For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

5 வருஷமா மண்டைக்குள் இந்த மரக்குச்சிய வெச்சிக்கிட்டு இருந்த மனுஷன்... யாருனு நீங்களே பாருங்க...

ஐந்து வருடங்களாக தலைக்குள் மரக்குச்சிகளை வைத்துக் கொண்டு அவதிப்பட்டுக் கொண்டிருந்த மனிதரைப் பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்கப் போகிறோம்.

|

பல நேரங்களில் நாம் சின்னக் காயங்களை கண்டுக்காமல் அலட்சியப்படுத்தி விடுவோம். ஆனால் அதுவே பிறகு உயிருக்கு உலை வைக்கும் போராபத்தாகி விடுகிறது. அப்படித்தான் சீனாவில் ஒரு மனிதருக்கு நடந்துள்ளது.

Man Had Wooden Splinters Stuck in His Head for 5 Years

சீனாவின் யுன்னான் மகாணத்தில் உள்ள ஒருவர் தலைவலி மற்றும் கண்கள் வீக்கத்திற்காக மருத்துவமனைக்கு சென்று உள்ளார். அப்பொழுது தன் தலைக்குள் மரக் குச்சிகள் குத்தியிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தீராத வலி

தீராத வலி

41 வயதான அவர் இரண்டு மாதங்களுக்கு முன்பு தலையில் ஒரு அசெளகரியத்தை உணர்ந்ததாக கூறியுள்ளார். முன்பு வலது கண்ணில் ஏற்பட்டுள்ள தொற்றிக் காரணமாக இருக்கும் என்று அலட்சியமாக விட்டு விட்டேன். ஆனால் இப்பொழுது கண் வங்கத் தொடங்கி விட்டது. மேலும் தீராத தலைவலியும் ஏற்படுகிறது என்று கூறியுள்ளார்.

MOST READ: இந்தமாதிரி இருந்தா சும்மா விட்றாதீங்க... இது அந்த நோயா கூட இருக்கலாம்...

ஸ்கேன்

ஸ்கேன்

கடைசியில் வலியை என்னால் தாங்க முடியவில்லை. உடனே மருத்துவர்கள் அவரது தலைப்பகுதியை ஸ்கேன் செய்து பார்த்துள்ளனர். மூளைக்குள் நிறைய மரக்குச்சிகள் குத்தியிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். அந்த குச்சிகளின் நீளம் 11 செமீ இருக்குமாம். இது எப்படி உங்கள் மூளைக்குள் வந்தது, 5 வருடங்கள் முன்னாடி இது நிகழ்ந்துள்ளது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

மரத்தில் மோதிய ஞாபகம்

மரத்தில் மோதிய ஞாபகம்

அவர் மோஜியாங் கவுண்டியில் உள்ள காடுகளில் பணிபுரிந்தபோது, ​​தடினமான மரக்கிளைக்களுக்கிடையே விழுந்ததை நினைவுக் கூர்ந்து உள்ளார். அப்பொழுது மரக்குச்சிகள் அவருடைய வலது கண்ணை நுழைத்து உள்ளது. பிறகு அவர் அந்த குச்சியை நீக்கி உள்ளார். கடுமையான இரத்த போக்கு ஏற்பட்டது.

அதன்பின் காயங்கள் தானாகவே ஆறி விட்டது. என் பார்வையில் எந்த பிரச்சனையும் இதுவரை ஏற்படாததால் நான் மருத்துவ மனைக்கும் செல்லவில்லை. ஆனால் அதிலிருந்து தான் எனக்கு தீவிர தலைவலி தொடங்கியது. அதை நான் அலட்சியமாக விட்டதால் தான் இப்பொழுது பெரிய ஆபத்தில் சிக்கித் தவிக்கிறேன் என்று கூறியுள்ளார்.

அதிர்ஷ்டசாலி

அதிர்ஷ்டசாலி

மூளையில் இவ்வளவு மரக்குச்சிகளுடன் நீங்கள் இவ்வளவு காலம் உயிர் வாழ்ந்ததே அதிசயம் என்றுள்ளனர் மருத்துவர்கள். இந்த மரக்குச்சிகள் முக்கியமான இரத்த நாளங்கள் மற்றும் நரம்புகளை பாதித்து இருக்க வாய்ப்புள்ளது. ஆனால் அதிர்ஷ்டவசமாக அந்த குச்சிகள் அனைத்தும் அவரது சிறுமூளையையே தாக்கி இருந்தது. இதை அவர் இன்னும் அப்படியே விட்டு இருந்தால் தொற்றுக்கள் பெருகி உயிருக்கே ஆபத்தாகி இருக்கும் என்று எச்சரிக்கை செய்துள்ளார்கள் மருத்துவர்கள்.

MOST READ: வெறும் பொம்மைகள் மட்டும் வாழும் அமானுஷ்ய கிராமத்தை பாருங்க... பார்க்கவே பீதியா இருக்கு...

அறுவை சிகிச்சை

அறுவை சிகிச்சை

உடனடியாக இந்த மரக்குச்சிகளை மூளையில் இருந்து நீக்கியாக வேண்டும். அறுவை சிகிச்சைக்கு தாமதமானால் உங்களுக்கு கண் பார்வை இழப்பு நேரிடலாம் என்று கூறியுள்ளனர். அந்த மனிதர் மற்றும் அவரது மனைவியின் ஒப்புதல் பேரில் அறுவை சிகிச்சை உடனடியாக செய்யப்பட்டு தற்போது அந்த மனிதர் உயிர் பிழைத்து உள்ளார். இன்னும் சில நாட்களில் குணமடைந்து விடுவார் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

மேலும் இந்த மாதிரி சின்ன சின்ன காயங்களை, விபத்துகளை அலட்சியமாக விடாதீர்கள். அறிகுறிகள் தொடர்ந்தால் உடனே மருத்துவரை அணுகுங்கள் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டு உள்ளனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Man Had Wooden Splinters Stuck in His Head for 5 Years

A man recently turned up at a hospital in Yunnan Province, China, after he suffered from a swollen eyelid and excruciating headache. The man himself was shocked to learn that his condition was caused by the several wooden pieces that had got stuck in his brain.
Story first published: Wednesday, July 3, 2019, 17:26 [IST]
Desktop Bottom Promotion