For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

காட்டிற்குள் குழியை வெட்டி தன் இரண்டு குழந்தைகளையும் அதில் விட்டுச் சென்ற தாய்!

அமெரிக்காவில் இளம் தாய் தன்னுடைய இரண்டு குழந்தைகளுடன் மூவாயிரம் கி.மீ.,தூரம் வரை பயணிக்கிறார்.வழியில் அவர் சந்தித்த பிரச்சனைகள் தன்னையும் இரண்டு குழந்தைகளையும் பாதுகாத்த விதம் என அவரது பயணம் முழுக்க

|

வரலாற்றில் எங்கும் இனிமையான அல்லது அமைதியான நாட்களே நிறைந்திருப்பதில்லை. போராட்டமும் வலியும் நிறைந்த நாட்கள் தான் எதிர்காலத்திற்கான வழியை சொல்கிறது. அதுவே நினைவுகளில் நிலைத்து நிற்கவும் செய்கிறது.

அமைதியாக கடந்து போகும் நாட்களை வழக்கமான ஒன்று என சொல்லி யாரும் நினைவில் கொள்வது கூட கிடையாது. இன்றைய நூற்றாண்டிலேயே பெண்கள் பல்வேறு அடக்குமுறைகளை சந்தித்து வரும் சூழல்நிலையில் பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த பெண்களின் நிலை எப்படிப்பட்டதாய் இருக்கும் என்று நினைத்துப் பாருங்கள்.

அப்போது வாழ்ந்து இன்றளவும் வரலாற்றில் நீங்கா இடம்பிடித்திருக்கும் ஓர் வீரப் பெண்மணியைப் பற்றிய கதை தான் இது!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேரி டோரியன் :

மேரி டோரியன் :

அந்தப் பெண்ணின் பெயர் மேரி டோரியன். அப்பா பிரஞ்சு கன்னடக்காரர் அம்மா லோவே எனப்படுகிற ஒர் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர். பல போராட்டங்களுக்கு மத்தியில் தான் மேரி வளர்ந்தார். 1806 ஆம் ஆண்டு பெர்ரீ டோரியன் என்பவரை திருமணம் செய்து கொண்டார் மேரி.

டோரியன் வெள்ளை இனத்தைச் சேர்ந்தவர்.அமெரிக்காவை பூர்விகமாக கொண்டவர். திருமணம் முடித்த அடுத்தடுத்த ஆண்டுகளில் இரு ஆண் குழந்தைகள் பிறந்தார்கள். ஒரு தாயாக, மனைவியாக மேரியின் வாழ்க்கை அவ்வளவு எளிமையானதாக இருந்திருக்கவில்லை.

குடும்பத்துடன் வா :

குடும்பத்துடன் வா :

பெர்ரீ டோரியன் வியாபாரம் காரணமாக 1810 ஆம் ஆண்டு தாங்கள் வசிக்கும் ஊரிலிருந்து குடும்பத்துடன் குடிபெயர்ந்தார்கள். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம். அதே நேரத்தில் பஞ்சு உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்யும் பசிபிக் ஃபர் கம்பெனியுடன் இணைந்து பணியாற்ற விரும்பினார் பெர்ரீ.

இரண்டு நிறுவனங்கள் போட்டியில் நின்ற போது அவர் இந்த நிறுவனத்தை தேர்ந்தெடுக்க காரணம் இவர்கள் அதிக பணம் கொடுக்கிறேன் என்று சொன்னதால் தான். பணம் கொடுக்கிறோம் என்று சொன்னவர்கள் கூட இன்னொரு கட்டளையையும் விதித்தார்கள்.

அதாவது பெர்ரீ தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகளுடன் இங்கே வரவேண்டும் அவர்களும் பெர்ரீயுடனே வசிக்க வேண்டும் என்பது தான் அது. குடும்பத்துடன் இருந்தால் நிறுவனத்தை ஏமாற்றிவிட்டுச் செல்ல முடியாது அப்படியே சென்றாலும் எளிதில் பிடித்துவிடலாம் என்று திட்டமிட்டனர்.

ஆசியா :

ஆசியா :

அந்த நிறுவனத்தின் தலைவர் ஜான் ஜேக்கப் ஆஸ்டர் கொலும்பியா ஆற்றைக் கடந்து தன் வியாபாரத்தை பெருக்க வேண்டும் என்று விரும்பினார். பசிபிக் கடலின் வடமேற்கு பகுதியில் வியாபாரம் விரிந்தது அதே நேரத்தில் ஆசியாவிலும் தன் வியாபாரத்தை விரிவுப்படுத்த நினைத்தார்.

அதன் காரணமாக 1811 ஆம் ஆண்டு பெர்ரீ குடும்பத்தினர் உட்பட சில நூறு பேர்கள் தங்கள் பயணத்தை துவக்கினார்கள்

இங்கயே தங்கிக் கொள்கிறேன் :

இங்கயே தங்கிக் கொள்கிறேன் :

நாள் முழுக்க நடையாய் நடந்த பிறகு ஒசேஜ் என்ற கோட்டையில் இளைப்பாறினார்கள். அங்கே வாழ்ந்த மக்கள் இவர்களுக்கு உணவு நீர் வழங்கி உபசரித்தார்கள். இரண்டு குழந்தைகளுடன் வந்திருக்கும் மேரி மீது அவர்களுக்கு கரிசனம். சிறப்பு கவனிப்பு வேறு....

இன்னும் பல நாட்கள் பல மைல் தூரம் நடக்க வேண்டும். செல்லும் இடங்களில் எல்லாம் இப்படியான உபசரிப்பு கிடைக்கும் என்று சொல்ல முடியாது நான் மட்டும் என்றால் கூட பரவாயில்லை குழந்தைகளும் இருக்கிறார்கள் என்று யோசித்த மேரி கணவரிடம் சென்று. நான் இந்த மக்களுடன் இங்கேயே தங்கிவிடுகிறேன். நீங்கள் முதலில் சென்று இடத்தைப் பார்த்து விட்டு வாருங்கள் என்கிறாள் மேரி.

மரக்கிளைகளுக்குள் :

மரக்கிளைகளுக்குள் :

மேரியின் அந்த வார்த்தைகளை கேட்ட மாத்திரத்தில் பெர்ரீக்கு கடுங்கோபம். ஏற்கனவே குடித்து விட்டு தள்ளாடிக்கொண்டிருந்த பெர்ரீ மேரியை அடிக்க ஆரம்பித்தார். அவரிடமிருந்து தப்பிக்க நினைத்தவர் காட்டுப்பக்கமாய் ஒடிச்சென்று ஒரு மரத்தின் மீது ஏறி மரக்கிளைகளுக்குள் ஒளிந்து கொண்டார்.

துறத்திச் சென்ற பெர்ரீ அவரைக்காணமல் திரும்பிவிட்டார்.நாள் முழுவதும் அங்கேயே ஒய்வெடுத்தார்கள். மேரியும் பயத்தில் மரக்கிளைகளுக்குள் இருந்து வெளிவரவேயில்லை. பல மணி நேரங்கள் கடந்த பின்பு குழந்தைகளின் அழுகுரல் கேட்டு வெளியே வந்தவர் மீண்டும் கூட்டத்தோடு இணைந்து கொண்டார்.

கடினமான பாதை :

கடினமான பாதை :

பயணத்திட்டம் சரியாக திட்டமிடப்ப்படவில்லை. வழியில் எப்பப்படிப்பட்ட ஆபத்துக்கள் வரும் என்று யாருக்குமே தெரியாது, பயண தூரம் எவ்வளவு, எத்தனை நாட்களில் சென்றடைவோம் என்றும் தெரியாது. அவர்களிடம் போதுமான அளவு குதிரைகளும் இல்லை.

தங்களிடம் இருந்த ஒரு சில குதிரைகளில் சாமன்களை வைத்து கட்டியிருந்தார்கள். அதோடு பெரியவர்கள், ஆண்கள் ஏறிக் கொண்டார்கள். மேரி ஒரு வயது மட்டுமே நிரம்பிய தன் இரண்டாவது குழந்தையை முதுகில் கட்டிக் கொண்டு ஒரு கம்பிளிப் போர்வையினால் போர்த்திக் கொண்டு வழிநெடுகிலும் நடந்தே வர நிர்பந்திக்கப்பட்டார்.

குறுக்கிட்ட ஆறு :

குறுக்கிட்ட ஆறு :

பயணக்குழு ஸ்நேக் ரிவர் என்ற பகுதியை அடைந்தார்கள். ஆற்றங்கரையில் சிறிது நேரம் இளைப்பாரிவிட்டு பயணத்தை தொடர தயாரான போது தான் ஆறு பயங்கர ஆழம் என்பது தெரியவந்தது. அதைவிட இன்னொரு முக்கியமான குழப்பம் எந்தப்பக்கம் செல்வது என்பது...

ஒரு வழியாக ஆற்றின் திசைப்பக்கமே செல்வது என்று முடிவானது. ஆனால் எப்படிச் செல்வது.

குதிரைகள் நடந்து வந்துவிடும், நமக்காக மரத்தால் ஒரு போட் தயாரிக்கலாம். என்று சொல்லி ஆண்கள் எல்லாரும் அங்கேயிருந்த மரத்தை வெட்டி மிதவையை தயார் செய்தார்கள். பயணம் துவங்கியது. பயணம் துவங்கிய ஒன்பதாவது நாளில் தண்ணீரின் ஒட்டம் அதிகமாகி ஓடம் கவிழ்ந்தது. அதில் வைக்கப்பட்டிருந்த உணவுப் பொருட்கள் எல்லாம் அடித்துச் செல்லப்பட்டது. பயணித்தவர்கள் தட்டுத்தடுமாறி உயிரை கையில் பிடித்துக் கொண்டு கரை வந்து சேர்ந்தார்கள். நல்ல வேலையாக அவர்கள் வெகு தூரம் சென்றிருக்கவில்லை ஆனாலும் அவர்களில் ஒருவர் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார்.

மீண்டும் கர்ப்பம் :

மீண்டும் கர்ப்பம் :

இனி இந்த ஆற்றைக் கடந்து செல்லும் முடிவை எடுப்பது ஆபத்தானது. அதனால் தரைவழியே நடக்கலாம் என்று முடிவெடுக்கப்பட்டு எல்லாரும் நடக்க ஆரம்பித்தார்கள். இப்போது இன்னும் சிரமம். கையில் இருந்த சாமான்கள், உணவுப் பொருட்கள் எல்லாம் தண்ணீரில் சென்று விட மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். ஆங்காங்கே உதவியைப் பெற்று பயணத்தை தொடர்ந்தார்கள்.

இதில் மூன்றாவது முறையாக கர்ப்பமடைந்தார் மேரி. அப்போது கூட குதிரையில் பயணிக்க அனுமதிக்கப்படவில்லை, தொடர்ந்து நடந்து வரவே நிர்பந்திக்கப்பட்டாள். அவளுக்கு எட்டாவது மாதம் நெருங்கியது.

ஆபத்தான கட்டம் :

ஆபத்தான கட்டம் :

இன்றைய ஒரீகன் மாவட்டத்தை அவர்கள் அடையும் முன்பாக மேரிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. அங்கேயே கூட்டத்திலிருந்த பெண்கள் பிரசவம் பார்த்தார்கள். மேரிக்கு மூன்றாவது குழந்தை பிறந்தது. சரியான உணவு இல்லை தொடர்ந்து வெகுதூரம் நாட்கணக்கில் நடப்பது ஆகியவை மேரியை வெகுவாக பாதித்திருந்தது. மேரியும் குழந்தையும் ஆபத்தான கட்டத்திலேயே இருந்தார்கள்.

நாட்கள் ஓடியது. மூன்று மாதங்கள் கழித்து அவர்கள் கிரேட் ரோண்டே வேலி என்ற இடத்தை அடைந்திருந்தார்கள். அங்கே உமடிலா இந்தியர்களை சந்திக்கிறார்கள். அங்கிருக்கும் பழங்குடியினப் பெண், மிகவும் வலுவிழந்து காணப்பட்ட மேரியையும் அவளின் குழந்தையையும் பார்த்து பரிதாபப்பட்டு உணவு அளித்து உபசரித்தார்கள்.

புதிய தலைவலி :

புதிய தலைவலி :

குழந்தைக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது, துரதிஷ்டவசமாக குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இதைவிட மிகப்பெரிய தலைவலி மேரிக்கு வழியில் காத்திருந்தது. மீண்டும் பயணிக்க ஆரம்பித்தார்கள். கிட்டத்தட்ட பதினோரு மாதங்கள் நடந்த பின்பு அவர்களது பயண முடிவு இடமான அஸ்டோரியாவை வந்தடைந்தார்கள்.

அவர்களுக்கு முன்னதாகவே அங்கு இருந்தவர்கள் கோட்டை கட்டும் பணியை ஆரம்பித்திருந்தார்கள். அங்கே பெர்ரீ தன் குடும்பத்தினருடன் சுமார் ஒன்றரை வருடங்கள் வேலை செய்திருப்பார். அடுத்து இன்னொரு வேலை பெர்ரீக்கு கொடுக்கப்பட்டது. இம்முறை காட்டுவிலங்குகளை எல்லாம் எளிதில் கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்ட ஓர் இனக்குழுவினருடன் வரும் வழியில் தங்கள் உடைமைகளைகளையும் தங்களுடன் பயணித்த ஒருவனை இழந்தார்களே அதே ஸ்நேக் ரிவரை நோக்கி பயணிக்க ஆரம்பித்தார்கள். பெர்ரீயுடன் மனைவி மேரி மற்றும் இரண்டு குழந்தைகளும் சேர்ந்து கொண்டார்கள்.

கணவருக்கு எச்சரிக்கை :

கணவருக்கு எச்சரிக்கை :

ஸ்நேக் ரிவருக்கு முன்பாக ஒரு கேம்ப் இருந்தது. மேரி அங்கே குழந்தைகளுடன் தங்கிக் கொண்டாள். அவளுடன் இன்னும் சிலரும் அங்கே தங்கினார்கள். பெரும்பாலானோர் மரக்கிளைகளுக்குள் ஒளிந்து கொண்டார்கள். வட அமெரிக்காவில் வாழக்கூடிய ஷோஷோனே என்ற பழங்குடியின மக்கள் மேரியிடம் நட்பாய் இருந்தார்கள். அவர்கள் பனோக்ஸ் என்ற பழங்குடியினர் வரிசையாக மக்களை தாக்கி கொள்ளையடித்து வருகிறார்கள். நாங்கள் எல்லாரும் தப்பித்துவிட்டோம் நீயும் இங்கிருந்து உடனடியாக கிளம்பு என்கிறார்கள்.

உடனடியாக குழந்தைகளுடன் குதிரையில் ஏறிய மேரி நேரே தகவலை கணவனுக்குச் சொல்ல புறப்படுகிறாள்.

எங்கேயிருக்கிறீர்கள் பெர்ரீ :

எங்கேயிருக்கிறீர்கள் பெர்ரீ :

அவர்கள் இருப்பதாய் சொன்ன இடத்தில் இல்லை.... நடுங்கும் குளிரில் இரண்டு குழந்தைகளுடன் குதிரையில் பயணித்துக் கொண்டிருந்தாள் மேரி... ஒரு பக்கம் தங்களுடைய ஒரே ஆதரவான கணவனைக் காணவில்லை,இன்னொரு பக்கம் அந்த பனோக்ஸ் கூட்டத்தின் கண்களில் சிக்கிவிடக்கூடாது. நான் மட்டும் என்றால் கூட பரவாயில்லை என்னை நம்பி இரண்டு உயிர்கள் வேறு இருக்கிறதே.... கிட்டத்தட்ட மூன்று நாட்கள் பயணம் செய்து பெர்ரீ வசித்த கேம்ப்பிற்கு வந்தடைந்தார் மேரி.

அங்கே அவருக்கு பெரும் அதிர்ச்சியே காத்திருந்தது, மேரி வருவதற்கு முன்னரே அங்கே பனோக்ஸ் நுழைந்து வெறியாட்டத்தை நிகழ்த்தியிருந்தது. பெர்ரீயும் இதில் உயிரிழந்திருந்தார்.

பயணம் செய்.... :

பயணம் செய்.... :

கில்லீஸ் லிக்ளர்க் என்பவன் மட்டும் படுகாயங்களுடன் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு கிடந்தான். அவனை குதிரையில் ஏற்றி மீண்டும் மூன்று நாட்கள் பயணித்து மேரி வசித்த இடத்திற்கு வருவதற்குள் கில்லீஸ் இறந்துவிட்டான். வழியிலேயே அவனை இறக்கிவிட்டு சற்று தூரமே இருந்த மேரி தங்கியிருந்த கேம்பிற்கு வந்தாள். அங்கேயும் எல்லாரும் படுகொலை செய்யப்பட்டுக் கிடந்தார்கள்.

இனி என்ன செய்வது, எங்கே செல்வது என்று ஒன்றும் புரியவில்லை மேரிக்கு. மூன்று உயிரை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு மேரியின் தலையில் தான் விடிந்திருந்தது. பனிக்காலம் ஆரம்பித்திருந்தது, தாங்கமுடியாத குளிர் அதற்காகவாவது முதலில் தங்குவதற்கு ஓர் இடம் வேண்டும். அதைத் தேடி பயணத்தை தொடர்ந்தாள். ஏதும் கிடைக்காமல் கிடைத்த மரக்கிளைகளைக் கொண்டு ஓர் தங்குமிடத்தை உருவாக்கிக் கொண்டாள். ஆனால் அங்கே அதிக நாட்கள் தங்க முடியவில்லை. கையில் இருந்த உணவு காலியானது.

உணவு அவசரம் :

உணவு அவசரம் :

முடிந்தவரையில் பட்டினி கிடந்தார்கள். இதற்கு மேலும் பொருத்துக் கொள்ளமுடியாது என்ற கட்டம் வந்த போது தாங்கள் பயணித்த குதிரையை வெட்டி அதை சமைத்து உணவாக சாப்பிட்டார்கள். குதிரையின் முடியைக் கொண்டு எலி, மற்றும் அணிலைப் பிடிக்க பொறிகளை தயார் செய்தாள் மேரி.

குழந்தைகளுக்காக அங்கு விளைந்த பெர்ரீ பழங்களை சேகரித்துக் கொண்டாள். இப்படியே 53 நாட்கள் வரை மூன்று பேரும் தாக்குப் பிடித்தார்கள்.

கடினமான முடிவு :

கடினமான முடிவு :

பனிக்காலம் முடிந்து வெயில் காலம் நெருங்கியது. அங்கிருந்து மேற்கு நோக்கி பயணிக்க ஆரம்பித்தாள். ஆனால் இரண்டு குழந்தைகளும் மிகவும் வலுவிழந்துவிட்டார்கள். அவர்களால் இனி பயணத்தை தொடர முடியுமா என்ற நிலை உருவானது. நிலத்தில் குழியைத் தோண்டினால். தனது போர்வையை விரித்து இரண்டு குழந்தைகளையும் படுக்க வைத்தாள். உங்களை வந்து அழைத்துச் செல்கிறேன் அதுவரை இங்கேயே இருங்கள் என்று சொல்லி மேரி மட்டும் தனியாக நடக்க ஆரம்பித்தாள். சில நாட்கள் பயணத்தில் வாலா என்ற கிராமத்தை வந்தடைந்தாள்.

அங்கிருப்பவர்களிடம் விஷயத்தைச் சொல்லி உதவி கேட்க அவர்களும் உதவ முன் வந்தார்கள். மேரி சொன்ன அடையாளத்தை வைத்து குழியில் உறங்கிக் கொண்டிருந்த இரண்டு குழந்தைகளையும் உயிருடன் மீட்டு வந்தார்கள்.

All Image Source

வாழ்க்கை :

வாழ்க்கை :

மேரியின் வாழ்க்கை அதோடு முடிந்து விடவில்லை. பின்னர் லூயிஸ் வெனியர் என்பவரை திருமணம் செய்து கொண்டார் அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. லூயிஸ் இறந்த பின்னர் ஜீன் டவ்பின் என்பவரை திருமணம் செய்து கொண்டார். குடும்பத்துடன் ஒரீகனுக்கு மாறினார்கள். அங்கே இவர்களுக்கு இரண்டு குழந்தை பிறந்தது. ஐந்து குழந்தைகளுடன் சந்தோஷமாக வாழ்க்கையை நடத்தினார்கள். 1890 ஆம் ஆண்டு மேரி தன்னுடைய 63வது வயதில் உயிரை விட்டார்.

அமெரிககவின் கிழக்கிலிருந்து மேற்குப் பகுதியை நோக்கிஎன்பது 3490 கி.மீ பயணம் மேற்கொண்டதைத் தான் ஒரிகன் ட்ரையல் என்கிறார்கள். இந்த பயணத்தில் பங்கேற்ற பெரும்பாலானோர் வழியில் சந்தித்த இடர்பாடுகளினால் தங்கள் உயிரைவிட்டார்கள். ஆனால் மேரி மட்டுமே இறுதி வரை உயிர்பிழைத்திருந்தார். வரலாற்றில் மேரியின் பெயர் இன்னமும் நீடிப்பதற்கு காரணம் அவரது தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் மட்டுமே.... இன்றைக்கு மேரியின் பெயரில் ஒரிகனில் சாலைகள், பூங்காக்கள் இருக்கின்றன.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: insync pulse women
English summary

Story About Women Survivor Of Oregon Trails

Story About Women Survivor Of Oregon Trails
Story first published: Tuesday, May 8, 2018, 17:39 [IST]
Desktop Bottom Promotion