கடலுக்கு அடியில் இருக்கிறது பாதி அமெரிக்கா. டைட்டானிக் கண்டுபிடிப்பாளர் - டைம் பாஸ் #004

Posted By:
Subscribe to Boldsky
Random Facts to Know #004

Cover Image Source: noaanews

நாம் அறிந்த கேள்விகளுக்கான தெரியாத பதில்களும், அறிந்த விஷயங்கள் குறித்த தெரியாத தகவல்களும்...

இன்றைய டைம் பாஸ் #004ல் நாம் காணவிருக்கும் சில சுவாரஸ்யமான தகவல்கள்...

  • இன்று உலகின் பெரிய உயிரனமாக திகழும் திமிங்கலம், முப்பது இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் எப்படி இருந்தது என்று தெரியுமா?
  • தரமற்ற உணவின் மூலமாக மட்டும் வருடத்திற்கு எத்தனை இலட்சம் பேர் உயிரிழக்கிறார்கள் என்று அறிவீர்களா?
  • மீன் கழிவுகளால் உருவான தீவை பற்றி எங்கேனும் அறிந்ததுண்டா?
  • கடலுக்கு அடியில் பாதி அமெரிக்கா இருக்கிறதா? டைட்டானிக் கண்டுபிடிப்பாளர் கூறுவது என்ன?
  • இங்கிலாந்து நியூயார்க்கை விட சிறிய பகுதியா?
  • பிரிட்டனில் வாழும் இந்த வயதினர் பசுக்களை கண்டதே இல்லையாம்...
  • ஆய்வுக்கூடத்தில் இருந்து கவண் டெக்னிக்கில் தப்பித்து ஓடிய குரங்குகள்...
  • நீங்க ஒரு சொஃபோப்மேனியாக்கா....? இத முதல்ல தெரிஞ்சுக்கங்க....
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
திமிங்கிலம்!

திமிங்கிலம்!

ஏறத்தாழ முப்பது இலட்சம் வருடங்களுக்கு முன்னர் கடலில் வாழும் பெரிய உயிரினமான திமிங்கலம் முப்பது அடி நீளத்திற்கும் குறைவாக தான் இருந்தது என கடல்வாழ் உயிரின ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இன்றைய திமிங்கிலங்களின் சராசரி நீளம் 100 எட்டும். திமிங்கிலத்தின் நாக்கின் எடை மட்டும் ஒரு யானையின் எடை இருக்கும் என்று கூறப்படுகிறது.

திமிங்கிலத்தின் இதயம் மட்டும் கோல்ப் விளையாட்டின் போது பயன்படுத்தப்படும் வண்டியின் அளவு இருக்குமாம். இன்று கடலில் வாழும் பெரிய உயிரினமாக இருப்பது நீலத் திமிங்கிலம் ஆகும்.

மரணம்!

மரணம்!

ஒரு வருடத்திற்கு ஏறத்தாழ நான்கு இலட்சத்து இருபது ஆயிரம் பேர் மாசுப்பட்ட அசுத்தமான உணவை உண்டு இறக்கிறார்கள்.

இந்த செய்தி பெர்லினில் நடந்த உலக சுகாதார கூட்டமைப்பின் சந்திப்பின் போது பகிரப்பட்ட தகவலாகும். தரமற்ற உணவை உண்பதன் மூலம் ஏற்படும் நோய்களின் காரணமாக பல இளம் குழந்தைகள் உயிரிழந்து போகிறார்கள் என்றும் இந்த சந்திப்பின் போது தகவல்கள் கூறப்பட்டன.

ஏறத்தாழ உலகில் வருடத்திற்கு ஆறு கோடி பேர் தரமான உணவு கிடைக்காமல் நோய்வாய்ப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

மீன் கழிவுகள்!

மீன் கழிவுகள்!

மாலத்தீவுனை சுற்றி இதன் கீழ் பல சிறுசிறு தீவுகள் அடங்கியுள்ளன. அவற்றில் ஒன்று தான் வகாரு (Vagaru) எனப்படும் தீவு. இந்த தீவின் 85% மீன்களின் கழிவுகளால் உருவாகியிருக்கிறது என்று கூறப்படுகிறது. அதாவது மீன்களின் மலத்தினால்.

இந்த வகாரு தீவு கிட்டத்தட்ட கடலின் நடுவே ஏற்பட்டுள்ள ஒரு மணல் திட்டு போல தான இருக்கும். இதன் மேலே ஏதோ இலைகள் கொன்று கூரை மேய்ந்தது போல காட்சியளிக்கும் இந்த தீவு.

Parrot Fish எனப்படும் ஒருவகை மீனின் கழிவுகளால் உண்டான படிவங்களால் தான் இந்த தீவின் பெரும்பகுதி உருவாகியிருக்கிறது என ஆய்வாளர்கள் கடந்த 2015ம் ஆண்டு கண்டறிந்து அறிக்கை வெளியிட்டனர். இதுப்போக இந்த இடத்தில் பவளப்பாறைகளும் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

கடலுக்கடியில் பாதி அமெரிக்கா!

கடலுக்கடியில் பாதி அமெரிக்கா!

அமெரிக்காவில் பாதி பிரதேசம் கடலுக்கு அடியில் தான் இருக்கிறது என்று ஆய்வாளர் ராபர்ட் பல்லார்ட் கூறியுள்ளார்.இவர் தான் டைட்டானிக்கை முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் கண்டுபிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் கடலுக்கு அடியில் இருக்கும் அமெரிக்காவின் பிரதேசங்களை பற்றிய உண்மைகள் வெளிவரும் காலத்தில் பல யூரேகா என கூறி மகிழும் தருணங்கள் அதிகம் நடக்கும் என்றும் இவர் கருத்து தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து!

இங்கிலாந்து!

நியூயார்க் நகரைவிட சிறிய பகுதி தான் இங்கிலாந்து என்பது உங்களுக்கு தெரியுமா?

ஆம்! இங்கிலாந்தின் மொத்த சுற்றுப்பரப்பு அளவு 50,301 சதுர மைல் தூரம் ஆகும். ஆனால், அமெரிக்காவின் நியூயார்க் நகரின் சதுர மைல் தூரம் 54 மீட்டர் சதுர மைல். மேலும், அமெரிக்காவின் அலாஸ்கா பகுதி மட்டுமே 6.6 இலட்சம் சதுர மைல் தூரம் என பெரிய பரப்பளவு கொண்டிருக்கிறது.

பசுவை கண்டதே இல்லை...

பசுவை கண்டதே இல்லை...

பிரிட்டனில் வசித்து வரும் எட்டில் ஒரு இளம் தலைமுறையினர் பசுவை நேரில், நிஜத்தில் கண்டதே இல்லை என்ற தகவல் சென்ற வருடம் நடந்த ஆய்வின் மூலம் அறியப்பட்டுள்ளது. பிரிட்டனின் இளைய தலைமுறையினரில் 18-24 வயதுக்குட்பட்டவர்களில் 12 % பேர் பசுவை டிவியில் தான் கண்டுள்ளனர் என தெரியவந்துள்ளது.

மேலும், இந்த ஆய்வில் இன்றைய இளம் பிரட்டன் தலைமுறையினருக்கு பழங்கள் மற்றும் காய்கறிகள் குறித்த போதுமான அளவு அறிவு இல்லை என்றும் தகவல் கூறியிருந்தனர்.

அடப்பாவத்த!

அடப்பாவத்த!

ஆஹ்ன் சுங் க்வான் என்ற கொரியன் கால்பந்தாட்ட வீரர் இத்தாலிக்கு எதிராக கோல் அடித்து உலகக்கோப்பை போட்டியில் இருந்து அந்த அணியை வெளியேற செய்தார். இந்த காரணத்தால், அவர் விளையாடி வந்த இத்தாலி உள்நாட்டு கிளப்பில் இருந்து அவரை நீக்கினார்கள்.

இதற்கான காரணம் என்ன என்று கேட்டதற்கு, இத்தாலியின் கால்பந்தாட்டத்தை ஆஹ்ன் சுங் நாசமாக்கிவிட்டார் என்று கூறினார்கள்.

குரங்குகள் அட்டகாசம்!

குரங்குகள் அட்டகாசம்!

ஏறத்தாழ எட்டு வருடங்களுக்கு முன்னர், ஜப்பான் டோக்கியோவின் க்யோடோ பல்கலைகழகத்தில் ஆய்வுக்குட்படுத்தப்பட்டிருந்த குரங்குகளில் 15 குரங்குகள் மரத்தை கவண் போல உபயோகப்படுத்தி, மின்வேலிகளை தாண்டி குதித்து தப்பித்து சென்றன.

ஏறத்தாழ 17 அடி உயரம் கொண்டிருந்த அந்த மின்வேலியை அவை எப்படி தாண்டின என்று வியப்படைந்த ஆய்வாளர்கள் பிறகு, இவ்வாறு தப்பித்ததை அறிந்தனர். குரங்குகளின் இந்த செயலை கண்டு ஆய்வார்கள் வாய்பிளந்து நின்றனர்.

முறிவு!

முறிவு!

தும்மல் வரும் போது உங்கள் மூக்கையும், வாயையும் முழுக்கு மூடிக் கொண்டீர்கள் எனில், உங்கள் தொண்டையில் முறிவு ஏற்பட மிறைய வாய்ப்புகள் உள்ளன.

இங்கிலாந்தின் லீசெஸ்டர் எனும் பகுதியில் வசித்து வந்த 34 வயதுமிக்க நபர் ஒருவர் தனது வேகமான தும்மலை தடுக்க விளையாட்டுத்தனமாக மூக்கையும், வாயையும் இருக்க மூடிக் கொண்டு முயற்சித்துள்ளார். அடக்க முடியாத அந்த தும்மல் இந்த வழியில் தடுக்க நினைத்த அவரது தவறான செயலால் தொண்டையில் முறிவு ஏற்பட்டது.

தொண்டையில் இருக்கும் துசுக்கள் மிகவும் மென்மையானவை. அவை தும்மலின் வேகத்தை தாங்காது. இதன் அபாயம் தெரியாமல் இப்படி விளையாடக் கூடாது என்று மருத்துவர்கள் கூறி அறிவுரைத்தனர்.

சொஃபோப்மேனியாக் (Sophomaniac)

சொஃபோப்மேனியாக் (Sophomaniac)

தன்னை மிகுந்த அறிவாளி என்று தவறாக நம்பிக் கொண்டிருக்கும் ஒரு நபரை சொஃபோப்மேனியாக் என்கிறார்கள். இவர்கள் மத்தியில் தாங்கள் தான் மற்றவரைவிட பெரிய அறிவாளிகள் என்ற பெரிய எண்ணம் இருக்கும். ஆனால், உண்மையில் அவர்கள் அப்பப்பட்ட அறிவாளிகளாக இருக்கமாட்டார்கள்.

உங்கள் சுற்றுவட்டாரத்தில் கூட இப்படி சில சொஃபோப்மேனியாக்குகள் இருக்கலாம். முடிந்தால் இந்த வார்த்தை பயன்படுத்தி அவர்களை கலாய்த்துக் கொள்ளுங்கள்!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Random Facts to Know #004

Random Facts to Know #004
Subscribe Newsletter