இப்படியும் ஒரு கிராமமா?... இங்க பெண் குழந்தை பிறந்தா என்ன பண்ணுவாங்கன்னு தெரியுமா?...

Written By: manimegalai
Subscribe to Boldsky
plants 111 mango trees for every girl born

தினமும் நாம் செய்தித்தாளை திறந்தாலே பெண்களுக்கான பிரச்னைகள். வரதட்சனை, ஒடுக்குமுறைகள், வரதட்சணை கொடுமை, கௌரவக் கொலைகள், பாலியல் வன்கொடுமைகள் இப்படி நிறைய குவிந்திருப்பதைப் பார்க்கிறோம். ஆனால் ஒரு ஊரில் மட்டும் பெண் குழந்தை பிறந்தால்அதை மாபெரும் கொண்டாட்டமாக நினைக்கிறார்கள். மகிழ்ச்சியடைகிறார்கள் என்றால் அந்த கிராமம் தான் உண்மையாக குடியரசு பூமியாக இருக்க முடியும் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இருக்க முடியாது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பெண்குழந்தை பிறப்பு

பெண்குழந்தை பிறப்பு

பெண் குழந்தை பிறந்தாலே கள்ளிப்பால் ஊற்றிக் கொன்றது ஒரு காலம். அதன்பின் பெண் பிள்ளையின் அருமைகளை உணர்ந்த பெற்றோர்கள் தங்கள் வீட்டில் முதன் குழந்தை பெண்ணாக பிறந்தாலே தன் வீட்டுக்குள் லட்சுமி வந்துவிட்டதாக நினைத்தார்கள்.

முன்னேற்றம்

முன்னேற்றம்

அதன் அடுத்த கட்டமாக பெண்களை ஆண்களுக்கு நிகராக கல்வி கற்க அனுப்பினோம். இப்போது கிட்டதட்ட ஆட்டோ ஓட்டுவதில் இருந்து விண்வெளிக்குச் செல்வது வரையிலும்அவர்கள் தொடாத துறைகளே இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

சமூக மதிப்பு

சமூக மதிப்பு

பெண்கள் எல்லா துறைகளிலும் எந்த அளவுக்கு முன்னேறி வருகிறார்களோ அதே அளவுக்கு அவர்களுடைய பொருளாதாரம் மற்றும் சமூக மதிப்புகளும் அதிகரித்துக் கொண்டு இருக்கின்றன. சின்ன கிராமத்தில் எந்த அடிப்படை வசதியும் இல்லாத பெண்கள் கூட, துணிந்து நகரங்களுக்கு படிக்க வருகிறார்கள்.

பெண்கள் மீதான வன்முறைகள்

பெண்கள் மீதான வன்முறைகள்

எவ்வளவு தான் பெண்கள் எல்லா துறைகளிலும் முன்னேறினாலும் அவர்களுக்கு எதிரான மன ரீதியான, உடல் ரீதியான வன்முறைகள் குறைந்தபாடில்லை என்று தான் சொல்ல வேண்டும். எவ்வளவு முன்னேற்றம் அடைந்தாலும் வீட்டை விட்டு வெளியே செல்லும் பெண்கள் திரும்ப வீட்டுக்கு வரும்வரை வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு தான் இருக்க வேண்டியிருக்கிறது.

பெண் பிறப்பை கொண்டாடும் ஊர்

பெண் பிறப்பை கொண்டாடும் ஊர்

பெண் பிள்ளைகளைப் பெற்று வளர்ப்பதில் இவ்வளவு சிரமங்கள் இருந்தாலும் பெண் குழந்தை பிறந்துவிட்டால் அதை பெரும் விழா போல கொண்டாடும் ஊரும் மக்களும் இருக்கிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். ராஜஸ்தான் மாநிலம் ராஜ்சமந்த் மாவட்டத்தில் உள்ள பிப்லந்திரி என்னும் கிராமம் தான் அது.

111 மாமரங்கள் நடும் விழா

111 மாமரங்கள் நடும் விழா

அப்படி என்ன விழா கொண்டாடுகிறார்கள் என்று தானே கேட்கிறீர்கள். அந்த கிராமத்தில் ஒவ்வொரு பெண் பிள்ளை பிறக்கும்போதும் ஊர்மக்களும் பஞ்சாயத்தும் ஒன்றுகூடி 111 மாமரங்களை நடுகின்றனர். அந்த மரங்கள் அந்த பெண் பிள்ளைகளின் பெயரில் எழுதி வைக்கப்படுகிறது. அந்த குழந்தை வளர வளர மரங்களும் பஞ்சாயத்து மற்றும் அந்த குழந்தையின் பெற்றோர்களால் வளர்க்கப்படுகின்றன. மரம் நடுவதற்கே தனி மனசு வேணும். அதிலும் பழங்கள் தரும் பண மரம் நடுவதென்றால் சும்மாவா?...

31,000 டெபாசிட்

31,000 டெபாசிட்

மரங்கள் நட்டால் மட்டும் பரவாயில்லையே... பெண் பிள்ளை பிறந்தவுடன்

அந்த கிராமத்தில் உள்ள ஓரளவுக்கு வசதி படைத்தவர்கள், பள்ளி ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியார்கள் ஆகியவர்களிடம் இருந்து 21,000 ரூபாய் பணம் சேகரித்து, அதோடு பெண் குழந்தை பெற்றோர்களிடம் இருந்து 10,000 வாங்கி, மொத்தம் 31,000 ரூபாயையும் அந்த குழந்தையின் பெயரில் டெபாசிட் செய்யப்படுகிறது.

60 பெண் குழந்தைகள்

60 பெண் குழந்தைகள்

அந்த ஊரில் சராசரியாக ஒரு ஆண்டுக்கு 60 பெண் குழந்தைகள் பிறப்பதாக அந்த ஊர் பஞ்சாயத்து தெரிவித்திருக்கிறது. ஒரு காலத்தில் அந்த ஊரில் வரதட்சணை கேட்கும் பழக்கம் அதிகமாக இருந்ததால், வரதட்சணையால் பெண் பிள்ளைகளோ அவர்களைப் பெற்றவர்களுா இறந்துவிடக் கூடாது என்பதற்காக அந்த ஊர் கூடி பஞ்சாயத்தில் எடுத்த முடிவு தானாம் இது. இதை தொடர்ந்து காலங்காலமாகி, அந்த ஊர் பஞ்சாயத்தும் மக்களும் செயல்படுத்தி வருகிறார்கள். ஊர் முழுக்க மரங்களால் சூழப்பட்ட பின்னும் அந்த ஊர் மக்கள் அந்தப் பழக்கத்தை நிறுத்தவில்லை.

2.5 மில்லியன் கற்றாழை செடிகள்

2.5 மில்லியன் கற்றாழை செடிகள்

மரங்கள் உயர வளரும். மீதமுள்ள தரைப்பகுதியையும் விட்டு வைக்காமல் அந்த இடங்களில் சமீப காலமாக பல ஆயிரக்கணக்கான கற்றாழை செடிகளை நட்டு வருகின்றனராம். கிட்டதட்ட 8000 பேர் வாழும் அந்த ஊரில் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் கிட்டதட்ட 2.5 மில்லியன் கற்றாழை செடிகளை நட்டு வைத்திருக்கிறார்கள்.

தொழிற்பயிற்சி

தொழிற்பயிற்சி

வெறுமனே கற்றாழை நட்டு நீர் ஊற்றி வளர்த்தால் மட்டும் ஏதாவது பயன் இருக்கிறதா?... அதனால் அந்த ஊரில் உள்ள பெண்களுக்கு தொழிற்பயிற்சி கொடுக்கப்பட்டு, கற்றாழையிலிருந்து ஜூஸ், ஜெல், ஷாம்பு, ஊறுகாய் ஆகியவை தயாரித்து வெளி மாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கிறார்கள்.

மதுவுக்கு தடை

மதுவுக்கு தடை

இது மட்டுமில்லைங்க. அந்த ஊர்ல பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டிருக்கிறது. விலங்குகளை வெற்புறுத்தக்கூடாது. மரங்களை வெட்டக்கூடாது என ஏகப்பட்ட கட்டுப்பாடுகளுடன் அந்த மக்கள் வாழ்கின்றனர். கடந்த 7-8 வருடங்களாக, ஒரு போலிஸாரால் அந்த ஊரில் வழக்குப்பதிவு கூட இல்லையென்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இப்படியும் ஒரு ஊரா என்று மூக்கு மேல் விரல் வைத்து பார்க்கும் அளவுக்கு சிறப்பாக செயல்படுகிறது பிப்லந்திரி கிராமம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Read more about: insync
English summary

villagers that plants 111 mango trees for every girl born

Piplantri village panchayat has been saving girl children and increasing the green cover in and around it at the same time/ Here, villagers plant 111 trees every time a girl is born and the community ensures these trees survive, attaining fruition as the girls grow up.
Story first published: Saturday, March 10, 2018, 9:30 [IST]