For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை தரிசிப்பதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?

கார்த்திகை தீபம் ஏற்றப்படும் காட்சியை நேரில் பார்த்து தரிசித்து வழிபாடு செய்பவர்களுக்கு, சகல தானம் கொடுப்பதால் கிடைக்கும் புண்ணியங்கள் கிட்டும். மகா தீப தரிசன நேரத்தில் அதை நினைத்தாலே அதற்குரிய பலன்க

|

திருவண்ணாமலை: திருக்கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு நாளைய தினம் திருவண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுகிறது. இந்த மகா தீபத்தை தரிசித்து வழிபடுபவர்களுக்கு வாழ்க்கையில் அனைத்து விதமா தானங்களையும் கொடுத்த புண்ணியம் கிடைப்பதோடு, அவர்களது வாழ்க்கை பிரகாசமாக இருக்கும் என்பது நிச்சயம். மகா தீபத்தை நேரில் தரிசிப்பவர்களின் 21 தலைமுறைக்கும் முக்தி கிடைக்கும் என்பது நம்பிக்கை.

MOST READ: இந்த ராசிக்காரர்களுக்குத் தான் சனிபகவான் நிறைய சோதனைகளைத் தருவார் தெரியுமா?

பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக இருப்பது திருவண்ணாமலை. தட்ஷிண கைலாயம் என்றும் பக்தர்களால் அழைக்கப்படும் இத்திருத்தலத்தில் சிவலிங்கமே மலையாக காட்சியளிப்பதாக ஐதீகம். இந்த மலையை இன்றைக்கும் ஏகப்பட்ட சித்தர்கள் அரூபமாக கிரிவலம் வருகின்றனர். இங்குள்ள மலையானது சுமார் 250 கோடி ஆண்டுகளுக்கு முன்பு உருவானதாக வரலாற்று ஆய்வாலர்கள் தெரிவித்துள்ளனர்.

MOST READ: கார்த்திகை தீபத்தன்று வீட்டில் விளக்குகள் ஏற்றுவதால் என்ன பலன்கள் கிடைக்கும்?

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் அன்றாடம் விஷேசம் நடைபெற்றாலும் கூட கார்த்திகை மாதத்தில் நடைபெறும் தீபத்திருநாளும், அதையொட்டி 10ஆம் நாள் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றும் நிகழ்வு தான் அனைத்திற்கும் சிகரம் வைத்தார் போல் இருக்கும். இந்த மகா தீப தரிசனத்தை காண்பதற்கே லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வருவதுண்டு.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கார்த்திகை தீபம்

கார்த்திகை தீபம்

இந்த கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு திருவண்ணாமலையில், பரணி தீபம், அண்ணாமலையார் தீபம் (மகா தீபம்), விஷ்ணு தீபம், நாட்டுக் கார்த்திகை தீபம், தோட்டக்கார்த்திகை தீபம் என ஐந்து நாட்கள் தீபங்கள் ஏற்றப்படும். மகா தீபம் ஏற்றப்படும் சமயத்தில் நாடு முழுவதும் உள்ள இந்து கோவில்கள் அனைத்திலும் சொக்கப்பனை கொளுத்தப்படும். சொக்கப்பனை எரிப்பதற்கு காரணம், நம்முள் இருக்கும் அஞ்ஞானமும், அகங்காரமும் சொக்கப்பனையைப் போல் எரிந்து சாம்பலாகிவிடும் என்பது ஐதீகம்.

சொக்கப்பனை ஏன் தெரியுமா?

சொக்கப்பனை ஏன் தெரியுமா?

திருக்கார்த்திகை மகா தீபத்தை எல்லோரும் நேரடியாக வந்து தரிசிக்க இயலாது என்ற காரணத்தினால் தான், அனைத்து கோவில்களிலும் சொக்கப்பனை கொளுத்தப்படுவதாகவும் காரணம் சொல்லப்படுகிறது. இருந்தாலும் நாம் இருந்த இடத்திலிருந்தே திருவண்ணாமலையில் ஏற்றப்படும் மகா தீபத்தை மனதால் தரிசித்தாலே ஏகப்பட்ட நன்மைகள் நமக்கு கிட்டும்.

தீப தரிசனம்

தீப தரிசனம்

மலையில் மகா தீபம் ஏற்றப்படும் போது, ‘தீப மங்கள ஜோதி நமோ நம" என்ற பாடலைப் பாடி வழிபட்டால் நம்முடைய வாழ்க்கையில் மங்களம் பெருகும். தீபத்தன்னு திருவண்ணாமலை உச்சியைப் பார்த்து "நமச்சிவாய" என்று சொன்னால், 3 கோடி தடவை அந்த மந்திரத்தை உச்சரித்த புண்ணியம் நமக்கு கிடைக்கும்.

மகா தீப தரிசனம்

மகா தீப தரிசனம்

மலையில் ஏற்றப்படும் மகா தீபத்தை நேரில் தரிசிப்பவர்களின் 21 தலைமுறைக்கும் முக்தி கிடைக்கும். மகா தீபம் ஏற்றும் சமயத்தில் மலையின் உட்புறத்திலும் பூஜைகள் நடைபெறும் ஒலிகள் ரமண மகரிஷி, சேஷாத்திரி சுவாமிகள் உள்பட பல ஆன்மீக அருளாளர்கள் கூறியுள்ளனர்.

திருவண்ணாமலையில் ஏற்றப்படும் மகா தீபத்துக்கு நிகராக இதுவரையிலும் வேறு எந்த கோவிலிலும் ஜோதி வழிபாடு நடத்தப்பட்டதில்லை. இதன் காரணமாகவே, அண்டசராசரங்களுக்கும் தீப விளக்காக கருதப்படுகிறது. அதோடு, உலகத்தை எல்லாம் இயக்குகின்ற பரம்பொருள் ஒன்றே என்பதை இறைவன் ஒருவனே என்ற தத்துவத்தை உணர்த்துவதாக உள்ளது.

கிரிவலம் நன்மைகள்

கிரிவலம் நன்மைகள்

மகா தீபம் ஏற்றப்பட்ட பின்பு, அதைப் பார்த்து வணங்கியபடியே கிரிவலம் வந்தால், அந்த மகா தீபத்தின் ஒளிக்கதிர்கள் நம் உடம்பில் பட்டு ஆன்ம சக்தியும் அதிகரிக்கும் என்பது ஐதீகம். மகா தீபத் திருநாளில் மட்டும் 5 முறை கிரிவலம் வந்தால், வாழ்க்கையில் அவர்கள் எவ்வளவு பாவங்கள் செய்திருந்தாலும். அவற்றிலிருந்து முழுமையான விமோசனம் கிடைக்கும் என்று புராணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

தீய சக்திகள் அழியும்

தீய சக்திகள் அழியும்

மகா தீபத்திற்கு மூன்றாம் நாளில் பஞ்ச மூர்த்திகளும் மலையை வலம் வரும் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு பஞ்சமூர்த்திகளின் கிரிவலம் வரும் வியாழனன்று நடைபெற உள்ளது. திருவண்ணாமலை மகா தீபத்தை காண்பதற்காக சித்தர்களும் வருவார்கள் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும். அவ்வாறு வரும் சித்தர்கள் மலை உச்சியில் எரியும் மகா தீபம் ஏற்றப்படும் கொப்பரையில் சக்தி வாய்ந்த மூலிகை தைலங்களையும் சேர்த்து விடுவதாக நம்புகின்றனர். அதனால் தான் அந்த தீபத்திலிருந்து வெளிவரும் நறுமணப் புகையானது தீய சக்திகளை அழித்து விடும் என்பது ஐதீகம்.

அஸ்வமேத யாகம்

அஸ்வமேத யாகம்

கார்த்திகை தீபத் திருநாளன்று கிரிவலம் செல்பவர்களுக்கு 1000 அஸ்வமேத யாகம் செய்த பலன் கிடைக்கும். கார்த்திகை தீபத் திருநாளன்று சிவலிங்கம் முன்பு நெய் தீபம் ஏற்றி வழிபட்டால், அவர்களது வாழ்க்கையே பிரகாசமாக ஆகிவிடும் என்பது முன்னோர்களின் நம்பிக்கையாகும்.

தீபம் பார்த்தால் புண்ணியம் கிடைக்கும்

தீபம் பார்த்தால் புண்ணியம் கிடைக்கும்

மலை உச்சியில் தீபம் ஏற்றப்பட்டதும் அதை வணங்கினால், நம்முடைய பாவங்கள் அனைத்தும் நீங்கப்பெற்று பிறவிப் பிணியை அறுக்க வல்லது என்பது ஐதீகம். கார்த்திகை தீபம் ஏற்றப்படும் காட்சியை நேரில் பார்த்து தரிசித்து வழிபாடு செய்பவர்களுக்கு, சகல தானம் கொடுப்பதால் கிடைக்கும் புண்ணியங்கள் கிட்டும். மகா தீப தரிசன நேரத்தில் அதை நினைத்தாலே அதற்குரிய பலன்கள் நமக்கு கிடைக்கும் என்பது முன்னோர்களின் நம்பிக்கை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Benefits of worshiping Thiruvannamalai Maha Deepam

On the eve of Thirukarthigai Deepam day, the Maha Deepam will be mounted on the top of Thiruvannamalai tomorrow. Those who worship the Maha Deepam will be blessed with all kinds of gifts in life and their lives will be bright.
Story first published: Tuesday, December 10, 2019, 13:34 [IST]
Desktop Bottom Promotion