தமிழ் ராக்கர்ஸ்க்கு ஆப்பு வைக்க பலே திட்டம் ரெடி, பின்தொடருமா? விஷால் படை!

Posted By:
Subscribe to Boldsky

நாம் அறிந்த கேள்விகளுக்கான தெரியாத பதில்களும், அறிந்த விஷயங்கள் குறித்த தெரியாத தகவல்களும்...

இன்றைய டைம் பாஸ் #008ல் நாம் காணவிருக்கும் சில சுவாரஸ்யமான தகவல்கள்...

  • தமிழ் ராக்கர்ஸ்க்கு ஆப்பு வைக்க பலே திட்டம், பின்தொடருமா? விஷால் படை!
  • கடந்த முப்பது ஆண்டுகளில் காற்றின் வேகம் எத்தனை சதவிதம் குறைந்துள்ளது தெரியமா?
  • மற்றவர் குளிர்ந்த நீரில் கை நனைத்தாலும் உங்கள் உடலில் வெட்பநிலை குறையுமா?
  • ஒட்டகங்களுக்கான அழகிப் போட்டியில் நடந்த விசித்திர முறைகேடு - தகுதி நீக்கம் ஆனதற்கான வேடிக்கையான காரணம் அறிவீர்களா?
  • சீஸ் அதிகம் உண்பதால் உங்கள் மூலையில் ஏற்படும் போதை பொருளுக்கு ஈடான தாக்கம் என்ன?
  • உலகம் கற்பனை என என்னும் எட்டியை தாக்க அமெரிக்கா மட்டும் வைத்திருக்கும் திட்டம்?
  • ஹிட்லர் அவமதித்த அமெரிக்க அதிபர் யார்?
  • எட்டு மணிநேரம் உட்கார்ந்தே வேலை செய்யும் நீங்கள், ஒரு நாளுக்கு எத்தனை மணி நேரம் உடற்பயிற்சி செய்ய வேண்டும்?
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
காற்றின் வேகம்!

காற்றின் வேகம்!

கடந்த முப்பது ஆண்டுகளில் காற்றின் வேகம் 60% குறைந்துள்ளது.

காடு / மரவளர்ப்பு குறைபாடு மற்றும் கால நிலை மாற்றங்கள் போன்ற காரணங்களால் வட துருவத்தில் காற்றின் வேகம் மிகையாக குறைந்துள்ளது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

காடுகள் அழிப்பு, நெடுஞ்சாலை விரிவாக்கம், மர அலங்கார பொருட்கள் தயாரிப்பு அதிகரிப்பு, காட்டுத்தீ போன்ற பல இயற்கை மற்றும் செயற்கை காரணங்களால் மரங்கள் கணிசமாக அழிந்துவருவதாலும், கால நிலை மாற்றத்தினாலும் இந்த தாக்கம் ஏற்பட்டிருக்கலாம் என்று ஆய்வளர்கள் கூறுகிறார்கள்.

இந்த தாக்கம் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சீனா மற்றும் ஐரோப்பிய கண்டத்தின் சில பகுதிகளில் நன்கு தெரிவதாக கூறப்படுகிறது.

இப்படியுமா?

இப்படியுமா?

குளிர்ந்த நீரில் கைகளை நனைப்பது போன்ற வீடியோக்களை காணும் போதே, மக்களின் உடல் வெட்பம் குறைகிறது என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

பொதுவாக நாம் குளிர்ந்த நீரில் கை, கால்களை நனைத்தால், மலையில் நனைந்தால் உடலின் வெட்ப நிலை குறையும் என அறிடோம். ஆனால், சசெக்ஸ் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வு ஒன்றில் குளிர்ந்த நீரில் வேறு நபர் நனைவது போலவோ, கை, கால்களை நனைப்பது போலவோ வீடியோக்களை கண்டாலும் கூட நமது உடலில் வெட்பநிலை குறைகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது.

நரம்பியல் ஆய்வாளர் நெயில் ஹாரிசன் இதை கண்டுபிடித்துள்ளார். இது பச்சாதாப உணர்வால் ஏற்படுகிறது என்று கூறப்படுகிறது.

இதுகளுக்குமா...

இதுகளுக்குமா...

இந்த வருடம் சவுதியில் நடந்த அழகிய ஒட்டக போட்டியில், 12 ஒட்டகங்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டன. இதற்கு காரண, ஒட்டகங்களை அழகாக காண்பிக்க அவற்றின் புட்டத்தில் ஊசி ஏற்றியது தெரியவந்தது.

ஒவ்வொரு வருடமும் சவுதியில் ஒட்டகங்களுக்கு மத்தியில் அழகு போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இந்த போட்டியில் இந்தாண்டு கலந்துகொண்ட ஒட்டகங்களில் "botulinum" எனும் இன்ஜெக்ஷன் போட்டு அழைத்து வரப்பட்ட 12 ஒட்டகங்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளன.

இந்த போட்டியில் வெற்றிபெறும் ஒட்டகத்திற்கு பரிசாக இருபது மில்லியன் சவூதி ரியால் அளிக்கப்படுகிறது. இது யூரோவில் 3.7 மில்லியனாகும். இத்தனை பெரிய தொகை வெல்ல யார் தான் ஏமாற்ற மாட்டார்கள்.

ஆனாலும் ஒட்டகங்களுக்கு அழகிப் போட்டி எல்லாம் கொஞ்சம் ஓவர் தான்.

சீஸ் போதை!

சீஸ் போதை!

கடுமையான போதை பொருட்கள் உட்கொள்ளும் போது மூலையின் ஒரு பகுதியில் ஏற்படும் தூண்டுதல், மிகச் சரியாக சீஸ் உட்கொள்ளும் போதும் உண்டாகிறது என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

மிச்சிகன் பல்கலைகழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், ஒருவர் தொடர்ந்து தனது தினசரி உணவில் தவறாமல் சீஸ் சேர்த்து சாப்பிட்டு வந்தால், ஒரு போதை பொருளால் மூளையின் ஒரு பகுதியில் ஏற்படும் தாக்கமானது ஏற்படும் என்றும். இதற்கு காரணம் சீஸில் இருக்கும் ஒருவகையான கெமிக்கல் என்றும் கூறுகிறார்கள்.

முட்டை வெளி ஏற்றுதல்!

முட்டை வெளி ஏற்றுதல்!

ஒரு ஆண் சிறுத்தை கத்தும் சப்தத்தால் மட்டுமே, பெண் சிறுத்தையில் கரு முட்டை வெளிவந்துவிடும் எனப்படுகிறது.

பூனைக் குடும்பத்தை சேர்ந்த சிறுத்தைகளுக்கு கரு முட்டை வெளியேறுவது மிக அரிதாகவும், கண்டறிய கடினமான நேரங்களிலும் நடக்கிறது என அறியப்படுகிறது.

ஒரு முறை இதுக்குறித்து நடத்தப்பட்ட ஆய்வின் போதுதான், ஆண் சிறுத்தையின் கத்தும் சப்தத்தின் போது சில சமயங்களில் பெண் சிறுத்தையின் கரு முட்டை வெளியேறும் நிகழ்வு நடக்கிறது என்று அறியப்பட்டது. இதை சாண்டியாகோவை சேர்ந்த ஆண்டர்சன் என்ற ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளார்.

மறுப்பு!

மறுப்பு!

1932ல் வின்ஸ்டன் சர்ச்சில் முனிச் பகுதியின் ஒரு ஹோட்டலுக்கு இரண்டு நாள் பயணமாக ஹிட்லரை காணவும், அவருடன் தேநீர் அருந்தவும் திட்டமிட்டு சென்றார். ஆனால், இரண்டு நாட்களும் ஹிட்லர் வின்ஸ்டன் சர்ச்சிலை காண முன்வரவில்லை. அவர் வரும் நேரத்தில் இவர் சென்றுவிடுவார்.

ஒரு மணிநேரம்!

ஒரு மணிநேரம்!

ஒரு நாளுக்கு எட்டு மணிநேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை செய்ய போவதாக இருந்தால், அந்த நாளில் நீங்கள் குறைந்தபட்சம் ஒரு மணி நேரமாவது உடற்பயிற்சி செய்திருக்க வேண்டும். இதுவே, நீங்கள் அதற்கும் மேலாக டெஸ்கில் உட்கார்ந்து வேலை செய்ய போகிறீர்கள் எனில், அந்த அளவுக்கு ஈடாக உடற்பயிற்சி செய்ய வேண்டியது அவசியம். இல்லையேல், மன அழுத்தமும், உடலில் ஆரோக்கிய கோளாறுகளும் தான் ஏற்படும்.

தற்கொலை!

தற்கொலை!

உலகில் தற்கொலை செய்துக் கொள்பவர்களில் 75% பேர் மருந்துகள் மூலமாக தற்கொலை செய்துக் கொள்ளவே முயற்சி செய்கிறார்கள். இவர்களில் 97% எந்த பிரச்சனையும் இன்றி உயிர் பிழைத்து விடுகிறார்கள். மீதமுள்ள 3% பேர் மட்டும் சரியான நேரத்தில் மருந்தினை உட்கொண்டு மரணிக்கின்றனர்.

மேலும், துப்பாக்கி, கத்தி போன்ற ஆயிதங்களை கொண்டு தற்கொலைக்கு முயற்சிப்பவர்களில் 90% பேர் உயிரிழக்கின்றனர் என ஹார்வர்ட் நடத்திய ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது.

எட்டி

எட்டி

எட்டி (Yeti) என்பது மனிதனும், குரங்கும் போன்ற ஒரு ஆஜானுபாகுவான கற்பனை மிருகம். இது இமயமலையில் வாழ்ந்து வருவதாகவும், காத்மாண்டு பகுதியில் மக்கள் இதை கண்டுள்ளதாகவும் பல குறிப்புகள் உள்ளன.

ஒருவேளை எட்டி தாக்குதல் நடத்தினால், அதை எப்படி கையாள வேண்டும், எப்படி தப்பிக்க வேண்டும், எப்படி தாக்க வேண்டும் என்பதற்கான தற்காப்பு யுக்திகள் காத்மாண்டுவில் இருக்கும் அமெரிக்க எம்பஸியிடம் இருக்கிறதாம்.

தமிழ் ராக்கர்ஸ்-க்கு ஆப்பு ரெடி!

தமிழ் ராக்கர்ஸ்-க்கு ஆப்பு ரெடி!

கடந்த 2016ம் ஆண்டு, ஒரு நிறுவனம் எந்த திரையில் இருந்து படத்தை திருட்டுத் தனமாக ரெகார்டு செய்து பிரதி எடுக்கிறார்கள் என்பதை கண்டுபிடிக்க ஒரு தொழில்நுட்பத்தை கண்டபிடித்து Emmy விருதினை வென்றனர். இதன் மூலம் திரையுலகில் நிலவும் பைரசியை தடுக்க முடியும்.

Civolution என்ற நிறுவனம் தான் இந்த தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளனர். இதன் மூலம் எளிதாக எந்த திரை அரங்கில் இருந்து திருட்டுத்தனமாக பிரதி எடுக்கப்படுகிறது என்பதை அறிய முடியும். இந்த தொழில் நுட்பம் மூலமாக ஒவ்வொரு ஃபிலிமிலும் கண்ணுக்கு தெரியாத கோட் பதிவேற்றப்படும். இதை இவர்களது தொழில்நுட்ப வசதி மூலம் அறிந்துக் கொள்ள முடியும்.

ஆகவே, எங்கிருந்து திருட்டுத்தனமாக ரெகார்டு செய்து பிரதி எடுத்தாலும், அதில் பதிவாகியிருக்கும் கோடினை (Code) வைத்து அந்த பிரதி எங்கிருந்து எடுத்தனர் என்று அறிந்துக் கொள்ள முடியும்.

இதை விஷால் படையினர் அறிந்தால், தமிழ் பாறையை சுக்குநூறாக்கிவிடுவார்கள்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Random Facts to Know #008!

Random Facts to Know #008!
Subscribe Newsletter