ஐபிஎல் வரலாற்றில் இடம்பெற்ற அழகிய மற்றும் கவர்ச்சியான தொகுப்பாளினிகள் - டாப் 10!

Posted By: Staff
Subscribe to Boldsky

ஐபிஎல் போட்டிகளில் கிரிக்கெட் வீரர்களுக்கு இணையாக பெரும் ரசிகர் பட்டாளம் வைத்திருப்பவர்கள் பெண் தொகுப்பாளினிகள். இவர்கள் வெறும் அழகிகள், கவர்ச்சிக்கன்னிகள் மட்டுமல்ல, மாடலிங், நடிப்பு, நடனம் மற்றும் கிரிக்கெட் மீதான பெரும் ஆர்வம் கொண்டவர்களும் கூட. இவர்கள் புத்திசாலிகளும் கூட.

Top 10: The Most Glamorous and Beautiful Anchors in the IPL History!

மார்கெட்டிங், ஊடகவியல், சட்டம் என பல படிப்புகள் படித்து முடித்து ஆர்வம் காரணமாகவும், எதிர்பாராத விதமாகவும் இவர்கள் இங்கே தொகுப்பாளினியாக வேலை செய்து வருகிறார்கள். இவர்களில் சிலர் இந்தியாவை பூர்வீகமாக மட்டுமே கொண்டுள்ளவர்கள். ஆனால், பிறந்து வளர்ந்தது எல்லாம் லண்டன், ஆஸ்திரேலியா.

இவர்கள் தான் ஐபிஎல் வரலாற்றில் ரசிகர்கள் மனதை வென்ற டாப் 10 அழகிய, கவர்சிகரமான தொகுப்பாளினிகள்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அர்ச்சனா விஜயா

அர்ச்சனா விஜயா

அர்ச்சனா விஜயா மாடலாகவும் டிவி தொகுப்பாளினியாகவும் பணியாற்றி வருகிறார். இந்தியாவில் பெரும்பாலான கிரிக்கெட் ரசிகர்கள் அறிந்த டிவி தொகுப்பாளினி இவர். இவர் 2011 -2015 வரையில் ஐபிஎல் போட்டிகளை தொகுத்து வழங்கி வந்தார். ஐபிஎல் வரலாற்றில் சிறப்பான தொகுப்பாளினி என்று பெயர் பெற்றவர் அர்ச்சனா. இதற்கு முன் அர்ச்சனா இந்திய கிரிக்கெட் அணிக்காக சில தொலைக்காட்சிகளுக்கு டூர் டைரி ஃபார் எக்ஸ்ட்ரா கவர் மற்றும் கிரிக்கெட் மசாலா மார் கே மற்றும் பல நிகழ்சிகளை தொகுத்து வளங்கியுள்ளார்.

மந்திரா பேடி

மந்திரா பேடி

இந்திய நடிகை, மாடல், ஃபேஷன் டிசைனர், டிவி தொகுப்பாளினி என பன்முக திறமை கொண்டவர் மந்திரா பேடி. பெண்களும் கிரிக்கெட் போட்டியை தொகுத்து வழங்கலாம் என்பதற்கு ஒரு முன்னோடி இவர். தூர்தர்ஷன் சேனலில் இவர் அறிமுகமானார். ஐசிசி நடத்திய 2003, 2007 உலகக்கோப்பை மற்றும் 2004 , 2006 சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளில் இவர் தொகுப்பாளினியாக பணியாற்றினார். ஐபிஎல் 2009 தொடரையும் இவர் தொகுத்து வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. மிக கிளாசாக தொகுத்து வழங்குவது இவரது திறன்.

ஷிபானி தண்டேகர்

ஷிபானி தண்டேகர்

இந்திய பாடகி, நடிகை, மாடல் மற்றும் தொகுப்பாளினி ஷிபானி. இவர் ஒரு அமெரிக்கன் டிவி தொகுப்பாளினியும் கூட பன்முக திறமை கொண்ட ஷிபானி 2011-2015 வரையிலான ஐபிஎல் தொடரை தொகுத்து வழங்கி வந்தார். அதே காலக்கட்டத்தில் இவர் மாடலிங்கும் செய்து வந்தார். பாலிவுட் அழகியான இவர் ஐபிஎல் தொடரை தொகுத்து வழங்கியது பலரையும் ஈர்த்தது. ரசிகர்கள் மத்தியில் பெரும் புகழ் கொண்டிருந்தார்.

ரோசெல் மரியா ராவ்

ரோசெல் மரியா ராவ்

இந்திய அழகியான மரியா ஐபிஎல் தொடரில் தனக்கான தனி இடத்தை பிடித்தவர். இவர் கரிஸ்மா மற்றும் அனைவரும் ஈர்க்கும் வகையில் பேசும் திறன், புத்திசாலித்தனம் போன்றவை ஐபிஎல் 2015-16 தொடரில் ரசிகர்களால் ஈர்க்கப்பட்டது.

இதற்கு முன் ஐபிஎல்'ன் ஆறாவது ஆண்டு தொடரை இவர் தொகுத்து வழங்கி இருந்தார். இவர் ஃபெமினா மிஸ் இந்தியா 2012 பட்டம் வென்றவர் என்பது குறிப்பிடத் தக்கது. எலக்ட்ரானிக் மீடியாவில் இளங்கலை பட்டம் பெற்றுள்ள மரியா 2014ல் தனது 27 வயதில் கிங் ஃபிஷர் காலண்டரில் இடம் பெற்றார். இதுப்போக இவர் நிறைய டிவி நிகழ்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.

பல்லவி ஷார்தா

பல்லவி ஷார்தா

மற்றுமொரு ஐபிஎல் சிறந்த தொகுப்பாளினி பல்லவி இவர் நடிப்பு துறையில் இருந்து வந்தவர். இந்தியாவின் பாரம்பரிய நடனமான பரதநாட்டியம் முறையாக கற்றுத் தேர்ந்தவர். ஊடகவியல் படிப்பை படித்து முடித்த இவர் சட்டமும் படித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் டிப்ளோமா இன் மாடர்ன் லாங்குவேஜ்ம் இவர் படித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பல்லவி ஆஸ்திரேலிய - இந்தியன் ஆவார். இவர் இந்தியாவை சேர்ந்த மருத்துவ பெற்றோருக்கு பிறந்தவர், இவர்கள் ஆஸ்திரேலியாவில் செட்டிலாகிவிட்டனர். இவர் ஷாருக்கானின் மை நேம் இஸ் கான் என்ற படத்தில் அறிமுகமானவர். பிறகு லவ் ப்ரேக்அப் ஜிந்தகி என்ற படத்திலும் நடித்துள்ளார்.

கரிஷ்மா கொடாக்

கரிஷ்மா கொடாக்

லண்டனில் பிறந்த பிரிட்டிஷ் இந்தியன் டிவி தொகுப்பாளினி கரிஷ்மா. இவர் மாடலிங் மற்றும் நடிப்பு திரையில் வேலை செய்து வந்தார். ஐபிஎல்ன் ஆறாவது எடிஷனில் இவர் பங்குபெற்றார். அப்போது இவருக்கு 34 வயது. இவர் விளம்பரம் மற்றும் மார்க்கெடிங் படிப்பு பயின்றவர் ஆவார். ஆரம்பத்தில் ஆசிரியராக வேண்டும் என்று விரும்பிய கரிஸ்மா 16 வயதில் மாடலிங் துறையில் வந்தது ஒரு விபத்து மற்றும் விதி என்று கூறியுள்ளார். 2006ம் ஆண்டுக்கான கிங் பிஷர் காலண்டரில் கரிஷ்மா தோன்றியுள்ளார்.

மேலும் இவர் பிக் பாஸ் ஆறாவது எடிஷனிலும் பங்குபெற்றுள்ளார். மீ எகைன்ஸ்ட் மைசெல்ப் என்ற இசை ஆல்பத்தில் இவர் தோன்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இஷா குவா

இஷா குவா

இஷா இங்கிலாந்து அணிக்காக விளையாடிய இந்தியாவை பூர்வீகமாக கொண்ட வீராங்கனை ஆவார். இவர் ஐபிஎல் எக்ஸ்ட்ரா இன்னிங்க்ஸ் தொகுத்து வழங்கி வந்தார். இவர் 2002ல் தனது 17 வது வயதில் அறிமுகமானார். பிபிசி ஏசியன் பர்சனாலிடி ஆப் திஇயர் விருதும் இவர் பெற்றுள்ளார். 2009ளல் இங்கிலான்ந்து அணி உலக கோப்பை வென்ற அணியில் இவர் இடம் பெற்றிருந்தார்.

ஐபிஎல் தொடரில் இவர் அவ்வப்போது பங்குபெற்று வந்தார். ஆட்டத்தை ஆராய்ந்து பேசுவதில் இவர் வல்லமை பெற்றவர்.

சோனாலி நாக்ராணி

சோனாலி நாக்ராணி

டெல்லியில் பிறந்து வளந்த டிவி தொகுப்பாளினி மற்றும் மாடல் நடிகை சோனாலி இவர் பெமினா மிஸ் இந்தியா இண்டர்நேஷனல் பட்டதை வென்றவர். மற்றும் மிஸ் இண்டர்நேஷனலில் ரன்னர் அப்பாக வந்தவர். இவர் 2006ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். பிறகு 2007ம் ஆண்டு உலகக்கோப்பை போட்டியை தொகுத்து வழங்கினார்.

ஐபிஎல் தொடரை இவர் தொடர்ந்து நான்காண்டுகள் தொகுத்து வழங்கி யுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

லேகா வாஷிங்டன்

லேகா வாஷிங்டன்

பிரபல தென்னிந்தியா நடிகை மற்றும் பிராடக்ட் டிசைனர் மற்றும் ஐபிஎல்ன் ஆரம்ப தொடரில் தொகுப்பாளினியாக பணியாற்றிய லேகா வாஷிங்டன். ஒருசில தமிழ், தெலுங்கு கன்னட படங்களில் நடித்துள்ளார். இவர் மாத்ரு கி பிஜ்லி கா மன்டோலா என்ற படத்தில் அனுஷ்கா சர்மாவுடன் சிறப்பு தோற்றத்தில் தோன்றி இருந்தார்.

லேகா சென்னையில் நாடகங்களில் நடிகையாக நடித்து வந்துள்ளார். மேலும், இவர் எஸ்.எஸ் மியூசிக் எனும் சேனலில் தொகுப்பாளினியாக வேலை செய்து வந்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பெரிய ரசிகை லேகா.

மயான்தி லாங்கர்

மயான்தி லாங்கர்

தற்போதைய டிரெண்ட் தொகுப்பாளினி மயான்தி இவர் இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் ஸ்டூவார்ட் பென்னியின் மனைவி ஆவார். கிரிக்கெட், கால்பந்தும் காமன்வெல்த் போட்டிகள், கிரிக்கெட் உலக கோப்பை மற்றும் இந்தியன் சூப்பர் லீக் மற்றும் ஐபிஎல் என பல தொடர்களை லாங்கர் தொகுத்து வழங்கியுள்ளார்.

ஸ்டார் கிரிக்கெட் சேனல் உடன் இணைந்து பணியாற்றி வருகிறார் லாங்கர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Top 10: The Most Glamorous and Beautiful Anchors in the IPL History!

Top 10: The Most Glamorous and Beautiful Anchors in the IPL History!