For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முடிஞ்ச வரைக்கும் அனுபவிச்சிக்குங்க.. இன்னும் 10, 20 வருஷத்துல இதெல்லாம் அழிஞ்சிடும்!

முடிஞ்ச வரைக்கும் அனுபவிச்சிக்குங்க.. இன்னும் 10, 20 வருஷத்துல இதெல்லாம் அழிஞ்சிடும்!

|

மாவாட்டும் கல்லுக்கு கிரைண்டர் மாற்றாக வந்தது, பிளாக் அன்ட் ஒயிட் மற்றும் ஒருசில சேனல்களே காண முடியும் வகையில் திருகும் நாப் மட்டும் கொண்டிருந்த அந்த பழங்கால டிவிக்கு கலர் மற்றும் ரிமோட் மாற்றாக வந்தது. இப்படியான பல மாற்றங்களால், அதன் முன் பயன்பாட்டில் இருந்தவை அழிவை அடைந்தன.

இப்படியாக, இன்றைய அன்றாட வாழ்வில் நம்முடன் பின்னிப்பிணைந்து காணப்படும் சில விஷயங்கள் வரும் பத்து, இருபது ஆண்டுகளில் காணாமால் போய்விடும் காலம் வரலாம் எனப்படுகிறது.

தொழில்நுட்ப வளர்ச்சி மனிதர்களின் வேலைக்கு மட்டுமல்ல, சென்ற நூற்றாண்டின் பல அரிய கண்டுபிடிப்புகளுக்கும் கூட ஒரு முற்றுப்புள்ளி வைக்கவிருக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ரியர் வியூவ் மிரர்!

ரியர் வியூவ் மிரர்!

மாதம் ஒரு மொபைல் ஏதோ ஒரு அப்டேட்டுடன் புதியதாக வெளியாகிக் கொண்டே இருக்கிறது. இது மொபைல் துறையில் மட்டுமல்ல, இதர துறைகளிலும் நடந்துக் கொண்டே தான் இருக்கிறது. ஆனால், நாம் தான் அது குறித்து பெரிதாக அறிந்துக் கொள்வதில்லை. இன்றும் நீங்கள் கார் ஓட்டும் போது, பின்னாடி யாரேனும் வருகிறார்களா என்று சரிபார்க்க ரியர் வியூவ் மிரரை தான் பார்க்க வேண்டும்.

இன்னும் பத்து, இருபது வருடங்களில் இந்த ரியர் வியூவ் மிரரே இருக்காது. எல்லாம் கேமரா மயமாக மாறிவிடும். இப்போது பல சொகுசு கார்கள் மற்றும் மிட் ரேஞ் கார்களில் இந்த தொழில்நுட்பம் உட்புகுந்துவிட்டது. சில ஆயிரங்களை அள்ளித்தெளித்தால், இதை பொருத்தி தருவதற்கு ஆட்கள் நிறையவே இருக்கிறார்கள்.

மொபைல் டவர்!

மொபைல் டவர்!

இந்த அழியும் நிலையில் இருப்பவை பட்டியலில்.. அப்படா போனா நிம்மதி தான் என்று பெருமூச்சுவிட வைக்கும் ஒரு விஷயம் இந்த மொபைல் டவர். இதனால் தேவையற்ற சிக்கல்கள் தான் இயற்கைக்கு.

இனி வரும் காலங்களில் இவ்வளவு பெரிய மொபைல் டவர்களின் பங்களிப்பு தேவை இருக்காது என்றும். மொபைல் டவர்களின் உருவமானது மிக சிறியதாக மாறுவதற்கான வாய்ப்புகள் புதிய கண்டுப்பிடிப்புகள் மூலம் மிக விரைவில் வரவிருகின்றன என்றும் அறியப்படுகிறது.

ஏற்கனவே குவால்காம் (Qualcomm ) , யாஹூ, ஃபேஸ்புக் போன்ற நிறுவனங்கள் இதற்கான ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றன. இந்த டெக்னாலஜி பூதாகரமாக உருவெடுக்கும் போது, இன்றைய மொபைல் டவர்களின் பங்களிப்பு அவசியமின்றி போகலாம்.

ரிமோட்!

ரிமோட்!

பெரும்பாலான வீடுகளில் ஒரு விளையாட்டு பொருளாக, சண்டைக்கான காரணியாக இருந்து வருவது இந்த ரிமோட் கண்ட்ரோல். ஆனால், இதுவும் அழிய போகிறது, தற்போது பெரும்பாலான எலக்ட்ரிக் கருவிகளை நமது ஸ்மார்ட் போனில் இருந்து கண்ட்ரோல் செய்ய இயலும்.

இது போக, அமேசான் அலக்ஸா, கூகுல் ஹோம் போன்ற சில புதிய தொழில்நுட்ப வருகைகள்... நமது குரல் மூலமாக இயக்கம் திறன் கொண்டுள்ளன. இதனால், இனிவரும் பத்து, இருபது ஆண்டுகளில் ரிமோட் கண்ட்ரோல் காணாமல் போகலாம்.

கிரெடிட் கார்டுகள்!

கிரெடிட் கார்டுகள்!

அட, நான் இன்னும் கிரெடிட் கார்டே வாங்கலையே.. என்று கேட்கிறீர்களா... அதை வாங்காத வரை நிம்மதி என்று நினைத்துக் கொள்ளுங்கள். இப்போது பே.டி.எம், டெஸ் போன்றவை கிரெடிட் கார்டுகளின் வேலைகளை அவசியமற்றவை ஆக மாற்றிவிட்டன.

பெரும்பாலும் ஸ்மார்ட் போனில் ஒரு செயலியை இன்ஸ்டால் செய்து அதன் மூலம் ஸ்கான் செய்தாலே பணவர்தனை செய்யும் அளவிற்கு தொழில்நுட்பம் உயர்ந்துவிட்டது. எனவே, அடுத்த பத்து ஆண்டுகளில் இந்த கிரெடிட் கார்டுகளும் அழிந்து போகலாம்.

சாவிகள்!

சாவிகள்!

கார், பைக்குகள் மட்டுமல்ல, உங்கள் வீட்டு சாவிகள் உட்பட அனைத்தும் அழிந்து போகும் தருவாய் நெருங்கி வருகிறது. இன்றைய டிஜிட்டல் உலகில் டிஜிட்டலாக திருடுவது மிக எளிமையாகிவிட்டது.

எனவே, பாதுகாப்புகள் கருதி இன்று கைரேகை, ஐரிஸ், சென்சார் லாக் பயன்பாட்டுக்கு வந்துவிட்டன. வரும் பத்து, இருபது ஆண்டுகளில் இவற்றின் ஆதிக்கம் பெருகி, இரும்பு சாவிகள் பயன்பாட்டில் இருந்து அழிந்து போகலாம்.

சிடி!

சிடி!

சிடி, டிவிடியின் பயன்பாடு இப்போதே மிகவும் குறைந்துவிட்டது. பெரும்பாலும் நாம் பென் டிரைவ், ஓ.டி.ஜி, ஹார்ட்-டிஸ்க் போன்றவற்றை தான் பயன்படுத்து வருகிறோம். ஆனால், தற்போது நெட்பிளிக்ஸ், சன்- நெக்ஸ்ட், அமேசான் ப்ரைம் என பல ஸ்மார்ட் ஊடகங்கள் வந்துவிட்டன.

அதிலும், யூடியூப் உலகளவில் பெருவாரியான பயனாளிகளை தன்வசம் வைத்திருக்கிறது. எனவே, இப்போதிருக்கும் அந்த குறைவான சிடி, டிவிடி பயன்பாடு கூட அடுத்த பத்து ஆண்டுகளில் இருக்காது.

சார்ஜர்!

சார்ஜர்!

மொபைல் பயன்படுத்தும் போது இருப்பதிலேயே பெரும் கடினம், சார்ஜர் தான். சார்ஜர் ஒயர்கள் அடிக்கடி டேமேஜ் ஆகி நம்மை கடுப்பேற்றும். இதற்கான முடிவு ஏற்கனவே வந்துவிட்டது. ஒயர்லஸ் சார்ஜர் முறையை பல முன்னணி மொபைல் பிராண்ட் உற்பத்தியாளர்கள் அறிமுகப்படுத்திவிட்டனர். அடுத்து வரும் பத்து, இருபது ஆண்டுகளில் இதன் ஆதிக்கம் தான் உலகெங்கிலும் இருக்கும். எனவே, சார்ஜர் பயன்பாடு முற்றிலும் குறைந்து போகும்.

மணி பர்ஸ்!

மணி பர்ஸ்!

டிஜிட்டல் பணவர்தனை மூலமாக கிரெடிட் கார்டுகளே அழிந்து போகும் பட்சத்தில் எ.டி.எம் மெஷின்கள் மட்டும் இருக்குமா என்ன? ஏற்கனவே அவற்றில் பணம் இருப்பதில்லை என்ற பெரும் குறை இருக்கிறது. அடுத்த வரும் பத்து ஆண்டுகளில் முழுக்க, முழுக்க டிஜிட்டல் மணி பயன்பாட்டுக்கு வந்துவிடும். அப்போது மணி பர்ஸ்ம் தேவை இருக்காது, எ.டி.எம் மெஷின்களின் அவசியம் இருக்காது.

ஊசி!

ஊசி!

சின்ன வயதில் இருந்து, வயதானவர்கள் வரை பலரை பயமுறுத்தி வரும் பொருள் ஊசி. சிறு காய்ச்சலுக்கு சென்றாலும் சரி, சர்க்கரை வியாதி என்றாலும் சரி இந்த ஊசி தான் ஒரே தீர்வாக இருக்கிறது. ஏற்கனவே ஆராய்ச்சியாளர்கள் ஊசிக்கு மாற்றினை ஆராய்ந்து ஓரிரு புதுவரவுகளை கண்டுபிடித்துள்ளனர்.

அதில், ஜெட் இன்ஜெக்ஷன் என கூறப்படும் வகை, ஒலியின் வேகத்தில் சருமத்தை கடந்து சென்றுவிடும் என்கிறார்கள். மேலும், இதனால் மருந்து மாத்திரைகளின் பயன்பாடு கூட குறைய வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

சினிமா!

சினிமா!

ஒர்ஜினல்ஸ், யூடியூப் சீரியல்கள் வருகை காரணமகவே சினிமா திரையரங்குகளில் கூட்டம் குறைய ஆரம்பித்துவிட்டது. இது போக 3டி, ஐ-மேக்ஸ் என்பதை கடந்து, இப்போது விர்சுவல் ரியாலிட்டி யுகம் வந்துவிட்டது.

இனிமேல் ஹீரோவுடன் அந்த கதையில் நீங்கள் பயணிக்கும் படியான அனுபவத்தை பெறலாம். எனவே, அடுத்த பத்து, இருபது ஆண்டுகளில் நிச்சயம் சினிமா திரையரங்கும் பாதிக்கப்படும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Things Would Not Exist in 20 Years!

Technology is the thing simplified our life. It killed so many manual works in different fields. Now, some updates gonna kill few things, which we are using in our day today life.
Desktop Bottom Promotion