துரோகம் செய்த நடிகர்களை மன்னித்து ஏற்றுக் கொண்ட மனைவிகள்!

Posted By:
Subscribe to Boldsky
பாலிவுட் நடிகர்களின் கள்ள காதல்- வீடியோ

என்னதான் உலகின் சிறந்த பொருள் நம் கையில் இருந்தாலும், பக்கத்தில் வேறு கவர்ச்சியான பொருள் இருந்தால்... நம் கையில் இருக்கும் பொருளின் மதிப்பை மறந்து வேறு பொருள்கள் மீது நாட்டம் செலுத்துவது மனிதர்களின் இயல்பு. இது சாதாரண உடை, உணவுகளில் இருந்து வாழ்க்கை துணை வர அனைத்திற்கும் பொருந்தும்.

மனைவியை ஏமாற்றிய கணவன் என்ற செய்தி வெளிவாராத நாளே இல்லை. இது போன்ற சூழல்களை நட்சத்திர தம்பதிகளும் தாண்டி வந்துள்ளனர். இதனால் விவாகரத்து பெற்ற ஸ்டார் தம்பதிகளும் இருக்கிறார்கள். சில சமயங்களில் கல்லானாலும் கணவன் என கற்பிக்கப்பட்டு வளர்ந்த பெண்கள் சிலர், அவர்களுக்கு மறு வாய்ப்பு அளித்து மன்னித்து ஏற்ற சம்பவங்களும் நடந்துள்ளன.

உண்மையில் கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன் என்ற பழமொழியின் அர்த்தமே வேறு, கல் போன்ற கடினமானவனாக இருந்தாலும், புள் போன்று மென்மையானவராக இருந்தாலும் கணவன், கணவன் தான் என்பதே இதன் உண்மை பொருள் என அறியப்படுகிறது.

சரி! இனி, துரோகம் செய்த கணவனை மன்னித்து ஏற்றுக் கொண்ட நட்சத்திரங்களின் மனைவியர் பற்றி இந்த தொகுப்பில் காணலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆதித்யா பஞ்சோலியின் மனைவி!

ஆதித்யா பஞ்சோலியின் மனைவி!

கங்கனா முதன் முறையாக ஆதித்யா பஞ்சோலியை கண்ட போது அவர் நடிகையாக முயற்சித்துக் கொண்டிருந்தார்.

அன்று ஜூன் 27, 2004. சாலை ஓரத்தில் நின்று தன்னைக் காண காத்திருந்தார். மழையில் நனைந்தபடி தனது தோழரின் பைக் அருகே நின்றுக் கொண்டிருந்தார். அப்போது ஒரு கட்டுமான வேலை விஷயமாக நான் அந்த இடத்திற்கு சென்றிருந்தேன். அப்போது தான் அவர் என்னிடம் வந்து பேச முயன்றார், நான் அவரிடம் பேசும் வரை தொடர்ந்து என்ன காண முயற்சிக் கொண்டே இருந்தார். கடைசியில் அவரை நான் சந்தித்து பேச ஒப்புக் கொண்டேன். கங்கனா மிகவும் ஸ்வீட்டான பெண். நான் அவர் மீது காதல் கொண்டேன். என ஆதித்யா பஞ்சோலி கூறியிருக்கிறார்.

ஸரீனா!

ஸரீனா!

மனைவி ஸரீனா வஹாபை ஆதித்யா பஞ்சோலி பல பெண்களுடன் உறவில் இருந்து ஏமாற்றியதாக அவரே கூறியுள்ளார். லட்சக்கணக்கான முறை நான் அதற்கு மன்னிப்பும் கேட்டுள்ளேன் என தெரிவிததுளாளர். கங்கனாவுக்கு இவர் நிறைய பணவுதவி செய்ததாகவும், ஒருமுறை கங்கனா இவர் மீது டார்ச்சர் செய்தார் என வழக்கு தொடர்ந்தார் என்றும் பல செய்திகள் வெளியாகின.

ஆனால், அனைத்தையும் தாண்டி, ஸரீனா வஹாப், ஆதித்யா பஞ்சோலியை மன்னித்து ஏற்றுக் கொண்டார்.

அமிதாப்பச்சன்!

அமிதாப்பச்சன்!

அமிதாப்பச்சன் மற்றும் ஜெயா இருவரும் பாலிவுட்டின் ரொமாண்டிக் தம்பதி. பொது இடங்களில் கூட எந்தவிதமான தயக்கமும் இன்றி லிப்லாக் கொடுக்கும் அளவிற்கு இவர்கள் வெளிப்படையான காதல் ஜோடி. ஆனால், அமிதாப்பச்சனே தனது மனைவி ஜெயாவை ஏமாற்றி ரேகாவுடன் உறவில் இருந்தார் என பல ஊடகங்களில் அந்நாட்களில் தலைப்பு செய்திகளாக வெளியாகின.

ஜெயாபச்சன்!

ஜெயாபச்சன்!

இதை, இருவருமே ஒப்புக்கொள்ளவில்லை எனிலும், அமிதாப்பச்சன் ஊடகங்களில் வெளியாகும் செய்திகளுக்கு எல்லாம் பதிலளித்துக் கொண்டிருக்க முடியாது என கோபித்துக் கொண்டார்.

ஆனால் ஜெயாபச்சன், "நான் என் கணவரை நம்புகிறேன். நான் அவர் மீது முழுமையான தைரியமும், அன்பும் கொண்டிருக்கிறேன். எனக்கு அவர் பணிபுரியும் துறை எத்தகையது என தெரியும். நான் அவரது செயலில் ஒருபோதும் அச்சத்தையோ, நம்பிக்கையின்மையோ உணர்ந்தது இல்லை." எனக் கூறி அமிதாப்பச்சனை அப்படியே ஏற்றுக் கொண்டார்.

கோவிந்தா!

கோவிந்தா!

ஹாத் கர் தி ஆப்னே என்ற படத்தில் நடிகர் கோவிந்தா மற்றும் ராணி முகர்ஜி இணைந்து நடித்து வந்தனர். அப்போது அவர்கள் இருவருக்கும் மத்தியில் காதல் இருப்பதாக கிசுகிசு பரவியது. ஒரு முறை ஒரு செய்தி நிபுணர் வெளிப்படையாக தானே, கோவிந்தாவை ராணி இல்லத்தில் இரவு உடையில் நேரே கண்டுள்ளேன் என கூறினார். ஆனால், அதை ராணியின் பெற்றோர் முற்றிலுமாக மறுத்துவிட்டனர்.

ஷாருக்கான்!

ஷாருக்கான்!

இந்த புரளி பாலிவுட்டில் மிக பிரபலம், ஆனால், தமிழில் பெரும்பாலானோருக்கு தெரியாது. டான் படத்தில் நடித்துக் கொண்டிருந்த போது ஷாருக் கான் மற்றும் பிரியங்கா சோப்ரா இருவரும் திருமணம் செய்துக் கொண்டார்கள் என கூறப்பட்டது. ஒருமுறை ஷாருக்கான் அலுவலகத்தில் இருந்து நள்ளிரவு மூன்று மணியளவில் பிரியங்கா சோப்ரா வெளியேறினார் என்றும் செய்திகள் வெளியாகின.

ஜாக்கெட்!

ஜாக்கெட்!

மேலும், ஒருமுறை பிரியங்கா சோப்ரா தானளித்து பேட்டியில், எனது எக்ஸ்-ன் லெதர் ஜாக்கெட் ஒன்று என்னிடம் பத்திரமாக இருக்கிறது என குறிப்பிட்டிருந்தார். அந்த லெதர் ஜாக்கெட்டுடன் ஷாருக்கான் ஓரிருமுறை தென்பட்டுள்ளார் என்றும் செய்திகளில் தகவல் வெளியாகின. ஆனால், ஷாருக்கான் மீது கெளரி கான் எள்ளளவும் சந்தேகப் படவில்லை. அவரை முழுமையாக காதலுடன் ஏற்றுக் கொண்டுள்ளார்.

அஜய் தேவ்கான்!

அஜய் தேவ்கான்!

பாலிவுட்டில் சீக்கிரம் பிரிந்துவிடுவார்கள் என கருதப்பட்ட காதல் ஜோடி அஜய் மற்றும் கஜோல். ஆனால், அனைவரும் வியப்படையும் வண்ணம் ஒரு ஸ்டார் தம்பதி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்து வருகிறார்கள் இவர்கள்.

ஆனால், இவர்கள் வாழ்விலும் புயல் வீசியது. ஒன்ஸ் அபான் எ டைம் இன் மும்பை என்ற படத்தில் நடித்துக் கொண்டிருந்த போது கங்கனாவுக்கும், அஜய்க்கும் நடுவே சில கிசுகிசுக்கள் பரவின. அந்த நேரத்தில் இவர்கள் இருவரும் பிரிந்துவிடுவார்கள் என சினிமா வட்டாரம் மீண்டும் எதிர்பார்த்தது. ஆனால், தனது கணவன் மீது தான் வைத்திருந்த நம்பிக்கை மூலம், அஜயை அப்படியே, அதே காதலுடன் ஏற்றுக் கொண்டார் கஜோல்.

அக்ஷய் குமார்!

அக்ஷய் குமார்!

அக்ஷை குமார் ட்விங்கிள் கண்ணாவுடன் காதலில் இருந்தே அதே சமயத்தில், ஷில்பா ஷெட்டியையும் காதலித்து வந்தார் என தகவல்கள் பரவின. அக்ஷய் தன்னை ஏமாற்றுகிறார் என அறிந்தே ஷில்பா அவரை பிரிந்தார் என கூறப்பட்டது. இதை அனைத்தையும் அறிந்தும், ட்விங்கிள் அக்ஷய் குமாரை காதலுடன், முழு மனதுடன் அப்படியே ஏற்றுக் கொண்டார். இன்று வரை இந்த காதல் ஜோடி துளியளவும் ரொமான்ஸ் குறையாமல் வாழ்ந்து வருகிறார்கள்.

ராஜ் கபூர்!

ராஜ் கபூர்!

ராஜ் கபூர் கிருஷ்ணா மல்ஹோத்ரா என்பவரை திருமணம் செய்துக் கொண்ட போதிலும், அந்த காலத்தில் நடிகை நர்கிஸ் உடன் காதலில் இருந்தார் என கூறப்படுகிறது. நர்கிஸ் மட்டுமின்றி, பலருடன் இவருக்கு நெருக்குமான உறவு இருந்தது என்றும் புரளிகள் வெளியாகின. ஆனால், அத்தனையையும் ஒதுக்கிவிட்டு தனது கணவன் மீதிருந்த நம்பிக்கை காரணத்தால் கிருஷ்ணா மல்ஹோத்ரா ராஜ் கபூரை மன்னித்து ஏற்றுக் கொண்டார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

These Actors Have Cheated on Their Wife, And Also Forgiven By Them!

These Actors Have Cheated on Their Wife, And Also Forgiven By Them!