திருக்குறள் மற்றும் திருவள்ளுவர் பற்றி தெரியாத ரகசியங்கள்

Subscribe to Boldsky

இந்த உலகத்திற்கு தமிழர்களும், தமிழ்நாடும் இணைந்து எண்ணற்ற கண்டுபிடிப்புகளையும், நீதி நூல்களையும் வழங்கியுள்ளது. அதில் மிக முக்கியமானதாக கருதப்படும் ஒரு நூல் திருக்குறள்.

தமிழ்நாட்டில் திருக்குறளை பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்க வாய்பில்லை. பலரின் முயற்சியால் இப்போது உலகம் முழுவதும் திருக்குறளின் பெருமை தெரிய தொடங்கியுள்ளது.

Thirukkural

திருக்குறளை இயற்றியவர், திருவள்ளுவர் அவர் தற்போது மயிலாப்பூராக இருக்கும் இடத்தில் தன் மனைவியுடன் வசித்து வந்தார். அவர் மனைவி பெயர் வாசுகி. இது மட்டுமே நாம் அவரை

அறிந்து வைத்திருக்கும் செய்தி. ஆனால் அவர் வாழ்க்கையில் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் நிறைய உள்ளது. முக்கியமாக நாம் தெரிந்துகொள்ள வேண்டியது

திருக்குறள் 1330 மட்டுமில்லை என்பதுதான். அதனை பற்றி இங்கு விரிவாக பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
திருக்குறள்

திருக்குறள்

உலகப்பொதுமறையாக தமிழர்கள் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளாலும் கொண்டாடப்படும் நூலாக திருக்குறள் உள்ளது. ஏனெனில் இதில் கூறப்பட்டுள்ள

கருத்துக்களும், வாழ்வியல் தத்துவங்களும் எந்தவொரு மதத்திற்கோ, நாட்டு மக்களுக்கோ மட்டும் கூறப்பட்டது அல்ல. இப்பூமியில் மனிதராய் பிறந்த அனைவருக்கும் திருக்குறள்

பொதுவானது. ஆனால் சில முட்டாள்கள் திருக்குறளையும், திருவள்ளுவரையும் ஒரு வட்டத்திற்குள் அடைக்க முயலுகின்றனர். ஆனால் அது அசாத்தியம் என அனைவரும் அறிவோம்.

இதற்கு குறள் என பெயர் வந்தது என்பதற்கும் ஒரு தனிக்கதை உள்ளது.

உண்மையில் 1330 திருக்குறள் மட்டும்தான் உள்ளதா?

உண்மையில் 1330 திருக்குறள் மட்டும்தான் உள்ளதா?

தற்போது இருக்கும் சான்றுகளின் படி திருக்குறள் மொத்தம் 1330 உள்ளது. அறத்துப்பால், பொருட்பால் மற்றும் காமத்துப்பால் என மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்ட திருக்குறளில் மொத்தம்

133 அதிகாரங்கள் உள்ளது. அதிகாரத்திற்கு பத்து குரலாக மொத்தம் 1330 குறள்கள் உள்ளது. ஆனால் உண்மையில் திருக்குறளின் மொத்த எண்ணிக்கை இதைவிட அதிகம், கடைச்சங்க

காலத்தில் புலவர்களுக்குள் ஏற்பட்ட மோதலால் பல சுவடிகள் எரிக்கப்பட்டுவிட அவற்றில் இருந்து மிஞ்சியவையே தற்போது இருக்கும் திருக்குறளாக தொகுக்கப்பட்டதாக வரலாற்று

ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

திருக்குறள் பெயர்க்காரணம்

திருக்குறள் பெயர்க்காரணம்

திருவள்ளுவர் குறளிகள் இனத்தை சார்ந்தவர் என்றும் அதனால் அவர் இயற்றிய நூல் குறளி என அழைக்கப்பட்டதாகவும், பின்னாளில் அதுவே மருவி திருக்குறள் என்று மாறியதாகவும்

வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள். அதில் கூறப்பட்ட கருத்துக்கள் மாண்பை குறிப்பதால் மரியாதையின் அடைமொழியான ' திரு ' சேர்க்கப்பட்டு பின்னாளில் திருக்குறளாக மாறியது.

திருக்குறள் என்பது திருவள்ளுவர் தனக்கு நேர்ந்த அனுபவங்களையும், வாழ்க்கை குறித்த எண்ணங்களையும் சேகரித்து வைத்த குறிப்புகள்தான் திருக்குறளாக அவரால்

தொகுக்கப்பட்டது.

திருவள்ளுவர் காலம்

திருவள்ளுவர் காலம்

திருவள்ளுவர் கடைச்சங்க காலமான கிமு 300 க்கும், கிபி 250 க்கும் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்ததாக நம்பப்படுகிறது. அக்காலத்தில் மதுரையை ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்

என்னும் பாண்டிய மன்னன் ஆண்டுவந்தார். அப்பொழுதுதான் திருவள்ளுவர் கடைச்சங்கத்தில் திருக்குறளை அரங்கேற்றம் செய்ததாக கூறப்படுகிறது. இப்பொழுது இருப்பது போலவே

அக்காலத்திலும் திறமையாளர்களை கவிழ்க்க பல சூழ்ச்சிகள் இருந்தது. பலகட்ட முயற்சிகளுக்கு பின் ஒளவையார் தான் திருக்குறள் அரங்கேற்றத்திற்கு உதவியதாக கூறுகிறார்கள்.

சைவ, வைணவ வாதம்

சைவ, வைணவ வாதம்

அந்த காலத்தில் சைவர்களுக்கும், வைணவர்களுக்கு இடையே பல பிரச்சினைகள் நிலவி வந்தது. அதில் முக்கியமான ஒரு பிரச்சினைதான் யார் புலமை சிறந்தது என்பது. அவ்வாறு

அவர்களுக்குள் நிகழ்ந்த வாக்குவாதத்தால் தான் பல அறிய தமிழ் நூல்கள் தீக்கிரையாக்கப்பட்டது . அதில்தான் திருக்குறளின் மீதி பகுதிகளும் அழிக்கப்பட்டது.

சாதி மறுப்பு

சாதி மறுப்பு

திருவள்ளுவர் எந்த சமயத்தையும், மதத்தையும் சார்நதவரல்ல. அதனால்தான் அவரின் திருக்குறளில் குறிப்பிட்ட கடவுளை பற்றி எந்த குறிப்புகளும் இல்லை. மேலும் தன் திருக்குறளில்

சாதி, மத எதிர்ப்பு பற்றிய பல கருத்துக்களை கூறியுள்ளார். இதுவே அவரை பல புலவர்கள் வெறுக்க காரணமாயிற்று. இதனால்தான் அவரை பற்றிய அனைத்து தகவல்களும் திட்டமிட்டு

இருட்டடிப்பு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

திருவள்ளுவ மாலை

திருவள்ளுவ மாலை

திருவள்ளுவருக்கும் மற்ற புலவர்களுக்கும் இடையே சில மோதல்கள் இருந்தததை உறுதிப்படுத்தும் வகையில் திருவள்ளுவ மாலையில் ஒரு பாடல் உள்ளது.

" ஆற்றல் அழியுமென்று அந்தணர்கள் நான்மறையப்

போற்றி உரைத்து ஏட்டின் புறத்தில் எழுதார் - ஏட்டை எழுதி

வல்லுநரும் அல்லாரும் வள்ளுவனார் முப்பாலைச்

சொல்லிடினும் ஆற்றல் சோர்வன்று "

இதன் பொருளானது யாதெனில் சாதி, மத சூழ்ச்சிகளை மக்கள் அறிந்து கொள்ளாமல் இருக்க வேண்டுமென நான்கு வேதங்களும் கூற வள்ளுவரோ அனைவரும் சமமென முப்பாலுடைய

திருக்குறளை எழுதினார் என்பதாகும். இந்த காலத்திலேயே சாதி, மதத்திற்கு எதிராக பேசினாலே சிறையில் தள்ளும் போது அய்யன் வள்ளுவன் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் இதை பற்றி

பேசியுள்ளார். இப்போது அவரை பற்றிய தகவல்கள் ஏன் அழிக்கப்பட்டது என்பது உங்களுக்கு புரிந்திருக்கும்.

சமூக சிந்தனையாளர்

சமூக சிந்தனையாளர்

திருவள்ளுவர் எந்த மதத்தையும் சேராது சமூக சிந்தனையாளராக இருந்தார் என்பதற்கு சான்று அவர் எழுதிய திருக்குறளில் நிறையவே இருக்கிறது. சமூக சிந்தனையாளர்கள்

புறக்கணிக்கப்படுவது சங்க காலத்தில் இருந்தே வழக்கத்தில் உள்ளது என்பதற்கு திருவள்ளுவரின் வாழ்க்கை ஒரு சிறந்த உதாரணம்.

பிற நூல்கள்

பிற நூல்கள்

திருவள்ளுவர் திருக்குறள் தவிர வேறு சில நூல்களையும் எழுதியுள்ளார். அதில் சிலர் அறிந்த நூல்கள் " ஞானவெட்டியான் " மற்றும் " பஞ்சரத்தினம் " ஆகும். ஆனால் இவை இல்லாமல்

திருவள்ளுவர் மேலும் பல நூல்களை எழுதியுள்ளார் அவை ரத்தினசிந்தாமணி, கற்பம், நாதாந்த சாரம், வைத்திய சூஸ்திரம், கற்ப குருநூல், மூப்பு சூஸ்திரம், வாத சூஸ்திரம்

போன்றவையாகும். இவை மட்டுமின்றி இன்னும் சில நூல்கள் உள்ளது.

திருவள்ளுவர் புகழ்

திருவள்ளுவர் புகழ்

திருவள்ளுவர் திருக்குறள் மூலம் அழியாபுகழ் அடைந்த போதிலும் அவரை கௌரவிக்கும் விதமாக தமிழகத்தின் கன்னியாகுமரியில் முக்கடல் கலக்கும் இடத்தில் முப்பால் தந்த

வள்ளுவனுக்கு 133 அடி உயர சிலை வைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி உலகின் பல நாடுகளும் திருக்குறளையும், திருவள்ளுவரையும் போற்றி கொண்டிருக்கின்றன. உலகின் பல

மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டு கொண்டிருக்கிறது. தமிழ் இருக்கும் வரையிலும் வள்ளுவரின் புகழும், திருக்குறளின் புகழும் அழியாது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary

    Unknown facts about Thiruvalluvar

    Thirukkural is a classic Tamil text consisting of 1,330 couplets or Kurals, dealing with the everyday virtues of an individual. Considered one of the greatest works ever written on ethics andmorality, chiefly secular ethics, it is known for its universality and non-denominational nature.
    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more