For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நண்பர்களுடன் இந்த தகவலை பகிர்ந்து கொள்வது உங்கள் வாழ்க்கையில் பல பிரச்சினைகளை உண்டாக்கும் தெரியுமா?

நண்பர்களுடன் வெளிப்படையாக இருப்பது தவறில்லை, ஆனால் உங்கள் வாழ்க்கை தொடர்பான அனைத்து ரகசியங்களையும் பகிர்வது நிச்சயம் முறையாகாது.

|

மனித வாழ்க்கை என்பது எப்பொழுதும் ஒருவரை ஒருவர் சார்ந்திருப்பதாகும். நீங்கள் சார்ந்திருப்பது யாரை வேண்டுமென்றாலும் இருக்கலாம், ஆனால் ஒருவரின் துணையின்றி வாழ்வது என்பது மிகவும் கடினமானது என்பதையும் தாண்டி மிகவும் கொடுமையானது. இன்றைய காலகட்டத்தில் உறவினர்களை விட நண்பர்களை அதிகம் நம்புபவர்களே அதிகம். அதுதான் நல்லதும் கூட, ஆனால் எல்லா தருணங்களிலும் அல்ல. வாழ்க்கையில் நமக்கு கேட்காமலே கிடைக்கும் வரங்கள் என்றால் அது நல்ல நண்பர்கள்தான்.

Sharing These Things with Friends Might Put You in Trouble

நாம் நல்லது செய்யும்போது தட்டி கொடுக்கவும், தவறு செய்யும்போது தடுத்து நிறுத்தவும் நிச்சயம் நமக்கு நண்பர்கள் அவசியம். நண்பர்களுடன் வெளிப்படையாக இருப்பது தவறில்லை, ஆனால் உங்கள் வாழ்க்கை தொடர்பான அனைத்து ரகசியங்களையும் பகிர்வது நிச்சயம் முறையாகாது. இவ்வாறு அனைத்தையும் பகிர்வது உங்கள் வாழ்க்கையில் சில பிரச்சினைகளையும், உங்கள் நட்பில் விரிசலையும் ஏற்படுத்தும். அளவான தூரத்துடன் நின்று கொள்வதுதான் ஆரோக்கியமான உறவிற்கு அடிப்படையாகும். இதைத்தான் நம் முன்னோர்களும் கூறியிருக்கிறார்கள். அதன்படி இந்த தகவல்களை உங்கள் நண்பர்களிடம் பகிராமல் இருப்பதே நல்லது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உங்கள் துணையை பற்றிய செய்திகள்

உங்கள் துணையை பற்றிய செய்திகள்

ஆணோ, பெண்ணோ யாராக இருந்தாலும் தன்னுடைய துணையை பற்றிய தகவல்களை ஒருபோதும் தங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளக்கூடாது. உங்கள் துணையை பற்றி பேசலாம், ஆனால் அவர்களின் தனிப்பட்ட தகவல்களை கூறவேண்டிய அவசியமில்லை. உங்கள் நண்பர்களும் அதை தெரிந்து கொண்டு எதுவும் செய்யப்போவதில்லை.

உறவு சிக்கல்கள்

உறவு சிக்கல்கள்

உங்கள் முழுமையான நம்பிக்கைக்குரிய நண்பராக இல்லாத பட்சத்தில் உங்களின் உறவு சிக்கல்களை மற்றவர்களிடம் கூற வேண்டிய அவசியமில்லை. ஏனெனில் உங்களுக்கு தெரியாமலேயே உங்களின் பிரச்சினைகள் மற்றவர்களுக்கு இதன்மூலம் தெரிந்துவிடும். பிறகு உங்கள் பிரச்சினைகள் புறம்பேசுபவர்க்ளுக்கு தீனியாக அமைந்துவிடும்.

நெருக்கமான விஷயங்கள்

நெருக்கமான விஷயங்கள்

எவ்வளவுதான் முக்கியமான நண்பராக இருந்தாலும் உங்களுக்கும், உங்கள் துணைக்கும் இடையே நடக்கும் நெருக்கமான விஷயங்களை அவர்களிடம் கூறவேண்டுமென்ற அவசியமில்லை. அவ்வாறு கூறினால் அது உங்களுக்கு எதிரான ஆயுதமாக கூட பின்னாளில் மாறலாம்.

MOST READ:சிவபெருமானின் உடல் நமக்கு கூறவரும் வாழ்க்கை ரகசியங்கள் என்னென்ன தெரியுமா?

மகிழ்ச்சியான உறவு

மகிழ்ச்சியான உறவு

அதேபோல நீங்கள் உங்கள் துணையுடன் மகிழ்ச்சியாக உள்ளதை மற்றவர்கள் முன் காட்டிக்கொள்ள வேண்டுமென்ற அவசியமில்லை. நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பது நல்ல செய்திதான். ஆனால் அதை மற்றவர்களிடம் காட்டுவதில் என்ஹா பயனும் இல்லை, மாறாக தீமைகள் மட்டுமே ஏற்படும்.

கடந்த கால நிகழ்வுகள்

கடந்த கால நிகழ்வுகள்

நாம் அனைவருமே கடந்த காலங்களில் நல்லது, கெட்டது என அனைத்தையுமே செய்திருப்போம். தேவை ஏற்படும் வரை உங்கள் கடந்த கால நிகழ்வுகளை மற்றவர்களிடம் கூறாதீர்கள். இதனால் உங்களுக்கு தீமைகள் ஏற்படவே வாய்ப்புகள் அதிகம். நீங்கள் செய்த நல்லதே கூட உங்களுக்கு எதிரான ஆயுதமாக மாறலாம்.

விசித்திரமான பழக்கங்கள்

விசித்திரமான பழக்கங்கள்

நம்மில் பலருக்கும் சில வித்தியாசமான பழக்கங்கள் இருக்கலாம், தூக்கத்தில் நடப்பது, இருட்டை கண்டால் பயப்படுவது போன்ற பழக்கங்கள் இருக்கலாம். உங்கள் துணையை தவிர இதுபோன்ற தகவல்களை மற்றவர்களிடம் கூற தேவையில்லை.

MOST READ:பிணத்தை பார்த்தால் அதிர்ஷ்டம் என்று கூறுவதற்கு பின்னால் இருக்கும் உண்மையான காரணம் என்ன தெரியுமா?

நிதி நிலை

நிதி நிலை

உங்கள் நண்பர்களுக்கு பண உதவி செய்வதில் எந்த தவறும் இல்லை. சொல்லப்போனால் பணக்கஷ்டத்தில் நண்பர் இருந்தால் அவருக்கு உதவ வேண்டியது உங்கள் கடமையாகும். அதற்காக உங்களிடம் எவ்வளவு இருப்பு உள்ளதெல்லாம் என்று கூற தேவையில்லை.

விலை

விலை

நீங்கள் வைத்திருக்கும் ஏதேனும் விலைமதிப்பில்லாத பொருளின் விலையை உங்கள் நண்பர்கள் கேட்க்கும்போது அதன் உண்மையான விலையை கூறவேண்டும் என்ற அவசியமில்லை. ஏனெனில் இதனால் ஏற்படும் பொறாமையுணர்வு உங்கள் நட்பில் விரிசலை ஏற்படுத்தலாம்.

காயப்படுத்தும் சொற்கள்

காயப்படுத்தும் சொற்கள்

உங்களுக்கு உங்கள் நண்பர்களை மிகவும் பிடிக்கும் என்றால் எவ்வள வு கோபமாய் இருந்தாலும் அவர்களை அடிப்பதையோ அல்லது காயப்படுத்தும் படி பேசுவதையோ தவிர்க்க வேண்டும். உங்களின் கோபத்தை வெளிக்காட்ட ஆயிரம் வழிகள் உள்ளது அதற்கு அடிப்பதோ, திட்டுவதோ வழியல்ல.

MOST READ:4 மாத கர்ப்பமாக இருந்த ஆட்டை கதறக் கதற பாலியல் வன்புணர்வு செய்த காமக்கொடூரன்... ஆடு என்னாச்சு?

பாஸ்வேர்டு

பாஸ்வேர்டு

உங்களின் பாஸ்வேர்டுகளை ஒருபோதும் உங்கள் நண்பர்களிடம் கூறாதீர்கள். எவ்வளவு நெருக்கமான நண்பர்களாக இருந்தாலும் சரி உங்கள் தனிப்பட்ட தகவல்களை கூறக்கூடாது, இது பாதுகாப்பு பிரச்சினைகளை உண்டாக்கும். ஒருவேளை உங்கள் நண்பர்களுக்கே தெரியாமல் அது மற்றவர்களுக்கு தெரிய வரும்போது உங்களுக்குத்தான் பிரச்சினைக்கு வரும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Sharing These Things with Friends Might Put You in Trouble

Friends are an important part of our life. But sharing these things with your friends will create problems in your life.
Story first published: Friday, February 1, 2019, 17:50 [IST]
Desktop Bottom Promotion