For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்க ராசிப்படி நீங்க பூமியில் பிறந்த நோக்கம் என்னவென்று தெரியுமா? இத பாருங்க தெரியும்...

நீங்கள் பிறந்ததன் வாழ்க்கையின் அர்த்தங்கள் என்ன என்பதை உங்களுடைய ராசிப்படி கணித்து நிபுணர்கள் குறிப்பிட்டது இங்கே கொடுக்கப்பட்டள்ளது.

|

நம் வாழ்வின் இறுதி நோக்கம் என்ன, அல்லது வாழ்க்கையின் உண்மையான நோக்கம் என்ன என்பதை மனிதராகப் பிறந்த எல்லோரும் அடிக்கடி சிந்திக்கிறோம்.

Your True Purpose In Life As Per Zodiac Sign

சரி, பண்டைய ஞானிகள் வழங்கிய சில கோட்பாடுகள் மற்றும் தத்துவங்களின் அடிப்படையில் மோட்சம் அடைவதே வாழ்க்கையின் இறுதி நோக்கம் என்று கூடச் சொல்லலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஜோதிட சாஸ்திரம்

ஜோதிட சாஸ்திரம்

ஜோதிட சாஸ்திரம், ஒவ்வொரு ராசியும் பெரும்பாலான விஷயங்களில் ஒரு குறிப்பிட்ட காரியத்தைத் தேடுகிறது என்று கூறுகிறது. ஒவ்வொரு இராசிக்கும் ஒரு முதன்மைப் பண்பு உள்ளது. இது ஆன்மீக கோட்பாடுகளின்படி, பிரபஞ்சத்தை உருவாக்கும் நான்கு உறுப்புகளான, காற்று, நீர், நெருப்பு மற்றும் பூமி ஆகியவற்றில் ஒன்றாகும். இந்த உறுப்புகளே குறிப்பிட்ட தொடர்புடைய ராசிகளின் மீது அதிகபட்ச தாக்கத்தைக் கொண்டுள்ளன. இதன் அடிப்படையில், மனித வாழ்க்கையில் ஒவ்வொரு ராசியின் உண்மையான நோக்கம் என்ன என்பது குறித்த விவரங்களின் பட்டியல் இங்கே உங்களுக்காக,

மேஷம்: மேலே செல்ல

மேஷம்: மேலே செல்ல

மேஷம் நெருப்பின் அடையாளம். இது எல்லா இடங்களிலும் எல்லாவற்றிலும் முன்னேற்றத்தை நோக்கமாகக் கொண்டது. அவர்களிடம் "உங்களால் முடியாது " என்று சொல்லிப் பாருங்கள் , அது எவ்வாறு முடியும் என்று அவர்கள் உங்களுக்குக் காண்பிப்பார்கள். எந்தவொரு திட்டம், வாழ்க்கையின் எந்தவொரு விஷயமும் அல்லது அவர்களே அமைத்துக் கொண்ட குறிக்கோளை நோக்கி தீவிரமாக செயல்படுவர் .அதில் ஆழமாகச் சென்று , கடினமாக உழைத்து சிறந்து விளங்குவர் . ஒரு செயல் தானாக நிகழ்வதற்காகக் காத்திருப்பது அவர்களுக்குப் பிடிக்காத ஒன்று.

MOST READ: எந்த ரெண்டு ராசிக்காரர்கள் திருமணம் செய்துகொண்டால் வாழ்க்கை பிரச்னை இல்லாம இருக்கும்?

ரிஷபம் : ஸ்திரத்தன்மை

ரிஷபம் : ஸ்திரத்தன்மை

ரிஷபம் பூமியின் அடையாளம். அவர்கள் வாழ்க்கையில் பெரும்பாலான நேரங்களில் விஷயங்களை உருவாக்க முயற்சி செய்கிறார்கள். உறவுகளின் அடிப்படையில், அவர்கள் அமைதியான மற்றும் அவர்களின் அன்புக்குரியவர்களுக்கு வசதியாக உறவுகளை வைத்துக்கொள்ள விரும்புகிறார்கள். அவர்கள் வாழ்க்கையில் அமைதியைத் தடுக்க எது வந்தாலும் அவற்றை அனுமதிக்க விரும்ப மாட்டார்கள். அதேபோல், செல்வத்தையும் சொத்தையும் செலவழிப்பதற்கு பதிலாக குவிக்க விரும்புகிறார்கள். அவர்கள் வாழ்வில் எல்லாவற்றிலும் ஸ்திரத்தன்மையையே விரும்புகிறார்கள்.

மிதுனம் : ஒரு மகிழ்ச்சியான சந்தோஷ உலகம்

மிதுனம் : ஒரு மகிழ்ச்சியான சந்தோஷ உலகம்

மிதுனம் காற்றின் அடையாளம். இவர்கள் அதிகம் பேசமாட்டார்கள் , ஆனால் உண்மை என்னவென்றால் அவர்கள் பார்வையாளர்களாக இருப்பதால் அற்புதமான வர்ணனையாளர்களாக உள்ளனர். அவர்கள் பேச ஆரம்பித்தவுடன், அவர்களைச் சுற்றி உள்ள மக்களின் இதயங்களை வெல்வார்கள். அவர்கள் தங்கள் நண்பர்களை தொடர்ந்து கிண்டல் செய்கிறார்கள் மற்றும் அனைவரிடமும் கவனத்தை ஈர்ப்பதற்காக தங்கள் அறிவான கருத்துக்களைப் பயன்படுத்துகிறார்கள். ஒரு மகிழ்ச்சியான சந்தோஷ உலகமே அவர்கள் வாழ்க்கையின் நோக்கம்.

கடகம் : பச்சாதாபம் (Empathy)

கடகம் : பச்சாதாபம் (Empathy)

கடகம் நீரின் அடையாளம் . ஆகையால், அவர்கள் ஒருவருக்காகவும் அதேபோல் மற்றவர்களுக்காகவும் உணர்ச்சிகள் நிறைந்தவர்களாக இருக்கிறார்கள். நீங்கள் அழுவதற்கு ஒரு தோள்பட்டை தேவைப்படும்போது அவர்கள் சிறந்த ஆதரவாக இருப்பார்கள். இதனால் கடகத்தின் நோக்கம் பச்சாதாபம் அல்லது அன்பைப் பரப்புவதாகும்.

MOST READ: நீங்க மேஷ ராசியா? அப்போ திருமண உறவில் கட்டாயம் இந்த 5 பிரச்னைய சந்திச்சே ஆகணும்

சிம்மம் : ஒரு தைரியமான உலகம்

சிம்மம் : ஒரு தைரியமான உலகம்

நெருப்பின் அடையாளமான சிம்மம் தனக்கே உரிய ஒரு தனிக்கவர்ச்சியைக் கொண்டுள்ளது. அவர்கள் தலைமைத்துவ குணங்களைக் கொண்டிருக்கிறார்கள் மற்றும் மக்களை அவர்களின் முயற்சிகளுக்கு ஊக்குவிப்பதில் ஆச்சரியப்படுத்துகிறார்கள். அவர்கள் தங்கள் இதயத்திலுள்ள பிரகாசத்தைப் புரிந்துகொண்டு , அதை உலகம் முழுவதற்குமான ஒரு முன்மாதிரியாக அனைத்து வழிகளிலும் ஊக்குவித்து பரப்ப விரும்புகிறார்கள்.உலகத்தை தைரியமான இடமாக ஆக்கிக்கொள்ள விரும்புகிறார்கள்.

கன்னி: மேம்பாடு ( Improvisation)

கன்னி: மேம்பாடு ( Improvisation)

கன்னி அனைத்தையும் சரிசெய்பவர் . அவர்கள் வாழ்வில் உள்ள விஷயங்களை மேம்படுத்துவதையே நோக்கமாகக் கொண்டுள்ளனர். அவர்கள் குழப்பம் அல்லது குறைபாடுகளைக் காண விரும்பவில்லை, எல்லா இடங்களிலும் சமாதானத்தையும் பரிபூரணத்தையும் நிறுவ பெரும்பாலான நேரத்தை செலவிடுகிறார்கள் . அவர்கள் ஒரு காரியத்தை எவ்வாறு சிறப்பாகச் செய்ய முடியும் என்பதைப் பகுப்பாய்வு செய்கின்றனர். எனவே, வாழ்க்கையில் கன்னியின் நோக்கம் மேம்பாடு ஆகும்.

துலாம்: ஒரு சமநிலை உலகம்

துலாம்: ஒரு சமநிலை உலகம்

இந்த ராசியின் அடையாளத்தைப் போலவே துலாம் வாழ்க்கையில் சமநிலையைப் பராமரிக்க நன்கு அறிந்திருப்பர். அவர்களது நேர மேலாண்மை மிகச்சிறப்பாக இருக்கிறது. ஒரு நிலைப்பாட்டை எடுக்கும் முன், அவர்கள் பொதுவாக இருதரப்பு நியாயத்தையும் கேட்க விரும்புகிறார்கள். இதுவே அவர்களுக்கு தாராளமயமானவர் மற்றும் நடுநிலையானவர் என்ற சிறந்த தரத்தை அளிக்கிறது. அவர்கள் நீதியையும், பரிபூரணத்தையும் இந்த உலகில் நிறுவுவதை நோக்கமாகக் கொள்கிறார்கள், இதனால் ஒரு சமநிலையை உருவாக்குகிறார்கள்.

MOST READ: இந்த ஆறில் உங்க உள்ளங்கை எந்த கலர்னு சொல்லுங்க... உங்க விதி எப்படினு தெரிஞ்சிக்கோங்க...

விருச்சிகம் : பேரார்வத்தைப் பரப்புதல்

விருச்சிகம் : பேரார்வத்தைப் பரப்புதல்

விருச்சிகம் மிகவும் உணர்ச்சி மிகுந்தவர்கள். அவர்கள் தங்கள் முழு சக்தியையும் தங்கள் இறங்கிய காரியத்தில் கொடுக்க விரும்புகிறார்கள். நல்ல வெற்றிகளைப் பெற , இறங்கிய வேலையில் அர்ப்பணிப்பு அவசியம் என்று அவர்கள் நம்புகிறார்கள் மேலும் வெற்றி பெறுவதற்காக தங்கள் நேரத்தையும் கடின உழைப்பையும் செலவிடல் அவசியம் என்றும் நம்புகிறார்கள் . உறவுகள், அல்லது வாழ்க்கை, என அனைத்திலும் அவர்கள் அறிந்தது பேரார்வம் மட்டுமே . அதையே சுற்றி இருப்பவர்களுக்கும் பரப்ப விரும்புகிறார்கள் விருச்சிக ராசிக்காரர்கள்.

தனுசு: கண்டுபிடிப்பு

தனுசு: கண்டுபிடிப்பு

தனுசு ராசி நபர்கள் கண்டுபிடிப்பில் ஆர்வமாக உள்ளனர் மற்றும் எப்போதும் புதிய எல்லைகளை அடைய விரும்புகிறார்கள் . அவர்கள் புதிய விஷயங்களைக் கற்று, புதிய மக்களைச் சந்தித்து புதிய கலாச்சாரங்களை அறிந்து கொள்ள விரும்புகிறார்கள். உலகத்தைத் தாராளமாக உற்சாகப்படுத்த அவர்கள் விரும்புகிறார்கள். இவர்களின் வாழ்க்கையின் நோக்கம் கால் படாத பாதைகளைக் கண்டறிவதேயாகும்.

மகரம் : வெற்றி

மகரம் : வெற்றி

மகர ராசிக்காரர்கள் கடினமாக உழைக்கின்ற, நேரடியான மற்றும் உறுதியானவர்கள் . அவர்களின் நேசத்திற்குரியவர்களின் மகிழ்ச்சிக்காக வேலை செய்கிறார்கள். வாழ்வில் அவர்கள் விரும்புவது அனைத்திலும் வெற்றி. எவ்வளவு கடினமாக உழைக்கவேண்டியிருந்தாலும் அவர்கள் விரும்புவது வெற்றி மட்டுமே. இதனால் வாழ்க்கையில் அவர்களின் இறுதி நோக்கம் அவர்களின் அன்புக்குரியவர்களின் மகிழ்ச்சி மட்டுமே.

MOST READ: பித்ருக்களின் அடையாளமாக ஏன் காகத்தை குறிப்பிடுகிறோம்?

கும்பம்: உலகம் - வாழ ஒரு சிறந்த இடம்

கும்பம்: உலகம் - வாழ ஒரு சிறந்த இடம்

கும்ப ராசிக்காரர்கள் உண்மையான மனிதாபிமானம் கொண்டவர்கள் . வாழ்க்கையில் அவர்களுடைய ஒரே நோக்கம் தங்கள் கருணையின் மூலம் இவ்வுலகை ஒரு வாழச்சிறந்த இடமாக உருவாக்குவதேயாகும். பெரும்பாலான நேரங்களில் இந்த உலகிற்கு அவர்கள் வழங்கியது கருணை மட்டுமே. இவர்கள் தொடர்ந்து தொண்டு புரிகிறார்கள். இந்த உலகின் மாந்தர்கள் ஒருவருக்கொருவரை கவனித்துக்கொள்வது , எந்தவொரு வலியும் இல்லாமல் அமைதியாக இருக்கச் செய்வது போன்றவையே இவர்களின் நோக்கமாக உள்ளது .

மீனம்: கலைகளை ஊக்குவித்தல்

மீனம்: கலைகளை ஊக்குவித்தல்

மீனம் நீரின் அடையாளம். கடகத்தைப் போலவே இவர்களும் உணர்ச்சிகளின் பெட்டகம். இது தவிர, அவர்கள் படைப்பாற்றல் மிகுந்தவர்கள். அவர்கள் பொதுவாகப் பேசுவதில்லை, இசை, கவிதை மற்றும் ஓவியங்கள் போன்ற பல்வேறு வடிவிலான கலைகளால் தங்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவார்கள். மீனத்தில் பெரும்பாலோர் இந்த கலை வடிவங்களை தங்கள் பொழுதுபோக்காகப் பயன்படுத்துவார்கள். இதனால், அமைதியாக கலைகளை ஊக்குவிப்பது இவர்களது பொழுதுபோக்கு .

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Your True Purpose In Life As Per Zodiac Sign

here we are giving some experts reveals about Your True Purpose In Life As Per Zodiac Sign.
Story first published: Friday, October 12, 2018, 12:30 [IST]
Desktop Bottom Promotion