For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த ஊர்ல திரும்பின பக்கமெல்லாம் ஆணுறுப்பை வரைஞ்சு வெச்சிருக்காங்களே அது எதுக்குனு தெரியுமா?

|

பூட்டான் மக்கள் மிகவும் அன்பானவர்கள். அனுசரணையாக நடந்து கொள்பவர்கள். ஆனால் பூடான் நாட்டில் எந்த பக்கம் சென்று பார்த்தாலும் அங்கே பாலியல் சம்பந்தப்பட்ட குறியீடுகள் தான் காட்சிப் படுத்தப்பட்டிருக்கும்.

Why Is Bhutan Country Filled With Penises In Everywhere?

குறிப்பாக, எல்லா வீடுகள் மற்றும் பொது இடங்களில் உள்ள சுவர்களில் கூட, ஆணின் பிறப்புறுப்பு படங்கள் வண்ணங்களாகத் தீட்டப்பட்டிருக்கும். அவர்கள் பயன்படுத்தும் பல்வேறு விதமான பொருள்களும் ஆணுறுப்பின் வடிவத்திலேயே வடிவமைக்கப்பட்டிருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பூடான்

பூடான்

Image Courtesy

பூட்டான் நாடு ஹிமாலய ராஜ்ஜியத்தில் உள்ள அமைதி நிறைந்த நாடுகளில் ஒன்று தான் இது. இங்கு மலைப் பகுதிகளில் இருந்து புலிகள் குதித்து ஓடும். அதேபோல் நெல் வயல்கள் கோபுரங்கள் போல கட்டற்று உயர்ந்து நிற்கும் வளமும் எழிலும் கொண்ட நாடு. புலிகள் நிறைந்த வளம் கொண்ட நாடு. அங்கு அந்த நாட்டைத் தவிர வேற்று நபர்கள் அவ்வளவு எளிதாக உள்ளே சென்றுவிட முடியாது. அதற்கென சில வரைமுறைகள் இருக்கின்றன.

MOST READ: முடி ரொம்ப வறண்டு போகுதா? ஒரு வாரம் கடுகு எண்ணெய் தேய்ங்க... தலைமுடி பத்தின கவலைய விடுங்க...

பூட்டானியர்கள்

பூட்டானியர்கள்

Image Courtesy

பொதுவாகவே பூட்டானியர்கள் மிகவும் அமைதியான குணங்கள் கொண்டவர்களாகவும் அடக்கமாகச் செயல்படக் கூடியவர்களாகவும் இருப்பார்கள். அதேபோல் வெளியில் இருந்து பார்க்கிற எல்லோருக்குமே பூட்டானியர்களின் வாழ்க்கை மிகவும் அமைதியானதாகவே இருக்கிறது.

ஓவியங்கள்

ஓவியங்கள்

நீங்கள் ஒரு விஷயத்தைக் கவனித்திருக்கீர்களா என்று தெரியவில்லை. உலகம் முழுவதிலும் உள்ள எல்லா நாடுகளுக்கும் சில கலை நுட்பங்கள் இருக்கின்றன. ஒவ்வொருநாட்டிலும் அவரவர் மரபு மற்றும் கலாச்சாரங்கள், வரலாறு ஆகியவற்றை அடிப்பையாகக் கொண்டு ஓவியங்கள், சிற்பங்கள் போன்ற கலைநுட்பங்கள் வடிக்கப்பட்டிருக்கும். அவை எல்லாவற்றைக் காட்டிலும் பூடானில் ஓவியங்கள் அதிக அளவில் இருக்கும். உலக நாடுகளிலேயே இங்கு தான் அதிக அளவிலான ஓவியங்கள் இருக்கின்றன.

பூடானின் லிங்க ஓவியங்கள்

பூடானின் லிங்க ஓவியங்கள்

Image Courtesy

பூடானில் எந்த பக்கம் திரும்பிப் பார்த்தாலும் லிங்க ஓவியங்கள் தீட்டப்பட்டிருப்பதைப் பார்க்க முடியும். அது சமீப காலத்தில் மட்டும் அல்லாது காலங்காலமாக இதுபோன்ற ஓவியங்கள் தொடர்ந்து இருந்து வருகின்றன. இதற்குக் காரணம் என்னவென்று தெரியுமா?

15 ஆம் நூற்றாண்டு

15 ஆம் நூற்றாண்டு

Image Courtesy

15 ஆம் நூற்றாண்டில் சிமி லாக்ஹாங் கிரிமியா மடாலயத்தைக் கட்டினார். இந்த மடாலயம் 15 ஆம் நூற்றாண்டில் லாமாவின் விசித்திரமான தன்மைக்கு துருப குன்லியைக் கௌரவிப்பதற்காகத் தான் இந்த மடாலயம் கட்டப்பட்டது.

MOST READ: ஹலால் வழியில் பெண்கள் சுகமான பாலியல் உறவு கொள்வது எப்படி என்று புத்தகம் எழுதி வெளியிட்ட பெண்

நாடு முழுவதும்

நாடு முழுவதும்

பூடானில் இருக்கின்ற, முக்கியமாக மடாலயங்களில் ஆரம்பித்தில் வெளிப்பகுதிகளில் மட்டுமே முதலில் ஓவியங்கள் இருந்தன. இந்த ஓவிய முறைகள் குன்லீயின் போதனையாளர்களுக்கு ஆதரவாக நாடெங்கும் பரவ ஆரம்பித்தது. அதன்பிறகுதான் பூடானில் இன்று எல்லா இடங்களிலும் வீடுகளிலும் பள்ளிகள், விடுதிகள், ஹோட்டல்கள் என எல்லா இடங்களிலும் ஓவியங்கள் வரையப்பட்டன. இன்றும் அவற்றை நம்மால் பார்க்க இயலும். ஏதாவது ஹோட்டலுக்குப் போனால் உங்கள் டேபிளுக்கு உணவு வருவதற்கு முன்பு உங்கள் டேபிளை கொஞ்சம் உற்றுப் பாருங்கள். அந்த டேபிள் ஓவியங்களால் நிரம்பியிருக்கும்.

ஆண்குறி ஓவியங்கள்

ஆண்குறி ஓவியங்கள்

ஓவியங்கள் நிரம்பியிருப்பது சரி. ஆனால் விறைப்புத் தன்மை கொண்ட ஆண்குறி ஓவியங்கள் நிரம்பியிருப்பதன் காரணம் என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டாமா? விறைப்புத் தன்மை கொண்ட ஆண்குறி சின்னங்கள் ஆவிகள், தீயசக்திகள், பேய், பிசாசு ஆகியவற்றை அண்ட விடாமல் ஓடஓட விரட்டும் என்று மக்கள் நம்புகின்றனர். இந்த நம்பிக்கை தான் இன்று வரை புதிதாக மக்கள் வீடு கட்டினாலும் அந்த சுவர்களிலும் வீடுகளிலும் விறைத்த ஆண்குறிகளை ஓவியங்களாக வரையப்படுகிறது.

நாட்டுப்புற நடைமுறைகள்

நாட்டுப்புற நடைமுறைகள்

Image Courtesy

பொதுவாக பழங்கால நாட்டுப்புற நடைமுறைகளை பெரும்பாலும் ஆதரிப்பதாக இந்த மக்கள் இருக்கிறார்கள். ஆனால் இதுபோன்ற நாட்டுப்புற நடைமுறைகளைப் பெரிதும் நிராகரிக்கின்ற விஷயமாக நகரத்தில் வசிக்கும் பூட்டானியர்கள் கருதுகிறார்கள். ஆனால் நகர்ப் புறங்களிலும் இந்த ஓவியங்கள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன.

நிறுவனங்கள்

நிறுவனங்கள்

Image Courtesy

தற்போது பூட்டானில் இது பெரிய வணிகமாகவே மாறிவிட்டது. பெரும்பாலும் இதுபோன்ற ஓவியங்கள் கார்ப்பரேட் கட்டடங்கள், ஹோட்டல்கள், தனியார் நிறுவனங்கள், அலுவலகங்கள் போன்றவற்றில் தான் இந்த ஆண்குறி ஓவியங்கள் அதிகமாக வரையப்படுகின்றன. அதனால் இதற்கெனவே சில நிறுவனங்கள் வண்ணங்கள் தீட்டித் தருவதற்கு முன் வருகின்றன. இது பெரும் வணிகமாக மாறியிருக்கிறது. அதேபோல் சில சமயங்கள் சார்ந்த கட்டடங்களிலும் இந்த ஆண்குறி ஓவியங்கள் இருக்கின்றன.

ஆண்குறி சிற்பங்கள்

ஆண்குறி சிற்பங்கள்

பூடானில் சில கோயில்களில் மரபின் காரணமாக பல்வேறு உலோகங்களால் செய்யப்பட்ட ஆண்குறி சிற்பங்களும் இருக்கின்றன. பிறக்கும் குழந்தைகளுக்கு ஆசிர்வதிக்கின்ற சடங்குகளில் சின்ன அளவிலாள ஆண்குறி சின்னங்கள் பதித்த குறிகள் அரைஞாண் கயிறு போன்றவற்றில் பயன்படுத்துகிறார்கள். இது குழந்தைகளுக்கு நோய் உண்டாகாமல் பாதுகாக்கும் என்று சொல்லப்படுகிறது.

MOST READ: குதிகால் வீக்கத்தை ரெண்டே நாளில் குறைக்கும் வெல்லம்... எப்படி பயன்படுத்தணும்?

எப்படி சென்று பார்க்கலாம்?

எப்படி சென்று பார்க்கலாம்?

பூட்டானுக்கு சென்று இந்த ஓவியங்களைப் பார்ப்பது எப்படி என்று நிறைய பேருக் சந்தேகம் உண்டானாலும் மற்ற நாடுகளைப் போல அவ்வளவு எளிமையாக பூடானுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொள்வது கொஞ்சம் சிரமம் தான். கடுமையான கட்டுப்பாடுகள் என்றெல்லாம் சொல்ல முடியாது. அங்கு விமானப் போக்குவரத்து சேவை அப்படி. நேரடியான விமானங்கள் மிகக் குறைவு. டெல்லி மற்றும் மும்பை வழியாக சிங்கப்பூா செல்லுகின்ற விமானம் சில நிமிடங்கள் மட்டும் பூான் விமான நிலையத்தில் நின்று செல்லும். இதுபோன்று மூன்று இணைப்பு விமானங்கள் உண்டு.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Why Is Bhutan Country Filled With Penises In Everywhere?

The peaceful Himalayan kingdom where tigers are said to leap from the gorges that tower above seemingly endless rice paddies. Why on Earth are there thousands of phallus paintings and sculptures all over Bhutan?
Story first published: Friday, February 22, 2019, 14:30 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more