For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சாணக்கியரின் கூற்றுப்படி உங்கள் எதிரிக்கு நீங்கள் வழங்கும் மிகப்பெரிய தண்டனை எது தெரியுமா?

சாணக்கியரின் புத்திக்கூர்மைக்கு மிகச்சிறந்த சான்று என்றால் அது அவர் இயற்றிய அர்த்தசாஸ்திரம், சாணக்கிய நீதியும்தான். இந்த நூல்களில் வாழ்க்கையைப் பற்றி அவர் கூறியிருக்கும் கருத்துக்கள் எந்த காலத்திற்கும

|

சாணக்கியர் இந்தியாவின் மிகச்சிறந்த தத்துவ மேதை, பொருளாதார அறிஞர் மற்றும் அரசியல் வல்லுநர் என்பது அனைவரும் அறிந்ததே. அவரின் ஆற்றலை இந்த உலகம் புரிந்து கொண்டதால்தான் இன்றும் அவரின் பெயர் வரலாற்றில் நிலைபெற்றிருக்கிறது. இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் கடந்தாலும் சாணக்கியரின் பெயர் இன்றி இந்தியாவின் வரலாறு முழுமை பெறாது என்பதே உண்மை.

Chanakya Niti: How To Prepare Yourself For Bad Times?

சாணக்கியரின் புத்திக்கூர்மைக்கு மிகச்சிறந்த சான்று என்றால் அது அவர் இயற்றிய அர்த்தசாஸ்திரம், சாணக்கிய நீதியும்தான். இந்த நூல்களில் வாழ்க்கையைப் பற்றி அவர் கூறியிருக்கும் கருத்துக்கள் எந்த காலத்திற்கும் பொருந்தக் கூடியது ஆகும். இந்த பதிவில் வாழ்க்கையில் வரும் கடினமான சூழ்நிலைகளை எப்படி கையாள வேண்டும் என்று சாணக்கியர் கூறுகிறார் என்பதை பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 பயத்தை எதிர்க்க வேண்டும்

பயத்தை எதிர்க்க வேண்டும்

நமது முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கும் முதல் விஷயம் நமக்குள் இருக்கும் பயம்தான். இது நமது தன்னம்பிக்கையை சிதைத்து நம்மை பலவீனமாக்கி சூழ்நிலையின் மீது ஆதிக்கம் செலுத்துகிறது. பயமில்லாத ஒரு மனிதன் ஒரு சூழ்நிலையை கையாள்வதற்கும், பயத்துடன் இருக்கும் ஒரு மனிதன் ஒரு சூழ்நிலையை கையாள்வதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கும். அதிகம் பயப்படும் ஒரு மனிதன் ஒருபோதும் தன்னை ஆபத்திலிருந்து காப்பாற்றிக்கொள்ள முடியாது. சூழ்நிலைக்கு எதிராக போராட தொடங்குவதற்கு முன் ஒருவர முதலில் பயத்திற்கு எதிராக போராட வேண்டும். இதை சாணக்கியர் கூறும்போது " பயம் உங்களை நெருங்குவதற்கு முன்னரே அதனை தாக்கி அழித்து விட வேண்டும் " என்று சாணக்கிய நீதியில் கூறியுள்ளார்.

நிகழ்காலத்தில் வாழுங்கள்

நிகழ்காலத்தில் வாழுங்கள்

உங்கள் நேரம் மோசமாக இருப்பதற்கான காரணம் தோல்வியாக இருக்கும்போது, மிக முக்கியமான சில விஷயங்களை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். மோசமான காலகட்டத்தில் மக்கள் வாழும்போது வலி அவர்களின் இதயத்தை ஆக்கிரமிக்கிறது. இதுபோன்ற சூழ்நிலைகளில் அந்த நிலையிலிருந்து வெளிவர முயல வேண்டுமே தவிர கடந்த காலத்தையோ, எதிர்காலத்தையோ நினைத்து கவலைப்படக் கூடாது. இந்த உலகத்தில் மாறாமல் இருப்பது மாற்றம் மட்டுமே. னவே, நேரம் சாதகமாக இல்லாதபோது, ஒருவர் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும். மோசமான காலம் அதுவாக நகரும். இதனை சாணக்கியர் " உங்கள் கடந்த காலத்திற்கு வருந்தாதீர்கள், உங்கள் எதிர்காலத்தைப் பற்றி கவலைப்படாதீர்கள், மாறாக உங்கள் நிகழ்காலத்தை மகிழ்ச்சியாக வாழுங்கள் " என்று கூறுகிறார்.

MOST READ:இந்த ராசிகளில் பிறந்த ஆண்களுக்கு ரொமான்டிக்காக காதலிக்கவே தெரியாதாம்...கத்துக்கோங்கப்பா...!

 மகிழ்ச்சியே வெற்றியை அளிக்கும்

மகிழ்ச்சியே வெற்றியை அளிக்கும்

உங்கள் மோசமான நேரங்களுக்கு உங்கள் எதிரிகள் காரணமாக இருக்கும்போது, உதாரணமாக நீங்கள் ஒரு போரில் ஈடுபடும்போது, அவர்களின் மன உறுதியைத் தாக்க முயற்சிக்க வேண்டும். மனிதனுக்குத் தேவையான வலிமையைக் கொடுப்பது நம்பிக்கைதான். எனவே எதிரியின் நம்பிக்கையைக் கொள்ளும்போது நீங்கள் அவர்களை பலவீனப்படுத்தலாம். உங்களின் மகிழ்ச்சியை பார்க்க விரும்பத்தவர்களுக்கு நீங்கள் கொடுக்கும் மிகப்பெரிய தண்டனையே மகிழ்ச்சியாக இருப்பதுதான். இதனை சாணக்கியர் கூறும்போது " உங்களின் மகிழ்ச்சிதான் உங்களின் எதிரிக்கு நீங்கள் அளிக்கும் மோசமான தண்டனை " என்று கூறியுள்ளார்.

 உங்களை வலிமையானவராக சித்தரிக்க வேண்டும்

உங்களை வலிமையானவராக சித்தரிக்க வேண்டும்

எதிரியின் நம்பிக்கையின் மீது கவனம் செலுத்துவதுதான் உங்களை வலிமையானவராகவும். உங்கள் எதிரியை பலவீனமவராகவும் மாற்றும். நாம் வலிமையானவராக காட்சியளிக்கும் போது எதிரியின் வலிமை கண்டிப்பாக நிலைகுலையும். வலிமையான எதிரியை கண்டு யார்தான் அஞ்ச மாட்டார்கள். பெரும்பாலான மக்கள் தங்களை விட வலிமையானவர்களிடமிருந்து விலகி இருக்கிறார்கள். அவர்கள் முதலில் பலவீனமானவர்களைத் தாக்குகிறார்கள். அப்போதும் நீங்கள் உங்களை வலிமையானவர்களாக காட்டிக் கொள்ள வேண்டும். இதனை சாணக்கியர் " ஒரு பாம்பானது தனக்கு விஷம் இல்லை என்றாலும் தன்னை விஷம் உள்ளது போல காட்டிக் கொள்ள வேண்டும் " என்று கூறியுள்ளார்.

MOST READ:உங்கள் உணவில் முட்டைக்குப் பதில் இந்த சைவ பொருட்களை கொண்டே அதற்கு சமமான ஊட்டச்சத்தைப் பெறலாம்...!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Chanakya Niti: How To Prepare Yourself For Bad Times?

According to Chanakya niti these are the tips to prepare yourself for bad times.
Story first published: Monday, July 29, 2019, 18:55 [IST]
Desktop Bottom Promotion