பார்ன் வீடியோக்கள் பார்க்க சிறை கைதிகளுக்கு அனுமதி - எதுக்க்க்க்கு?

Posted By:
Subscribe to Boldsky

நாம் அறிந்த கேள்விகளுக்கான தெரியாத பதில்களும், அறிந்த விஷயங்கள் குறித்த தெரியாத தகவல்களும்...

இன்றைய டைம் பாஸ் #010ல் நாம் காணவிருக்கும் சில சுவாரஸ்யமான தகவல்கள்...

  • உலகிலேயே அதிக ஊழியர்கள் பணி செய்யும் துறை எது, எந்த நாட்டில் உள்ளது?
  • நீங்கள் உட்கொள்ளும் மருந்துகளில் முப்பது சதவிதம் அவசியமே இல்லாமல் எழுதி தரப்படும் மருந்துகள் என்று அறிவீர்களா?
  • எந்த நாட்டில் சிறைக் கைதிகள் பார்ன் வீடியோக்கள் பார்க்க வசதி ஏற்பாடு செய்து தரப்பட்டுள்ளது என்று தெரியுமா?
  • வருடத்தில் இந்த நாட்டில் பார்கிங் தேடுவதற்கு மட்டும் 17 மணிநேரம் செலவு செய்கிறார்களாம்...
  • அமெரிக்காவில் ஒரு நபர் இறந்தால்... இந்த நாட்டில் 47 தலை உருளும்... இது இரண்டாம் உலகப்போரில் நடந்த சங்கதி...
  • ரியோவில் ஒலிம்பிக் நடத்துவதற்காக சொந்த நாட்டிலேயே நாடு கடத்தப்பட்ட மக்கள்... என்று நீதி கிடைக்கும்...
  • உடலில் என்ன தாக்கம் உண்டானால் இரத்தம் பச்சை நிறமாக மாறும், அதனால் ஏற்படும் விளைவுகள் என்னென்ன?
  • காமசூத்திரத்தில் நீங்கள் அறிந்தது 20% தான், மீதம் 80% என்ன கூறுகிறது தெரியுமா?
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அதிக ஊழியர்கள்!

அதிக ஊழியர்கள்!

ஒரு துறையில் அதிக ஊழியர்கள் கொண்டுள்ள பட்டியலில் 3.2 மில்லியன் ஊழியர்களுடன் அமெரிக்காவின் பாதுகாப்பி அமைச்சகம் உலகிலேயே முதல் இடத்தில் உள்ளது.

இதற்கு அடுத்த இடங்களில் சீனாவின் மக்கள் விடுதலை இராணுவம் (2.3 மில்லியன்) , வால்மார்ட் (2.1 மில்லியன்), மெக் டொனால்ட் (1.6 மில்லியன்) போன்றவை இடம்பிடித்துள்ளன.

மருந்து!

மருந்து!

அமெரிக்காவில் மூன்றில் ஒரு ஆண்டிபயாடிக் மருந்தானது அவசியமற்றது, தேவையில்லாமல் எழுதித் தரப்படுகிறது என்று ஒரு ஆய்வில் கண்டரியப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் மருத்துவர்கள் எழுதித்தருவதில் குறைந்தபட்சம் முப்பது சதவீத ஆண்டி பயாடிக் அவசியமற்றது என அமெரிக்க மருத்துவ அமைப்பின் பத்திரிக்கையில் வெளியான தகவல் மூலம் அறியப்படுகிறது.

நோய் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு அமைப்பை சேர்ந்தவர்கள் (CDC) இந்த தகவலை அமெரிக்க மருத்துவ பத்திரிக்கையில் வெளியிட்டுள்ளனர். இந்த தகவல் பெறப்பட்ட ஆய்வுக்கு Pew எனும் தன்னார்வ தொண்டு நிறுவனமும் பொது சுகாதாரம் மற்றும் மருத்துவ நிபுணர்களும் சேர்ந்து உதவியுள்ளனர்.

பெல்ஜியம் கைதிகள்!

பெல்ஜியம் கைதிகள்!

பெல்ஜியத்தில் இருக்கும் சிறை கைதிகளுக்கு கணினி பயன்படுத்தும் சலுகை மற்றும் ஹெட்செட், இன்டர்நெட் பயன்படுத்துவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஆனால், அந்த இன்டர்நெட்டில் சில தடைகள் இருக்கும். மேலும், இவர்கள் "Pay Per View" எனப்படும் பிபிவி படங்களையும் காணலாம். அதில் ஆபாசப்படங்களும் அடங்குகின்றன.

டிரைவர்கள்!

டிரைவர்கள்!

நியூயார்க் நகரில் டிரைவராக பணிபுரியும் நபர்கள் வருடத்திற்கு 107 மணி நேரத்தை பார்கிங் தேட மட்டுமே வீணடிக்கிறார்கள். இதனால் அவர்களுக்கு 2,243 டாலர்கள் வருடாவருடம் வீணாகிறது.

மேலும், சராசரியாக ஒவ்வொரு அமெரிக்கருக்கும் பார்கிங் தேடும் நேரங்களில் மட்டும் 73 பில்லியன் டாலர்கள் செலவாகிறது என்றும் INRIX ஆராய்ச்சி மூலம் தகவல் அறியப்பட்டுள்ளது.

ஒன்றுக்கு 47!

ஒன்றுக்கு 47!

இரண்டாம் உலகப்போரின் போது ஆயிரக்கணக்கான மக்கள், இராணுவ வீரர்கள் கொத்துக் கொத்தாக மடிந்தனர். இதில், அமெரிக்கா மற்றும் சோவியத் இடையே நடந்த போரில் உயிர் இழந்தவர்கள் குறித்த கணக்கெடுப்பு எடுத்து பார்த்த போது, ஒரு அமெரிக்க இராணுவ வீரரின் மரணத்திற்கு, 47 சோவியத் இராணுவ வீரர்கள் மரணம் அடைந்ததிருன்தனர் என்ற விகித சதவீதம் அறியப்பட்டது.

அவசியமா...

அவசியமா...

நடந்து முடிந்த ரியோ ஒலிம்பிக் போட்டியை நடத்த... அதற்கான மைதானங்கள் மற்றும் அரங்குகளை அமைக்க ரியாவில் காலம், காலமாக வசித்து வந்த 70,000 குடும்பங்கள் இடம் பெயர்ந்து போக வற்புறுத்தப்பட்டனர். கட்டாயப்படுத்தி அப்புறப்படுத்தப்பட்டனர்.

இவர்களுக்கு அரசு தனியாக புதிய வீடுகள் கட்டி தந்தது. ஆனால், இதில் மிக சிறிய அளவிலான மக்கள் மட்டும் திருப்தி அடைந்துள்ளனர். இதர மக்கள் இன்றும் தங்கள் அன்றாக வாழ்க்கையை வாழ திண்டாடி வருகிறார்கள்.

ரியோ ஒலிம்பிக் காரணமாக அங்கே சொந்த பகுதிகளில் வாழ்ந்து வந்த மக்களின் வாழ்வில் ஏற்பட்டுள்ள தாக்கத்தை முழுமையாக அறிய இன்னும் ஒருசில ஆண்டுகளில் இருந்து பத்தாண்டு காலம் வரை ஆகும் என்று உள்ளூர் மக்கள் கூறுகிறார்கள்.

அட!

அட!

அறிவியல் ஆய்வாளர்களால், ஒருவர் பயன்படுத்தும் போனின் கீழ் பகுதியை வைத்து மட்டுமே, அவர் எப்படியான வாழ்வியல் முறை வாழ்கிறார், அவர் பயன்படுத்தும் க்ரூமிங் பிராடக்ட்ஸ் என்னென்ன, அவர் உண்ணும் உணவில் இருந்து எடுத்துக் கொள்ளும் மருந்துகள் வரை கூற முடியுமாம்.

பச்சை இரத்தம்!

பச்சை இரத்தம்!

Sulfhemoglobinemia எனப்படும் தாக்கம் ஒருவரிடம் இருந்தால், அவரது இரத்தம் பச்சை நிறமாக மாறிவிடும். மேலும், இதன் தாக்கத்தால் சருமத்தின் நிறம் நீலநிறமாக மாறும் வாய்ப்புகளும் உண்டு.

இது மட்டுமின்றி, Sulfhemoglobinemia எனப்படும் இந்த நிலையால் ஹீமோகுளோபினில் ஏற்படும் தாக்கத்தை சரிசெய்ய முடியாது. இதனால் இரத்தத்தின் அளவு உடலில் குறையவும் வாய்ப்புகள் உண்டு.

ஹீமோகுளோபின் கூறுகளில் சல்பர் அணுக்களின் கலப்பு ஏற்படுவதால் தான இந்த தாக்கம் உண்டாகிறது. இதனால் இரத்தம் ஆக்ஸிஜனை எடுத்து செல்ல திறனற்று போகும்.

மூளை களவு!

மூளை களவு!

படுகொலையான முன்னாள் அமெரிக்க அதிபர் ஜான் எப் கென்னடியின் மூளை பிரத பரிசோதனையின் போது தனியாக எடுக்கப்பட்டு தி நேஷனல் ஆர்ச்சிவ் என்ற இடத்தில் பத்திரமாக வைக்கப்பட்டிருந்தது. ஆனால், இது இப்போது அங்கே இல்லை. அது காணமல் போனதா அல்ல, திருடு போனதா என்று இந்நாள் வரை கண்டுப்பிடிக்க முடியவில்லை.

காம சூத்திரா!

காம சூத்திரா!

அனைவரும் காமசூத்திரா முழுக்க முழுக்க செக்ஸ் கொள்ளும் நிலை குறித்த் புத்தகம் என்றே கருதி வருகிறார்கள். ஆனால், அந்த புத்தகத்தில் 20%மட்டுமே செக்ஸ் குறித்து கூறப்பட்டுள்ளன. இதர 80% புத்தகம் காதல், தத்துவம், உடல் மற்றும் உள ரீதியான ஆரோக்கியம் மற்றும் எது நல்லது, கெட்டது என்பது பற்றியும் கூறப்பட்டுள்ளனவாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Random Facts to Know #011

Random Facts to Know #011
Story first published: Friday, February 2, 2018, 18:35 [IST]
Subscribe Newsletter