13,60,000 கோடிக்கு அதிபதியான சுல்தான் ஹஸனல் போல்கியா பற்றிய திகைப்பூட்டும் உண்மைகள்!

Posted By:
Subscribe to Boldsky

ஹஸனல் போல்கியா, உலகின் இரண்டாவது பெரிய அரசாங்க குடும்பத்தை சேர்ந்தவர். புரூணை நாட்டின் 29வது சுல்தானாகவும் திகழ்ந்து வருகிறார் ஹஸனல் போல்கியா.

பணவசதிப் படைத்திருக்கும் எத்தனையோ பிரபலங்கள், அரச குடும்பத்தை சேர்ந்தவர்கள் இந்த உலகில் இருக்கிறார்கள். ஆனால், அனைவரும் ஹஸனல் போல்கியா அளவிற்கு ஆடம்பரமாக வாழ்கிறார்களா? என்றால் இல்லை என்பதே உண்மை.

ஹஸனல் போல்கியாவின் வாழ்வியலுக்கு சொர்கமும் ஈடாகாது என்று கூறலாம். நாம் சொர்க்கம் இப்படி இருக்கும், இந்த வசதிகள் எல்லாம் படைத்திருக்கும் என்று ஒரு பொதுவான கற்பனை உருவம் கொண்டிருப்போம். ஆனால், அதை எல்லாம் தாண்டி ஒரு வேற லெவல் வாழ்க்கை வாழ்ந்து வருகிறார் ஹஸனல் போல்கியா.

இவர் பயன்படுத்தும் கார்களில் இருந்து, விமானங்கள் என்று மட்டுமில்லாமல், மலம் கழிக்கும் கழிவறை முறை, சிகை திருத்தம் செய்யும் வரை அனைத்தும் மெகா காஸ்ட்லியானவை.

 

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சிகை அலங்காரம்!

சிகை அலங்காரம்!

உதாரணமாக சொல்ல வேண்டுமானால், இவர் சிகைத் திருத்தம் செய்துக் கொள்ள மட்டும் 21 ஆயிரம் டாலர்கள் செலவு செய்கிறார். நன்கு கவனிக்கவும் 24 ஆயிரம் ரூபாய் அல்ல டாலர்கள். அதாவது இந்திய மதிப்பில் 13 இலட்சங்களுக்கும் மேல்.

இதுக்கே அசந்துவிட வேண்டாம்... இதவிட ஸ்பெஷல் ஐட்டம் நிறையா இருக்கு....

பிறப்பு!

பிறப்பு!

ஹஸனல் போல்கியா பிறந்தது 15 ஜூலை 1946. இவர் மலேசியாவில் பிறந்தார். தற்போது புரூணையின் 29வது சுல்தானாக பதவி வகிக்கிறார். இவரது சொத்து மதிப்பு 20 பில்லியன் டாலர்கள். இதன் மூலம் உலகில் இரண்டாவது பெரிய பணக்கார அரசு வம்சாவளி என்ற பெருமை பெற்றிருக்கிறார்.

அதற்கென இவர் பணத்தை தண்ணீர் போல செலவு செய்பவர் என்றும் கூறிவிட முடியாது. தான் செய்யும் ஒவ்வொரு செலவிலும் ஒரு கலைநயம் கொண்டிருப்பார் ஹஸனல் போல்கியா.

கலைநயம்!

கலைநயம்!

வெளியிருந்து காணும் போது ஹஸனல் போல்கியா பகட்டை வெளிபடுத்திக் கொள்ள தாராளமாக, ஏராள செலவு செய்கிறார் என்றே தெரியும். ஆனால், தான் செலவு செய்யும் ஒவ்வொரு டாலரையும் ரசித்து, ரசித்து செலவு செய்கிறார் ஹஸனல் போல்கியா. உலகில் இன்றும் நீடித்திருக்கும் முடியாசிகள் சிலவற்றில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரது பொருளாதாரத்தின் பெரும் பங்கு இயற்கை எரிபொருள் மற்றும் எண்ணெய்களில் இருந்து கிடைக்கிறது.

வரி இல்லை!

வரி இல்லை!

ஹஸனல் போல்கியா சுல்தானுக்கு உட்பட்ட இடத்தில் வாழும் மக்களுக்கு சேவை வரி, இன்கம்டாக்ஸ் என எதுவும் இல்லை. தன்னிடம் உலகின் மிகவும் அழகிய, விலை உயர்ந்த, அரிய மற்றும் அதிநவீன வேகமான தனித்தன்மை கொண்ட கார்கள் பலவன கொண்டிருக்கிறார் ஹஸனல் போல்கியா. உயர்திறன் கொண்ட கார்கள் மட்டுமே ஏழாயிரம் என்ற கணக்கில் வைத்திருக்கிறார் இவர்.

கார்கள்!

கார்கள்!

ஏறத்தாழ ஐந்து பில்லியன் டாலர்கள் மதிப்பில் கார்கள் மட்டுமே கொண்டிருக்கிறார். இதில் அறநூறு ரோல்ஸ் ராய்ஸ் கார்கள், முன்னூறு பிராரி கார்கள், 163 Koenigeggs கார்கள், 11 மெக்லாரன் எப் 1s கார்கள், 6 டவுர் போர்ஷ் 962 LM கார்கள் மற்றும் எண்ணற்ற பிரத்யேகமாக ஹஸனல் போல்கியாவுக்காக தயாரிக்கப்பட்ட சொகுசு கார்களும் அடங்கும்.

விமானங்கள்!

விமானங்கள்!

சுல்தான் ஹஸனல் போல்கியாவின் சொத்து மதிப்புக்கு கார்கள் மட்டும் வைத்திருந்தால் போதுமா, நிலத்தில் பறப்பவர் வானத்தில் நடந்தா செல்வார். போயிங் விமானங்கள் 747-400 ஏர் ஜெட், ஏர் பஸ் 340-200 போன்ற ஆடம்பர பிரைவேட் ஜெட்டுகள் கொண்டிருக்கிறார் இவர். மேலும், 1980-களில் இவர் ஒருமுறை உலகின் பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடமும் வகித்தார். பிறகு 1990'ல் அமெரிக்க தொழிலதிபர் பில்கேட்ஸிடம் இந்த இடத்தைப் பறிகொடுத்தார்.

இன்று!

இன்று!

சுல்தான் ஹஸனல் போல்கியாவின் இன்றைய சொத்து மதிப்பு 20 பில்லியன் டாலர்கள். ஒருவேளை இந்த சொத்துமதிப்பு வரும் காலத்தில் பன்மடங்கு உயரம் பட்சத்தில், இவரது மகன் உலகின் முதல் ட்ரில்லியனர் ஆவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இவரது பர்சனல் வாழ்க்கை பற்றி பார்க்கையில். இவர் 1965ல் திருமணம் செய்துள்ளார். இவரது மனைவி இவரது உறவுக்கார பெண் தான். இவர் பெயர் அனாக் ஹாஜா சலேன்ஹா. 1967ல் தான் 29வது சுல்தானாக பதவி ஏற்றார்.

மூன்று திருமணம்!

மூன்று திருமணம்!

முதலாவது மனைவி போக, இவர் 1982ல் ஹாஜா மரியம் என்பவரையும், 2005ல் அறிநாஸ் மழர் என்பவரையும் திருமணம் செய்துக் கொண்டார். இதில், மூன்றாவது மனைவியை ஐந்தே ஆண்டுகளில் விவாகரத்து செய்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் மலேசியாவில் ஊடகவியலாளராக வேலை செய்து வந்தவர். சுல்தான் மூலமாக இவருக்கு ஒரு ஆண் குழந்தை மற்றும் பெண் குழந்தை பிறந்தனர்.

ரகசியம்!

ரகசியம்!

இவர்கள் இருவருடைய திருமணம் மிக இரகசியமாக நெருங்கிய உறவினர், நண்பர்கள் சூழ நடந்தது. ஆயினும், இவர்கள் திருமணம் குறித்த படங்கள் வெளிய ஊடகங்களில் கசிந்தன. மேலும், 2010ல் விவாகரத்து பெற்றதும், இவரிடம் இருந்து அனைத்து அரசு கௌரவங்கள் மற்றும் உரிமைகள் மரியாதைகள் பின்வாங்கப்பட்டன.

All Image Source: Facebook / Hassanal-Bolkiah-Sultan-of-Brunei

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Things To Know About Hassanal Bolkiah, The Sultan of Brunei!

Things To Know About Hassanal Bolkiah, The Sultan of Brunei!
Subscribe Newsletter