ஏர் ஹோஸ்டஸ்களை விட்டு வைக்காத மல்லையா - #UnKnownStory

Posted By: Staff
Subscribe to Boldsky

அரச வாழ்க்கை வாழ்ந்த (வாழ்ந்துவரும்) நபர் விஜய் மல்லையா. ஆங்கிலத்தில் வர்க் ஹார்ட், பார்டி ஹார்டர் என்று ஒரு பழமொழி கூறுவார்கள். கடினமாக உழை, அதைவிட கடினமாக பார்டி செய்து கொண்டாடு என்பது இதன் பொருள். இந்த பழமொழி யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ, விஜய் மல்லையாவின் வாழ்க்கைக்கு நன்கு பொருந்தும்.

கிங் ஃபிஷ்ஷர் மூலம் ஏகபோகமாக வாழ்ந்து வந்தார் விஜய் மல்லையா. பின்னாளில் தனது விமான நிறுவனத்தை காப்பாற்ற முடியாமல், கடன் மேல் கடன் வாங்கி பெயில் வாங்க முடியாத பிடிவாரன்ட் பிறப்பிக்கப்படும் நிலைக்கு ஆளானார்.

ஐடிபிஐ வங்கியில் வாங்கிய 720 கோடி உட்பட விஜய் மல்லையாவின் ஏர்லைன்ஸ் பல்வேறு வங்கிகளில் 9,000 கோடி கடன் வாங்கி இருந்தது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தப்பியோட்டம்!

தப்பியோட்டம்!

கடந்த மார்ச் 2, 2016 அன்று கடன் கட்ட முடியாமல் இந்தியாவில் இருந்து தப்பித்து ஓடினார் மல்லையா. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் லண்டனில் கைதாகி பிறகு பெயில் வாங்கி விடுதலை ஆனார். மல்லையா இங்கிருந்து தப்பித்து போனபோது அவருடன் ஏழு லக்கேஜ் மற்றும் உடன் ஒரு பெண்மணி பயணித்தார். அவர் கிங் ஃபிஷ்ஷர் ஏர்லைன்ஸில் பணிபுரிந்து வந்த பிங்கி லல்வாணி.

மூன்றாவது திருமணம்?

மூன்றாவது திருமணம்?

விஜய் மல்லையா பகட்டான ஆடம்பரமான வாழ்க்கைக்கு பெயர் போனவர். அத்துடன் காதல் மன்னனும் கூட. விஜய் மல்லையா நிஜ வாழ்வில் ஒரு ரோமியோ. இவர் இரண்டு முறை திருமணமானவர். இப்போது தனது சமீப கால காதலி பிங்கியை மூன்றாவதாக திருமணம் செய்துக் கொள்ளவிருக்கிறார்.

சமீரா!

சமீரா!

1986ல் விஜய் மல்லையா ஏர் இந்தியா விமானத்தில் அமெரிக்க பயணித்துக் கொண்டிருக்கும் போது, அதே விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக பணிபுரிந்த சமீரா தியாப்ஜி எனும் பெண் மீது காதல் கொள்கிறார்.

அவரையே திருமணமும் செய்துக் கொள்கிறார். அவருக்கு பிறந்த மகன் தான் சித்தார்த். ஆனால், சில வருடங்களிலேயே சமீராவை விவாகரத்து செய்துவிட்டார் விஜய் மல்லையா.

ரேகா!

ரேகா!

பிறகு 1993ல் விஜய் மல்லையா தான் சிறு வயதில் நேசித்த ரேகா எனும் பெண், தனது கணவரை பிரிந்திவிட்டார் என்பதை அறிந்த உடனேயே அவரிடம் பிரபோஸ் செய்கிறார். இருவரும் காதல் கொள்கிறார்கள். மிக சீக்கிரமாக இருவரும் திருமணம் செய்துக் கொள்கிறார்கள்.

ரேகாவின் முதல் கணவர் கூர்கில் காபி பிளான்ட் தொழில் செய்து வந்த பிரதாப் செட்டியப்பா என்பவர். பிறகு, ரேகா ஷாஹித் மஹ்மூத் என்பவரை திருமணம் செய்து லைலா, கபீர் என்ற இரண்டு குழந்தைகள் பெற்றவர் ஆவார்.

தத்துப்பிள்ளை!

தத்துப்பிள்ளை!

மூன்றாவதாக தான் ரேகா விஜய் மல்லையாவை திருமணம் செய்துக் கொண்டார். ரேகாவுடன் அவரது மகள் லைலாவையும் தத்தெடுத்துக் கொண்டார் விஜய் மல்லையா.

மல்லையா - ரேகா ஜோடிக்கு லியான்னா மற்றும் தன்யா என்ற இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள்.

இரு துருவங்கள்!

இரு துருவங்கள்!

மல்லையா எப்போதும் ஆரவாரமாக வாழ வேண்டும் என்ற விருப்பம் கொண்டிருப்பவர். ஆனால், ரேகா தனியாக, பர்சனலாக வாழ வேண்டும் என்று கருதுபவர். அதனால் மீடியா வெளிச்சத்தில் படாமல் இருக்கிறார். ரேகாவிற்கும் மல்லையாவிற்கும் இன்னும் விவாகரத்து ஆகவில்லை.

இந்த தருணத்தில் தான் இவர் மூன்றாவதாக பிங்கி லல்வாணி எனும் பெண்ணை திருமணம் செய்துக் கொள்ள போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Image Source: Twitter

பாசமான அப்பா!

பாசமான அப்பா!

ரேகாவிற்கு அவரது மூன்று திருமணங்கள் மூலமாக ஐந்து குழந்தைகள். இவர்கள் அனைவரையும் விஜய் மல்லையா தான் பார்த்துக் கொள்கிறார். தனது அனைத்து குழந்தைகள் மீதும் சம அளவு அன்பும், அவர் எதிர் காலத்தின் மீதான அக்கறையும் கொண்டிருக்கிறார் விஜய் மல்லையா.

மரணம்!

மரணம்!

ரேகா - மல்லையா உறவில் பிறந்த குழந்தைகள் அமெரிக்காவில் வாழ்ந்து வருகிறார்கள். ஆனால், எதிர்பாராத விதமாக ஸ்டெல்லா எனும் மகள் கடந்த 2003ம் ஆண்டு நடந்த ஒரு கார் விபத்தில் மரணம் அடைந்தார். இவரது மரணம் விஜய் மல்லையாவை வெகுவாக பாதித்தது என்று இவரது நெருங்கிய வட்டத்தினர் கூறுகிறார்கள்.

சித்தார்த்!

சித்தார்த்!

தனது மகன் சித்தார்த் மீது அதிக அக்கறை கொண்டிருப்பவர் மல்லையா. மல்லையா பெரும் நஷ்டம் அடைந்ததற்கு சித்தார்த் மல்லையாவும் ஒரு வகையில் காரணம். சமீராவை விவாகரத்து செய்து பிறகும் கூட நட்புடன் பழகி வருகிறார் மல்லையா.

தனது மகன் சித்தார்த் வாழ்வில் எந்த முடிவு எடுப்பதாக இருந்தாலும், சமீராவுடன் சேர்ந்து கலந்தாலோசித்து தான் எடுக்கிறார் மல்லையா.

பிங்கி லல்வாணி!

பிங்கி லல்வாணி!

கடந்த 2011ம் ஆண்டு பிங்கி லல்வாணியை தனது கிங் பிஷ்ஷர் ஏர்லைன்ஸ்லக்கு ஏர் ஹோஸ்டஸாக பணிக்கு அமர்த்தினார் விஜய் மல்லையா. அப்போது தான் பிங்கியை முதன் முறையாக பார்த்தார் மல்லையா. பிங்கி மல்லையாவின் அனைத்து கடின காலங்களிலும் உடன் இருந்தவர்.

Image Source: Twitter/@wheadlines9

குடும்ப விழாக்கள்!

குடும்ப விழாக்கள்!

இருவருக்கும் இடையே பெரும் வயது வித்தியாசம் இருப்பினும், அவர் மீது வழக்குகள் தொடரப்பட்ட போது, லண்டன் தப்பித்து செல்லும் போது உடன் இருந்தவர் லல்வாணி தான்.

மேலும், விஜய் மல்லையாவின் பல குடும்ப விழாக்களில் லல்வாணி பங்கெடுத்து கொண்டிருந்தார், அவரை பலர் கண்டிருக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது.

Image Source:merinews

கொண்டாட்டம்!

கொண்டாட்டம்!

பிங்கி லல்வாணியும் - விஜய் மல்லையாவும் கடந்த மூன்றாண்டு காலமாக காதலித்து வருவதாக அறியப்படுகிறது. சில வாரங்களுக்கு முன்னர் தான் தங்களது மூன்று வருட உறவை கொண்டாடி மகிழ்ந்ததாக தகவல்கள் கிடைத்துள்ளன.

நேற்று விஜய் மல்லையா, பிங்கி லல்வாணியை மூன்றாவதாக திருமணம் செய்துக் கொள்ளப் போகிறார் என்று வெளியான செய்தி சமூக தளங்களில் வைரலாக பேசப்பட்டு வருகிறது. பலதரப்பட்ட மக்களும், கடன் வாங்கி தப்பி ஓடிய இவரை திட்டித்தீர்த்து வருகிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Vijay Mallya And His Three Love Stories

Vijay Mallya is Getting Ready To Knot For The Third Time. This Time He is Going To Marry His 7 Years Long Love Partner Pinky Lalwani. Here, We gonna See All of His Love Stories.