For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இராமாயணத்தில் இராவணனை விட பலசாலியாக இருந்தது யார் தெரியுமா? அவரிடம் மட்டும் இராவணன் ஏன் பயந்தார்?

இராவணனை விட பலம் வாய்ந்த மற்றொருவர் வெரி யாருமல்ல கிஷ்கிந்தையின் அரசனும், இந்திரனின் புதல்வனும், இராமரின் நண்பரான சுக்ரீவனின் சகோதரனுமான வாலி தான்.

|

இராமாயணத்தின் வில்லனாக கூறப்படும் இராவணனின் பலத்தை பற்றியும், ஆற்றலை பற்றியும் நாம் நன்கு அறிவோம். ஆனால் பெண்ணாசையாலும், ஆணவத்தாலும் இராவணன் இராமனால் கொல்லப்பட்டார். அதற்கு காரணம் இராவணனை விட இராமர் பலசாலியாக இருந்ததுதான். ஆனால் இராவணனை விட பலம் வாய்ந்த மற்றொருவர் இராமாயணத்தில் உள்ளார்.

Why Vali was more powerful than Ravana

இராவணனை விட பலம் வாய்ந்த மற்றொருவர் வேறு யாருமல்ல கிஷ்கிந்தையின் அரசனும், இந்திரனின் புதல்வனும், இராமரின் நண்பரான சுக்ரீவனின் சகோதரனுமான வாலி தான். அவரின் பலத்தின் மீதிருந்த பயத்தால்தான் மூவுலகையும் அடிமைப்படுத்திய இராவணன் வாலியுடன் மட்டும் நட்புறவு கொண்டிருந்தார். இந்த பதிவில் வாலி பற்றி தெரியாத பல சுவாரஸ்ய தகவல்களை பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வாலிக்கும், இராவணனுக்கும் இருக்கும் ஒற்றுமைகள்

வாலிக்கும், இராவணனுக்கும் இருக்கும் ஒற்றுமைகள்

இராவணனுக்கும், வாலிக்கும் இடையே பல ஒற்றுமைகள் இருந்தது. வாலியும் இராவணனை போல ஒரு அரசன்தான். இருவரும் தங்கள் சகோதரனை இராஜ்ஜியத்தை விட்து வெளியே துரத்தினார்கள். இருவரும் அங்கதன் மற்றும் மேகநாதன் என்னும் சக்தி வாய்ந்த புதல்வர்களை கொண்டிருந்தார்கள். இருவரும் வலுக்கட்டாயமாக மற்றொருவரின் மனைவியை அபகரித்தார்கள். இருவருமே இராமரின் கையால் கொல்லப்பட்டார்கள்.

வேற்றுமைகள்

வேற்றுமைகள்

வாலி இராவணனை விட பலம் வாய்ந்தவர். தனது சகோதரனை பற்றி தவறாக நினைக்காத வரை வாலி ஒரு நியாயமான மன்னராக இருந்தார். தனது தவறுகளை உணர்ந்த போது வாலி மனம் திருந்தினார். தனது மகனை இராமரை பின்பற்றும்படி வாலி கட்டளையிட்டார்.

வாலி பெற்றிருந்த வரம்

வாலி பெற்றிருந்த வரம்

வாலி அவர் பெற்றிருந்த சிறப்பு வாய்ந்த ஒரு வரத்தால் புகழ்பெற்றார். அந்த வரத்தின் படி வாலியுடன் நேருக்கு நேர் எந்த எதிரி மோதினாலும் அந்த எதிரியின் பலத்தில் சரிபாதி வாலிக்கு சென்றுவிடும். இந்த வரத்தால் வாலி எவராலும் வெல்ல முடியாதவராக இருந்தார்.

MOST READ: இந்த ராசிக்காரங்க உங்க மேல அக்கறை காட்டுனா நம்பிராதீங்க... எல்லாம் வெறும் நடிப்புதான்...!

இராவணனுடன் போர்

இராவணனுடன் போர்

ஒருமுறை வாலி தன்னுடைய வழக்கமான காலை நேர வழிபாட்டை செய்து கொண்டிருந்த போது இராவணன் அவரை போருக்கு அழைத்தார். இராவணனை எளிதில் தோற்கடித்த வாலி அவரை தனது வாலில் சுற்றிக்கொண்டு உலகம் முழுவதும் சுற்றினார். அதற்கு பிறகுதான் இராவணன் வாலியுடன் மோதாமல் நட்புறவை வளர்த்து கொண்டார்.

வாலியின் மனைவி

வாலியின் மனைவி

வாலியின் மனைவியின் பெயர் தாரா. புராண குறிப்புகளின் படி பதினான்கு வகையான கற்களும், பொக்கிஷங்களை கடலின் சலனத்தில் இருந்து வெளிப்பட்டது. அதில் ஒரு இத்தினத்தில் இருந்து அப்சராக்கள் உருவாக்கப்பட்டார்கள். கடலை கடையும்போது வெளிப்பட்ட அப்சராதான் தாரா. பாற்கடலை கடைய தேவர்களுக்கு வாலி உதவியதால் தாராவை அவர் மணந்து கொண்டார்.

வாலியின் தைரியம்

வாலியின் தைரியம்

வாலியின் தைரியம் மிகவும் பாராட்டத்தக்கது. தாரா வாலியை சுக்ரீவனுடன் போருக்கு செல்ல வேண்டாம் ஏனெனில் சுக்ரீவனுக்கு உதவியாக கடவுளின் அவதாரமான இராமர் உதவிக்கு இருக்கிறார் அதனால் உங்களுக்கு மரணம் ஏற்படலாம் என்று கூறினார். டவுளுக்கு எதிராக போராடினாலும் கூட ஒரு சண்டைக்கான சவாலை புறக்கணித்து அமைதியாக இருக்க முடியாது என்று வாலி பதிலளித்தார். தனது மகன் அங்கதனே போருக்கு அழைத்தாலும் தான் போருக்கு செல்வேன் என்று கூறினார்.

MOST READ: உங்களின் சொல்ல முடியாத பயங்களுக்கும் உங்கள் முன்ஜென்மத்திற்கும் உள்ள சுவாரஸ்ய தொடர்பு என்ன தெரியுமா?

வாலியின் மரணம்

வாலியின் மரணம்

சுக்ரீவன் வாலியை கொல்ல இராமருக்கு உதவினார் என்று நாம் அறிவோம். மரணத்தின் போது வாலி தான் செய்த தவறுகளை உணர்ந்து அதற்காக இராமரிடம் மன்னிப்பை வேண்டினார். இராமர் எப்படி வாலியை மன்னித்தார் என்று மேற்கொண்டு பார்க்கலாம்.

வாலியின் கேள்வி

வாலியின் கேள்வி

வாலியை ராமர் கொன்றதற்கு ஒரு சிறப்பு முக்கியத்துவம் இருந்தது. இராமர் ஏன் தன்னை கோழைபோல பின்புறமிருந்து தாக்கினார் என்று வாலி கோபமாக கேட்டார். ராமர் அவருக்கு பல்வேறு புருஷார்த்தங்களைப் பற்றி விளக்கி தனது விஸ்வரூபத்தைக் காட்டி வாலிக்கு மோக்ஷத்தை வழங்கினார்.

வாலியின் சமாதானம்

வாலியின் சமாதானம்

இராமரின் கூறிய பதிலால் சமாதானமடைந்த வாலி தனது மகன் அங்கதனிடம் தனது சகோதரன் சுக்ரீவனுக்கு துணையாக இருக்கும் படியும், இராமரின் புனித பயணத்தில் அவருக்கு உதவியாக இருக்கும்படியும் கூறினார்.

இராமரின் மன்னிப்பு

இராமரின் மன்னிப்பு

வாலி உண்மையிலேயே மனந்திருந்தி தன் தவறுகளை ஒப்புக் கொண்டதைக் கண்ட பகவான் ராமர், வாலிக்கு உயிர் கொடுக்கத் தயாராக இருந்தார். ஆனால் வாலி அதனை மறுத்து விட்டார், வேறு முறைகளில் இறப்பதை விட கடவுள் இராமர் கையால் இறப்பது தனக்கு கிடைத்த பாக்கியம் என்று வாலி கூறினார். இது வாலியின் பக்குவத்தை உணர்த்துகிறது.

MOST READ: சீக்கிரமா எடையை குறைக்கணுமா? தினமும் இத்தனை கப் பிளாக் காபி குடிங்க போதும்...!

இராமரின் வாக்கு

இராமரின் வாக்கு

வாலியின் நியாயமற்ற மரணத்திற்கு பழிவாங்க அவருக்கு ஒரு வாய்ப்பு தருவதாக இராமர் கூறினார். அதன்படி அடுத்த ஜென்மத்தில் அவர் வேடன் ஜராவாக பிறந்தார். இந்த ஜராதன் விஷ்ணுவின் மற்றொரு அவதாரமான கிருஷ்ணர் மரணிக்க காரணமாக இருந்தார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Why Vali was more powerful than Ravana?

Here are some unknown facts about Vali who was more powerful than Ravana.
Desktop Bottom Promotion