இந்திய கிரிக்கெட்டின் பெருஞ்சுவர் ராகுல் டிராவிட் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள்!

Posted By:
Subscribe to Boldsky

இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் பெரும் கனவு... ராகுல் எப்போது இந்திய அணியை தலைமை கோச்சாக வழிநடத்துவார் என்பது தான்.

ராகுல் ஒரு சிறந்த வீரர் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், அவர் இருபது ஆண்டுகளாக ஒரு சாதனைக்காக காத்திருந்தார். அது இப்போது இன்று U19 அணி மூலமாக நடந்துள்ளது.

ராகுல் வென்றிய பெரிய கோப்பை என்றால் அது 1997-98ல் நடந்த ரஞ்சி கோப்பை தான்.

  • 2000ம் ஆண்டு சாம்பியன்ஸ் ட்ராபி - ரன்னர் அப்.
  • 2002ம் ஆண்டு சாம்பியன்ஸ் ட்ராபி - இலங்கையுடன் பகிர்வு
  • 2003ம் ஆண்டு உலகக்கோப்பை - ரன்னர் அப்.
  • 2004ம் ஆண்டு ஆசிய கோப்பை - ரன்னர் அப்.
  • 2009ம் ஆண்டு ஐபிஎல் பைனல் - ரன்னர் அப்.
  • 2013ம் ஆண்டு சாம்பியன்ஸ் லீக் டி 20 பைனல் - ரன்னர் அப்.
  • 2016ம் ஆண்டு U19 உலகக்கோப்பை (கோட்சாக) - ரன்னர் அப்.

கிட்டத்தட்ட 18 ஆண்டுகளாக கிரிக்கெட் உலகின் பல முக்கிய கோப்பைகளின் இறுதி போட்டி வரைக்கும் சென்று கோப்பை வெல்ல முடியாமல் வருத்ததுடன் திரும்பியுள்ளார் ராகுல். அவற்றுக்கு எல்லாம் சிறப்பு சேர்க்கும் வகையில் இன்று U19 இந்திய வீரர்கள் ராகுலுக்கு கோப்பை வென்று கொடுத்துள்ளனர்.

இதோ! ராகுல் குறித்து அனைவரும் அறிந்துக் கொள்ள வேண்டிய சில சுவாரஸ்யமான உண்மைகளும் சாதனைகளும்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மராத்திய குடும்பம்!

மராத்திய குடும்பம்!

ராகுல் டிராவிட் இந்தூரில் பிறந்தவர். இவர் ஒரு மராத்திய குடும்பத்தை சேர்ந்தவர். இவரது பெற்றோர் புஷ்பா மற்றும் சாரத் ஆவர். இவர் தனது வாழ்நாளில் பெரும்பாலான காலத்தை கர்நாடகாவில் வாழ்ந்தார்.

இவரது அம்மா புஷ்பா கல்லூரி பேராசிரியர். இவரது தந்தை கிஸான் ஜாம் ஃபேக்டரியில் வேலை செய்து வந்தார். இவரது தந்தையிடம் இருந்து தான் ராகுலுக்கு கிரிக்கெட் மீதான் காதல் பிறந்துள்ளது. இவரது தந்தைக்கு கிரிக்கெட் என்றால் அவ்வளவு பிடிக்குமாம்.

ஜாமி!

ஜாமி!

ராகுலை ஜாமி என்று அழைப்பார்கள். இதற்கு ஒரு காரணம் இருக்கிறது. இவரது தந்தை கிஸான் ஜாம் நிறுவனத்தில் வேலை செய்தார். அதன் மூலமாக இவருக்கு ஜாமி என்று பெயர் வந்துள்ளது. இது பின்னாளில் இந்திய கிரிக்கெட் அணியினரால் தொடர்ந்து அழைக்கப்பட்டு.. இப்போது இவரிடம் பயிற்சி பெறும் இளம் வீரர்கள் உட்பட இவரை செல்லமாக ஜாமி என்றே அழைக்கிறார்கள்.

இதுப்போக ஜாமிக்கு தி வால் மற்றும் மிஸ்டர் டிபெண்டபில் போன்ற செல்லப் பெயர்களும் இருக்கின்றன.

படிப்பாளி!

படிப்பாளி!

ராகுல் விளையாட்டு போலவே படிப்பிலும் கவனமாக தான் இருந்துள்ளார். செயின்ட் ஜோசப் ஆண்கள் பள்ளியில் படித்து, செயின்ட் ஜோசப் காமர்ஸ் கல்லூரியில் காமர்ஸ் படித்து... செயின்ட் ஜோசப் மேலாண்மை கல்லூரியில் எம்.பி.எ படித்துக் கொண்டிருந்த போது தான் இவருக்கு இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடும் வாய்ப்பு கிடைத்தது.

12 வயதில்!

12 வயதில்!

தனது 12 வயதில் கிரிக்கெட் விளையாட துவங்கியுள்ளார் ராகுல். ஆரம்பக்காலத்திலேயே தேர்வாளர்களை தனது திறமையால் ஈர்த்த காரணத்தால் U15, U17, U19 போன்ற பிரிவுகளில் விளையாட இவர் தேர்வானார்.

1991ல் ரஞ்சி போட்டியில் முதன் முதலாக அறிமுகமானார் ராகுல். அப்போது ராகுல் கல்லூரி படித்துக் கொண்டிருந்தார். அப்போது தான் இவர் அணில் கும்ப்ளே மற்றும் ஜவகல் ஸ்ரீநாத் உடன் மகாராஸ்டிரா அணிக்கு எதிராக விளையாடினார். அந்த போட்டியில் இவர் 82 ரன்கள் குவித்தார். அந்த போட்டி டிராவாக முடிந்தது. அடுத்த தொடரில் இவர் இரண்டு சதங்கள் உட்பட 380 ரன்கள் குவித்தார் . இவரது சராசரி 63.3ஆக இருந்தது. இந்த தரத்தை வைத்து துலீப் டிராபி போட்டிக்கு தெற்கு ஜோன் பிரிவில் இடம் பிடித்தார் ராகுல்.

தொடக்கமே தடுமாற்றம்!

தொடக்கமே தடுமாற்றம்!

வினோத் காம்ப்ளேவுக்கு மாற்று வீரராக களம் இறங்கினார் ராகுல்.

இலங்கைக்கு எதிராக 1996ல் தனது முதல் ஒருநாள் போட்டியில் மூன்று ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இங்கிலாந்துக்கு எதிராக தனது முதல் டெஸ்ட் போட்டியில் ஏழாவது நபராக களமிறங்கி 95 ரன்கள் குவித்தார். வெறும் ஐந்து ரன்களில் வரலாற்றி சிறப்புமிக்க சத்தத்தை சாதிக்க தவறினார் ராகுல்.

இதே போட்டியில் இதான் கங்குலியும் அறிமுகமானார். அந்த போட்டியில் கங்குலி சதம் அடித்தார்.

டாப் ஸ்கோர்!

டாப் ஸ்கோர்!

அப்போதெல்லாம் ராகுலை ஒரு டெஸ்ட் வீராராக மட்டுமே கண்டு வந்தனர். இவர் டொக்கு வைத்து ஆடத்தான் லாயக்கு என்று விமர்சனம் எல்லாம் எழுந்தன. ஆனால், 1999ம் ஆண்டு நடந்த உலக கோப்பை தொடரில் டாப் ஸ்கோர் அடித்த நபர் என்ற பெயர் பெற்றார் ராகுல். விளையாடிய எட்டு போட்டிகளில் 461 ரன்கள் குவித்தார் ராகுல். சராசரி 65.85 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 85.52. ஆனால், அரையிறுதி போட்டியில் இந்தியா தோல்வியுற்றது.

வரலாற்று சிறப்புமிக்க வெற்றி!

வரலாற்று சிறப்புமிக்க வெற்றி!

2000-01 கொல்கத்தாவில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த போட்டியில் இந்தியா வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பதிவு செய்தது.

இந்த வெற்றியில் பெரும்பங்கு ராகுலுக்கு இருந்தது.

முதல் இன்னிங்க்ஸ் ஆடிய இந்தியா 171 ரன்களுக்கு சுருண்டது. தொடர்ந்து ஆஸ்திரேலியா 445 ரன்கள் குவித்தது. பிறகு களம்கண்ட இந்திய அணி 657/7 ரன்கள் குவித்து டிக்ளர் செய்தது. இதில் விவிஎஸ் லக்ஸ்மன் மற்றும் ராகுல் இணைந்து சரியான அடித்தளம் அமைத்தனர்.

இந்த போட்டியில் இரண்டாம் இன்னிங்ஸ்ல் ராகுல் 180 ரன்கள் குவித்தார்.

ஒரே இந்தியன்!

ஒரே இந்தியன்!

தொடர்ந்து நான்கு டெஸ்ட் போட்டிகளில் சதம் கடந்த ஒரே இந்திய வீரர் என்ற சாதனை படைத்துள்ளார் ராகுல். மேற்கிந்திய அணிக்கு எதிராக மும்பையில் நடந்த போட்டியிலும், அதற்கு முன் இங்கிலாந்தில் நடந்த போட்டியில் 115, 148, 217 ரன்கள் குவித்து இந்த சாதனை படைத்தார் ராகுல்.

 சிங்கம்!

சிங்கம்!

தென்னாப்பிரிக்கா மண்ணில், அவர்களை வென்ற முதல் இந்திய கேப்டன் ராகுல் தான். மேலும், இங்கிலாந்தில் டெஸ்ட் தொடர் வென்ற மூன்றாவது இந்திய கேப்டன் என்ற பெருமையும் ராகுல் பெற்றிருக்கிறார். அதுபோக 1971க்கு பிறகு ஏறத்தாழ 35ஆண்டுகள் கழித்து மேற்கிந்தியாவை அவர்கள் நாட்டிலேயே வென்று சாதித்தார் ராகுல்.

ஒரே போட்டியில் ஓய்வு!

ஒரே போட்டியில் ஓய்வு!

சர்வதேச கிரிக்கெட் அரங்கில் ஒரே போட்டியில் அறிமுகமாகி, ஓய்வு பெற்ற வீரர் என்ற பெருமையும் இவர் பெற்றுள்ளார். இங்கிலாந்துக்கு எதிராக மான்செஸ்டரில் நடந்த டி20 போட்டியில் அறிமுகமாகி அதே போட்டியில் ஓய்வும் பெற்றார் ராகுல். அந்த போட்டியில் 21 பந்துகளில் 31 ரன்கள் குவித்தார் ராகுல்.

சர்ச்சை!

சர்ச்சை!

ஒருமுறை ஜிம்பாவே அணிக்கு எதிராக விளையாடிய முத்தரப்பு போட்டியில் ராகுல் பந்தை சேதப்படுத்தினர் என்று புகார் எழுந்து இவர் மீது ஐம்பது சதவித போட்டி சம்பளம் அபராதமாக விதிக்கப்பட்டது.

அதே போல பாகிஸ்தானுக்கு எதிராக 2004ல் முல்தானில் நடந்த டெஸ்ட் போட்டியில் கங்குலி காயம் காரணமாக விலகினார் அப்போது ராகுல் ஸ்டான்ட்-இன் கேப்டன் பொறுப்பேற்றார். அப்போது சச்சின் 194 ரன்கள் எடுத்த நிலையில் ராகுல் போட்டியை டிக்ளர் செய்தார். வெறும் ஆறு ரன்கள் அடித்திருந்தால் சச்சின் இரட்டை சதம் அடித்திருப்பார்.

இந்த நிகழ்வு பல விவாதங்களுக்கு தலைப்பாக அமைந்தது.

செக்ஸி வீரர்!

செக்ஸி வீரர்!

2004ல் இந்தியாவில் எடுக்கப்பட்ட செக்ஸியான விளையாட்டு வீரர் என்ற சர்வேவில் யுவராஜ் மற்றும் சானியா போன்றவர்களை பின்னுக்கு தள்ளி முதல் இடத்தைப் பிடித்தார் ராகுல். இது அவருக்கு ஆச்சரியமாக அமைந்தது.

சொல்லப் போனால், அந்த காலக்கட்டத்தில் இந்திய அணியில் இருந்து ஃபிட்டான வீரர் ராகுல் தான்.

சதங்கள்!

சதங்கள்!

டெஸ்ட் போட்டி விளையாடும் தகுதி பெற்றிருந்த அனைத்து நாடுகளுக்கும் எதிராக சதம் அடித்த ஒரே வீரர் என்ற சாதனை செய்துள்ளார் ராகுல். இந்த சாதனையை இவர் 2004ல் வங்காளதேச அணிக்கு எதிராக ஆடிய போட்டியில் நிகழ்த்தினார்.

பார்ட்னர்!

பார்ட்னர்!

டெஸ்ட் போட்டிகளில் 79 முறை பார்ட்னர்ஷபில் நூறு ரன்களுக்கு மேலாக சேர்த்து சாதனை செய்துள்ளார் ராகுல். மேலும், இரண்டு முறை ஒருநாள் போட்டியில் முன்னூறு ரன்களுக்கு மேற் பார்ட்னர்ஷிப் முறையில் ரன் சேர்த்த வீரர் என்ற சாதனையும் செய்துள்ளார் ராகுல்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Rahul Dravid Facts

Facts to Know About The Wall of Indian Cricket Team And Head Coach of U19 Indian Team.
Subscribe Newsletter