For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இராமருக்கு போரில் உதவி கிருஷ்ணருடன் சண்டை என இரண்டு அவதாரங்களையும் பார்த்த ஒரே ஆள் யார் தெரியுமா?

தேவர்கள் மற்றும் முனிவர்களை தவிர்த்து இந்த இரண்டு அவதாரங்களையும் பார்த்து பார்த்தது யாருமில்லை என்றுதான் நாம் நினைத்து கொண்டிருக்கிறோம்

|

திருமாலின் அவதாரங்களில் மிகவும் முக்கியமான இரண்டு அவதாரங்கள் என்றால் அது இராம அவதாரமும், கிருஷ்ண அவதாரமும்தான். தேவர்கள் மற்றும் முனிவர்களை தவிர்த்து இந்த இரண்டு அவதாரங்களையும் பார்த்து பார்த்தது யாருமில்லை என்றுதான் நாம் நினைத்து கொண்டிருக்கிறோம் ஆனால் உண்மையில் ஒருவர் மட்டும் இந்த இரண்டு அவதாரங்களிலும் வந்ததோடு அவர்களுக்கு உதவியும் செய்துள்ளார்.

The only one who saw Lord Rama and Krishna

யாருக்குமே கிடைக்காத இந்த அதிர்ஷ்டம் கிடைத்த அவரின் பெயர் ஜம்பவான் என்பதாகும். இவரை ஜாம்பவந்தா என்றும் அழைப்பார்கள். கரடிகளின் ராஜாவான இவர் மிகவும் சோம்பேறியான கரடியாக அனைவராலும் அறியப்படுகிறார். பிரம்மாவின் மகன்களுள் ஒருவரான இவர் சாகாவரம் பெற்றவர் என்று கூறப்படுகிறது. ஜாம்பவந்தா எப்படி இராமர், கிருஷ்ணர் இருவரையும் சந்தித்தார் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கரடிகளின் அரசன்

கரடிகளின் அரசன்

இவர் ரிக்ஷராஜா என்று அழைக்கப்பட்டார். ரிக்ஸ என்பது வானரங்களின் ஒருவகையாகும் பின்னாளில் இது கரடி என்று கூறப்பட்டது. இவர் ராவணனுடனான போரில் இராமருக்கு பிரம்மாவால் படைக்கப்பட்டவர் ஆவார். இமயமலையின் மன்னராக இருந்த இவர் இராமருக்கு உதவி செய்வதற்காக கரடியாக படைக்கப்பட்டார். போரில் உதவி செய்ததற்காக இவருக்கு இராமர் நீண்ட ஆயுளுடனும், அழகுடனும் மற்றும் பத்துலட்ச சிங்கங்களின் பலத்துடன் இருப்பாய் என்று வரம் வழங்கினார்.

ராமாயணத்தில் ஜாம்பவந்தா

ராமாயணத்தில் ஜாம்பவந்தா

இதிகாசமான ராமாயணத்தில் ஜாம்பவந்தா இராமரின் மனைவியான சீதையை கண்டிபிடிப்பதற்கும், இராமரின் எதிரியான இராவணனுடன் போர் புரியவும் அவருக்கு உதவி புரிந்தார். ஆஞ்சநேயர் தன்னுடைய மகத்தான திறமைகளை உணரவும், கடல் கடந்து சென்று இலங்கையில் சீதையை தேடும்படியும் கூறியது இவர்தான் என்று கூறப்படுகிறது.

மகாபாரதத்தில் ஜாம்பவந்தா

மகாபாரதத்தில் ஜாம்பவந்தா

மகாபாரதத்தில் ஜாம்பவாந்தா ப்ரசேனனை கொன்று சியாமந்தக ரத்தினைத்தை எடுத்துச்சென்ற சிங்கத்தை கொன்று அந்த ரத்தினத்தை கைப்பற்றினார். சியாமந்தக திருட்டு பழி கிருஷ்ணர் மீது விழவே அவர் அதை துடைக்கும் பொருட்டு வனத்திற்குள் சென்றார். அங்கு ப்ரசேனன் கொல்லப்பட்டதையும், சியாமந்தகம் ஜாம்பவந்தாவிடம் சென்றதையும் அறிந்த கிருஷ்ணர் அவரின் குகைக்கு சென்றார். அங்கு இருவருக்கும் இடையில் கடும் போர் நடந்தது, கிட்டத்தட்ட 28 நாட்களுக்கு பிறகு ஜாம்பவந்தா தான் யாருடன் போர்புரிகிறோம் என்பதை அறிந்து கொண்டார். எனவே அவர் சியாமந்தகத்தை கொடுத்ததோடு தன் மகள் ஜாம்பவதியையும் கிருஷ்ணருக்கு கொடுத்தார். இவர் கிருஷ்ணரின் தலைமை மனைவிகளுள் ஒருவராவார்.

ஜாம்பவந்தாவின் ஞானம்

ஜாம்பவந்தாவின் ஞானம்

ஜாம்பவந்தா மிகவும் அனுபவம் வாய்ந்தவராகவும், அறிவில் சிறந்தவராகவும் விளங்கினார். ராஜ்ஜியத்தை வழிநடத்துவதில் இவர் அதிக ஞானம் உடையவராக இருந்தார். சுக்ரீவனின் ஆலோசகர்களில் ஐவரும் ஒருவராக இருந்தார். சுக்ரீவன் தன் ஆலோசகர்களுடன் ரிஷ்யமுகா மலையில் வசித்து வந்தார். இராமரும், இலட்சுமணனும் அங்கு வந்தபோது அவர்களின் நோக்கம் என்ன அவர்கள் யார் என்பதை அறிந்து கொள்ள அனுமனை அனுப்பியது அவர்தான்.

MOST READ: பெண்களின் பாலியல் ஆசையை தூண்டும் பெண்கள் வயகரா பற்றிய அதிர்ச்சியளிக்கும் உண்மைகள்...!

வல்லமை மற்றும் சக்தி

வல்லமை மற்றும் சக்தி

ஜாம்பவந்தா தன்னுடைய இளமைப்பருவத்தில் மாபெரும் சக்திசாலியாக விளங்கினார். அனுமனை இலங்கைக்கு அனுப்பி வைத்தபோது இவர் அதீத ஆற்றலுடன் இருந்தார். மூவுலகத்தையும் 7 சுற்றுகள் சுற்றுமளவிற்கு இவரிடம் ஆற்றல் இருந்தது.

இராவணனுடனான போர்

இராவணனுடனான போர்

இராவணனுடன் போர் நடந்து கொண்டிருந்த சமயத்தில் இவர் மிகவும் ஆக்ரோஷமானவராகவும், வேகமானவராகவும் இருந்தார். மூர்க்கத்தனமாக இராவணனை தாக்கிய இவர் இராவணனின் மார்பில் எட்டி உதைத்ததில் இராவணன் தன் ரதத்தை விட்டு கீழே விழுந்தான். இதன் விளைவாக இராவணனின் ரதம் நொறுக்கப்பட்டது.

ஜாம்பவந்தாவின் நகரம்

ஜாம்பவந்தாவின் நகரம்

ஜாம்பவந்தாவின் நகரமாக கருதப்படுவது இப்போது மத்திய பிரதேசத்திலுள்ள ஜம்தான் கிராமம் ஆகும். இது ரத்தலம் மாவட்டத்தில் உள்ளது. இது ஜாம்பவந்தாவின் நகரம் என்று அழைக்கப்படுகிறது. புராதான கால குறிப்புகளும், ஆதாரங்களும் இங்கிருந்து கிடைத்துள்ளது.

கடவுளின் பக்தன்

கடவுளின் பக்தன்

ஜாம்பவந்தாவின் வீரம், அனுபவம் அனைத்தையும் விட அவரின் கடவுள் பக்தியே முதன்மையானதாகும். அவர் கடவுள் பக்தியில் சிறந்து விளங்கியதால்தான் அவருக்கு ஒரே பிறவியில் திருமாலின் இரண்டு அவதாரங்களான இராமரையும், கிருஷ்ணரையும் பார்க்கும் பாக்கியம் கிடைத்தது.

MOST READ: அகோரிகள் ஏன் பிணங்களுடனும், பிணங்களுக்கு மத்தியிலும் உடலுறுவு வைத்துக்கொள்கிறார்கள் தெரியுமா?

கிருஷ்ணரை எப்படி அடையாளம் கண்டுகொண்டார்?

கிருஷ்ணரை எப்படி அடையாளம் கண்டுகொண்டார்?

ஜாம்பவந்தா எவராலும் தோற்கடிக்க முடியாத ஒருவராவார். இராமாயணத்தின் போதே இராமர் நாம் மீண்டும் சந்திப்போம் உன்னை நான் தோற்கடித்தால் மட்டுமே உன்னால் என்னை அடையலாம் காண முடியும் என்று கூறியிருந்தார். அதன்படி சியாமாந்தக ரத்தினத்திற்காக கிருஷ்ணர் போர் புரிந்த பொது 28 நாட்களுக்கு பிறகு ஜாம்பவந்தாவை தோற்கடித்த பிறகே அவரால் கிருஷ்ணரை அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Jambavan: The only one who saw Lord Rama and Krishna

Jambavan is the only person who met two Avatars of Lord Vishnu in his own lifetime i.e Lord Rama and Lord Krishna.
Desktop Bottom Promotion