For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நாணயத்தின் இரு பக்கத்தை ஏன் ஹெட்ஸ், டெயில் என சொல்கிறார்கள் தெரியுமா?

நாணயத்தின் இரு பக்கத்தை ஏன் ஹெட்ஸ், டெயில் என சொல்கிறார்கள் தெரியுமா?

|
Why are the Two Sides of a Coin Known as the Head and the Tail?

நாம் சற்றும் யோசிக்காமல் பல வருடங்களாக பின்பற்றி வரும் பல விஷயங்களில் இதுவும் ஒன்று. என்றாவது ஏன் நாணயத்தின் இரு பக்கங்களை ஹெட்ஸ், டெயில் என்று சொல்கிறார்கள் என யோசித்ததுண்டா நீங்கள்.

அட! ஆமா, ஏன் இப்படி சொல்றாங்க... என இப்போது பலரும் யோசிக்கலாம்.

சிறுவயதில் இருந்து பலமுறை கிரிக்கெட் ஆடும் போது டாஸ் போட்டிருப்போம். எண்ணற்ற முறை ஹெட்ஸ் ஆர் டெயில்ஸ் கேட்டிருப்போம். ஆனால், அது ஏன், எதற்கு, எதனால் கேட்கப்படுகிறது என்று நாம் யோசித்ததே இல்லை.

பெரும்பாலும் இது ரோம தேசத்தில் இருந்து பரவிய சொல்லாடல் என்று கூறுகிறார்கள். ஆனால், அதற்கு முன்னரே லிடியா எனும் தேசத்தில் இருந்து தான் கிரேக்கம் மற்றும் ரோம நாடுகளுக்கு இதுபோன்ற நாணய அச்சு பழக்கம் பரவியது என்றும் ஒருசில தகவல்கள் மூலம் அறியமுடிகிறது.

இதுப்போக பல ஆய்வாளர்கள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், சாதாரண பொதுமக்கள் என பலதரப்பட்ட மக்கள், இந்த காரணத்தால் நாணயத்தின் இரு பக்கத்தை ஹெட்ஸ், டெயில்ஸ் என்று கூறியிருக்கலாம் என தங்கள் கருத்தை பதிவு செய்துள்ளனர்.

சரி! மேட்டருக்கு வருவோம்... பெரும்பாலும் கிரிக்கெட் போட்டியின் போது நாம் அதிக கவனத்துடன் காணும் டாஸ்-ன் போது கேட்கப்படும் ஹெட்ஸ் ஆர் டெயில்ஸ் கதை எப்படி பிறந்தது? நாணயத்தின் இரு பக்கத்தை ஏன் ஹெட்ஸ், டெயில் என சொல்கிறார்கள்? வாங்க தெரிஞ்சுக்கலாம்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ரோம நாணயங்கள்!

ரோம நாணயங்கள்!

இந்த ஹெட்ஸ், டெயில் என்ற சொல்லாடல் ரோமர்களிடம் இருந்து பரவியிருக்கலாம் என்றும் கூற்று இருந்து வருகிறது. ஆதிகாலம் முதலே ரோம நாணயங்களில் அந்த நாட்டை ஆண்ட அரசை அல்லது ஆட்சியாளர்களின் படத்தை நாணயங்களில் பதிக்கும் பழக்கம் இருந்து வருகிறது. இன்றளவும் உலகின் பல நாடுகளில் அச்சடிக்கப்படும் நாணயங்களில் இந்த வழக்கம் பின்பற்றப்பட்டு வருகிறது.

பிரிட்டன்!

பிரிட்டன்!

பிரிட்டனிலும் வெகு காலாமாக அரசரின் படத்தை நாணயங்களில் பொரிக்கும் வழக்கம் கொண்டிருந்து வருகிறார்கள். மேலும், ஒரு பக்கத்தில் ஆட்சியாளர் படமும், மறுப்பக்கத்தில் வேறு ஏதனும் இலட்சினை அல்லது வேறு உருவ படமும் பொரித்து வைத்திருப்பார்கள்.

அப்வர்ஸ், ரிவர்ஸ்

அப்வர்ஸ், ரிவர்ஸ்

ஆனால், இவர்கள் அப்வர்ஸ் (ஹெட்ஸ் - தலை), ரிவர்ஸ் (டெயில் - பூ) என்று கூறும் வழக்கம் கொண்டிருந்தனர். பொதுவாகவே ஒருப்பக்கம் ஒரு நபரின் தலை இருப்பதால் அதை ஹெட்ஸ் என்றும். தலையின் மறுமுனை வால் என்பதால் டெயில் என்றும் கூறும் பழக்கம் காலப்போக்கில் வந்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

பென்ஸ் நாணயம்

பென்ஸ் நாணயம்

பிரிட்டிஷ் பத்து பென்ஸ் நாணயத்தில் பறைசாற்றும் சிங்கத்தின் வால் அச்சிடப்பட்டிருந்தது. இதன் காரணமாக ஒருபுறம் இருந்த ஆட்சியாளரின் தலையை ஹெட்ஸ் என்றும். மறுபுறம் இருந்த சிங்கத்தின் வால் பகுதியை டெயில் என்றும் கூறும் பழக்கம் வந்திருக்கலாம் என்ற கருத்தும் பொதுவாக காணப்படுகிறது.

லிடியா!

லிடியா!

மேற்கு ஆசியா பகுதியில் இருந்த லிடியா எனும் பண்டையக் காலத்து அரசாட்சி பகுதியில் எப்போதுமே ஒருபுற நாணயத்தின் பகுதியில் அரசரின் படமும், மறுபுறம் நாணயத்தின் பகுதியில் விலங்குகளின் படமும் பதிக்கும் பழக்கமிருந்தது. இதுவே காலப்போக்கில் கிரேக்கம் மற்றும் ரோம நாடுகளில் பின்பற்றப்பட்டதாக அறியப்படுகிறது.

ஒருவேளை அரசரின் முகத்தை ஹெட்ஸ் என்றும், மிருகத்திற்கு வால் இருப்பதால் டெயில் என்றும் பின்னாட்களில் கூற துவங்கியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இத்தாலி!

இத்தாலி!

உலகின் பல நாடுகளில் இந்த ஹெட்ஸ் மற்றும் டெயில் என்று நாணயத்தின் இரு பக்கங்களை கூறி அழைக்கும் பழக்கம் இருக்கையில். இத்தாலியில் மற்றும் நாணயத்தின் இரு பக்கங்களை ஹெட்ஸ் மற்றும் ஹார்ட்ஸ் என்று கூறி அழைக்கிறார்கள்.

பறவை!

பறவை!

கேரி சிம்சன் எனும் நியூயார்க் பல்கலைகழக விரிவுரையாளர் என்ன கூறுகிறார் எனில்,

பொதுவாகவே பண்டையக் காலத்து நாணயங்களில் ஒருபுறம் ஆட்சியாளர்கள் / அரசர்களின் புகைப்படமும் மறுபுறம் வேறு ஏதனும் புகைப்படமும் பதிக்கப்பட்டிருக்கும். ஆனால், பெரும்பாலும் கோட் ஆப் ஆர்ம்ஸில் இருக்கும் நோபல் பறவையின் படம் பதிக்கப்பட்டிருக்கும். அதற்கு டெயில் இருந்தது. அதை தான் ஹெட்ஸ் மற்றும் டெயில் என்று கூற துவங்கியிருக்கலாம். என்று பதில் கூறியுள்ளார்.

பொதுவான கருத்து!

பொதுவான கருத்து!

இதுப்போக பலர் கூறும் பொதுவான கருத்தாக இருப்பது. அரசர்களின் முகம் பதிக்கப்பட்ட காரணத்தால் ஒரு புறத்தை ஹெட்ஸ் என்றும், தலையின் மறுமுனையாக வாலை கருதுவதால் டெயில் என்றும் கூறியிருக்கலாம் என்று கருத்து பகிர்ந்துள்ளனர்.

இது சாதராணமாக வந்து ஒரு சொல்லாடலாக கூட இருக்கலாம். ஏனெனில், பெரும்பாலான நாணயங்களின் ஒரு புறம் அரசர்களின் தலை இருந்தாலும். மறுபுறத்தில் வெவ்வேறு சித்திரம், படம், விலங்குகளின் படம், சில இலச்சினைகள் தான் இடம்பெற்றிறுக்கின்றன என காரணம் கூறுகிறார்கள்.

எல்லாம் சரி ஆங்கிலத்தில் ஹெட்ஸ், டெயில் என்றால் தமிழில் தலையா, வாலா என்று தானே இருக்க வேண்டும். ஏன் பூவா, தலையா என்று கேட்கிறோம்? உங்களுக்கு தெரிஞ்சா அத கமெண்ட்டுல சொல்லுங்க...!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Why are the Two Sides of a Coin Known as the Head and the Tail?

Why are the Two Sides of a Coin Known as the Head and the Tail?
Story first published: Saturday, January 20, 2018, 13:35 [IST]
Desktop Bottom Promotion