ஒவ்வொரு ராசிக்காரர்களும் தங்கள் வாழ்க்கை துணையிடம் எதிர்பார்ப்பது இத தாங்க...

Posted By:
Subscribe to Boldsky
ஒவ்வொருவரும் தனது வாழ்க்கை துணையிடம் எதிர்பார்ப்பது இது தான்- வீடியோ

ஒருவருக்கு திருமண வாழ்க்கை சிறப்பாக இருப்பது அமையும் வாழ்க்கைத் துணையைப் பொறுத்தது. ஒவ்வொருவருக்கும் தங்களுக்கு வர வேண்டிய வாழ்க்கைத் துணை எப்படி இருக்க வேண்டுமென்ற ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். மேலும் ஒவ்வொருவரைச் சுற்றியும் ஒரு குறிப்பிட்ட ஆற்றல் இருக்கும். இந்த ஆற்றலுடன் இணையும் வகையினாலான ஆற்றலைக் கொண்டவர்கள் வாழ்க்கைத் துணையாக வந்தால், வாழ்க்கை அற்புதமாக இருக்கும்.

What Would You Want From A Soulmate, As Per Your Zodiac Sign

இந்த கட்டுரையில் எந்த ராசிக்காரர்கள் எம்மாதிரியான வாழ்க்கைத் துணை வர வேண்டுமென்று நினைக்கிறார்கள் என்பது குறித்து கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தேவைகளின் படி ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் வாழ்க்கை துணை அமைந்தால், நிச்சயம் இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.

உங்களுடைய ராசிக்கு எம்மாதிரியான குணம் கொண்டவர்கள் கிடைத்தால் நன்றாக இருக்கும் என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

மேஷ ராசிக்காரர்கள் தங்களுக்கு இணையாக சவால் விட்டு தைரியமாக பேசுபவர்கள் வாழ்க்கைத் துணையாக அமைய வேண்டுமென்று நினைப்பர். மேலும் இவர்களை விட யார் மிகவும் ஆக்ரோஷமாக இருக்கிறார்களோ அவர்களே இந்த ராசிக்காரர்களுக்கு பொருத்தமானவர்கள். முக்கியமாக யார் ஒருவர் எந்த விஷயத்தையும் அச்சமின்றி வெளிப்படையாக சொல்கிறார்களோ, அவர்களையே இந்த ராசிக்காரர்கள் வாழ்க்கைத்துணையாக வர வேண்டுமென்று விரும்புவார்கள்.

ரிஷபம்

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு தங்களை ஊக்குவித்து, சிறப்பானவர்களாக்கும் ஒருவரையே வாழ்க்கைத் துணையாக்க வேண்டுமென்று நினைப்பார்கள். இந்த ராசிக்காரர்கள் தாங்கள் எப்போதும் விழிப்புடன் செயல்பட தன்னை ஊக்குவிக்கும் ஒருவரை திருமணம் செய்து கொள்ள விரும்புவர்.

மிதுனம்

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களின் மனதில் எப்போதும் மில்லியன் கணக்கிலான ஐடியாக்கள் மற்றும் திட்டங்கள் ஓடிக் கொண்டிருப்பதால், இவற்றில் கவனத்தை செலுத்த உதவும் ஒருவரையே வாழ்க்கைத் துணையாக்க விரும்புவர். இம்மாதிரியானவர்களை இந்த ராசிக்காரர்கள் மணம் புரிந்து கொண்டால், அவர்களது வாழ்க்கை சிறப்பாகவும், நிலையாகவும் இருக்கும்.

கடகம்

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு தங்களது எண்ணங்கள் மற்றும் உணர்வுகளைப் புரிந்து நடந்து கொள்ளும் ஒருவரையே வாழ்க்கை துணையாக்க விரும்புவர். மேலும் இந்த ராசிக்காரர்களுக்கு வாழ்க்கை துணையாக வருபவர்கள், கருணை உள்ளத்துடன் மற்றும் அனைத்து பிரச்சனைகளுக்கும் எளிதில் தீர்வு காணக்கூடியவர்களாகவும் இருக்க வேண்டுமென நினைப்பர்.

சிம்மம்

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு தங்களது ஆழ் மனதைப் புரிந்து நடந்து கொள்ளும் ஒருவரையே வாழ்க்கை துணையாக்க விரும்புவர். சிம்ம ராசிக்காரர்கள் எங்கும் அனைவரது கவனத்தையும் ஈர்க்க விரும்புவர். ஆனால் சொந்த வாழ்க்கை என்று வரும் போது, ஈகோ பார்ப்பது, தற்பெருமை கொள்வது என்று எதுவும் இல்லாமல், தனக்கு வாழ்க்கைத் துணையாக வருபவரிடம் ஒளிவுமறைவின்றி உண்மையாக நடந்து கொள்வர்.

கன்னி

கன்னி

கன்னி ராசிக்காரர்கள் எவ்வித மாற்றமுமின்றி தங்களை முழுமையாக ஏற்றுக் கொள்பவரையே வாழ்க்கை துணையாக்க விரும்புவர். இந்த ராசிக்காரர்கள் சிறப்பான சுய விமர்சகர். இவர்கள் யார் ஒருவர் தன்னை முழுமையாக ஏற்று காதலிக்கிறாரோ, அவர்களையே திருமணம் செய்து கொள்வர்.

துலாம்

துலாம்

துலாம் ராசிக்காரர்கள் எப்போதும் தங்களைச் சுற்றி மக்கள் இருக்க வேண்டும் என்றும், அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் வகையிலும் இருக்க விரும்புவர். இந்த ராசிக்காரர்களுக்கு, யார் ஒருவர் ஒருசில சமயங்களில் இவர்கள் இல்லாமலும் தங்களால் வாழ முடியும் என்பதைக் காட்டுகிறார்களோ, அவர்களே இவர்களுக்கு பொருத்தமானவர்களாக இருப்பர்.

விருச்சிகம்

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்கள் மிகவும் நேர்மையானவர்கள். இதுவே இவர்களது மிகப்பெரிய நற்குணம். இதே நற்குணத்தையே தனக்கு வாழ்க்கைத் துணையாக வருபவர்களிடம் இவர்கள் எதிர்பார்ப்பார்கள். இந்த ராசிக்காரர்களுக்கு சரியான பொருத்தமாக இருப்பவர்கள் என்றால், நேர்மையானவர்கள், நம்பிக்கையானவர்கள் தான். இவர்களை வாழ்க்கைத் துணையாக்கினால், இந்த ராசிக்காரர்களது வாழ்க்கை பிரமாதமாக இருக்கும்.

தனுசு

தனுசு

தனுசு ராசிக்காரர்கள் மாற்றங்கள் மற்றும் உற்சாகத்தை விரும்புவர். இந்த ராசிக்காரர்கள் எப்போதும் தங்கள் வாழ்வில் ஒரு சுவாரஸ்யத்தை எதிர்பார்ப்பார்கள். இந்த ராசிக்காரர்கள் தங்களுக்கு வாழ்க்கை துணையாக வருபவர்கள் சாகசங்கள் மற்றும் ஆச்சரியங்களை விரும்புபவராகவும் இருக்க வேண்டுமென நினைப்பர்.

மகரம்

மகரம்

மகர ராசிக்காரர்கள் எந்த ஒரு விஷயத்திற்கும் கூச்ச சுபாவம் இல்லாமல், தைரியமாக செயல்படும் ஒருவரையே வாழ்க்கைத் துணையாக்க விரும்புவர். இந்த ராசிக்காரர்கள் தங்களுக்கு வாழ்க்கைத் துணையாக வருபவர், தன்னை சந்தோஷமாக வைத்து, வாழ்க்கை சிறப்பாக கொண்டு செல்லும் ஒருவரை மணக்க விரும்புவார்கள். இது இவர்களை ஒரு நல்ல நிலைக்கு கொண்டு வருவதோடு, சிறப்பான மனிதராக மாறவும் உதவும்.

கும்பம்

கும்பம்

கும்ப ராசிக்காரர்கள் குறும்புத்தனத்தையும், மிகவும் எரிச்சலூட்டும் படியான ஐடியாக்களையும் ஆதரிப்பவர்களாக இருப்பர். இந்த ராசிக்காரர்களுக்கு பொருத்தமானவர்கள் என்றால், இவர்களுக்கு ஆறுதலாக இருந்து, ஊற்சாகமூட்டும் ஒருவர் தான் வாழ்க்கை துணையாவதற்கு சரியாக இருக்கும்.

மீனம்

மீனம்

மீன ராசிக்காரர்கள் எப்போதும் நேர்மறை எண்ணங்களுடன், தங்கள் உணர்வுகளுக்கு மதிப்பளித்து நடப்பவர்களையே வாழ்க்கைத் துணையாக்க விரும்புவர். இந்த வகையினர், நேர்மறை எண்ணங்களைக் கொண்ட ஒருவரை வாழ்க்கைத் துணையாக்கினால், இந்த ராசிக்காரர்களும் எப்போதும் நேர்மறையும் சிந்திக்க ஆரம்பித்து செயல்படுவர். இதனால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

What Would You Want From A Soulmate, As Per Your Zodiac Sign

There are certain energies that we need in our partners, which can make them our soulmates. These can be defined as per our zodiac sign. Find more on the needs of a perfect soulmate, according to ones zodiac sign.
Story first published: Monday, March 12, 2018, 14:40 [IST]