இந்த ராசிப் பெண்களால் தான் ஆண்கள் அதிகம் ஈர்க்கப்படுவார்கள் என்பது தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

பொதுவாக ஒருவர் மற்றவர்களை ஈர்ப்பதற்கு முக்கிய காரணமாக இருப்பது குணாதிசயங்கள், வசீகரமான தோற்றம் போன்றவற்றால் தான். ஆனால் அதையும் தாண்டி ஒருவர் மற்றவர்களை ஈர்ப்பதற்கு ராசியும் ஓர் காரணம் என ஜோதிடம் கூறுகிறது. குறிப்பாக பெரும்பாலான ஆண்கள் குறிப்பிட்ட பெண்களால் அதிகம் ஈர்க்கப்படுவார்கள். இதற்கு காரணமாக ஜோதிடம் கூறுவது, ராசியும், அந்த ராசியை ஆளும் அதிபதிகளும் தான்.

Women Of These Zodiac Signs Attract Men Easily

ஆம், குறிப்பிட்ட ராசிக்குரிய பெண்கள் எவ்வித கஷ்டமும் இல்லாமல், ஆண்களை ஈர்ப்பார்கள். அதோடு அந்த ஆணை விரைவில் தன்வசப்படுத்தியும் கொள்வார்கள். இக்கட்டுரையில் எந்த ராசிக்கார பெண்கள் ஆண்களை எளிதில் ஈர்ப்பார்கள் என்று ராசிகளின் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது. நீங்களும் அந்த ராசியில் ஒருவராக உள்ளீர்களா என்பதைத் தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
விருச்சிகம்

விருச்சிகம்

இந்த ராசிகாரர்கள் ஒருவரை விரும்புவது என்பது மிகவும் கடினமான ஒன்றாகும். அப்படி அவர்களுக்கு ஒருவரை பிடித்து விட்டது என்றால், அது தனித்துவம் வாய்ந்ததாக இருக்கும். காதல் உறவில் இது விரும்பத்தக்க ஒன்றாகவே கருதப்படுகிறது. மிகவும் புதுமையான, அறிவாற்றல் வாய்ந்தவர்களாக திகழும் இவர்கள் ஆண்களை எளிதில் ஈர்க்கக்கூடிய நபர்களாக பார்க்கப்படுகின்றனர்.

சிம்மம்

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு ஆண்கள் கவருவதில் அத்தனை கடின உழைப்பு என்பது தேவையே இல்லை. நம்பமுடியாத ஆற்றலும், தன்னம்பிக்கையும் ஆண்களை எளிதில் காதல் வயப்பட வைத்துவிடும். இந்த ராசிக்காரர்கள் வலிமையான குணாதசியங்கள் கொண்டவராக இருப்பதால், விரும்பிய ஆண்கள் இவர்களை மறப்பது மிக கடினமான ஒன்றாக இருக்கும்.

தனுசு

தனுசு

இந்த ராசி பெண்களை யாராலும் அவ்வளவு எளிதில் புரிந்து கொள்ள முடியாது. இவர்களது நல்ல குணங்கள், ஆண்களை ஈர்க்கும் வகையில் அமைகிறது. ஒரு நல்ல நண்பராக இருக்கவும், வாழ்வில் சிறந்த துணையாக பயணம் செய்யவும் இந்த ராசி பெண்கள் சிறந்தவராக விளங்குவர்.

மகரம்

மகரம்

மற்றவர்களுடன் சற்று விலகி இருக்கும் குணாதிசயம் உள்ள இவர்கள், ஒருவருடன் மனம் திறந்து பழக ஆரம்பித்தால் இந்த ராசி பெண்கள் சிறந்த துணையாக இருப்பர் என்பதில் சந்தேகம் இல்லை. பாசமும், கருணை உள்ளமும் நிறைந்த மரக ராசி பெண்கள், ஆண்களை எளிதில் ஈர்த்து விடுவர். அப்படிப்பட்ட இவர்கள் காதலில் விழுந்துவிட்டால், அவர்களுக்குள் ஒளிந்திருக்கும் சிறந்த குணங்களை வெளிப்படுத்துவர். இப்படிப்பட்ட குணங்களை உள்ளடக்கிய பெண்கள் மீது ஆண்கள் காதல் வயப்படுவர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

கும்பம்

கும்பம்

தங்கள் கருத்துகளின் மீது உண்மையாக இருப்பதையும், நேர்மையாகவும் இருப்பவர்கள் தான் கும்ப ராசியில் பிறந்த பெண்கள். இத்தகைய குணாதசியம் உள்ள பெண்கள், ஆண்களின் கண்களை ஈர்ப்பவர்களாகவே பெரும்பாலும் அமைகின்றனர். தங்களது உணர்ச்சிகளை இவர்கள் வெளிப்படும் விதம், ஆண்களை வசீகரித்து விடுகிறது.

மீனம்

மீனம்

மீன ராசியில் பிறந்த பெண்கள், காதல் வெளிப்படும் விதம், நம்பிக்கை அல்லது தங்களது உணர்ச்சிகளை வெளிப்படும் விதம் ஆகியவற்றால் ஆண்களை மிக எளிதில் வீழ்த்திவிடுகின்றனர். உறவுக்கு முக்கியத்துவம் அளிக்கும் இந்த ராசி பெண்கள், பிற விஷயங்களை பொருட்படுத்துவது இல்லை என்றே கூறவேண்டும். இத்தகைய குணங்களை உடைய பெண்களை, எந்த ஆணுக்கு தான் பிடிக்காமல் போகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Women Of These Zodiac Signs Attract Men Easily

Falling in love with these certain women is an easy cake walk. This is due to the zodiac sign that they belong to. From having certain charm as per their zodiac sign, to being the most attractive, it does not take long for men to fall in love with these zodiac sign women! Check out for the special zodiac signs.
Story first published: Wednesday, April 11, 2018, 16:21 [IST]