For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நடிகர் விஜய் சேதுபதி பற்றி பலருக்கு தெரியாத சில சுவாரஸ்யமான உண்மைகள்!

இன்று நடிகர் விஜய் சேதுபதியின் பிறந்தநாள். உங்களுக்கு நடிகர் விஜய் சேதுபதியைப் பற்றிய சில சுவாரஸ்யமான உண்மைகளைப் பற்றித் தெரிந்து கொள்ள விரும்பினால் தொடர்ந்து படியுங்கள்.

|

தென்னிந்தியாவில் பல்துறை நடிகர்களுள் ஒருவர் தான் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி. இவர் நேர்மையானவர் மற்றும் மிகவும் எளிமையானவர். இவர் திரையுலகில் மிகவும் கஷ்டப்பட்டு நுழைந்தவர். திரையுலகில் இவர் பிரபலமாவதற்கு முன் பல குறும்படங்கள் மற்றும் துணை கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார். இன்று இவர் தமிழ் மக்களின் மனதில் மட்டுமின்றி, வீட்டில் ஒருவராகவும் கருதப்படுவதற்கு காரணம் இவரது நடிப்பு மட்டுமின்று குணாதிசயங்களும் தான் காரணம். தென்னிந்திய பகுதியில் இவரைப் பிடிக்காதவர்களே இல்லை எனலாம்.

Birthday Special: Unknown Interesting Facts About Actor Vijay Sethupathi

இன்று நடிகர் விஜய் சேதுபதியின் பிறந்தநாள். உங்களுக்கு நடிகர் விஜய் சேதுபதியைப் பற்றிய சில சுவாரஸ்யமான உண்மைகளைப் பற்றித் தெரிந்து கொள்ள விரும்பினால், இக்கட்டுரையைத் தொடர்ந்து படியுங்கள். கீழே உங்களுக்கு விஜய் சேதுபதியைப் பற்றித் தெரியாத சில உண்மைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உண்மை #1

உண்மை #1

நடிகர் விஜய் சேதுபதி 1978 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 16 ஆம் நாள் தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையத்தில் பிறந்தார். இவர் தனது பி.காம் பட்டத்தை சென்னை தனராஜ் பெய்டு ஜெயின் கல்லூரியில் முடித்தார்.

உண்மை #2

உண்மை #2

விஜய் சேதுபதி தனது தொழில் வாழ்க்கையை முதன்முதலாக கணக்காளராகத் தான் ஆரம்பித்தார். அதுவும் இவர் நடிகர் ஆவதற்கு முன் துபாயில் 3 ஆண்டுகள் கணக்காளராக பணி புரிந்தார். மேலும் தனது கை செலவுக்காக தொலைபேசி பூத் ஆபரேட்டர், ஒரு சில்லறை கடையில் விற்பனையாளர் மற்றும் துரித உணவு கூட்டு நிறுவனத்தின் காசாளர் உள்ளிட்ட பல வேலைகளை சேதுபதி செய்திருந்தார்.

உண்மை #3

உண்மை #3

விஜய் சேதுபதி முதன் முதலில் 2006 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான பெண் என்னும் தொடரில் நடித்தார். அதன் பின் பல குறும்படங்கள் மற்றும் திரைப்படங்களில் சிறு கதாப்பாத்திரங்களில் நடித்து வந்தார்.

உண்மை #4

உண்மை #4

2015 ஆம் ஆண்டு ஆரஞ்சு மிட்டாய் என்னும் திரைப்படத்தின் தயாராப்பாளர், பாடகர், திரைக்கதை எழுத்தாளர் மற்றும் பாடலாசியர் யார் என்று கேட்டால், அது வேறு யாரும் அல்ல நம்ம விஜய் சேதுபதி தான். அதுமட்டுமின்றி, இவர் ஜுங்கா மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலை திரைப்படத்தின் தயாரிப்பாளரும் கூட.

உண்மை #5

உண்மை #5

நடிகர் கமல்ஹாசனுக்குப் பிறகு சென்னைத் தமிழை சரளமாக பேசும் ஒரே நடிகர் என்றால் அது விஜய் சேதுபதி தான்.

உண்மை #6

உண்மை #6

விஜய் சேதுபதி சினிமாவில் நுழையும் முன் பல குறும்படங்களில் நடித்தார். அதில் துறு, மா தவம், காதலித்துப் பார், பெட்டிகேஸ், தி ஏஞ்சல் போன்றவை குறிப்பிடத்தக்கவை.

உண்மை #7

உண்மை #7

8 வருடங்களில் விஜய் சேதுபதி ஒரு முன்னணி நடிகராக 25-க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளார். இதில் விஜய் சேதுபதி இதுவரை 21 முறை விருதுகளுக்காக பரிந்துரைக்கப்பட்டு, 13 விருதுகளை வென்றுள்ளார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Birthday Special: Unknown Interesting Facts About Actor Vijay Sethupathi

Here are some unknown interesting facts about actor vijay sethupathi. Read on to know more...
Story first published: Thursday, January 16, 2020, 13:33 [IST]
Desktop Bottom Promotion