வெற்றிக்கு வித்திடும் பிரபலங்களின் பத்து படிப்பினை கூற்றுகள்!

Posted By:
Subscribe to Boldsky

வாழ்க்கை மிகவும் எளிமையானது, நாம் தான் அதை சிக்கலாக்கி கொள்கிறோம். இயற்கை நமக்கு தேவையான அமைதியை, பழங்களை, அழகினை அளவுக்கு அதிகமாகவே கொடுத்தது. ஆனால், நாளைக்கு கிடைக்க்மோ, கிடைக்காதோ என்ற அச்சத்தில் நாம் மற்றவருடைய உணவை திருடி சேமிக்க துவங்கியது தான் மனதுக்குள் பதட்டத்தை அதிகரிக்க செய்தது. நாம் திருடி வைத்துள்ளதை, நாளை நம்மிடம் இருந்து வேறு யாராவது திருடி விடுவார்களா என்ற அச்சம் நமக்குள் அளவுக்கு அதிகமாக அதிகரித்தது. அதன் காரணமாக அமைதி இழந்தோம், நிம்மதி இழந்தோம், பணம், பொருள் மட்டும் சேமிக்கும் பைத்தியங்கள் ஆனோம்.

உண்மையில் வாழ்க்கை என்ன, அதை எப்படி வாழ வேண்டும் என்பதை மறந்து. போலித்தனமான முகமூடி அணிந்துக் கொண்டு, போலித்தனமான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறோம். எதற்காக போராட வேண்டும், எதற்கு அமைதி காக்க வேண்டும் என்ற பாகுபாடு அறியாத நிலையில் இருக்கிறோம்.

வெற்றி என்பது எட்டிப்பறிக்க வேண்டியதே தவிர, தட்டிப்பறித்துவிட கூடாது...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ராபர்ட் வில்லியம்ஸ்

ராபர்ட் வில்லியம்ஸ்

"மக்கள் உங்களிடம் என்ன விஷயம் கூறுகிறார்கள் என்பதோர் பொருட்டல்ல... வார்த்தைகளும், சிந்தனைகளும் இந்த உலகை மாற்றும்!"

மறைந்த நடிகர் ராபர்ட் வில்லியம்ஸ் ஒரு சிறந்த கலைஞர். தன் வாழ்நாள் முழுதும் பல நல்ல கருத்துக்களை தனது ரசிகர்களுடன் பகிர்ந்திருந்தார். தன் சொந்த வாழ்க்கையுடன் ராபர்ட் வில்லியம்ஸ் மிகவும் பொருத்திக் கொண்ட தத்துவம் இது. மற்றவர் பேச்சை கேட்டு ஊக்கம் இழந்துவிடக் கூடாது என்பதை அடிக்கடி கூறிக்கொண்டே இருப்பார் ராபர்ட் வில்லியம்ஸ். உங்கள் இலட்சியத்தை அடைவதற்கான தைரியமும், தன்னம்பிக்கையும் இருந்தால், நீங்கள் நிச்சயம் வெற்றுப் பெறுவீர்கள் என்பது ராபர்ட் கூறுவார்.

ஜானி டெப்

ஜானி டெப்

"ஒரு நாள்... உன்னை நம்பிடாத மக்கள், உன்னை எப்படி சந்தித்தேன் என்பதை இந்த உலகிடம் பெருமையாக பகிர்ந்துக் கொண்டிருப்பார்கள்..."

ஹாலிவுட்டின் தலைசிறந்த நடிகர்களுள் ஒருவர் ஜானி டெப். தனது ஒவ்வொரு படத்திலும் கதாபாத்திரம் மட்டுமின்றி, தான் ஏற்கும் தோற்றத்திலும் மிகுந்த வித்தியாசத்தை காட்டிக் கொண்டே இருப்பவர். நிஜ வாழ்க்கை எத்தகையது என்பது பற்றி தனது தத்துவங்களில் கூறியுள்ளவர். நீ வெற்றியின் படிகளில் ஏறிக்கொண்டிருக்கும் போது ஒருவரும் உதவமாட்டார்கள். உனது கஷ்டக் காலங்களில் தான் உண்மையான நண்பர் யாரென அறிந்துக் கொள்ள முடியும். அவர்களிடம் நேர்மையாக இரு என இவர் கூறியுள்ளார்.

லியானர்டோ டிகாப்ரியோ

லியானர்டோ டிகாப்ரியோ

"நீ மற்றும் உன்னால் மட்டுமே உனது சூழல்களை மாற்றிக் கொள்ள முடியும். யாரையும், எதையும் அதற்கு காரணம் என சுட்டிக் காட்டாதே."

கோழை தான் தனது தோல்விக்கு மற்றவர் மீது காரணம் கூறுவான். உன் வெற்றியோ, தோல்வியோ அதற்கு முழுப் பொறுப்பும் நீதான் ஏற்க வேண்டும் என கூறுகிறார் டிகாப்ரியோ.

ஜெனிபர் ஆனிஸ்டன்

ஜெனிபர் ஆனிஸ்டன்

"வாழ்க்கையில் வருந்துவதற்கு எதுவும் இல்லை, அனைத்தும் பாடங்களே..."

வருந்திக் கொண்டே ஒரு வாழ்க்கையை முன்னெடுத்து செல்வது, சாபத்திற்கு ஈடான ஒன்று. வாழ்க்கையில் நாம் செய்யும் தவறுகளும் ஒரு பாடம் தான். அது என்ன கற்பித்தது என்பதை நன்கு அறிந்துக் கொண்டு, திருத்திக் கொண்டு செயற்படுங்கள் என கூறுகிறார் ஜெனிபர் ஆனிஸ்டன்.

அடெலி!

அடெலி!

"ஓர் ஆண் உன்னை கண்டு விசில் அடித்தால், திரும்பிப் பார்க்காதே. நீ ஒரு பெண்... நாய் அல்ல..."

இசை உலகில் ஒரு சிறந்த பாடகியாக திகழ்ந்து வருகிறார் அடெலி. பெண்களை வேறு கவர்ச்சி பொருளாக காணும் ஆண்களின் வார்த்தைகளுக்கு, பார்வைக்கு, செயல்களுக்கு பெரும்பாலான பெண்கள் செவி சாய்ப்பதும், திரும்பி பார்ப்பதும் தான் அந்த ஆண்களுக்கு அடுத்த கட்டத்திற்கு செல்ல தைரியம் அளிக்கிறது. எனவே, முதலில் அதை நிறுத்துங்கள் என்கிறார் அடெலி.

சன்னிங் டாடும்!

சன்னிங் டாடும்!

"வாழ்க்கை மிகவும் சிறியது. அதில் எந்த ஒரு அழகிய தருணத்தையும் இழந்துவிடாதீர்கள்... அது மீண்டும் கிடைப்பது அரிதாகிவிடும்..."

சன்னிங் டாடும் ஒரு அமெரிக்க நடிகர். ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையை முழுமையாக வாழ வேண்டும். இந்த வாழ்க்கை ஒருமுரையானது என்பதை அறிந்தவர்கள் யாரும், இதை இழந்துவிட மாட்டார்கள் என்கிறார் சன்னிங் டாடும்.

ஏஞ்செலினா ஜூலி!

ஏஞ்செலினா ஜூலி!

"நான் அக்கறையற்று இருந்தவள்.ஆனால், காரணமே இன்றி கிளர்ச்சியை தூண்டியவள் அல்ல..."

சில சமயங்களில் அக்கறையின்றி இருப்பது கூட நல்லது தான். ஆனால், காரணமே இன்றி, கிளர்ச்சியாளராக உருவெடுப்பது தான் மிகவும் அபாயமானது என்கிறார் ஏஞ்சலினா ஜூலி.

டாம் ஹாங்க்ஸ்!

டாம் ஹாங்க்ஸ்!

ஒருவேளை அந்த செயல் கடினமானதாக இல்லை என்றால் அனைவரும் செய்துவிடுவார்கள். ஆனால், ஒரு செயல் கடினமாக இருந்தால் தான், அது சிறப்புடையதாக இருக்கும்.

எதையும் எளிதில் செய்து முடித்திட வேண்டும் என்ற கொள்கையை முதலில் கைவிட வேண்டும். அந்தந்த செயல் அதற்கான கடினம் மற்றும் உகந்த நேரத்தை கொண்டிருக்கும். அதை குறைக்கவோ, குறுக்கு வழியில் செய்து முடிக்கவோ சிந்திப்பது மிகவும் தவறான செயல்.

தைரியம் மிக்கவர்கள் எந்த சவாலையும் ஏற்று செய்வார்கள். இந்த தன்மை அனைவரிடமும் காண இயலாது.

டாம் க்ரூஸ்

டாம் க்ரூஸ்

"உன்னை சுற்றி இருக்கும் நிறைய பிரச்சனைகளை நீ சமாளிக்க வேண்டும் எனில், ஒன்று நீ வெல்வாய் அல்லது வீழ்வாய். அதில் இருந்து ஒதுங்கிக் கொள்ள முடியும் என்று மட்டும் நினைக்காதே."

பிரச்சனைகள் இல்லாத வாழ்க்கையே இல்லை. உன்னை சுற்றி இருக்கும் பிரச்சனைகள் தான் உன்னை முன்னேற்றி செல்ல வைக்கும். முதலைகளும், சுறாக்களும் சுற்றிக் கொண்டிருக்கும் நீர்நிலை தான் வாழ்க்கை. அதில் வெற்றிப்பெற தான் உனக்கு கைகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. கைகள் நீந்தி வெற்றியடையவே தவிர, கெஞ்சி மன்றாடுவதற்கு அல்ல.

மோர்கன் ப்ரீமேன்

மோர்கன் ப்ரீமேன்

நல்ல ஆரோக்கியமும், சந்தோசமும் தான் அமைதியை தரும், மன அழுத்தம், பதட்டம் இல்லாத வாழ்க்கை மற்றும் உணர்வுகளே உன்னை சிறந்த உயரத்திற்கு அழைத்து செல்லும்.

எந்த ஒரு சூழலாக இருந்தாலும் அதை அமைதியாக எதிர்கொள்ளுங்கள். எடுத்தவுடன் பதட்டப்படுவது உங்களை நிம்மதியாக சிந்திக்க விடாது. இதனால் நீங்கள் சரியான முடிவுகளை எடுக்க தடுமாறுவீர்கள். எனவே, நல்ல ஆரோக்கியம் மற்றும் சந்தோஷம் பெற அமையதியை நாடுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Ten Celebrities and Their Teachings Helps You to Achieve Dreams

Ten Celebrities and Their Teachings Helps You to Achieve Dreams
Story first published: Friday, January 12, 2018, 11:30 [IST]