பார்க்க அனிருத் போலவே இருக்கும் இந்த பெண் யார் தெரியுமா?

Posted By: Staff
Subscribe to Boldsky

இன்று இணையத்தில் ஒரு விஷயம் வைரலாகிவிட்டால், அது உண்மையா, பொய்யா என்று தெரியாமல் பலரும் தொடர்ந்து பகிர்ந்து. உலகின் இண்டு, இடுக்கு எல்லாம் சென்றடைய செய்து விடுகிறார்கள்.

இப்படியாக வைரலாகும் விஷயங்களில் பாதிக்கு பாதி போலியானவை ஆகும். அதாவது ஒன்று செய்தி உண்மையாக இருக்கும், படம் போலியாக இருக்கும். அல்லது படம் உண்மையாக இருக்கும், செய்தி போலியாக இருக்கும்.

சில சமயம் மட்டுமே வைரல் செய்திகள் முற்றிலும் உண்மையானதாக இருக்கின்றன. அப்படி பார்த்தால் கடைசியாக சூப்பர் வைரலான உண்மை சம்பவம் ப்ரியா வாரியார் தான்.

இப்படியான போலி வைரல் சம்பவங்களில் பலமுறை பிரபலங்கள் சிக்குவதுண்டு. அதிலும், சங்கோஜமே இல்லாமல் இறந்துவிட்டார் என்றெல்லாம் செய்தி பரப்புவார்கள்.

இப்படியான போலி வைரல் செய்தியில் சமீபத்தில் சிக்கியவர் தான் நமது ராக்ஸ்டார் அனிருத். ஒரு பெண் தோற்றத்தில் அவர் இருக்கும் புகைப்படம் வெளியானது. ஆனால், அதில் இருப்பது நிஜத்தில் அனிருத் அல்ல....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வைரல்!

வைரல்!

கடந்த சில தினங்களாக அனிருத் பெண் வேடமிட்ட புகைப்படம் என்ற ஒரு போட்டோ ஃபேஸ்புக், வாட்ஸ்-அப், ட்விட்டர் என அனைத்து சமூக தளங்களிலும் வைரலாக பரவி வருகிறது. இதை ஒரு மீம் டெம்பிளேட்டாகவும் மாற்றி விட்டார்கள்.

குழப்பம்!

குழப்பம்!

சிலர் இது அனிருத் புதியதாக நடிக்கவிருக்கும் தமிழ் படத்திற்காக எடுக்கப்பட்ட போட்டோஷூட்டில் இருந்து லீக்கான புகைப்படம் என்று அடித்துவிட, பலரும் அனிருத்தை கேலி செய்து மீம் போட துவங்கிவிட்டார்கள். ஆனால், இது எந்த ஒரு படத்திற்காகவும் எடுக்கப்பட்ட புகைப்படம் அல்ல.

மறுப்பு!

மறுப்பு!

அனிருத் இந்த படத்தில் இருப்பது நான் இல்லை என்று எந்த ஒரு செய்தியும் வெளியிடவில்லை என்ற போதிலும், அனியின் நெருங்கிய வட்டத்தில் இருக்கும் சிலர் இது அனிருத் அல்ல என்று தங்கள் பங்குக்கு உண்மையை போட்டு உடைத்தனர்.

யார் இவர்?

யார் இவர்?

சரி கடந்த சில நாட்களாக சகட்டுமேனிக்கு வைரலாக பரவிக் கொண்டிருக்கும் இந்த பெண் யார்? இவர் ஒரு மாடல் அழகி. இவர் பெயர் ஷானு (Shanoo). இந்த புகைப்படம் திரைப்படத்திற்காக எடுக்கப்பட்ட படமே கிடையாது.

விளம்பரம்!

விளம்பரம்!

இந்த புகைப்படம் ஒரு பெரிய பட்ஜெட் விளம்பர ஷூட்டுக்காக எடுக்கப்பட்ட படமாகும். ஆனால், இதை அறியாத சிலர், பக்கவாட்டில் பார்க்கும் போது காண அனிருத் போல இருப்பதால், இது அனிருத் நடிக்கவிருக்கும் படத்திற்காக எடுக்கப்பட்ட புகைப்படம் என்று கிளப்பிவிட்டனர்.

மற்றுமொரு படம்!

மற்றுமொரு படம்!

அனைவரும் இது நாள் வரை பக்கவாட்டில் அமர்ந்திருக்கும் ஒரே ஒரு படத்தை மட்டுமே பார்த்து, பரப்பி வந்தனர். இதோ, இது மாடல் அழகி ஷானுவின் மற்றுமொரு படம்.

அவருடன் வேறு இரு மாடல் அழகிகளும் உடன் இருக்கிறார்கள். இந்த படங்களை பார்க்கும் போது இது நிச்சயம் ஒரு கிளாஸிக் நகை அல்லது புடவை விளம்பரமாக இருக்குமோ என்ற எண்ணம் தோன்றுகிறது.

கெஸ்ட் ரோல்!

கெஸ்ட் ரோல்!

அப்பாடா... ஒருவேளையாக அனிருத் பெண் வேடத்தில் எந்த படத்திலும் நடிக்கவில்லை என்பது ஊர்ஜிதம் ஆகிவிட்டது. ஆனால், அவர் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் கோகோ என்ற படத்தில் ஒரு சிறிய கெஸ்ட் ரோல் செய்கிறாராம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Who is this Girl Looks Like Anirudh Ravichandran?

Who is this Girl Looks Like Anirudh Ravichandran? Truth Revealed!