For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்களின் இந்த இளமைக்கால சிறிய தவறுகள் உங்கள் எதிர்காலத்தை பாதிக்கும் என்று சாணக்கியர் கூறுகிறார்...!

நீங்கள் இளமைக்காலத்தில் செய்யும் சில தவறுகள் உங்களின் எதிர்காலத்தை பாதிக்கும் என்று சாணக்கியர் தனது சாணக்கிய நீதியில் கூறியுள்ளார்.

|

இளமை காலத்தில் தவறுகள் செய்வது என்பது சகஜமான ஒன்றுதான். தவறுகள் செய்யாத மனிதனும் இருக்க முடியாது, தவறு செய்யாதவன் மனிதனாகவே இருக்க முடியாது. தவறுகளில் இருந்துதான் நாம் எப்பொழுதும் பாடம் கற்றுக்கொள்ள முடியும். அதற்காக வாழ்க்கை முழுவதும் பாடம் கற்றுக்கொண்டே இருக்க முடியாது, இருக்கவும் கூடாது.

Dont commit these mistakes in your youth

தவறுகள் எப்பொழுதும் நிகழ்காலத்தோடு முடிந்து விடுவதில்லை சில தவறுகள் உங்களின் எதிர்காலத்தையும் பாதிக்கக்கூடும். அந்த வகையில் நீங்கள் இளமைக்காலத்தில் செய்யும் சில தவறுகள் உங்களின் எதிர்காலத்தை பாதிக்கும் என்று சாணக்கியர் தனது சாணக்கிய நீதியில் கூறியுள்ளார். அந்த தவறுகள் என்னென்ன என்று இந்த பதவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆரோக்கியத்தில் கவனமின்மை

ஆரோக்கியத்தில் கவனமின்மை

சில நேரங்களில் நொறுக்கு தீனிகள் சாப்பிடுவது பரவாயில்லை அதற்காக உங்கள் ஆரோக்கியத்தின் மீது கவனக்குறைவாக இருக்க வேண்டுமென்று அவசியமில்லை. அனைத்து உணவுகளையும் குப்பைத்தொட்டி போல உங்கள் வயிற்றில் கொட்டாதீர்கள், ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு மாறுங்கள்.

சேமிக்கமால் இருப்பது

சேமிக்கமால் இருப்பது

எப்போதாவது அதிக செலவு செய்வது தவறில்லை, ஆனால் அதனை வாழ்க்கை முழுவதும் செய்வது உஙக்ளின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல. உங்கள் வாழ்க்கையில் ஏற்படும் திடீர் சிரமங்களை சமாளிக்கும் அளவிற்காவது சேமித்து வைத்திருக்க வேண்டியது அவசியமாகும்.

பயணங்கள்

பயணங்கள்

நீங்கள் இளமையாகவும், உடலில் வலிமையுடனும் இருக்கும்போதே உங்களுக்கு வேண்டிய பயணங்களை செய்யுங்கள். உலகை ரசிப்பதை உங்களின் இளமைக்காலத்திலேயே செய்து விடுங்கள்.

MOST READ: உங்கள் எடையின் படி ஒரு நாளைக்கு எவ்வளவு தண்ணீர் குடிப்பது உங்களுக்கு ஆரோக்கியம் தெரியுமா?

குடும்பத்துடன் நேரம் செலவழிக்காமல் இருப்பது

குடும்பத்துடன் நேரம் செலவழிக்காமல் இருப்பது

உங்களுக்கு பிடித்தவர்களுடன் நேரம் செலவழிக்காமல் இருப்பது என்பது மிகவும் தவறான மற்றும் துரதிர்ஷ்டமான ஒன்றாகும். உங்கள் குடும்பத்துடனும், பிடித்தவர்களுடனும் கண்டிப்பாக இளமைக்காலத்தில் நேரத்தை செல்வழிக்கவேண்டும். இல்லையெனில் எதிர்காலத்தில் அதை நினைத்து நீங்கள் வருந்துவீர்கள்.

சிறுவயது திருமணம்

சிறுவயது திருமணம்

உங்களுக்கு திருமண வயது வந்த பிறகு உங்களுக்கு பிடித்தால் மட்டுமே திருமணம் செய்து கொள்ள வேண்டும். மற்றவர்களின் கட்டாயத்திற்காகவும், கடமைக்காகவும் திருமணம் செய்து கொண்டால் அது மிகவும் தவறான ஒன்றாகும்.

பிற மொழிகளை கற்பது

பிற மொழிகளை கற்பது

எப்பொழுதும் உங்கள் தாய்மொழியை தாண்டி எத்தனை மொழிகளை கற்றுக்கொள்ள முடியுமோ அதனை கற்றுக்கொள்ளுங்கள். இது உங்களுடைய சமுதாய அந்தஸ்த்தை மற்றும் உயர்த்தாமல் பல கலாச்சாரங்கள் பற்றிய அறிவையும் உங்களுக்கு வழங்கும்.

தவறான உறவில் இருப்பது

தவறான உறவில் இருப்பது

வாழ்க்கையில் பெரும்பாலனோர் இந்த தவறை செய்வார்கள். தவறான உறவில் சிக்கிக்கொள்வது தவறல்ல அது முழுமையாக உங்கள் வாழ்க்கையை சிதைக்கும் முன் எப்படியாவது தப்பி விடுங்கள்.

MOST READ: இராவணன் அவரது வாழ்க்கையில் செய்த மிகப்பெரிய பாவம் எது தெரியுமா?

பயம்

பயம்

மனிதனாக பிறந்த அனைவருக்குமே ஏதாவது ஒரு பயம் கண்டிப்பாக இருக்கும். அதற்காக அதற்குள்ளேயே மூழ்கி விடக்கூடாது. உங்கள் பயத்தை விரட்டும் ஒன்றை உங்களின் இளமைகாலத்திலேயே கண்டுபிடித்து விடுங்கள்.

தவறான வேலையில் இருப்பது

தவறான வேலையில் இருப்பது

தவறான உறவை போலவே தவறான வேலையும் உங்களின் ஆற்றலை உறிஞ்சக்கூடும். எனவே நீங்கள் செய்யும் வேலை உங்களுக்கு ஏற்றதல்ல தெரிந்தும் அதையே தொடர்வது உங்கள் எதிர்காலத்திற்கு நல்லதல்ல.

பெற்றோர் பேச்சை கேட்காமல் இருப்பது

பெற்றோர் பேச்சை கேட்காமல் இருப்பது

உங்கள் பெற்றோர்கள் எப்பொழுதும் சரியாகத்தான் பேசுவார்கள் என்று கூற முடியாது. ஆனால் சரியோ, தவறோ அவர்கள் பேச்சை கேட்காவிட்டாலும் கவனிக்கவாவது செய்ய வேண்டும். அவர்களின் கருத்துக்களுக்கும் மதிப்பு கொடுக்க கற்றுக்கொள்ள வேண்டும்.

மற்றவர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது

மற்றவர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது

இது அனைவரும் செய்யும் ஒரு தவறாகும். மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்று பயந்தே நம்முடைய மகிழ்ச்சியை தியாகம் செய்வது அல்லது சிதைத்து கொள்வது என்பது மிகப்பெரிய தவறாகும்.

MOST READ: உணவை வேகமாக சாப்பிடுவதால் ஏற்படும் ஆபத்துகள் என்னென்ன தெரியுமா?

அதிக தியாகம் செய்வது

அதிக தியாகம் செய்வது

மற்றவர்களின் மகிழ்ச்சிக்காக சின்ன சின்ன விஷயங்களை தியாகம் செய்வது என்பது தவறல்ல ஆனால் அதையே பழக்கமாக்கி கொள்ளாதீர்கள். மற்றவர்களின் மகிழ்ச்சிக்காக உங்கள் கனவுகளை ஒருபோதும் தியாகம் செய்யாதீர்கள். எவரும் அதற்கு தகுதியானவர்கள் அல்ல.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Chanakya Niti: Don't commit these mistakes in your youth

According to Chanakya niti don't commit these mistakes in your youth or else you will suffer.
Story first published: Thursday, June 20, 2019, 11:22 [IST]
Desktop Bottom Promotion