For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  புத்தர் எப்படி இறந்தார் தெரியுமா? அதன் பின் உள்ள ரகசியம் என்ன தெரியுமா?

  |

  உலகின் மிகவும் புகழ் வாய்ந்த மனிதர்களில் புத்தரும் ஒருவர் என்றால் அது மிகையல்ல. உலகம் முழுவதும் புத்தரை பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்க வாய்ப்பில்லை. இந்தியாவையும் தாண்டி புத்தரின் புகழ் மேற்கு நாடுகளிலும் பரவி உள்ளது. புத்தரை கடவுளாக வழிபடுபவர்கள் உலகம் முழுவதும் கோடிக்கணக்கில் இருக்கின்றனர்.

  Lord Buddha

  புத்தரின் பிறப்பு, போதி மரத்திற்கு அடியில் அவருக்கு ஞானம் கிடைத்தது, அதன் பின் அவர் மேற்கொண்ட பயணம் பற்றி தெரிந்த நமக்கு அவரின் மரணம் எப்படி நடந்தது என்பது தெரியாத ஒன்று. இந்த பதிவில் புத்தர் கடைசியாய் கூறிய அறிவுரையையும், அவரின் மரணம் எப்படி நிகழ்ந்தது என்பதையும் பார்ப்போம்.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  புத்தரின் கடைசி போதனை

  புத்தரின் கடைசி போதனை

  போதி மரத்திற்கு கீழ் ஞானம் பெற்றவுடன் புத்தர் உலகம் முழுவதும் தர்மத்தையும் அதன் முக்கியத்துவத்தை பற்றியும் தன் போதனைகள் மூலம் பரப்ப தொடங்கினார். புத்தர் தன் சீடர்களுக்கு கூடிய கடைசி அறிவுரை என்னவென்றால் தான் இறந்த பிறகு எந்த தலைவனையும் பின்பற்றாதீர்கள் என்பதுதான்.

  புத்தரின் மரணம்

  புத்தரின் மரணம்

  புத்தர் நேபாள எல்லையில் உள்ள குஷிநகர் என்னும் நகரத்திற்கு அருகில்தான் இருந்தார். உலகையே தன் போதனைகளால் கட்டிப்போட்ட புத்தர் கெட்டு போன உணவை சாப்பிட்டதால் அந்த உணவு விஷமாகி இறந்தார். சில குறிப்புகள் அவர் சாப்பிட்டது பன்றி இறைச்சி என்கின்றது, சில குறிப்புகள் அது விஷ காளான்கள் என்கிறது. புத்தரின் மரண செய்தி அறிந்தவுடன் பல இடங்களில் இருந்த அவரின் சீடர்கள் அவரின் கடைசி போதனையை கேட்க அந்த இடத்திற்கு விரைந்தனர்.

  ஆதாரம்

  ஆதாரம்

  பாலி திப்பித்திகாவின் மகாபரிபீனா சுத்தா இதற்கு மிகச்சிறந்த ஆதாரமாக விளங்குகிறது. புத்தர் கௌதம சித்ததார்த்தராக இருந்ததில் இருந்து புத்தராக இறந்த வரை அனைத்தும் இந்த நூலில் உள்ளது. இது படிப்பவர்களுக்கு எளிதில் புரியும் வண்ணம் தெளிவாகவும், புத்தர் இறப்பதர்க்கு சில மாதங்கள் முன்னனர் என்ன நடந்தது என்பதை விரிவாக கூறுகிறது.

  எவ்வாறு மரணம் நிகழ்ந்தது?

  எவ்வாறு மரணம் நிகழ்ந்தது?

  விஷாகா மாதத்தின் பௌர்ணமி நாளில்தான் அந்த சம்பவம் நடக்க தொடங்கியது. கண்டா என்பவர் புத்தருக்கு உணவளிக்க விரும்பினார். புத்தர் அதனை அடுத்தநாள் மதிய உணவிற்கு வைத்து கொள்ளலாம் என்று கூறினார். அடுத்த நாள் உணவு பரிமாற பட்டபோது அது பன்றி இறைச்சி என்பதை அறிந்த புத்தர் கண்டாவிடம் தனக்கு மட்டும் உணவை பரிமாறும் மீதமுள்ள உணவை புதைவிடும் படியும் கூறினார்.

  MOST READ: எந்த ரெண்டு ராசிக்காரர்கள் திருமணம் செய்துகொண்டால் வாழ்க்கை பிரச்னை இல்லாம இருக்கும்?

  நோயில் விழுதல்

  நோயில் விழுதல்

  அங்கு உணவை முடித்துக்கொண்ட பின் புத்தர் கடுமையாக உடல் நலம் பாதிக்கப்பட்டார். அப்போது புத்தர் தன் சீடர் ஆனந்தன் என்பவரை அழைத்து கண்டாவின் வழங்கிய உணவில் எந்த குறையும் இல்லை, அதுதான் நான் சாப்பிட கடைசி சுவையான உணவு என்று அறிவுறுத்தும்படி கூறினார். பிற்காலத்தில் அறிஞர்கள் கூறும்போது புத்தர் இறக்க அந்த உணவை விட வயது முதிர்ச்சிஏ காரணம் என்று வாதிடுகின்றனர்.

  புத்தர் முன்கூட்டியே அறிவார்

  புத்தர் முன்கூட்டியே அறிவார்

  மகாபரிபீனா சுத்தாவின் படி புத்தர் தன் 80 வது வயதில் தான் பரிபூரண நிலையை அடையப்போவதாகவும் மரணமில்லாத நிலையை அடைய இந்த உடலை பிரிய போவதாகவும் தன் சீடர்களிடம் கூறினார். அதற்கு பின்தான் கண்டா வழங்கிய உணவை சாப்பிட்டார்.

  மரண படுக்கை

  மரண படுக்கை

  புத்தர் மரண படுக்கையில் இருக்கும்போது தன் சீடர்கள் அனைவரையும் அழைத்து உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் கேளுங்கள் என்று கூறினார். ஆனால் அவர்கள் மனதில் எந்த கேள்வியும் எழவில்லை. புத்த மதத்தின் குறிப்புகளின் படி புத்தர் அதன் பின் பரிபூரண நிலையை அடைந்தார். புத்தரின் கடைசி வார்த்தைகள் " அனைத்து கலவையான விஷயங்களும் அழிய கூடியது. உன் சொந்த விடுதலைக்காக விடாமுயற்சியுடன் போராடு " என்பதுதான்.

  இறுதி சடங்கு

  இறுதி சடங்கு

  புத்தரின் மரணத்திற்கு பிறகு அவரின் உடலை எவ்வாறு கௌரவிக்க வேண்டும் என்று ஆனந்தா வினாவியபோது " என் பூத உடலை கௌரவிக்க கவலைப்படாதே ஆனந்தா அதற்கு பதிலாக நீ உன்னை உற்ச்சாகப்படுத்திக்கொள்ள வேண்டும். உன்னுடைய சொந்த நன்மைக்காக துல்லியமாகவும், உறுதியாகவும் நடந்து கொள்ள வேண்டும் " என்று கூறினார்.

  MOST READ: விந்தணுக்களை பெண்ணின் உடலுக்குள் செலுத்தாது, கலவி கொள்வது எப்படி?

  புத்த ஸ்தூபிகள்

  புத்த ஸ்தூபிகள்

  புத்தரின் உடல் தகனம் செய்யப்பட்டு அவர் நினைவாக பல ஸ்தூபிகள் நிறுவப்பட்டன. அதில் பல இன்னும் இருப்பதாக நம்பப்படுகிறது. உதாரணத்திற்கு இலங்கையில் உள்ள " தலாடா மலிகவா "என்னும் கோவில் இருக்கும் இடத்தில்தான் புத்தரின் உடல் தகனம் செய்யப்பட்டதாக நம்பப்படுகிறது.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  English summary

  Untold story about Lord Buddha's death

  All of us know about the journey of the Lord Buddha, but many of us are not aware about the circumstances in which he left the mortal world.
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more