For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  ரெட் அலர்ட் என்பதன் உண்மை அர்த்தம் என்ன? எந்தெந்த பகுதி பாதிக்கும்? என்ன செய்ய வேண்டும்?

  By
  |

  தமிழகத்துக்கு வருகிற 7 ஆம் தேதி அதிதீவிரமாக மழைக்கான எச்சரிக்கை விடப்பட்டிருக்கிறது. அது வரை வழக்கமான வேலைகளில் பின்னடைவு உண்டாகலாம். ஆனால் உயிர், பொருள் சேதங்கள் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்றால் நாம் மிகுந்த எச்சரிக்கையோடு இருக்க வேண்டும்.

  இந்த லெட் அலர்ட் அறிவிப்பை கேரளாவை அடுத்து தற்போது தமிழகத்துக்கும் இந்திய வானிலை ஆய்வு மையம் கொடுத்துள்ளது. குறிப்பாக, வருகிற 7 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழைமை கொடுக்கப்பட்டிருக்கிறது. அது பற்றி விரிவாகப் போர்ப்போம்.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  புயலும் மழையும்

  புயலும் மழையும்

  அக்டோபர் மாதம் எட்டாம் தேதி வரையில், தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பொழியும். ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பொழியும். தென்கிழக்கு அரபிக் கடல் பகுதியில், குறைந்த காநற்றழுத்த தாழிவுப் பகுதி உருவாகியுள்ளதால், இரண்டு நாட்களில் புயலாக மாறும். இது வடமேற்கு திசையில் நகர்ந்து ஓமன் கடற்கரையை நோக்கி செல்லும். வடகிழக்கு பருவ மழை தமிழகம், கேரளா, தெற்கு ஆந்திரா, தெற்கு கர்நாடகா பகுதிகளில் அதிகமாக இருக்கும் வாய்ப்பு இருக்கிறது.

  ரெட் அலர்ட் என்பதன் பொருள்

  ரெட் அலர்ட் என்பதன் பொருள்

  Image Courtesy

  எங்க பார்த்தாலும் ரெட் அலர்ட், ரெட் அலர்ட்னு பீதிய கிளப்புறாங்களே! அப்படின்னா என்னன்னு மொதல்ல நாம தெரிஞ்சிக்க வேண்டாமா? பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கறதுக்கு முன்னாடி இந்த ரெட் அலர்ட்ன்னா என்னங்கிறதுக்கான அர்த்தத்தை நாம மொதல்ல தெரிஞ்சிக்கலாம் வாங்க.

  மிகக் குறைந்த நேரத்தில் மிக அதின அளவிலாக மழை பொழியும். மிகக் குறைந்த காலத்தில் மிக மிக அதிக அளவு மழை வீழ்ச்சி இருந்தால் தான் அந்த இடங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்படும்.

  MOST READ: இந்த 7 பொருளும் வீட்ல இருந்தா தூக்கி வீசிடுங்க... இல்லன்னா துரதிஷ்டம் உங்கள துரத்த ஆரம்பிச்சிடும்...

  இதற்கு முன்

  இதற்கு முன்

  இதற்கு முன்பாக, கடைசியாக எப்போது ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டது என்று தெரியுமா? கடந்த 2015 ஆம் ஆண்டு மழை பொழிந்து உருவான அதிக அளவிலான வெள்ளப் பெருக்கின் போது தமிழகத்துக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டது. அதன்பின் இப்போதுதான் கொடுக்கப்படுகிறது.

  ஆனால் சமீபத்தில் கேரளாவில் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டது. அதன்பின் மிக கன மழையும் அதனால் வெள்ளமும் ஏற்பட்டு எக்கச்சக்க பொருள், உயிர் சேதங்களும் ஏற்பட்டது. இதனா்ல தான் வருகிற 7 ஆம் தேதி கொடுக்கப்பட்டிருக்கிற இந்த ரெட் அலர்ட்டினால் பெரும் பீதி மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கிறது.

  அலர்ட் வகைகள்

  அலர்ட் வகைகள்

  பொதுவாக வானிலை ஆய்வு மையங்களால் நான்கு வகையான அலர்ட்கள் கொடுக்கப்படும். அவை என்னென்ன என்று பார்ப்போம். அதிலும் குறிப்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் இந்த நான்கு வகையான அறிவிப்பு அலர்ட்டுகளைத் தான் பயன்படுத்துகிறது. அவற்றைப் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.

  MOST READ: குரு பெயர்ச்சி முடிஞ்சிருச்சு... இன்னைக்கு எந்தெந்த ராசிக்கு எப்படி இருக்கப்போகிறது யோகம்?

  1. கிரீன் அலர்ட்

  1. கிரீன் அலர்ட்

  இதை ஆங்கிலத்தில் அவுட்லுக் என்ற பெயரில் இந்த கிரீன்அலர்ட் கொடுக்கப்படும். வானிலையில் குறிப்பிடத்தக்க அளவு எந்த மாற்றமும் இல்லாமல் மிக மிக இயல்பாக இருந்தால் தான் இந்த பச்சை அலர்ட் கொடுக்கப்படும்.

  2. யெல்லோ அலர்ட்

  2. யெல்லோ அலர்ட்

  யெல்லோ அலர்ட் என்பது வேறொன்றுமில்லை. மஞ்சள் நிற சமிக்ஞையைத் தான் அது குறிப்பிடுகிறது. இதை அட்வைசரி அலர்ட் என்றும் சொல்வார்கள். இரண்டு நாட்களில் வானிலையில் ஏதாவது குறிப்பிடப்படுகின்ற அளவிற்கான மாற்றங்கள் நிகழ வாய்ப்புகள் இருக்கும்பொழுது, கொடுக்கப்படும். அதற்குரிய முக்கியப் பொருள் என்னவென்றால், தொடர்ந்து வானிலை மாற்றங்களைக் கண்காணித்துக் கொண்டிருக்க வேண்டும் என்பது தான்.

  3. ஆம்பர் அலர்ட்

  3. ஆம்பர் அலர்ட்

  ஆம்பர் அலர்ட் என்பதற்கு கொடுக்கப்படும் நிறம் காவி நிறம். அதாவது வெளிர் சிவப்பு. வானிலை மோசமாக இருக்கின்ற சந்தர்ப்பங்களில் கொடுக்கப்படுகிறது. இந்த அலர்ட் கொடுக்கப்பட்டால் மழை அதிகமாக இருக்கும். மின்சாரம் துண்டிக்கப்படும் நிலை உண்டாகும். தாழ்வான பகுதிகளில் வாழ்கின்ற மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் இதில் கொடுக்கப்படும். இந்த ஆம்பர் அலர்ட் கொடுக்கப்படும் பகுதிகளை வரைபடத்தில் காவி நிறத்தில் குறிப்பிட்டுக் காட்டுவார்கள்.

  MOST READ: வழுக்கையில் மீண்டும் முடிவளர சுண்டெலியை அரைத்து தேய்க்கும் விநோதம்... வேற என்னலாம் செய்றாங்க?

  4. ரெட் அலர்ட்

  4. ரெட் அலர்ட்

  Image Courtesy

  இப்போது நாம் மிக பரபரப்பாக பேசும்ரெட் அலர்ட் என்பது மிக எச்சரிக்கையான அலர்ட் ஆகும். மிகக் குறுகிய காலகட்டத்தில் மிக அதிக கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதை அறிவுறுத்தத்தான் இந்த ரெட் அலர்ட் கொடுக்கப்படுகிறது.

  இந்த அலர்ட் கொடுக்கப்பட்டால், அந்த பகுதிகளுக்கு கட்டமாயம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். மின்சாரங்கள் துண்டிக்கப்படுவதற்கான வாய்பபுகளும் மிகுதி. அதனால் நிவாரணப் பணிகளுக்கான தேவைகளையும் சேவைகளையும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். அதோடு இந்த ரெட் அலர்ட் கொடுக்கப்பட்ட பகுதிகளுக்கு பயணங்கள் மேற்கொள்வதைத் தவிர்த்தல் வேண்டும்.

  எந்த பகுதியில் அதிக வெள்ளம் இருக்கும்?

  எந்த பகுதியில் அதிக வெள்ளம் இருக்கும்?

  தமிழகத்தைப் பொறுத்தவரையில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் மிக அதிக அளவில் மழைப்பொிவு ஏற்படும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதனால் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இருந்து உருவாகும் ஆறுகள் உள்ள பகுதிகளில் அதிக வெள்ளப் பெருக்கு உண்டாக வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. அதனால் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் அதிக மழைப்பொழிவும் வெள்ளமும் வரும் என்பது நமக்கு புரிகிறது.

  அதிகமாக எவ்வளவு மழை இருக்கும்?

  அதிகமாக எவ்வளவு மழை இருக்கும்?

  இந்த ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட பகுதிகளில், தமிழ்நாட்டில் 25 சென்டி மீட்டருக்கும் அதிகமான மழைப்பொழிவு இருக்கும் என்று கூறப்படுகிறது. இதற்கு முன் தமிழ்நாடு இதைவிட அதிகமாக அளவில், மழைப்பொலிவை சந்தித்திருக்கிறது. ஆம். கடந்த 2015 ஆம் ஆண்டு தாம்பரம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கிட்டதட்ட 50 சென்டி மீட்டருக்கும் மேலான மழை வீழ்ச்சி இருந்ததும் குறிப்பிடத்தக்கது. ஆனாலும் இந்த முறை ஒரே நாளில் 25 சென்டி மீட்டர் மழை பொழியும் என்பதும் மிக ஆபத்தான் விஷயம் தான்.

  குற்றட்சாட்டு

  குற்றட்சாட்டு

  இதுபோன்ற ஆபத்தான சூழ்நிலைகளில், தமிழக அரசு மிக மிக முன்னெச்சரிக்கையோடு நடந்து கொள்ள வேண்டும் என்பது தான் வானிலை ஆய்வு மையம் மற்றும் மக்களின் மிக முக்கிய அறிவுறுத்தலாக இருக்கிறது. ஏனென்றால், கடந்த காலங்களில் நிகழ்ந்த ஓக்கி புயலின் போது எந்தவித முன்னெச்சரிக்கையோ அல்லது புயலுக்குப் பின்னான நிவாரணப் பணிகளிலும் அரசு சரியாக செயல்படாமல் போனது. அதனால் இப்போது வரையிலும் ஆயிரக்கணக்கில் மீனவர்கள் இறந்து மிதந்தனர். எவ்வளவு பேர் இறந்தார்கள் என்ற கணக்கு கூட அரசு சரியாக எடுக்கவில்லை. அதனால் மக்களும் அரசும் முன்னெச்சரிக்கையாகச் செயல்பட்டு இதனால் வரும் பாதிப்புகளைக் குறைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

  அதற்கு ஏற்றாற்போல், தமிழக அரசு ஒவ்வொரு மாவட்ட நிர்வாகங்களையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வதற்கான அறிவிப்புகளைக் கொடுத்து, நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்கான ஆயத்தப் பணிகளை மேற்கொள்ள துரித நடவடிக்கை எடுத்து வருகிறது.

  MOST READ: உங்கள் கையில் இந்த விதி ரேகை எப்படி இருக்கிறது? உடைந்திருந்தால் என்ன அர்த்தம்?

  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

  எட்டாம் தேதி வரையிலும் மீனவர்கள் கடலுக்குள் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.

  அரசு நிவாரண முகாம்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

  பொது மக்கள் மழை நிற்கும் வரை வீட்டை விட்டு வெளியே வராமல் இருப்பது நல்லது. குறிப்பாக, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் காற்றும் மழையும் மிக அதிகமாக இருக்கும். அதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.

  இடி இடிக்கும் போது மரத்தின் அடியில் நிற்க வேண்டாம். வீட்டை விட்டு வெளியே வராமல் இருப்பது மிக நல்லது.

  மின்சாரம் சம்பந்தப்பட்ட பொருள்களைப் பயன்படுத்துகிற போது வழக்கத்தை விட கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். ஏன் அதிகமாக மின்சாரம் தொடர்பான விஷயங்கள், சாதனங்களைப் பயன்படுத்தாமல் இருப்பதே சரி.

  தேங்கிக் கிடக்கும் தண்ணீரில் குழந்தைகளை விளையாட விடாதீர்கள். கவனமாக பார்த்துக் கொள்ளவும்.

  போக்குவரத்து சம்பந்தப்பட்ட விஷயங்களை அரசின் அறிவிப்பு மற்றும் குறிப்புகளை கவனித்துப் பின்பற்றுங்கள்.

  பழுதான மின் சாதனங்களைப் பயன்படுத்துவதை நிச்சயம் மதவிர்க்க வேண்டும்.

  தமிழகத்துக்கு வருகிற 7 ஆம் தேதி அதிதீவிரமாக மழைக்கான எச்சரிக்கை விடப்பட்டிருக்கிறது. அது வரை வழக்கமான வேலைகளில் பின்னடைவு உண்டாகலாம். ஆனால் உயிர், பொருள் சேதங்கள் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்றால் நாம் மிகுந்த எச்சரிக்கையோடு இருக்க வேண்டும்.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  English summary

  what is the meaning of red alert and precautions for cyclone

  here we are giving detailed meanings and histroy of cylon and precautions also.
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more