For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தன் மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த டீச்சரம்மா... நாட்டுல என்னதான் நடக்குது?

மாணவர்களுக்கு ஆசிரியை பாலியல் தொல்லை கொடுத்த விஷயத்தைப் பற்றி இந்த பகுதியில் விளக்கப்பட்டுள்ளது. அது பற்றிய விளக்கமான தொகுப்பு தான் இது.

By Mahibala
|

சமீப காலமாகத் தமிழ்நாட்டில் பாலியல் வன்முநைகளின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே போகிறது. அதிலும் குறிப்பாக குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் மீதான பாலியல் வன்முறை அதிகமாகிவிட்டது. எல்லா காலத்திலும் இந்த பாலியல் சீண்டல்கள் இருந்தாலும் சமீபத்திய அளவை விட மிகக் குறைவானது தான். ஏனென்றால் வெளியுலகத் தொடர்பு மிகக் குறைவாக இருந்தது.

அதோடு அந்த காலத்தில் அக்கம் பக்கத்தினர், சுற்றத்தார் ஆகியோர் மூலமாகத் தான் பாலியல் சீண்டல்கள் அதிகம் நடப்பதாக ஆய்வுகள் குறிப்பிட்டன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சமூக வலைத்தளங்கள்

சமூக வலைத்தளங்கள்

சமீப காலக்கட்டங்களில் சமூக வலைத்தளங்கள், வெளியிடத் தொடர்புகள் விரிவாக விரிவாக இதுபோன்ற பாலியல் தொல்லைகளும் அதிகரிக்கத் தொடங்கி விட்டன. குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் தினந்தோறும் ஏதாவது ஒரு மூலையில் நடந்து கொண்டே தான் இருக்கின்றன. அப்படி நடந்த சிறுவர்கள் மீதான பாலியல் வன்கொடுமையைப் பற்றித் தான் இங்கே பார்க்கப் போகிறோம்.

MOST READ: ஆணுறை வாங்கும்போது உங்களுக்குப் பொருந்துகிற சைஸை எப்படி பார்த்து வாங்கணும் தெரியுமா? இப்படித்தான்..

சிறுவர்கள் மீதான பாலியல் கொடுமை

சிறுவர்கள் மீதான பாலியல் கொடுமை

பொதுவாக வீட்டில் நம்மோடு குழந்தைகள் செலவிடுகின்ற நேரத்தைவிட பள்ளியில் நண்பர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் தான் அதிக நேரம் செலவிடுகின்றனர். குறைந்தபட்சம் எட்டு மணி நேரமாவது இருப்பார்கள். அதிலும் இப்போதைய பெற்றோர்கள் இருக்கிறார்களே பிள்ளைகள் செய்யும் சேட்டைகளில் இருந்து தப்பிக்கிறேன் என்ற பெயரில் ஒரு பத்து கிளாஸ்க்கு அனுப்புவார்கள். அதனால் பொதுவாக சிறுவர்கள் 10 முதல் 12 மணி நேரம் வரையிலும் நண்பர்களுடனும் ஆசிரியர்களுடனும் தான் இருக்கிறார்கள்.

ஆசிரியர்கள் சீண்டல்

ஆசிரியர்கள் சீண்டல்

அவ்வப்போது பள்ளியில் படிக்கும் பெண் பிள்ளைகளிடம் ஆண் ஆசிரியர்கள் பாலியல் சீண்டல்கள் செய்வதாக நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் முதல் முறையாக ஒரு பெண் ஆசிரியை தன்னுடைய மாணவர்களிடம் தவறாக நடந்து கொண்டதாகவும் பாலியல் சீண்டல்கள் செய்ததாவும் பாலியல் வழக்கில் கைதாகியிருப்பது இப்போது தான். குழந்தைகளை பள்ளிக்கே நம்பி அனுப்ப முடியாத நிலையில் தான் பெற்றோர்கள் இருக்கிறார்கள்.

யார் அந்த ஆசிரியை?

யார் அந்த ஆசிரியை?

திருவண்ணாமலைக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்துப் பள்ளியில் ஆசிரியராக இருக்கும் ரேவதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இந்த ஆசிரியை. இவர் அருகில் உள்ள ஒரு நகர்ப்புறப் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார்.

MOST READ: பெண்ணுறுப்பில் இருந்து ஏன் கற்றாழை கவுச்சி வீசுகிறது? ஒரே இரவில் அதை எப்படி சரிசெய்யலாம்?

திருமண வாழ்க்கை

திருமண வாழ்க்கை

சில வருடங்களுக்கு முன்பாக ரமேஷ் என்பவருடன் ரேவதிக்குத் திருமணம் நடந்தது. ரமேசும் பள்ளி ஆசிரியர் தான். இவர்கள் இருவருக்கும் இடையே அவ்வப்போது வந்த சின்ன சின்ன கருத்து வேறுபாடுகுள் அதிகமாகி அடுத்து அது விரிவடையத் தொடங்கிவிட்டது. இருவரும் எதிரும் புதிருமாகவே இருந்ததால் சேர்ந்து வாழ விரும்பவில்லை. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் பிரிந்து வாழத் தொடங்கியிருக்கிறார்கள்.

கணவர் பாலியல் புகார்

கணவர் பாலியல் புகார்

கணவன், மனைவி இருவரும் பிரிந்து வாழ்கின்ற இந்த சூழலில் ரேவதியின் கணவர் ரமேஷ் தன்னுடைய மனைவி தன்னிடம் படிக்கும் மாணவர்களுக்கு பாலியல் சீண்டல்கள் கொடுப்பதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் ஒன்றினைக் கொடுத்தார். இதன் மீது நடிவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

உண்மை நிரூபணம்

உண்மை நிரூபணம்

கணவர் புகார் கொடுத்ததை அடுத்து அரசின் குழந்தைகள் நல வாரியம் இது தொடர்பான விசாரணையை மேற்கொண்டது. மாணவர்களில் நிறைய பேர் அந்த ஆசிரியை தனக்கு எவ்வாறு பாலியல் சீண்டல் கொடுத்தார்கள் என்பது குறித்து விளக்கமாக எடுத்துரைத்தார்கள். கணவர் கொடுத்த புகார் உண்மையாகவே பாலியல் அத்துமீறல் குறித்த வழக்கில் ரேவதி கைது செய்யப்பட்டார்.

MOST READ: என்னென்ன கலர் கத்திரிக்காயில் என்னென்ன பவர் இருக்கு... எதை சாப்பிடலாம்? எது சாப்பிடக்கூடாது?

நாடு எங்க தான் போகுது?

நாடு எங்க தான் போகுது?

பெற்றோர்கள் தங்களை விடவும் அதிகமாக ஆசிரியர்களையே நம்பி அவர்களிடம் அதிக நேரம் குழந்தைகளை ஒப்படைக்கிறார்கள். பெற்றோர்களைப் போல மட்டுமல்லாது, சமூகப் பொறுப்புடன் செயல்பட வேண்டிய ஆசிரியர்களே இப்படி நடந்து கொண்டால் குழந்தைகளை யாரை நம்பி அனுப்புவது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

TN Teacher Harassing Students, Husband Turns In Evidance

teacher has been a repeat offender. The previous school where she worked transferred her, reportedly for her inappropriate behaviour with students.
Story first published: Friday, March 22, 2019, 17:08 [IST]
Desktop Bottom Promotion