For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  இன்ஸ்டாகிராம் போலித்தனத்தை டார், டாராக கிழித்த இளம்பெண் - புகைப்படங்கள்!

  |

  இன்ஸ்டாகிராம் என்பது ஷங்கர் படத்தின் பாடல்களில் இடம்பெறும் கிராபிக்ஸ் காட்சிகளை போல, பார்ப்பதற்கு அழகாக இருக்கும். ஆனால், அவை யாவும் செயற்கையானவை. உண்மையாகவே ஃபிட்னஸ் செய்து, உடலை சிக்கென்று வைத்துக் கொண்டிருப்பவர்கள் எண்ணிக்கை அங்கே குறைவு... ஆனால், உடலை மெலிதாக காட்ட, முகத்தை ப்ளீச் செய்து காட்ட பல எடிட்டிங் செயிலிகளை பயன்படுத்தி பின்தொடர்பாளர்கள் எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்ள செய்பவர்களின் எண்ணிக்கை இன்ஸ்டா உலகில் மிகவும் அதிகம்.

  Woman Reveals the Fake side of Instagram in the Most Epic Way!

  All Image Source and Courtesy: chessiekingg / instagram

  உண்மையை கூற வேண்டும் என்றால், இதன் பக்கவிளைவு மிகவும் கொடூரமானது. உடல் எடையை குறைக்க குறுக்குவழியை பயன்படுத்தினால் உடல் ஆரோக்கியம் கெடும். அழகினை அதிகரிக்க இப்படியான குறுக்குவழிகளை பயன்படுத்துவது மனதின் ஆரோக்கியத்தை கெடுக்கும்.

  ஆம்! நாம் அனைவருமே அழகு தான். ஆனால், அதை உணராமல் செக்ஸியாக இருக்க வேண்டும், உடல் அளவு இப்படி இருக்க வேண்டும், சிக்ஸ் பேக், முன்னழகு, மேல் அழகு, பின்னழகு எடுப்பாக தெரிய வேண்டும் என ஒரு நிலையற்ற பிம்பத்தை துரத்தி, இல்லாததை இருப்பதை போல காண்பித்துக் கொள்ள வருந்தி நாம், நம் மனதின் ஆரோக்கியத்தை சீர்கெடுத்து கொள்கிறோம்.

  ஆங்கிலத்தில் பாடி பாசிட்டிவிட்டி என ஒன்றை குறிப்பிடுவார்கள். அதாவது, "இதுதான் நான், இதுதான் என்னுடல்", "என் உடல் குறித்து நான் அவமானமாக கருதவில்லை..." என்பது போன்ற ஒரு விழிப்புணர்வு தான் இந்த பாடி பாசிட்டிவிட்டி.

  நம் ஊரிலும் இந்த பாடி பாசிட்டிவிட்டு பற்றாக்குறை அதிகமாகவே இருக்கிறது. நாம் டிவி, பேப்பர், ஆன்லைனில் காணும் விளம்பரங்களில் இருந்து, பெண், மாப்பிளை தேடும் படலம் வரை... என்ன படித்திருக்கிறார், குணமானவரா என்ற கேள்விகளுக்கு எல்லாம் முன்னர், பார்க்க இலட்சணமா இருப்பாரா, அழகா இருப்பாரா என்ற கேள்விகளே முன் வைக்கப்படுகின்றன.

  முக்கியமாக இந்த டிவி விளம்பரங்கள், பரு, உடல்பருமன் இருப்பவர்கள் தைரியம் இல்லாதவர்கள், வெற்றிப்பெற இயலாதவர்கள் போன்ற கண்ணோட்டத்தில் காண்பித்து, காண்பித்து... ஒருவித தாழ்வுமனப்பான்மையை அதிகரித்து வைத்துள்ளது.

  அப்துல் கலாம் அய்யா, சாலமன் பாப்பையா போன்றவர்களை அவர்களது நல்ல குணம், பண்புகள், அறிவு திறமையை வைத்து மட்டுமே நாம் விரும்பினோம். அவர்களுக்கு சிக்ஸ் பேக் இல்லை, வெள்ளை நிற தேகம் கிடையாது. எனவே, நாம் எப்படி இருக்கிறோமோ அப்படியே முதலில் நாம் நம்மை விரும்ப துவங்க வேண்டும். அப்போது தான் மற்றவர்கள் நம்மை விரும்ப துவங்குவார்கள்.

  இந்த பாடி பாசிட்டிவிடு மற்றும் இன்ஸ்டாகிராமில் பரவலாக காணப்படும் அந்த போலி பதிவுகளை நார், நாராக கிழிப்பதை தன் வழக்கமாக வைத்திருக்கிறார் Chessie King எனும் இன்ஸ்டா ப்ளாகர்... வாங்க அம்மணி அப்படி என்னெல்லாம் பண்ணி வெச்சிருக்காங்கன்னு பார்க்கலாம்...

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  #1

  #1

  Image Source and Courtesy: chessiekingg / Instagram

  #2

  #2

  Image Source and Courtesy: chessiekingg / Instagram

  #3

  #3

  Image Source and Courtesy: chessiekingg / Instagram

  #4

  #4

  Image Source and Courtesy: chessiekingg / Instagram

  #5

  #5

  Image Source and Courtesy: chessiekingg / Instagram

  #6

  #6

  Image Source and Courtesy: chessiekingg / Instagram

  #7

  #7

  Image Source and Courtesy: chessiekingg / Instagram

  #8

  #8

  Image Source and Courtesy: chessiekingg / Instagram

  #9

  #9

  Image Source and Courtesy: chessiekingg / Instagram

  #10

  #10

  Image Source and Courtesy: chessiekingg / Instagram

  #11

  #11

  Image Source and Courtesy: chessiekingg / Instagram

  #12

  #12

  Image Source and Courtesy: chessiekingg / Instagram

  #13

  #13

  Image Source and Courtesy: chessiekingg / Instagram

  #14

  #14

  Image Source and Courtesy: chessiekingg / Instagram

  #15

  #15

  Image Source and Courtesy: chessiekingg / Instagram

  #16

  #16

  Image Source and Courtesy: chessiekingg / Instagram

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  English summary

  Woman Reveals the Fake side of Instagram in the Most Epic Way!

  Popular Instagram blogger Chessie King recognizes this and uses her platform to promote body-positivity, showing the ‘true’ side to each ‘perfect’ photo by highlighting the incredible difference that certain poses make.
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more