For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பாட்டாளி படத்துல மாதிரி மழை வர குலுக்கு சீட்டுமூலம் நிலாப்பெண் தேர்ந்தெடுக்கும் திண்டுக்கல் கிராமம்

மழை வரவழைப்பதற்காக திண்டுக்கல் கிராமத்தில் ஒரு விநோத திருவிழா நடத்தப்படுகிறது. அதற்குப் பெயர் மழைப்பெண் திருவிழா. அந்த விநோதத் திருவிழா பற்றித் தான் இங்கு பார்க்கப் போகிறோம்.

By Mahibala
|

நம்முடைய வடிவேலு பெண் வேடத்தில் வடிவு கேரக்டரில் கலக்கு கலக்கென்று கலக்கிய பாட்டாளி படத்தை பார்த்து ரசிக்காதவர்கள், வயிறு குலுங்க சிரிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. அந்த படத்துக்கும் இந்த கட்டுரைக்கும் நேரடியாக எந்த சம்ந்மும் இல்லை தான். இருந்தாலும் கூட அந்த படத்தில் ஒரு காட்சி வரும்.

ஊரில் மழை பெய்யாமல் இருக்கிறது. மழைத் தாயை வேண்டி மழையை வரவழைக்க வேண்டும். அதற்காக வழக்கமாக ஊரில் ஒரு சடங்கு செய்வதுண்டு. ஊரில் உள்ள கன்னிப் பெண்களின் பெயர்களை ஒரு சீட்டில் எழுதிப் போட்டு குலுக்கி அதிலிருந்து ஒரு பெயரை எடுத்து, அதில் வரும் பெயரில் உள்ள நபர் இரவு முழுக்க ஆடையின்றி ஊரை சுற்றி வந்தால் மழை பெய்யும் என்பது போல் ஒரு காட்சி வரும். அதில் வடிவேலுவின் பெயரான வடிவு வரும். அதற்குப் பிறகு நடப்பதைப் பார்த்து தான் நாம் ரசித்திருக்கிறோமே.

moon girl

இந்த கதை இப்போது எதற்கு என்று தான கேட்கறீங்க. இதோ விஷயத்துக்கு வர்றேன். நம்ம ஊர்லயும் சமீபத்துல அப்படி ஒரு திருவிழா கொண்டாடியிருக்காங்க மழை வர்றதுக்காக. ஆனா இது கொஞ்சம் வேற மாதிரி. எப்படினு சொல்றேன் கேளுங்க.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
திண்டுக்கல் மாவட்டம்

திண்டுக்கல் மாவட்டம்

நம்ம திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூருக்குப் பக்கத்துல தேவிநாயக்கன்பட்டினு ஒரு ஊருங்க. அங்க தான் இந்த திருவிழா கொண்டாடியிருக்காங்க. இப்படி மட்டுமில்லங்க. வருஷா வருஷம் கொண்டாடுறாங்களாம்.

MOST READ: சங்கமா சாப்பாடா - வைரல் வீடியோவுல வர்ற சுட்டிப்பையன் யார்? - சுவாரஸ்ய தகவல்கள் இதோ

மழை வரவழைக்க

மழை வரவழைக்க

தேவிநாயக்கன்பட்டி கிராமத்தில் காலங்காலமாக ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்தின் இறுதியில் இந்த திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறதாம். எதற்காக கொண்டாடப்படுகிறது என்று கேட்டால் வேற எதுக்கு. மழை கொட்டோ கொட்டுனு கொட்டணும். வயலெல்லாம் விளைஞ்சி நிக்கணும். விவசாயம் செழிக்கணுமு். விவசாயி வாழ்க்கையில நன்மை நடக்கணும்னு தான் கொண்டாடுறோம் என்கிறார்கள்.

எப்போது நடக்கும்?

எப்போது நடக்கும்?

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் வருகிற பௌர்ணமியின் போது தான் இந்த திருவிழா கொண்டாடப்படுகிறது. அதாவது தை மாத அறுவடைக்குப் பின் அடுத்த போகம் செய்வதற்கான தொடக்கமாக இந்த விழாவை நடத்தி மழையை வரவேற்கிறார்கள்.

நிலாப்பெண் திருவிழா

நிலாப்பெண் திருவிழா

இந்த திருவிழாவோட பேரு என்னனனு நீங்க கேட்கலையே. நிலாப்பெண் திருவிழாதான் இதோட பேரு. ஏன்னா, நிலாவோட பேரு சந்திரனா இருந்தா கூட, பெண்ணை வருணிக்கும் போது நிலா போன்ற முகம்னு தான சொல்றாங்க. சரி விடுங்க. டென்ஷன் ஆகாம இத எப்படி கொண்டாடுறாங்கனு பார்க்கலாம். இது பெண்களை மையமாக வைத்தும் அந்த ஊரில் உள்ள அம்மனை வழிபடுவதாகவும் இருப்பதால் இந்த திருவிழாவுக்கு நிலாப்பெண் திருவிழான்னு பேரு வந்துச்சு.

MOST READ: பொண்ணுங்களுக்கு இந்த 4 ராசி ஆண்களைத் தான் ரொம்ப பிடிக்குமாம்... அந்த அதிர்ஷசாலி ராசிகள் எது?

எப்படி கொண்டாடுவாங்க...

எப்படி கொண்டாடுவாங்க...

இப்பதான் விஷயத்துக்கே வர்றனு நீங்க சொல்றது கேட்குது. திருவிழா வர்றதுக்கு (பௌர்ணமி) ஒரு வாரத்துக்கு முன்னாடியே ஊர் பெரியவங்க, ஊர் மக்கள் எல்லாம் பொது இடத்துல கூடுவாங்க. அந்த ஊரில் உள்ள சின்ன சின்ன (12 வயது) பெண் குழந்தைகளோ பெயர்களை துண்டுச் சீட்டுக்களில் எழுதிப் போட்டு, அதை ஒரு பானையில் போட்டு குலுக்கி ஒரு பெயரை எடுப்பார்கள்.

எடுக்கும் சீட்டில் வரும பெண்ணை தெய்வமாக ஊர் மக்கள் கருதுவார்கள். தேர்ந்தெடுக்கும் நாளில் இருந்து பௌர்ணமி வரை இந்த குழந்தை கோவிலில் தங்க வைக்கப்படுவாள்.

சிறப்பு கவனிப்பு

சிறப்பு கவனிப்பு

அப்படி தேர்ந்தெடுக்கப்படும் பெண்ணை அந்த ஊர்மக்கள் முழுக்க பயங்கரமாக உபசரிப்பார்கள். எல்லா வீடுகளிலும் இருந்து அந்த பெண்ணுக்கு தினமும் ஒரு வாரத்துக்குப் பால், பழங்கள், பரிசுப் பொருள்கள் என வந்து குவியும்.

சடங்குகள்

சடங்குகள்

Image Courtesy

முழு நிலாவன்று (பௌர்ணமி) மாலைகள், பூக்கள் நிறைய அணிவித்து புத்தாடை அணிவித்து அலங்காரம் செய்து வைப்பார்கள். அதன்பின் எல்லா வீடுகளிலும் மஞ்சள் நிறத்தில் மருத்துவ குணங்கள் ஏராளமாக உடைய ஆவாரம்பூவை கூடைகளில் எடுத்துக் கொண்டு, ஊரில் உள்ள மாரியம்மன் கோவிலுக்குச் சென்று பூஜைகள் செய்வார்கள். ஊர் மக்கள் எல்லோரும் கோவிலுககுச் சென்றதும் நிலாப்பெண் மழையை வேண்டி ஒரு பாட்டுப் பாட எல்லா பெண்களும் நிலாவைப் பார்த்து வழிபடுவார்கள். அதன்பின் எல்லோருக்கும் பிரசாதம் வழங்கப்படும். அந்த கோவிலின் குளத்தங்கரை முழுக்க விளக்குகளால் ஜொலிக்கும்.

MOST READ: வெறும் காபி பொடியை மட்டும் வெச்சு எப்படி தீராத தலைவலியையும் சரி பண்ணலாம்? ட்ரை பண்ணுங்க

இந்த வருட நிலாப்பெண் யார்?

இந்த வருட நிலாப்பெண் யார்?

அப்படி கடந்த (ஜனவரி, செவ்வாய்க்கிழமை) 22 ஆம் தேதி பெணர்ணமியன்று நிலாப்பெண் திருவிழா அந்த கிராமத்தில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. அதில் இந்த வருடத்தின் நிலாப்பெண்ணாக தேர்வு செய்யப்பட்டவர், அந்த தேவநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ், தவமணி தம்பதியரின் ஏழு வயது மகளான கனிஷ்கா தான் இந்த வருட நிலாப்பெண்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: festival rain மழை
English summary

moon girl: ancient festival celebrated in dindigul for welcome rain

The natives of Vedachandur, Dindigul district, celebrate a prayer festival each year called Nila penn (Moon girl). It is an ancient festival of Dindigul area in which the moon is worshipped to welcome rain and boost farming.
Story first published: Friday, January 25, 2019, 17:05 [IST]
Desktop Bottom Promotion