For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கர்பிணிகளைக்கூட விட்டு வைக்காத மிருகங்கள்!

பாலியல் கொத்தடிமைகளாக அனுப்பப்படும் பெண்கள் குறித்து ஒரு பத்திரிக்கையாளர்

By Staff
|

இத கண்டிப்பா பண்ணியாகணுமா? கேள்வி பிறரிடமிருந்து மட்டுமல்ல என்னிடமிருந்தும் எழுந்து கொண்டேயிருந்தது. வாழ்க்கை குறித்து புதிய பார்வையை எனக்கு கொடுத்திருந்தது, திடிரென்று காணமல் போகும் குழந்தைகள், கடத்தப்படும் பெண்கள் குறித்து ஆவணப்படம் எடுக்க வேண்டும் என்ற எண்ணம் .

ஒரிரு நாளில் இந்த முடிவு எடுக்க வில்லை, பல நாட்கள்... மாதங்கள் வருடங்கள் என உருண்டோடி சிறிது சிறிதாக வளர்ந்திருந்த ஓர் ஆசை அது, ஒரு பெண்ணாக பெண் பாலியல் தொழிலாளிகள் குறித்த சந்தேகங்கள் மனதில் எழுந்ததில் தவறேதும் இல்லையே... நிறைய பயணங்கள் வலி மிகுந்த மனிதர்கள் என சுமார் பத்துவருடங்கள் கடந்திருந்தது. இரண்டு நாடுகள் பயணித்திருந்தேன்.

எனக்கு விற்கப்படும் பெண்கள் குறித்து ஆர்வம் மேலோங்க இன்னொரு முக்கிய காரணம் எங்கள் குடும்பத்திலிருந்தே.... சமூகத்திலிருந்தே வறுமையால் பெண்களை விற்றார்கள். இன்னமும் அப்படியான வழக்கம் இருந்து கொண்டிருக்கிறது என்பது தான் கொடுமை. ஓரளவுக்கு படித்த மக்கள் வேலை வாய்ப்புகளை தேடி புலம்பெயர்ந்து வெளியூர்களுக்கு வந்து விட கொஞ்சம் கொஞ்சமாக இந்த வழக்கம் குறைந்திருக்கிறது, ஆனால் பூர்விகமாக இன்னமும் அங்கே வாழும் மக்கள்????

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1

#1

நான் இந்த பயணத்திற்கு கிளம்புவதற்கு முன்னால் அம்மா இப்படி கேட்டார்..... வறுமையின் கோரப்பிடியில் சிக்கி, ஒரு வேளை உணவுக்கு கூட வழியின்றி ஊரை விட்டே வந்துவிட்டோம், மீண்டும் ஏன் அந்த கொடுமையான வாழ்க்கையை தேர்ந்தெடுத்து அங்கே போக வேண்டும் என்று நினைக்கிறாய்?

நம் உறவுகள் இன்னமும் அங்கே இருக்கிறார்களே அம்மா.....

அம்மாவால் இதற்கு எந்த பதிலும் சொல்ல முடியவில்லை அமைதியாகிவிட்டார்.

#2

#2

அங்கே பயணம் மேற்கொள்வதற்கு முன்னால் நாங்கள் யார்? ஏன் நம் வீட்டு பெண்களை விற்கும் அளவிற்கு தள்ளப்பட்டோம்? எங்கிருந்து இந்த வழக்கம் வந்தது என்று தெரிந்து கொள்ள விரும்பினேன். இயல்பிலேயே புகைப்படங்களை பிடிப்பதில் ஆர்வம் அதிகம்.

பத்திரிகையாளரும் கூட. எங்கு போனாலும் என் கேமராவுடன் தான் பயணிப்பேன், ஆரம்பத்தில் எங்கள் மூதாதையர்கள் வாழ்கின்ற ஊருக்குச் செல்லவேண்டும் அங்கே விற்கப்பட்ட பெண்கள்,அல்லது பாலியல் தொழிலிருந்து மீண்டு வந்தவர்கள் யாராவது இருந்தால் சந்திக்க வேண்டும், புகைப்படம் எடுக்க வேண்டும் என்று ஆர்வம்.

#3

#3

ஆனால் அங்கு பின்பற்றப்படும் சில நடைமுறைகளினால் நான் நினைத்த காரியம் நடக்குமா என்பதில் சில சந்தேகங்கள் இருந்தது. ஒரு பெண் கடத்தப்பட்டோ அல்லது வீட்டில் உள்ள உறுப்பினர்களாலோ நிர்பந்திக்கப்பட்டு பாலியல் தொழிலுக்கு தள்ளப்படால் அல்லது விலை பேசி விற்கப்படுகிறாள் என்றால் அவள் மீண்டு வந்து இயல்பு வாழ்க்கை..... அதுவும் அதே ஊரில் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லையே.....

Image Courtesy

#4

#4

எப்படியோ ஊருக்கு போய் இறங்கிவிட்டேன், வக்கீல் நண்பர்கள், ஊரில் செயல்பட்டுக் கொண்டிருந்த சமூக செயற்பாட்டாளர்கள் உதவியுடன் பாலியல் தொழிலிருந்து மீண்ட ஒரு பெண்ணை சந்திக்க சென்றோம்.

பல கட்ட முயற்சிகள், பல நாட்கள் காத்திருப்புக்கு பிறகு இந்த பெண் குறித்த அடையாளமும் அவர் இருக்கிற இடமும் எங்களுக்கு தெரிந்திருந்தது.

Image Courtesy

#5

#5

முதன் முதலாக சந்திக்கப்போகிறோம், அவரிடம் என்னென்ன கேள்விகள் கேட்க வேண்டும் என்று முன் தயாரிப்பு செய்து கொண்டேன். புகைப்படம் எடுக்க வேண்டும்,பெரும்பாலும் பெண்கள் புகைப்படம் எடுக்க வேண்டும் என்று சொன்னால் தயங்குவார்களே... யாரென்றே தெரியாத ஒருத்தி திடீரென்று நான்கைந்து பேருடன் கூட்டமாக வருகிறாள் புகைப்படம் எடுக்க வேண்டும் என்கிறாள் என்று சொல்லி தயக்கம் காட்டினாள் எப்படி அவரை சமாதானப்படுத்தி புகைப்படம் எடுப்பது என்று யோசித்தேன்.

Image Courtesy

#6

#6

மறுநாள் நாங்கள் அவர்களின் வீடு தேடி சென்றோம்.நாற்பதுகளில் இருந்த ஒரு பெண் எங்களை வரவேற்றர. மிகச்சிறிய வீடு, ஒரேயொரு அறை மட்டும் தானிருந்தது, நான் மட்டும் உள்ளே சென்றேன் என்னுடன் வந்தவர்கள் வாசலிலேயே உட்கார்ந்து கொண்டார்கள்.

இளவயது, அவளுக்கு வயது இருபது இருக்கலாம். நீங்கள் தேடி வந்தது இவளைத்தான் என்று கைகாட்டினார். எப்போதும் ஒரு வகையான பயத்துடன் தான் என்னைப் பார்த்தாள்.

Image Courtesy

#7

#7

கேமராவை எடுத்தேன், கேமராவைத் பார்த்ததுமே முகத்தில் கலவரம் பரவியதை கவனித்தேன், திடிரென்று பரபரப்பு ஆனாள் அந்த 20வயது பெண், சரி விருப்பமில்லை என்று உணர்ந்தேன்.

அவள் வாழ்ந்த சூழ்நிலையையும் அவளையும் பார்த்த பிறகு எனக்கு அப்போது தான் இன்னொரு விஷயம் யூகிக்க முடிந்தது.

Image Courtesy

#8

#8

பாலியல் தொழிலுக்கு தள்ளப்பட்டு பொன் அங்கிருந்து தப்பித்து மீண்டு வந்திருக்கிறாள். இப்போது கூட்டமாக நாங்கள் வந்திருக்கிறோம், நான் வேறு புகைப்படம் எடுக்க என்று சொல்லி கேமராவை தூக்கிக் கொண்டிருக்கிறேன்.

ஒரு வேளை உணவுக்கு கூட சிரமப்பட்டுக் கொண்டிருக்கும் அந்த வீட்டினர் மீண்டும் பாலியல் தொழிலுக்கு அனுப்பத்தான் எங்களை அழைத்து வந்திருக்கிறார் என்று அந்த பெண் நினைத்துவிட்டாள்?

Image Courtesy

#9

#9

ஆம், அப்படி நினைக்கவும் சாத்தியம் இருக்கிறது தானே.... அங்கே போன போது தான் எனக்கு இது புரிந்தது. கேமராவினை கீழே வைத்தேன். 40வயதுகளில் இருந்த பெண்மணி வெளியேறினார். இப்போது நானும் அவளும் மட்டும் தான் இருந்தோம்.

முகத்தை மிகவும் இறுக்கமாக வைத்துக் கொண்டு 20வயதில் இருந்த சிறுமியும் எழுந்து கொண்டாள். எனக்கு எதுவும் புரியவில்லை. இருவருக்கும் விருப்பமில்லையா?

Image Courtesy

#10

#10

எழுந்த அந்த சிறுமி தன் உடையை களைக்க ஆரம்பித்தாள், மேலாடையை கழற்றிவிட்டாள், பதற்றத்துடன்.... ஏய் என்ன செய்கிறாய் என்று கேட்டேன்.

புகைப்படம் தானே அக்க எடுக்க வேண்டும் எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி நிர்வாணமாக போஸ் கொடுத்து நிற்கிறாள்.

Image Courtesy

#11

#11

வலிந்து திணிக்கப்பட்ட ஓர் முக பாவம் இப்போது அவளிடம் இருந்தது, அதுவரை பயந்த சுபாவும் குழந்தை முகமில்லை, நிர்வாணமாக பாலியல் தொழிலாளி எப்படி முகத்தையும் உடலையும் வைத்துக் கொள்வாரோ அதே போல இருந்தாள்.

ஒரு கணம் ஸ்தம்பித்து தான் போனேன், எழுந்திரு முதலில் நான் ஒண்ணும் உன்னை பாலியல் தொழிலுக்கு அழைத்து போக வரவில்லை, உடையை போட்டுக் கொள் என்றேன்.

Image Courtesy

#12

#12

அவளுக்கு நான் சொன்னது அதிர்ச்சியாக இருந்திருக்கும் போல.... அன்றைக்கு ஹோட்டலில் போட்டோ எடுத்த போது கொடுத்த உடை இருக்கிறது, அதை போட்டுக் கொள்ளவா? கஸ்டமருக்கு நிர்வாணமான போஸ் வேண்டாமா?

அந்த ஆடை மிகவும் செக்ஸியாக இருக்கும் என்றாள்.

Image Courtesy

#13

#13

சுவற்றில் மாட்டியிருந்த அழுக்கடைந்த பையிலிருந்து என்னிடம் சொன்ன உடையை தேடியவளை பிடித்து இழுத்தேன், நீ கழற்றிப் போட்ட இந்த உடையை அணிந்து கொள், நான் பாலியல் தொழிலுக்கு உன்னை அழைக்க வரவில்லை என்று சொல்லி, நான் யார் எதற்காக இங்கே வந்திருக்கிறேன், இப்போது அவளிடம் என்ன எதிர்ப்பார்க்கிறேன் வெளியில் உட்கார்ந்திருப்பவர்கள் எல்லாம் யார் என்பதைச் சொன்னேன்.

Image Courtesy

#14

#14

பெரும் ஏமாற்றம் அவள் முகத்தில்.... நான் கூட நாளைக்கு சூடா நல்லா வயிறார சாப்பிடலாம்னு நினச்சேன் நீ நாள் பூரா உக்காந்து பேசிட்டு போவ இந்நேரத்துக்கு நாலு கஸ்டமர பாத்திருக்கலாம்னு எங்க அம்மா அடிக்குமே என்றாள்.

பர்ஸிலிருந்த காசை எடுத்து கொடுத்தேன்.

Image Courtesy

#15

#15

உடையை மாட்டிக் கொண்டு பேசத் தயாரானாள். கோர்வையாக இதன் பிறகு இந்த விஷயத்தை சொல்ல வேண்டும் என்ற எந்த திட்டமிடலும் இல்லை, அவளாக ஆங்காங்கே நினைவுபடுத்தி பேசத் துவங்கினாள்.

இங்கு கிளம்பும் வரையிலும் என்ன கேள்வி கேட்க வேண்டும்? எப்படி அணுக வேண்டும் என்று திட்டமிட்டது எல்லாம் வீண் என்பது அப்போது தான் உரைத்தது, அவளாக பேசட்டும் அவள் பேசுவதை கேட்கும் காதுகளாக மட்டும் நாமிருப்போம் என்று நினைத்து மவுனமாக முதல் கேள்வியை மட்டும் தான் கேட்டேன். அவளாகவே தொடர்ந்தாள்.

Image Courtesy

#16

#16

அம்மாகிட்ட அஞ்ஞாயிரம் ரூபாயை கொடுத்து என்னை கூட்டிட்டு போனாங்க நாலு நாள் பஸ்ல, லாரிலன்னு பயணம் அப்பறம் அழுக்கான கட்டிடம் என்னைய வித்தப்போ பதினாலு வயசு அங்க என்ன மாதிரியே நிறைய சின்ன பொண்ணுங்க இருந்தாங்க.

மொத்தல்ல எல்லாத்தோட டிரஸ்ஸைய கலட்ட சொன்னாங்க... எல்லாரும் அடம் புடிச்சாங்க, அதுக்கு பயங்கரமா அடி, சில புள்ளைங்க அத பாத்து பயந்துட்டு டிரஸ்ஸ கலட்டிட்டாங்க

Image Courtesy

#17

#17

ஒரு நாள் பூரா அந்த ரூம்ல உடம்புல ஒட்டுத்துணியில்லாம நிர்வாணமா நின்னுட்டு இருந்தோம்.

எத்தன பேரு?

ஒரு முப்பது பேர் இருந்திருப்போம். அப்பறம் எல்லாரையும் நிர்வாணமா போட்டோ எடுப்பாங்க. அப்பறம் ஆம்பளைங்கள கூட்டிட்டு வந்து பக்கத்துல நிக்க வச்சு, கூட படுக்க வச்சு நிறைய போட்டோ எடுப்பாங்க

Image Courtesy

 #18

#18

முதல் பத்து நாளைக்கு வெறும் போட்டோ மட்டும் தான், சில சமயம் வீடியோவும் எடுப்பாங்க அதுக்கப்பறம் அத வச்சு தான் எங்கள மிரட்டுவாங்க.... இனிமே நீ எங்க வேணாலும் போய்க்கோ நீ இந்த இடத்து விட்டு போனா? இந்த போட்டோ வீடியோ எல்லாம் உங்க வீட்டுக்கு அனுப்பிடுவோம், போஸ்டர் அடிச்சு ஒட்டுவோம்னு மிரட்டுவாங்க.

அதனாலேயே கேமரவ பாத்தா எங்களுக்கு பயம்.

Image Courtesy

#19

#19

நிறைய பேர் வீட்டுக்கு தெரியாம ஓடி வந்திருப்பாங்க, இல்லாட்டி கடத்திட்டு வந்திருப்பாங்க அவங்க எல்லாம் இந்த போட்டோ விஷயத்துல விழுந்திருவாங்க, என்னைய போல சிலர் அவங்க அம்மா அப்பாவே காசு வாங்கிட்டு அனுப்பியிருப்பாங்கள்ல நமக்கு போட்டோ வீடியோ பத்தின கவலை எல்லாம் இருக்காது.

அதனால இந்த போட்டோவ நீ படிச்ச ஸ்கூல்ல கொடுப்போம்னு சொல்வாங்க. அம்மா அப்பாவுக்கு தெரிஞ்சாலும், கூட படிக்கிற பிள்ளைங்களுக்கு தெரிஞ்சா அசிங்கம் தான்.

Image Courtesy

#20

#20

அப்பறம் பழகிடும், கஸ்டமர் வர ஆரம்பிச்சிடுவாங்க, கஸ்டமர் கூட நாங்க இருக்கிறதெல்லாம் வீடியோ எடுப்பாங்க,சில சமயம் எங்களுக்கு புது டிரஸ் எல்லாம் குடுப்பாங்க என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போது தான், இன்னும் அவர்களைப் பற்றியும் அவர்களின் உலகத்தைப் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியது.

Image Courtesy

#21

#21

அது அத்தனை எளிதாக காரியமில்லை, இப்படி கடத்தப்படுகிற பெண்கள் எங்கு,யார் மூலமாக கை மாறுகிறாள் என்பதை முதலில் கண்டுபிடிக்க வேண்டும்.

ஒரு ஆணின் துணையில்லாமல் இதனை நாம் மேற்கொள்ள முடியாது, அதற்கு செலவழிக்க நிறைய செலவழிக்க வேண்டும், அந்த அளவுக்கு வசதியும் என்னிடம் இல்லை, கேமராவை தூக்கினாள் எல்லாரும் உண்மையைப் பேசுவார்கள், பதில் சொல்லுவார்கள் என்று எதிர்ப்பார்க்கவும் முடியாது.

Image Courtesy

#22

#22

அதனால் நானே பாலியல் தொழில் செய்திடம் பெண்களில் ஒருத்தியாக மாறினேன், அப்படியே என்னை அடையாளப்படுத்திக் கொண்டேன், இந்த 20வயது பெண் சொன்ன தகவல்களின் படி, சிலரது தொடர்புகள் கிடைத்து அங்கிருக்கும் ஒருங்கிணைப்பாளர் பெண்ணிடம் மட்டும் நான் யார் எதற்காக வந்திருக்கிறேன் என்ற உண்மையை சொல்லி சேர்ந்து கொண்டேன்.

வாரம் குறிப்பிட்ட தொகை தனக்கு கண்டிப்பாக வேண்டும் என்று சொல்லிவிட்டார், ஒப்புக் கொண்டு வெளியில் நண்பர்களிடம் ஏற்பாடு செய்து கொடுத்தேன்.

Image Courtesy

#23

#23

எக்கச்சக்காமன தகவல்களை திரட்ட முடிந்தது. அதோடு பல திடுக்கிடும் தகவல்களும் கிடைத்தது. இதை ஓர் ஆவணப்படமாக எடுக்க வேண்டும், இந்த உலகம் எப்படி இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதை மக்களுக்கு சொல்ல வேண்டும் என்று நினைத்தேன்.

பல இடங்களில் என் உடையில் ரகசிய கேமரா பொருத்திக் கொண்டு போய் வீடியோ பதிவு செய்தேன்.

Image Courtesy

#24

#24

பல ஊர்களுக்கும் சென்று இந்த ஆவணப்படத்தை திரையிட்டேன் அப்போது என்னிடம் கேட்கப்பட்ட பெரும்பாலான கேள்விகள் இவை தான்?

எதன் தாக்கத்தினால் இப்படியொரு ஆவணப்படம் எடுக்க வேண்டும் என்று நினைத்தீர்கள்?

இப்படியான பாலியல் கூடங்கள் செயல்படுவதற்கு ஆண்கள் மட்டுமே காரணமா?

இதற்கான தீர்வு என்ன?

Image Courtesy

 #25

#25

முதல் கேள்விக்கான விடையை கட்டுரையின் ஆரம்பத்திலேயே சொல்லிவிட்டிருக்கிறேன், அதனால் நேரடியாக இரண்டாவது கேள்விக்கு செல்வோம். ஆண்கள் மட்டுமே இதற்கு முழு பொறுப்பு என்று நாம் சொல்ல முடியாது.

இதில் பெண்களின் பங்கும் இருக்கிறது, இந்த உலகத்தை விட்டு வெளியில் இருக்கும் நமக்கெல்லாம் பெரும் ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் கொடுக்கும் என்றே நினைக்கிறேன்.

Image Courtesy

#26

#26

ஒரு பெண் பல கைகள் மாறி, இவர்களின் கைக்கு வர எந்த இடத்திலும் ஒரு பெண்ணின் உதவியும் இருக்காது என்று நினைக்கிறீர்களா? பணம், லாபம்,வறுமை, என எதோவொரு காரணத்தை சொல்லி அவர்கள் மீதும் இது நிர்பந்திக்கப்படுகிறது.

பெண்ணை ஒரு பொருளாக பார்ப்பதினால் தான், அவளை எப்படி வேண்டுமானாலும் இயக்கலாம் என்ற எண்ணம் ஆள்மனதில் இருக்கிறது.

Image Courtesy

#27

#27

அப்படி உங்களை எதிர்க்க வேண்டும், அல்லது நீங்கள் சொல்வதை மீறி, தன்னுடைய விருப்பப்படி எதாவது செய்ய வேண்டும் என்று நினைத்து வெளியேறும் பெண்களுக்கு தண்டனையாகத் தான் ஆணவக் கொலை, முகத்தில் ஆசிட் வீசுவது,வெட்டிக் கொலை செய்வது என மொத்தமாக அழித்து விடுகிறீர்களே....

நிச்சயமாக ஒட்டு மொத்த சமூகமும் இதற்கு காரணம் என்று தான் சொல்ல வேண்டும்.

Image Courtesy

#28

#28

இந்த தொடர் பயணத்தில் என்னை அதிர்ச்சியூட்டிய ஒரு இடம், ஒரு சம்பவம் என்றால் அது இது தான். இங்கே எல்லாமே சந்தை தான், பெரிய சந்தைக்கூட்டத்தில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். துபாயில் பாலியல் தொழிலாளிக்கு மட்டுமே அல்லது அங்கே அதிக தொடர்புடைய நபர்களுக்கு மட்டுமே தெரிந்த ஒரு விஷயம் இது. கேட்டதுமே அதிர்ந்து போனேன்.

#29

#29

இந்த இடத்தில் மட்டும் பெண்களுக்கு இரண்டு மடங்கு மூன்று மடங்கு விலை பேசப்படுகிறது. ஒரு இரவுக்கான விலை மட்டுமே இருபதாயிரம் வரை நீள்கிறது, சில நேரங்களில் இன்னமும் அதிக தொகை கொடுக்கிறார்கள்.

இங்கே மட்டும் ஏன் இவ்வளவு விலை?

இங்கே இருக்கும் பெண்கள் கர்பிணிகள்..... சில கஸ்டமர்கள் கர்பிணிப் பெண் கிடைக்குமா என்றே கேட்டு வருவார்கள். அவர்கள் கேட்கும் தொகை கொடுக்கக்கூடியவரா என்பதை அறிந்து,பணத்தை வாங்கிக் கொண்டு இங்கே அனுப்புவோம்.

#30

#30

ஒரு பத்திரிக்கையாளராக அண்டர் கவர் ஜர்னலிஸம் செய்து விஷயத்தை மட்டும் படம் பிடித்து மக்களுக்கு காட்டினால் போதும் என்று நினைக்காமல் அந்த பிரச்சனைக்கான தீர்வு என்ன அது இயல்பு வாழ்க்கையில் சாத்தியப்படுத்த முடியுமா? அப்படி சாத்தியப்படுத்த என்ன செய்ய வேண்டும் என சிந்தித்து அதற்காகவும் உழைத்திருக்கிறேன்.

எனது ஆயுதம் எனது வேலை தான் என்பதை நான் முழுவதுமாக உணர்ந்திருக்கிறேன்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: sex insync pulse
English summary

Sexual Slavery Caught By Under Cover Journalist

Sexual Slavery Caught By Under Cover Journalist
Story first published: Saturday, March 10, 2018, 15:37 [IST]
Desktop Bottom Promotion