1,71,000 பேரின் கொடூர மரணத்தை அசால்ட்டாக 30 ஆண்டுகள் உலகறியாது மறைத்த சீன அரசு!

Posted By:
Subscribe to Boldsky
அறிந்தவை பற்றிய அறியாத தகவல்கள்..வீடியோ
Random Facts To Know #007

Cover Image Source: internationalrivers

நாம் அறிந்த கேள்விகளுக்கான தெரியாத பதில்களும், அறிந்த விஷயங்கள் குறித்த தெரியாத தகவல்களும்...

இன்றைய டைம் பாஸ் #007ல் நாம் காணவிருக்கும் சில சுவாரஸ்யமான தகவல்கள்...

  • ஹிட்லர் இறந்த இடம் இப்போது என்னவாக இருக்கிறது என்று தெரியுமா?
  • அதிகமான சப்தம் கேட்டால் உங்களுக்கு எரிச்சலாக இருக்கிறதா? அப்ப உங்களுக்கு இந்த பிரச்சனை இருக்கலாம்...
  • ஜாக்கி சான் படைத்துள்ள வினோத கின்னஸ் சாதனை என்ன?
  • 1,71,000 பேரின் கொடூர மரணத்தை 30 ஆண்டுகள் உலகறியாது மறைத்த சீன அரசு!
  • எந்த நாட்டில் கைவிலங்கிட்டு அழைத்து செல்லப்படும் நபரை புகைப்படம் எடுக்க கூடாது
  • போராட்டம் செய்ததற்காக 66 முறை கைதான நடிகர் யார்?
  • மனித குரங்கள் செய்கை மொழியில் பேசிக் கொள்ளுமா? இருந்தாலும் அவை ஏன் கேள்விகள் கேட்க முயற்சிப்பது இல்லை?
  • ரோலர் கோஸ்டரில் விளையாடி சிறுநீரக கற்களை கரைக்க முடியுமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஹிட்லர் பூங்கா!

ஹிட்லர் பூங்கா!

ஹிட்லர் தற்கொலை செய்துக் கொண்ட இடம், இன்று குழந்தைகள் விளையாடும் பூங்காவாக இருக்கிறது.

ஹிட்லர் தற்கொலை செய்துக் கொண்ட நாளில் இருந்து அதன் முந்தைய பத்து நாட்கள் சூரியனை பார்க்கவே இல்லை. ஒரு கான்க்ரீட் பதுங்குகுழியில் ஒளிந்திருந்தார். அது பூமியில்

இருந்து 28 அடி கீழே இருந்தது. இந்த பகுதி பெர்லினில் இருந்தது.

கிட்டத்தட்ட ஹிட்லர் இறந்து 68 ஆண்டுகள் கழித்து இந்த இடம் ஒரு சிறுவர் பூங்காவாக அமைக்கப்பட்டது.

போனோஃபோபியா!

போனோஃபோபியா!

போனோஃபோபியா (Phonophobia) என்பது ஒலியின் மீது கொண்ட அச்சம் ஆகும்.

இந்த அச்சத்தை சோனோ ஃபோபியா என்றும் அழைக்கிறார்கள். இவர்களுக்கு சப்தம் கொஞ்சம் அதிகமாக கேட்டாலும் வெறுப்பு அடைந்து விடுவார்கள். இவர்களுக்கு இந்த அச்ச உணர்வால் தலைவலி, மன அழுத்தம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன.

ஜாக்கி சான்!

ஜாக்கி சான்!

உலகின் பிரபல ஆக்ஷன் ஹீரோவான ஜாக்கி சான் தன்னிடம் வேலை செய்யும் ஸ்டண்ட் மேன்களுக்கு ஊதியம், பாக்கெட் மணி போக, அவர்களுக்கான அனைத்து மருத்துவ செலவுகளையும் ஏற்றுக் கொள்கிறார்.

துணுக்கு: ஒரே படத்தில் அதிக வேலைகள் செய்து கிரெடிட் லிஸ்ட்டில் பெயர் பெற்றவர் என்ற கின்னஸ் சாதனையை தன்வசம் வைத்துள்ளார் ஜாக்கி சான். இயக்கம், நடிப்பு, இசை, ஸ்டண்ட், தயாரிப்பு என 15 முக்கிய வேலைகளை ஒரே படத்தில் செய்து இந்த சாதனையை செய்தார் ஜாக்கி சான்.

1,71,000 மரணம்!

1,71,000 மரணம்!

சீனாவில் கடந்த 1975ல் நடந்த பன்க்யூயோ (Banqiao) என்ற ஒரு அணை கட்டுமான விபத்தில் 1,71,000 மரணம் அடைந்தனர். இப்படி ஒரு அசம்பாவிதம் நடந்து இத்தனை பேர் உயிரிழந்தனர் என்ற தகவலை 2005ம் ஆண்டு வரை சீனா உலகிற்கு தெரியாமல் மறைத்து வைத்திருந்தது.

இல்லீகல்!

இல்லீகல்!

ஃபிரான்ஸ் நாட்டில் கைவிலங்கிட்டு கைதியை அழைத்து செல்லும் படம் பொது மக்கள் மத்தியில் புகைப்படமாக வெளியாகக் கூடாது என்ற சட்டம் இருக்கிறது. இது இல்லீகலாக கருதப்படுகிறது.

அதாவது, ஒருவர் செய்த தண்டனை ஊர்ஜிதம் செய்யப்படும் வரை அவர் குற்றவாளியாக சமூகத்தில் அடையாளப்படுத்தப்பட கூடாது என்பதற்காக இப்படி ஒரு சட்டத்தை பின்பற்றி வருகிறது ஃபிரான்ஸ் நாடு.

பின்லாந்து!

பின்லாந்து!

வளர்ந்த நாடுகளில் பின்லாந்தில் மட்டும் தான், கிண்டர்கார்டன் படிக்கும் குழந்தைகளின் தந்தையர்கள், தனது துணையுடன் இல்லாது அதிக நேரத்தை தங்கள் குழந்தையுடன் செலவழிக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.

66 முறை கைது!

66 முறை கைது!

மார்டின் ஷீன் என்று பிரபலமாக அறியப்படும் ராமோன் அன்டோனியோ கெரார்டோ எஸ்டீவ்ஸ் எனும் அமெரிக்க நடிகர் சட்ட அழுந்குக்கு குந்தகம் விளைவித்ததாக கூறியும், போராடிய காரணத்திற்காகவும் 66 முறை கைது செய்யப்பட்டுள்ளார்.

மனித குரங்குகள்!

மனித குரங்குகள்!

மனித குரங்குகளால் செய்கை மொழி மூலம் பேசிக்கொள்ள முடியும். ஆயினும், இவை ஒருபோதும் மனிதர்கள் அல்லது இதர மனித குரங்குகளிடம் கேள்விகள் கேட்டு தங்கள் அறிவை அதிகரித்துக் கொள்ள முயற்சிப்பது இல்லை என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

பீத்தோவன்!

பீத்தோவன்!

உலக இசை மேதையாக கருதப்படும் பீத்தோவன் தனது செவி திறனை முழுவதுமாக தனது 45வது வயதில் இழந்தார். ஆயினும் கூட இசை மீது அவருக்கு இருந்த தாகம் போகவில்லை. தனது பற்களில் ஒரு குச்சியை கடிச்சுக் கொண்டு, அதன் மூலம் பியானோ கீகளை தீண்டி, அதன் மூலம் இசையை பிரித்தறிந்து இசைத்து வந்துள்ளார்.

அச்சச்சோ!

அச்சச்சோ!

கானா நாட்டை சேர்ந்த கால் பந்தாட்ட வீரர் முஹமது அனஸ் என்பவர், ஒரு போட்டியின் முடிவில், வாய் தவறி தனது மனைவி மற்றும் காதலி இருவரின் பெயர்களையும் நன்றி கூறும் போது உளறிக்கொட்டி மாட்டிக் கொண்டார்.

நீங்களாக கூட இருக்கலாம்...

நீங்களாக கூட இருக்கலாம்...

"lychnobite" என்று சிலரை குறிப்பிடுகிறார்கள். ஏன் நீங்களும் கூட ஒரு lychnobite-டாக இருக்க வாய்ப்புகள் இருக்கிறது.

ஆம்! யார் ஒருவர் பகல் வேளைகளில் உறங்கி, இரவு வேளையில் வேலை செய்கிறாரோ அவரை lychnobite என்று குறிப்பிட்டு கூறுகிறார்கள்.

ரோலர் கோஸ்டர்!

ரோலர் கோஸ்டர்!

ரோலர் கோஸ்டர் என்பது பலருக்கும் குடலை பிரட்டி வெளியே கொண்டுவந்துவிடும் விளையாட்டு. ரோலர் கோஸ்டரில் விளையாடி வந்து வாந்தி எடுக்கும் நபர்கள் பலர் இருக்கிறார்கள்.

ஆனால், ரோலர் கோஸ்டரில் விளையாடி வந்தால் சிறுநீரக கற்களை வெளியேற்ற முடியும் என ஒரு வினோத ஆய்வறிக்கை கூறுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Random Facts To Know #007

random facts 007
Story first published: Thursday, January 25, 2018, 16:31 [IST]
Subscribe Newsletter