For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அமாவாசையன்று வீட்டு வாசலில் கோலம் போடக்கூடாது... ஏன் தெரியுமா? தெரிஞசிக்கங்க

முன்னோர்களை (பித்ருக்கள்) நாம் தெய்வமாக பாவிப்பது, வழிபடுவது அன்று தான். ஆனாலும் கூட இறந்தவர்களை எதிர்மறை சக்தியாகத் தான் தெய்வீக சக்திகள் கருதும்.

By Mahibala
|

பொதுவாக காலை எழுந்தவுடன் வீட்டில் உள்ள பெண்கள் செய்யும் முதல் வேலையே வீட்டில் முறை வாசல் செய்வது தான். பெரிய பணக்கார வீடுகளாக இருந்தாலும் கூட, யாராவது முறைவாசல் செய்வதற்காகவே ஒரு ஆள் வைத்திருப்பார்கள். அப்படி முறைவாசல் செய்வதில் என்ன தான் இருக்கிறது. அதற்கு ஏன் நாம் அவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பது எதற்காக? அதிலும் அதிகாலையில். இந்த முறைவாசல் செய்து கோலம் போடுவது பற்றிய சுவாரஸ்யமான விஷயங்கள் பற்றி இங்கே பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
முறைவாசல் செய்தல்

முறைவாசல் செய்தல்

அதிகாலையில் கடவுள்கள் உலா வரும் நேரம் என்று சொல்வார்கள். அந்த சமயங்களில் வீட்டு வாசலில் குப்பையும் கூளமுமாக இருந்தால் மூதேவி வீட்டுக்குள் வந்து விடுவாள் என்றும் அதுவே வாசலை நன்கு பெருக்கி சுத்தம் செய்து மாக்கோலம் போட்டால் நம்முடைய வீட்டில் தங்குவதற்கு மகாலட்சுமி ஆசைப்படுவாள் என்றும் எல்லா செல்வங்களையும் நமக்கு அள்ளித் தருவாள் என்பதும் ஐதீகமாக இருக்கிறது.

MOST READ: பிறந்ததேதிய வெச்சு முன் ஜென்மத்துல என்னவா இருந்தீங்கனு தெரியணுமா? இங்க கிளிக் பண்ணுங்க

கிராமங்களில்

கிராமங்களில்

நகர்ப்புறங்களில் பெரும்பாலும் சிமெண்ட் தரைகள் தான். அதை கூட்டிப் பெருக்கி, தண்ணீர் தெளித்து சின்னதா ஒரு கோலம் போடுவார்கள். அதற்கே முறைவாசலுக்கு ஆள் வைக்கிறார்கள். ஆனால் கிராமங்களில் அப்படியல்ல. அங்கு பெரும்பாலும் வாசல் மண் தரையாகத்தான் இருக்கும். அதில் அதிகாலையில் எழுந்து கூட்டிப் பெருக்கி, பசு மாட்டு சாணத்தைக் கரைத்து தரையை மெழுகித் தெளிப்பார்கள். அதன்பின் வாசலில் பச்சரிசி மாவில் கோலம் போடுவார்கள்.

சாணமும் பச்சரிசி மாவும்

சாணமும் பச்சரிசி மாவும்

பொதுவாக பசு மாட்டு சாணத்தை கிருமஜ நாசினி என்பார்கள். நாம் வெளியில் சென்றுவிட்டு வரும்போது நம்முடன் சேர்ந்தே வருகின்ற கிருமிகளைப் பரவ விடாமல் தடுக்கும் ஆறு்றல் சாணத்திற்கு உண்டு. அதேபோல் பொதுவாக வீட்டின் முன் காகம், எறும்பு போன்றவை வந்து அமரும். அவைகளுக்கும் உணவாக இருக்கும். வீட்டுக்கும் கொலமாகவும் இருக்கும் என்பதற்காகத் தான் இந்த பச்சரிசி மாவில் கோலம் போடும் முறை வந்தது. நம் முன்னோர்கள் எல்லாவற்றையும் ஏதோ ஒரு காரணத்துக்காகவே செய்திருக்கிறார்கள்.

கோலமும் ஐதீகமும்

கோலமும் ஐதீகமும்

கோலம் என்பது ஆன்மீகத்தைப் பொருத்தவரையில் ஒரு சக்கரம் (graphical diagram).

இந்த சக்கரமானது நம்முடைய வீட்டுக்கு நேர்மறையாபன ஆற்றல்களைத் தரக்கூடியது. இந்த கோலமானது குறிப்பாக, அரிசி மாவில் போடுகின்ற பொழுது, அது நேர்மறை ஆற்றல்களை மட்டுமே நம்முடைய வீட்டுக்குள் நுழைய விடும். கெட்ட சக்திகளை வாசலுக்கு வெளியே விரட்டிவிடும் என்பார்கள். அதனால்தான் தினமும் காலையில் கோலம் போடுவது முக்கியமான விஷயமாகக் கருதப்பட்டது.

MOST READ: என் பொண்டாட்டி 15 ஆண்களை ஏமாத்தி இருக்கா... இப்ப நான்... கதறி அழுத 16 வது கணவன்

அமாவாசையில் ஏன் போடக்கூடாது?

அமாவாசையில் ஏன் போடக்கூடாது?

பொதுவாக அமாவாசை என்பது சந்திரன் இல்லாத இருள் சூழ்ந்த நாளாக இருந்தாலும் அது ஒரு வழிபாட்டுக்கு உரிய நாளாக இருக்கிறது. ஏனென்றால்

அன்று தான் நம்முடைய பித்துருக்களுக்கான முன்னோர்களுக்கு நாம் மரியாதை செய்யும் நாளாக இருக்கும்.

நம் முன்னோர்களை (பித்ருக்கள்) நாம் தெய்வமாக பாவிப்பது, வழிபடுவது அன்று தான். ஆனாலும் கூட இறந்தவர்களை எதிர்மறை சக்தியாகத் தான் தெய்வீக சக்திகள் கருதும். அமாவாசை வழிபாடே நம்முடைய பித்ருக்கள் நம்முடைய வீட்டுக்குள் வர வேண்டும். நம்முடைய நலனில் அக்கறை செலுத்த வேண்டும், நம்மை உடன் இருந்து காக்க வேண்டும் என்பதற்காகத் தான்.

கோலங்களோ நம்முடைய வீட்டுக்குள் எதிர்முறை சக்திகளாக பித்ருக்களின் ஆவி உள்ளே நுழைவதைத் தடுத்து நிறுத்தும். அதனால் அமாவாசை தர்ப்பணம், படையல் செய்வது எதுவும் பயனற்றுப் போகும். அதனால் தான் அமாவாசை நாளில் நம்முடைய வீட்டு வாசலில் கோலம் போடக்கூடாது என்று சாஸ்திரம் சொல்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: life
English summary

Why We Should Not Put Kolam For Amavasya

amavasya is a aspicious day. we all are worship our pitrus. so that day we shout not put kolam infront of our home. do you know the reason?rean on story here.
Desktop Bottom Promotion