட எண்: 28

அதிர்ஷ்ட நேரம்: காலை 7:05 மணி முதல் மாலை 4:15 மணி வரை

மகரம்

மகரம்

நீங்கள் ஒரு மாணவராக இருந்தால், படிப்பை தொடருவதில் இருந்த வந்த பெரிய பிரச்சனை இன்று சமாளிக்க முடியும். நீங்கள் விடாமுயற்சியுடன் படிக்க முடித்தால் சாதிக்க முடியும். வேலையைப் பற்றிப் பேசினால், இன்று உங்களுக்கு மிகவும் நல்ல நாளாக இருக்கும். முக்கியமான பணிகளை சரியான நேரத்தில் முடிக்க முடியும். மறுபுறம், இன்று வணிகர்களுக்கு சிறந்த நாளாக இருக்கும். பெரிய நிதி நன்மைகளைப் பெற வாய்ப்புள்ளது. தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பேசும்போது, நண்பர்களுடன் சில கருத்து வேறுபாடு உருவாகலாம். பயன்படுத்தும் வார்த்தைகளில் கவனம் தேவை. இல்லையெனில், நிலைமை மோசமாகலாம். உடல்நலம் நன்றாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 29

அதிர்ஷ்ட நேரம்: மாலை 4:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை

கும்பம்

கும்பம்

இன்று உங்கள் மனநிலை மிகவும் நன்றாக இருக்கும். மன மகிழ்ச்சியாகவும், அமைதியாகவும் உணர்வீர்கள். உத்தியோகஸ்தர்கள், தங்களது கடின உழைப்பால் நல்ல பலன்களைப் பெற முடியும். உயர் அதிகாரிகள், உங்கள் வேலையை பெரிதும் பாராட்டுவர். மேலும், அவர்களிடமிருந்து சில நல்ல செய்திகளையும் கூட பெறலாம். வணிகர்கள் புதிய வேலை எதாவது தொடங்க விரும்பினால், இன்று அதற்கு சாதகமான நாள். நீங்கள் எதிர்பார்த்த முடிவுகளைப் பெற்றிடலாம். தனிப்பட்ட வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். பெற்றோருடனான உறவு நன்றாக இருக்கும். நீங்கள் திருமணமாகாதவராக இருந்தால், உங்களது திருமண திட்டம் விரைவில் கைகூடப்போகிறது. ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று சிறப்பான நாள். இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் கவனமாக இருக்கவும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 12

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12 மணி முதல் மாலை 4:25 மணி வரை

மீனம்

மீனம்

நீங்கள் முன்னேற விரும்பினால் அதற்காக கடினமாக உழைக்க வேண்டும். இன்று நீங்கள் மிகவும் நெருங்கிய ஒருவரால் ஏமாற்றப்படலாம். இன்றைய தினம் மனச்சோர்வடைந்து இருப்பீர்கள். தனிப்பட்ட வாழ்க்கையில் அமைதி நிலவும். குடும்பத்தினரின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். வியாபாரிகளுக்கு பணத்தைப் பற்றி கவலை ஏற்படக்கூடும். மேலும், ஒரு முக்கியமான பணியை முடிக்க மிகவும் கஷ்டப்பட வேண்டியிருக்கும். ஆரோக்கிய விஷயத்தில் அலட்சியமாக இருக்க வேண்டாம். உங்களுக்கு ஏதேனும் சிக்கல் இருந்தால், உடனே மருத்துவரை அணுகவும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 5

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1:30 மணி முதல் இரவு 7:00 மணி வரை

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Daily Horoscope For 05th January 2021 Tuesday In Tamil

Check out the daily horoscope for 05th January 2021 Tuesday in Tamil. Read on.
Story first published: Tuesday, January 5, 2021, 5:00 [IST]