For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மறக்க முடியாத இந்திய காவல் துறையின் 7 சூப்பர் ஹீரோ மொமென்ட்ஸ்!

|

காலவர்கள் என்றாலே லஞ்சம் வாங்குவார்கள், அதிகார வர்க்கம், அரசியல் வாதிகளுக்கு அடியாளாக பணிபுரிபவர்கள் என்ற கண்ணோட்டம் தான் பெரும்பாலான இந்திய மக்கள்ளிடம் காணப்படுகிறது.

நம்மிடம் இருக்கும் கெட்டப் பழக்கமே, தீயதை பற்றி மட்டும் தான் அதிகம் பேசுவோம், பகிர்வோம். நல்லவை பற்றி மறந்துவிடுவோம். அதனால் தான் நூறில் ஐந்து பேர் செய்யும் தவறு பெரிதுப்படுத்தி காண்பிக்கப்படுகிறது. பிற 95 பேர் செய்யும் நல்லவை காணாமல் போய்விடுகிறது.

இதோ! தாங்கள் தான் ரியல் ஹீரோ என்பதை நிரூபிக்கும் வண்ணம் இந்திய காவலர்கள் செய்த அசத்தல் செயல்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
டெல்லி!

டெல்லி!

சட்டம் பொதுமக்களுக்கு மட்டும் தான், அதிகார வர்க்கம் மற்றும் நட்சத்திர அந்தஸ்து பெற்றவர்களை சட்டம் எதையும் செய்வதில்லை என்ற புகார் நீண்ட காலமாக இருந்து வருகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அமைந்தது டெல்லி காவலர்களின் செயல். செப்டம்பர் 2017ல் நடிகர் முகேஷ் ரிஷி படப்பிடிப்பு தளத்தில் கலந்துக் கொள்ள செங்கோட்டை மைதான சாலையில் தலை கவசம் அணியாமல் வாகனம் ஓட்டி வந்தார்.

நடிகர் முகேஷ் ரிஷி ஓட்டி வந்த வாகனம் உலகின் பிரபலமான ஹார்லி டேவிட்சன் வாகனம். இந்தியா கேட் அருகே, நடிகர் முகேஷ் ரிஷியை மடக்கி பிடித்த டெல்லி போக்குவரத்து காவலர்கள், அவருக்கு ரூ.100 சல்லான் கொடுத்து அனுப்பினர். பிறகு, முகேஷ் ரிஷி, டெல்லி போக்குவரட்த்து காவலர் தலைமை அலுவலகம் சென்று அபராதம் கட்டினார் என்று செய்திகளில் தகவல் வெளியாகின.

கம்லா மில்ஸ் தீவிபத்து!

கம்லா மில்ஸ் தீவிபத்து!

சென்ற 2017ம் ஆண்டு டிசம்பர் மாதம் மும்பையின் கம்லா மில்ஸில் தீவிபத்து ஏற்பட்டது. காவலர்கள் தான் முதல் ஆளாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பல அதிகாரிகளுக்கு மத்தியில் சுதர்ஷன் ஷிண்டே, தீயணைப்பு வீரர்கள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் வருவதற்கு முன்பாகவே தீவிபத்து நடந்த இடத்திற்குள் நுழைந்து மூவரை காப்பாற்றி வெளியே கொண்டுவந்தார். இதில், ஒரு இளம்பெண்ணை தனது தொழில் சுதர்ஷன் ஷிண்டே காப்பாற்றி தூக்கி வந்த புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரலாக பரவியது.

Image Source: DNA

குழந்தை கடத்தல்!

நான்கு வயது குழந்தை கடத்தப்பட்ட நிகழ்வில், 15 மணிநேரத்தில் நம்பல்லி காவலர்கள் இரண்டு குழந்தை கடத்தல் காரர்களை கைதி செய்தனர். மேலும், கடத்தப்பட்ட குழந்தையை பெற்றோரிடமும் ஒப்படைந்தனர். ஐதராபாத் ஐபிஎஸ் அதிகாரி சுவாதி லக்ரா, இன்ஸ்பெக்டர் சஞ்சய் குமாரின் புகைப்படத்துடன் ட்வீட் செய்திருந்தார். அந்த ட்வீட் ட்ரெண்ட ஆகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

கும்பிடு!

இரு சக்கர வாகனத்தில் இத்தனை பேர் தான் பயணிக்க வேண்டும், இப்படி தான் பயணிக்க வேண்டும் என்று விபத்தையும், உயிர் சேதாரத்தையும் தவிர்க்க அரசும், காவலர்களும் என்ன தான் சட்டம் போட்டாலும், கூச்சல் போட்டாலும். நாங்க இப்படி தான் என்று சட்டத்தை மீறி செயற்படும் மக்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.

மதகசிரா சர்கிள் இன்ஸ்பெக்டர் பி. சுப குமார் இந்தியன் எக்ஸ்ப்ரெஸ் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், நான் முதலில் ஐந்து பேர் ஒரு வாகனத்தில் வருவதை கண்டு அதிர்ந்தேன். அது மிகவும் அபாயகரமானது. அவர்களிடம் என்ன பேசுவது என்று அறியாமல் போன நான். என் இரு கைகளை கூப்பி, இனிமேல் இப்படி செய்யாதீர்கள் என்று கும்பிட்டு கேட்டுக் கொண்டேன். மேலும், அவர்களிடம் பாதுகாப்பு குறித்து அறிவுரை வழங்கு அனுப்பினேன். அதிலும், இரு குழந்தைகளை முன்னே உட்கார வைத்து அழைத்து செல்வதெல்லாம் பாதுகாப்பான காரியமே இல்லை. அவர்கள் பெட்ரோல் டேன்க் மீது அமர்ந்து வருகிறார்கள், அந்த சமயத்தில் வாகனம் ஓட்டும் நபரால் எதிரே வரும் வாகனத்தையோ, சரியாக ப்ரேக் அல்லது கியரோ போடுவதோ கூட மிகவும் கடினம். இப்படியான சூழலில் தான் நிறைய விபத்துக்கள் நடக்கின்றன." என்று சுப குமார் கூறி இருந்தார்.

அந்த குடும்பத்திடம் சுபகுமார் கும்பிட்டு கேட்டுக்கொண்ட புகைப்படம் சமூக தளங்களில் வைரலாக பரவியது.

கர்வா சௌத்!!

வட இந்தியாவில் கர்வா சௌத் பிரபலமாக கொண்டாடப்படும் பண்டிகை. இது கணவன் - மனைவி சார்ந்த விழா ஆகும். சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் உத்திர பிரதேச காவலர்கள், கர்வா சௌத் தினத்தன்று, ஹெல்மட் அணியாமல் வாகனம் ஓட்டி வந்த நபர்களை பிடித்து, அவர்கள் மனைவியர் கைகளால் ஹெல்மட் அளிக்க செய்து வினோதமாக விழாவை கொண்டாட செய்தது மட்டுமின்றி, சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வும் ஏற்படுத்தினார்கள்.

ஓடும் ரயிலில்...

ஓடும் ரயிலில்...

டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி குறிப்பின் படி, திவா (Diva) ரயில் நிலையத்தில் இருந்து தொடர் வண்டி நகர துவங்கும் போது, முப்பது வயது மிக்க பெண்மணி ஒருவர் லேடீஸ் கோச்சில் ஏறுவதற்காக ஓடி வந்து கொண்டிருந்தார்... அப்போது திடீரென எதிர்பாராத விதமாக அந்த பெண் தடுமாறி, பிளாட் பார்மில் விழ நேர்ந்தது, அவர் கொஞ்சம் விட்டிருந்தார், ரயில் சக்கரங்களில் சிக்கி உயிர் இழந்திருப்பார்.. ஆனால், அந்த பெண் ஓடும் வரும் போதே தொலைவில் இருந்து கண்ட ஜவான் யோகேஷ், அந்த பெண்மணியை சரியான நேரத்தில் துணிகரமாக சென்று காப்பாற்றினார்.

வெடிகுண்டு!

வெடிகுண்டு!

என்.டி.டிவி தகவலின் படி, ஜம்மு - காஷ்மீரின் சோபோர் (Sopore) மாவட்டத்தில் தீவிரவாதிகள் வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தினார்கள். ஆனால், அந்த குண்டு வெடிக்கும் முன்னர், அதை ஆல் நடமாட்டம் இல்லாத இடத்தில் எரிந்து பல மக்களின் உயிரை காத்தார் CRPF அதிகாரி ஒருவர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Various Occasions When Indian Police Proved They are The Real Super Heroes!

In Various Occasions, Indian Police Officers have proved, they are The Real Super Heroes by their ground work.
Story first published: Thursday, August 16, 2018, 17:10 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more